PDA

View Full Version : நாய்க்குட்டி



சுகந்தப்ரீதன்
28-09-2008, 12:37 PM
எப்போதோ நீ
காட்டிய காதலுக்கு
இப்போதும் வாலாட்டும்
நாய்க்குட்டி நான்..!!

இளசு
28-09-2008, 12:52 PM
அன்புக்கயிறிதுதான்
அறுக்க யாராலும் ஆகாதய்யா..

ஒரு நூல் கயிற்றை அறுக்காமல் கட்டுண்டு காத்திருப்பான் நாயகன் -
அபூர்வ ராகங்கள் படத்தில்!

அன்பின் சக்தி அத்தகையது..

பாராட்டுகள் சுகந்தா!

அமரன்
28-09-2008, 03:09 PM
எப்போதோ நீ
காட்டிய காதலுக்கு
இப்போதும் வாலாட்டும்
நாய்க்குட்டி நான்..!!

அதுக்காக வாலைக்குலைத்து அவளருகில் போய்விடாதே. பாவமவள்..

சுகந்தப்ரீதன்
29-09-2008, 05:13 AM
அன்புக்கயிறிதுதான்
அறுக்க யாராலும் ஆகாதய்யா..

ஒரு நூல் கயிற்றை அறுக்காமல் கட்டுண்டு காத்திருப்பான் நாயகன் -
அபூர்வ ராகங்கள் படத்தில்!

அன்பின் சக்தி அத்தகையது..

பாராட்டுகள் சுகந்தா!அழகிய பொருத்தமான எதிர்ப்பார்த்த பின்னூட்டம்... அண்ணலிடமிருந்து..!!

மிக்க நன்றியண்ணா..!!
அதுக்காக வாலைக்குலைத்து அவளருகில் போய்விடாதே. பாவமவள்..என்ன கொடுமைசார் இது.. அப்ப இத்தனைநாளா வலிக்க வலிக்க வாலைக் குழைச்சிட்டுருக்குற நாங்க பாவமில்லையாக்கும்..?? :traurig001::traurig001::traurig001:
(இதுதான் அமர நீதியோ..??:icon_rollout:)

சிவா.ஜி
29-09-2008, 05:17 AM
வாலாட்டுவது...நன்றியோடா...? காதலோடா...? இருந்தாலும் காதலுக்காக அஃறிணையாகிவிட்டதை நினைத்தால் பாவமாக இருக்கிறது.

சுகந்தப்ரீதன்
29-09-2008, 05:23 AM
வாலாட்டுவது...நன்றியோடா...? காதலோடா...? இரண்டும் கலந்த ஏக்கத்தோடு...!!:lachen001:
மிக்க நன்றியண்ணா பாசம் கலந்த பரிதாபத்திற்க்கு..:icon_rollout:

poornima
29-09-2008, 06:51 AM
பழகிய நாய்க்குட்டிபோல்
உன்னை கண்டதும்
பின்னாலேயே வந்து
வாலாட்டுகிறது பார்
இந்த பாழாய்ப்போன மனது..

தபூ சங்கரின் கவிதை வரிகள் நினைவாடலில்

இங்கு சுகந்தப்ரீதன் எழுதியிருப்பது சற்றே மாறுபட்ட கோணம்

எப்போதோ க(கா)ட்டிய காதலுக்கு இன்னும் நாய்க்குட்டியாய் என்கிறார்..

காதல் என்றாலே இப்படித்தான் நாய்க்குட்டிகள் போல் ஆகிவிட
வேண்டுமோ சில தருணங்களில்

பாராட்டுகள் சுகந்தப்ரீதன்

மனோஜ்
29-09-2008, 06:51 AM
எப்போதோ நீ
காட்டிய காதலுக்கு
இப்போதும் வாலாட்டும்
நாய்க்குட்டி நான்..!!

நாய் குட்டிக்கும் காலம்வரும்
நல்ல காலம் தேடிவரும்
கடந்ததை மறந்து வருவதில் சாதி
என்ன சுகந்தா சரிதானே:icon_b:

ஓவியன்
29-09-2008, 07:04 AM
குழைந்தாலும்
குரைத்தாலும்
குறைவிடுவதில்லை
வாலாட்டுவதில் மட்டும்..!!:D

பாராட்டுக்கள் சுபி..!!

வசீகரன்
29-09-2008, 07:05 AM
எப்போதோ நீ சிந்திய புன்கைக்கு இன்னும் நான் அபிமாணி..!
உன் சாலையோரத்தில் காத்திருந்ததர்க்கு நான் அதிர்ஷ்டசாலி..
எப்போதோ உன் கடைக்கண் பார்வை பெற்றதார்க்கு நான் யோகமகி..
உன் காதலுக்காகவே நான் ஆவேன் பல அரிதாரி...!

இப்படியேதாம்டா சுகந்தா நம்ம பயபுள்ளைங்க வாழ்க்கை போய்ட்டே இருக்கு...
பொண்ணுங்க ரொம்ப சேஃப்டி...!

ஆனாலும் நாய்க்குட்டி என கூறி விட்டாயே... என் மக்கு மன்னாரு...!!!

சுகந்தப்ரீதன்
29-09-2008, 10:42 AM
பழகிய நாய்க்குட்டிபோல்
உன்னை கண்டதும்
பின்னாலேயே வந்து
வாலாட்டுகிறது பார்
இந்த பாழாய்ப்போன மனது..

தபூ சங்கரின் கவிதை வரிகள் நினைவாடலில்

பாராட்டுகள் சுகந்தப்ரீதன்அட தபூ சங்கர் ஒப்புமைக்கு நாய்க்குட்டியையும் விட்டுவைக்கலையா..??

தபூசங்கரை எல்லாம் எடுத்துக்காட்டி என்னை பாராட்டுறீங்க.. நீங்க ரொம்ப நல்லவங்க பூர்ணிமா..!!:mini023:

நாய் குட்டிக்கும் காலம்வரும்
நல்ல காலம் தேடிவரும்
கடந்ததை மறந்து வருவதில் சாதி
என்ன சுகந்தா சரிதானே:icon_b:நீங்க சொன்னா சரியாத்தாண்ணா இருக்கும்.. ஆனா உங்களோட அகரவரிசை மட்டும் மிஸ்ஸாகுதே அது ஏன்ணா..??:fragend005:

சுகந்தப்ரீதன்
29-09-2008, 10:53 AM
குழைந்தாலும்
குரைத்தாலும்
குறைவிடுவதில்லை
வாலாட்டுவதில் மட்டும்..!!:D
பாராட்டுக்கள் சுபி..!!அண்ணாச்சி.. இதுல உள்குத்து ஏதுமில்லியே..??:smilie_abcfra:

மிக்க நன்றியண்ணா..!!
இப்படியேதாம்டா சுகந்தா நம்ம பயபுள்ளைங்க வாழ்க்கை போய்ட்டே இருக்கு...
பொண்ணுங்க ரொம்ப சேஃப்டி...!பய-பையன்
புள்ளை- பெண்
அப்புறம் ஏண்டா பொண்ணுங்க மட்டும் சேப்டின்னு உளறுற.. ஓ.. நீ மப்டில போய் மப்பு அடிச்சிட்டு வந்தியாக்கும்..??:lachen001:

ஆனாலும் நாய்க்குட்டி என கூறி விட்டாயே... என் மக்கு மன்னாரு...!!! அடேய் அதுக்காக யானைக்குட்டின்னா சொல்ல முடியும்... நம்ப சைஸூக்கு பூனைக்குட்டின்னு வேணும்ன்னா சொல்லிக்கலாம்..:icon_rollout: