PDA

View Full Version : சுற்றமும் குற்றமும்



எஸ்.எம். சுனைத் ஹஸனீ
29-09-2008, 08:35 AM
நன்றாய் புன்முறுவலித்து
எழுந்து இருக்கை தந்து
வராதவர்களையும் நலம் கேட்டு
தங்க திங்க வைத்தனுப்பினாலும்
குற்றம் சொல்லி அலைகின்றன சுற்றங்கள்

போஷாக்கில்லாத என் தேகம் பற்றி
மழிக்காத என் தாடி பற்றி
இஸ்திரியிடப்படா என் மேலாடை பற்றி
வஸ்துக்கள் சிதறிக் கிடக்கும்
ஒழுங்கற்ற என்னில்லம் பற்றி
இப்படியாய்
பல்கிப் பெருகிச் செல்கின்றன
அவர்களின் தண்டோராக்கள்

இப்பொழுதெல்லாம்
அரைக் கதவு திறந்து
உதடு விரியா புன்னகையிட்டு
கண்டிப்பாய் வருவதாய்
வெறும் வாய் வேடமிட்டு
கதவறைந்துச் சாத்தி விடுகிறேன்
மேட்டுக்குடியனாய்
வாசலிலேயே வைத்தனுப்பி விட்டானென்ற
ஒரேயொரு குற்றம் சொல்லி
சனியன்கள் தொலைந்து போகட்டுமென்று.



எஸ்.எம். ஜுனைத் ஹஸனீ.
www.junaid-hasani.blogspot.com

சுகந்தப்ரீதன்
29-09-2008, 10:27 AM
குனிந்தாலும் குற்றம்..நிமிர்ந்தாலும் குற்றம்..
போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும்
போகட்டுமென் கண்ணனுக்கேன்னு சொல்லிட்டு போய்கிட்டே இருக்கனும்ண்ணா...!!

அர்த்தம் செறிந்த அனுபவ கவிதை.. வாழ்த்துக்கள்..!!:icon_b:

சிவா.ஜி
29-09-2008, 11:38 AM
அரிப்பெடுத்த ரோகிகள் சொறிந்துகொண்டேதான் இருப்பார்கள்....ஆனால் பல நேரங்களில் பிறத்தியார் முதுகுகளை.

குற்றம் பார்க்கும் சுற்றம் நமக்கெதற்கு? பாதிக்கதவு திறத்தலே இவர்களுக்கு அதிகம். மூடிய கதவுகளுக்குப் பின் நின்று பதில் சொல்லி அனுப்பவேண்டியதுதான். (ஆனாலும் சில சமயங்களில் அது நம்மால் முடிவதில்லை. முதுகை காண்பிக்க வேண்டியிருக்கிறது அவர்களுக்கு சுகம் தரும் சொறிதலுக்கு.)

அர்த்தமுள்ள கவிதை. வாழ்த்துகள் ஜுனைத்.

பிச்சி
29-09-2008, 12:48 PM
இவை குற்றங்கள் இல்லை. சுட்டிக் காட்டுதல். நல்ல அருமையான போஷாக்கான கவிதை அண்ணா.

பிச்சி..

Narathar
29-09-2008, 01:18 PM
மிக அருமையான கவிதை வாழ்த்துக்கள்!
சிவா சொன்னதுபோல் இவர்களுக்கு பாதிக்கதவு தறப்பதும் கூடாதுதான்.......

இன்னும் நிறைய எழுதுங்கள்!
நிழலுக்கு உயிர் திரிக்கும் வந்து அப்பப்ப நிழலுக்கு உயிர் கொடுங்கள்.

இளசு
29-09-2008, 06:43 PM
ஒருமித்தவர்கள் என முன்னர்
மனவீட்டில் நாம் அனுமதித்தவர்கள்
பலவீனங்களைப் பின்னர் பிறருக்குப்
பறைசாற்றும் அவலம்..

மனவீடு பூட்டல் இன்று..
புண்படாமல் தற்காப்பு!


பாராட்டுகள் ஜூனைத்!

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
30-09-2008, 10:24 AM
பாராட்டிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி.

அமரன்
30-09-2008, 04:20 PM
மனிதர்களில்தான் எத்தனை நிறங்கள்.......

பெறுமதி மிக்கவை பற்றிய 'களவுப்' பயத்தால் மேட்டுக்குடிக் கதவுகள் பாதி திறந்திருக்கும். உண்மை விடப் பெறுமதியானது வேறு எது.:)

குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என்பார்கள். குற்றம் சொல்லாத சுற்றமும் இல்லைங்கிறது கவிதை. கவி நாயகன் கூட குற்றம் கண்டுதான் கதவைச் சாத்தியுள்ளான்.


பாராட்டுகள் ஜுனைத்

kulirthazhal
02-10-2008, 08:54 AM
ஒரு சில உணர்வுகளை கவிதயாய் தர முடியுமா என்ற ஐயத்தை அகற்றும் தரமான கவிதை... வழங்கியதற்கு நன்றி...