PDA

View Full Version : காகிதப்பூக்கள்...



kulirthazhal
28-09-2008, 03:45 PM
காகிதப்பூக்கள்...

போர்வாள்களுக்கிடையே
சில
எழுத்தாணிகள்.
அவைகளும்
அகிம்சையை எழுதி
முனை மழுங்கிப்போனவை.,

எல்லா மொட்டுகளிலும்
அன்பு மலரட்டும்!,
காற்றின் கணமெங்கும்
வாசம் வீசட்டும்!,
ரசிப்பதற்கு அகிம்சை
கவிதைபோல..,

நிர்வாணத்தையே
உடுத்த எண்ணும் உள்ளங்கள்
சில வேடங்களை
தீக்குணவாய் தந்திட
பூக்கும்
காகிதப்பூக்கள்.

"தீவிரவாதம்"..,

கண்ணீரை மட்டும்
பருகி மலந்தாலும்
கடல்காற்றாய் கரிப்பதில்லை.
குருதிவாசம் கொண்ட
அசைவ மலர்கள்.
தன் வேர்களுக்குமட்டும்
கண்ணீரை பரிசாக்கும்..,

பூவனத்தில் சில
தீப்பொரியை கண்டபின்னும்
தூரத்தை அளந்து
பின்
வான்மழையை வேண்டாத
புரட்சிப்பூக்கள்...,

வளையாத காம்புகள்
உடைந்துபோகும்
உண்மை!!!..,
முகவரிஇல்லாத
வாசங்களைத்தேடி
பயணம்.
இலட்சியங்களை பலப்படுத்த..,

எண்ணங்கள் ஒன்றாய்கொண்ட
வண்ணம் மட்டும்
கொண்ட பூக்கள்.,
தன்னையும் உள்ளேவைத்து
சரவெடியாய் செய்ய ஆசை.,

வஞ்சனைகள் கொண்ட
சில
வாட்களுடன் மோதும்போது
தீப்பொறியின்
சில துளிகள் தீண்டும்.,
தோல்வியினை வாழ்வினிலே
வேண்டாத உள்ளங்கள்
சில
வேள்விகளை
செய்யச்சொல்லி தூண்டும்,
அதில்
ஏழைகளின் தானியங்கள்
சேரும்...,

ஏறுகின்ற ஏணியிலே
வேர்ப்பரப்பு ஆட்டம்கண்டால்
ஏறுவதா? இறங்குவதா?
குழப்பம்..,
பின்
உயிர்க்கு என்ன
விலைமதிப்பு
மயக்கம்...,

மயக்கம்கொண்ட மானுடத்தில்
போராட்டம்..
பூகம்பம்.
கொள்கைகள்
மயக்கத்தில் தரித்த
சுதேசிய உடை
"குரோதம்".

மயக்கம் தெளிவதாய்
சில நொடிகள்...

புதிய சில
புரட்சிமலர்களின்
கொள்கை வார்த்தைகள்
காற்றில்...,

"எல்லா மலர்களும்
வாசம் வீசட்டும்,
வாட்கள் எல்லாம்
வளைந்து போகட்டும்,
காகிதப்பூக்களும்
கருகிப்போகட்டும்"

எங்கோ
ஒரு மலரின்
மனம் கலைகிறது,

அதுவும்
சரவெடியாய் பிண்ணிக்கொண்டு
காகிதப்பூவாய்
கருகிடுமோ?.......

-குளிர்தழல்

பிச்சி
29-09-2008, 01:28 PM
கவிதை அருமை அண்ணா. ஆனால் சுற்றி வளைத்து நீட்டி முழக்கிவிட்டதாகத் தெரிகிறது. (தப்பா இருந்தால் மன்னிக்கவும்)

பிச்சி./.)

kulirthazhal
29-09-2008, 02:15 PM
கவிதை அருமை அண்ணா. ஆனால் சுற்றி வளைத்து நீட்டி முழக்கிவிட்டதாகத் தெரிகிறது.

பிச்சி./.)

தீவிரவாதம் தனி மனிதனை பாதிக்கிறது, அதனுடன் கொள்கைகளையும் சேர்த்துக்கொண்டதால் நீளமாகிவிட்டது. தனித்தனியாய் இரு களங்களை காட்சிப்படுத்தி இருக்கலாம் என உணர்கிறேன்..

நன்றி!!!

அமரன்
30-09-2008, 05:10 PM
மயக்கும் கவிதை... நல்ல விதை..

நிர்வாணம்தான் உண்மை என்பது பலருக்குப் புரிவதில்லை. ஆடை அணிந்தால் அழகு என்போம். இல்லையேல் அசிங்கமென்போம். அசிங்கத்திலும் சில அளவுகோள்கள்.

தீவிரவாதிகளின் நிர்வாணத்தை ஆடை கழற்றிப் பார்க்க நாம் தயாரில்லை. அதை அறுப்போம் வாருங்கள் என்று அறைகூவல் விடுப்போரின் நிர்வாணத்தையும் காண விரும்புவதில்லை..

அவர்களும் மக்களிலிருந்து தான்.. இருசாரார் ஆடைகளுக்கும் அழிக்கப்படும் புழுக்களாகவும் வீழ்த்தப்படும் மரங்களாகவும் மக்கள்தான்..

உச்சப்பட்ச வேதனை இப்பாவிகளின் மாயவேள்விக்கு நரபலியாக அப்பாவிகள்..

சிறு சிறு விசயங்களுக்காக தீவிரவாதம் கொள்ளும் மனப்பாங்கை நம்மிலிருந்து முதலில் அகற்றுவோம். அகராதியிலிருந்து தீவிரவாதம் தானாக அகன்று சென்றுவிடும்.

பாராட்டுகள் குளிர்தழல்..