PDA

View Full Version : என் இதயமே



jenitha
25-09-2008, 12:25 AM
என் இதயமே
உன் குரலால் கவரப்பட்டு
உனக்கு நான் ரசிகை ஆனேன்
அந்த நிமிடம் முதல் என்னை
நான் மறந்தேன்

உன்னை நான் பார்த்தது இல்லை
என்னை நீ பார்த்தது இல்லை
இருந்தும் என் உயிரே

என் மன சிறகை உடைத்து
உன் நினைவு கூண்டுக்குள்
அடைத்து விட்டு
உன் கையேழுத்தை காதல் பரிசாக
தந்து விட்டு

உன் இதயசாவியை ஒழித்து
வைத்து கொண்டு
பின் ஏன் நான் வாழ நீ துடிக்கிறாய்
என் இதயமே.........

ஜெனித்தா.பி.
தொலை துர நிலவு ஏக்கத்துடன்

lolluvathiyar
25-09-2008, 08:08 AM
கன்னில் படாத காதலா. இல்லை கற்பனையில் இருக்கும் ஏதோ ஒரு நாயகனுக்கு எழுதபட்ட கவிதை நன்றாக இருக்கிறது. பாராட்டுகள்

shibly591
26-09-2008, 05:29 AM
ஜெனித்தா நீங்களுமா...??

பாராட்டுக்கள்

அமரன்
26-09-2008, 06:59 AM
இணையவெளி உலகங்களில் எத்தனையோ சக்கரவர்த்திகள். அவர்களுடனான பழக்கம் சக்கரைக்கட்டியாக இனிக்கும். சாறு பிழிந்த கரும்பின் சக்கைதான் சக்கைரைக்கட்டி என்பது பலருக்கு தெரிவதில்லை. இந்த உருகும் காதல் மெழுகின் ஒளியில் தெரியட்டும் அது..

நன்றாக உள்ளது கவிதை.. நீங்கள் எழுதுவதை உள்ளிருந்து பார்த்த இதயம் சில இடங்களில் கவிதையை பிறழச் செய்துவிட்டது.

பிச்சி
26-09-2008, 07:09 AM
அருமை அக்கா.. மிகவும் நன்றாக இருக்கிறது.

jenitha
26-09-2008, 11:55 AM
ஜெனித்தா நீங்களுமா...??
ஏன் நீங்களுமா சிவிபிலி?
நன்றி உங்கள் அனைவரின் பாராட்டுக்களுக்கும்.

ஜெனித்தா.பி. (தமிழ் சரியா தெரியாதா எனக்கு உங்கள் ஊக்கம் இன்னும் எழுத தோன்றுது.) முதல் நன்றி அமரன் அவர்களுக்கு.

ஆன்டனி ஜானி
17-12-2010, 04:04 PM
ரெம்ப ஒரு அருமையான பதிப்புக்கள்

கண்ணில் படாத காதலா இருந்தாலும்

உங்கள் கவிதைகள் மூலம் காதல் தென்படும்
வாழ்த்துக்கள்