PDA

View Full Version : பிஎஸ்என்எல் இணைய இணைப்பிற்கு பதிவு தேவையில்லை.



பாரதி
28-09-2008, 12:01 PM
அன்பு நண்பர்களே,

இன்று தி ஹிந்து நாளேட்டில் வந்த செய்தி இது.
சாதாரண தொலைபேசியில் டயல் அப் (dial up) மூலம் இணையத்தைத் தொடர்பு கொள்ள முன்பெல்லாம் பிஎஸ்என்எல் எனப்படும் இந்தியத் தொலைத்தொடர்புத்துறை(Bharath Sanchar Nigam Limited)-யை அணுகி, பதிவு செய்ய கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால் இப்போது பதிவு செய்யவோ, குறிப்பிட்ட நேரங்களுக்கான கட்டணத்தையோ செலுத்த வேண்டியதில்லை.

உங்களிடம் BSNL தொலைபேசி இருந்தால் நீங்களாகவே உங்கள் இணையத்திற்கான இணைப்பை பெறுவதற்கான ஏற்பாட்டை செய்து கொள்ளலாம். பயனர் பெயர் (user name) என்ற இடத்தில் உங்கள் தொலைபேசி எண்ணை தர வேண்டும். உதாரணமாக நீங்கள் சென்னையில் இருப்பவர் என்றும், உங்கள் தொலைபேசி எண் 98765432 எனில் சென்னைக்கான எஸ்டிடி எண்ணான 044 என்பதில் சுழியத்தை மட்டும் நீக்கி விட்டு 4498765432 எனத்தர வேண்டும்.

கடவுச்சொல் தர வேண்டிய இடத்தில் உங்கள் தொலைபேசி எண்ணை மட்டும், அதாவது 98765432 எனத்தரவேண்டும்.

இணையத்தை தொடர்பு கொள்ள 172222 என்ற எண்ணை உபயோகிக்கவும்.

உபயோகிக்கும் நேரத்திற்கான இணையக்கட்டணம் சாதாரண இணையக்கட்டணத்தை விட குறைவாகும் என்கிறார்கள். 56Kbps வேகத்தில் இணைப்பு கிடைக்கிறது.

தேவைப்படுபவர்கள் முயற்சியுங்கள். இந்தத் திட்டம் அக்டோபர் மாத இறுதி வரையில் இருக்கும் என உறுதியளிக்கப்பட்டிருந்தாலும் கால அவகாசம் நீட்டிக்கப்படக்கூடும் எனவும் கருதுகிறார்கள்.

(என்னால் இந்தத்தகவலை உறுதிப்படுத்த இயலவில்லை. இந்திய நண்பர்கள் முயற்சி செய்யலாம். மேலதிக தகவலுக்கு http://www.hindu.com/2008/09/28/stories/2008092859971500.htm பாருங்கள்.)

நன்றி: தி ஹிந்து நாளிதழ்.

இளசு
28-09-2008, 12:50 PM
அவசியத் தகவல்..

அவசரமாய் நம் நண்பர்கள் சோதித்துச் சொல்லுங்கள்..

நன்றி பாரதி!

மனோஜ்
29-09-2008, 06:57 AM
நேட் ஒன் என்று இதற்கு பெயர்
எனது வாடிக்கையார்களுக்கு இதைநான் 5 வருடங்கலாக பரிந்துரைத்து வருகிறோன்
தகவலுக்கு நன்றி பாரதி அண்ணா

வெங்கட்
30-09-2008, 01:13 AM
நான் தமிழ்நாட்டில் கோவை மாவட்டத்தில் வசிக்கிறேன். நான் ஒரு வருடத்திற்கு முன்னர் ]Dial up உபயோகித்திருக்கிறேன்(அகலக்கற்றை இணைய இணைப்பு பெறும் வரை).
இணைய உபயோகத்திற்கு கட்டணம் 10 பைசா / நிமிடம். (இக்கட்டணம் மட்டும் அக்டோபர் மாதம் முடிய இலவசம் என்றும் மேலும் நீட்டிக்கப்படலாம் என்றும் அறிவித்துள்ளனர். வழக்கம் போல் தொலைபேசிக் கட்டணம் உண்டு.) இணையத்தைப் பயன்படுத்தும் காலத்திற்கான தொலைபேசிக் கட்டணம் - 7.5 நிமிடங்கள்/ 1அழைப்பு (பகல் நேரங்களில்) & 15 நிமிடங்கள்/ 1அழைப்பு(இரவு நேரங்களில்) என்று நினைக்கிறேன். (இக்கட்டணம் நான் ஒரு வருடத்திற்கு முன்னர் இத்திட்டத்தில் இருந்த போது; தற்போது தெரியவில்லை.) விபரங்களுக்கு http://netonecbt.bsnl.co.in/
மிகக் குறைந்த அளவில் இணையத்தை உபயோகிப்பவர்களுக்கு (மின்னஞ்சல் மட்டும் அனுப்புவது போன்ற குறைந்த பயன்பாடு) மட்டுமே இத்திட்டம் பயன்படும். இணையத்தில் அடிக்கடி வலம் வருபவர்களுக்கும், கணிசமாக பதிவிறக்கம் மேற்கொள்பவர்களுக்கும் அகலக்கற்றை இணைய இணைப்புதான் மிகச்சிறந்தது மட்டுமன்றி சிக்கனமானதும் கூட. (மாதக்கட்டணம் ரூ.125 முதல்) கட்டண விபரங்களுக்கு http://www.bsnl.co.in/service/dataone_tariff.htm

பென்ஸ்
30-09-2008, 02:04 AM
தகாவலை கொடுத்த பாரதிக்கு நன்றி...

அதை தெளிவாக்கிய வெங்கட் அவர்களுக்கு நன்றியும்... நல்வரவும்.

பிச்சி
30-09-2008, 05:48 AM
அண்ணா, நானும் பிஎஸ் என் ல் உபயோகிக்கிறேன். ஆனால் Forum தளங்களில் இரு வரிகளுக்கு மேல் எழுத முடியவில்லை. இது என்ன பிரச்சனை? யாராவது சொல்லுங்களேன்.

உதயசூரியன்
30-09-2008, 10:18 AM
உபயோகமான தகவலை தந்த பாரதி மற்றும் வெங்கட் அவர்களுக்கு நன்றி..
வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ்

anna
30-09-2008, 03:18 PM
நல்ல பயனுள்ள தகவல் தந்தமைக்கு நன்றி.

rajatemp
30-09-2008, 05:46 PM
நல்ல தகவல் டயல் அப் பயன்படுத்துபவர்களுக்கு
ஆனால் நான் பிராட்பேண்ட் பயன்படுத்துகிறேன்

மீனாகுமார்
08-10-2008, 10:28 AM
முன்பு அக்கவுண்ட்லெஸ் டயலப் என்று தொலைபேசி வைத்திருந்தாலே தேவைக்கேற்ற போது டயலப் பயன்படுத்திக் கொள்ளும் முறை இருந்தது. அதற்கும் இதற்கும் வித்தியாசம் இருப்பதாக தெரியவில்லை.

இப்போது இரண்டு மாதங்களுக்கு இலவச டயலப் வழங்குகிறது பிஎஸ்என்எல். செப்டம்பர், அக்டோபர். ஆனால் போன் சார்ஜஸ் உண்டு.

http://chennai.bsnl.co.in/News/netone_060908.htm