PDA

View Full Version : (V) துபாயில் வேக புகை(??)யிரதம்



அன்புரசிகன்
25-09-2008, 07:44 AM
அனைவரும் அறிந்த படி அண்மையில் பரீட்சார்த்த ரயில் சேவை நடாத்தப்பட்டது. இதில் துபாயின் மன்னனும் அவரின் இருபுதல்வர்களும் பங்கேற்றனர்.

இதோ ஒளிக்கோவை...

http://www.sheikhmohammed.co.ae/video/ENGLISH/2008/2008-09-20_SM_01_NE_09_20_2008_20_40_34.flv
இதை ஏற்கனவே பார்த்திருந்தால் மன்னிக்க...

இப்போதுதான் மின்னஞசலில் பார்த்தேன்...

விகடன்
25-09-2008, 08:31 AM
குறுகிய காலத்தில் முடித்துவிட்டார்களே....
பார்த்துக்கொண்டிருக்கையில் ஆரம்பித்தவர்கள் வேலைகளை. முடித்திருக்கும்போது பார்க்கமுடியாமல் போய்விட்டதே...

அன்புரசிகன்
25-09-2008, 08:46 AM
முழுமையாக ஆரம்பிக்கவில்லை. இது ஒரு பரீட்சார்த்தம் தான்.

இபன்பதூதா அங்காடியிலிருந்து ஜபல் அலி வரைக்கும் இந்த பரீட்சார்த்தம் நடாந்தது...

ஓவியன்
25-09-2008, 10:11 AM
இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஜெபால்-அலியிலிருந்து யுமெய்ரா கடற்கரைக்கு பணிக்கு வரும் போது, நிர்மாண வேலைகளை ஒவ்வொரு நாட்களாகப் பார்த்திருக்கின்றேன்....

2008 இல் முடிக்கவிருப்பதாகக் கூறினார்கள், முடித்தும் விட்டார்கள்....

இந்தப் புகையிரத சேவை இயல்பாக எல்லோருடைய பாவனைக்கும் வரும் போது, துபாயின் வீதி நெரிசல் கணிசமான அளவு குறையுமென நம்புகிறேன்....

எல்லாவிடயங்களிலும் இன்னுமொரு சிங்கப்பூராக துபாய் மாறும் நாள் அண்மித்துக் கொண்டிருக்கிறது....

அன்புரசிகன்
25-09-2008, 12:40 PM
சிங்கப்பூர் அளவு வெற்றிகரமாக அமையுமா தெரியாது. காரணம் இங்கு இன்னும் டக்ஸி சாதாரண நிலைக்கு வரல... வியாழன் வெள்ளி மற்றும் இரவு நேரங்களில் அவ்வளவு இலகுவாக டக்ஸியை பிடித்திடமுடியாது. தவிர இந்த ரயில் சேவை அனைத்தும் பிரதான வீதிகளை அண்டிகளை அண்டியே செல்கிறதே தவிர குடிமனைகளை அண்டியல்ல... ரயில் பயண செலவிலும் பார்க்க வீடுவந்து சேரும் செலவு அதிகமாக இருக்கும்........

அமரன்
25-09-2008, 12:52 PM
குடிமனைகளுக்கூடாகச் சென்று ரயில் நிலையங்களை இணைக்கும் பேரூந்து சேவைகளை அடுத்த கட்டமாக யோசித்து வைத்திருப்பார்கள்.

சட்டென்று தோன்றியது:

புகையிரதம் வழக்கொழிந்து போனாலும்
புகைந்து கொண்டுதான் உள்ளன ரதங்கள்..

பாரதி
25-09-2008, 01:48 PM
தகவலுக்கு நன்றி அன்பு.

இந்த வேலையை ஆரம்பித்திலிருந்தே பார்த்து வருகிறேன். வியக்கத்தக்க வகையில் வேகமாக வேலைகள் முடிந்து கொண்டு வருகின்றன. செப்டம்பர் 2009 - ல் முழுமையாக அனைத்து வண்டிகளும் செயற்படத்தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது புகையிரதம் இல்லை என்றும் மின் தொடர்வண்டிகள்தான் என்றும் நம்புகிறேன். ஒரு வண்டியில் 800 நபர்கள் வரையில் பயணம் செய்யலாமாம். 60 விநாடிகளில் இருந்து 90 விநாடிகளுக்குள்ளாக வண்டிகள் வந்து செல்லுமாம். அதிகபட்ச வேகம் 120 கிலோமீட்டர்களாக இருக்குமாம். ஒவ்வொரு நிலையத்திலும் 20-30 விநாடிகள் நிற்குமாம். முழுக்க கட்டுப்பாட்டு அறையில் இருந்தே இந்த மின் தொடர்வண்டிகள் இயக்கப்படுமாம். இந்த வண்டிகளுக்கு தனியாக ஓட்டுநர்கள் கிடையாது!