PDA

View Full Version : விரிகின்ற உலகில் விஞ்ஞானம்



தீபன்
24-09-2008, 04:35 PM
விரிகின்ற உலகில் விஞ்ஞானம்!
[போரினால் முடக்கப்பட்ட தேசத்திலிருந்து விஞ்ஞான முன்னேற்றம் பற்றிய ஒரு பார்வை]

விரிகின்ற உலகில் விஞ்ஞானம்- கண்ணில்
தெரிகின்ற போதுமெம்மிடை அஞ்ஞானம்-புதுமை
புரிகின்ற துடிப்பிலே எம்ஞானம் -அதனால்
எரிகின்ற நிலையிலே நம் ஞாலம்!

அறிவியல் எங்கும் அசுர வேகத்திலுயர
அரசியலால் இங்கது அளிவடைந்து போனது!
அறிவிலிகள் தங்கும் ஆச்சிரமம் போல –எம்
அன்னை தேசம் இங்கு ஆட்டங்காணலானது!

தாங்குகின்ற அறிவுமெம்முடன் தூங்குகின்ற போதினால்
விஞ்ஞானம் கூடவெமக்கு விண்ணாணமானது!
தூங்கிவிழும் தமிழினத்தை துல்லியமாய் புரிந்ததினால்
*ரூபவாஹினி தமிழும் ஆறுமணியுடன் அஸ்தமனமாகிறது!

கைபேசிகூட இப்போ கனவுகள் காண்கின்றபோது
கனவினில் கூட எமக்கு தொடர்புகள் வருகுதில்லை!
கணினிகளில் IC தயாராகும் காலத்திலுமிங்கு
கணினிக்கும் IC எடுக்கச் செல்லும் எம் நிலைமை!

நிலவின் கூறுகிள்ளி வந்த பின்னரும் கூட -இங்கு
நிலாச்சோறு அள்ளி ஊட்டித்தான் பிள்ளை வளர்கிறது!
அண்டவெளி கிரகத்திற்கு அஞ்சலட்டை போடும்வேளை -இங்கு
அயல்வீட்டிற்கு போட்ட தபால் அரையாண்டு கழித்துத்தான் வருகிறது!

தொன்றுதொட்டு வந்த எங்கள் ஒன்றுபட்ட குடும்பமிங்கு
தந்துவிட்ட சுகங்களெல்லாம் பஞ்சு பட்ட நெருப்பாக
இன்று வந்த புதுஞானம் இளைஞரை கலங்கடிக்க
நின்று நிலைத்த எம்வாழ்வு நிர்க்கதி நிலையானதுவே!

அறிவியலது பொருளறியாது அரைகுறை அறிவுகளிணைந்து
நரர் பலரின் சமாதி மேலே நவீன யுகம் படைத்திடுவார்...
வெறியியல் கூடி நின்று வேற்றுமைகள் கூட்டிணைந்து
நம் பாரின் மீதேறி நர்த்தனங்கள் ஆடிடுவார்...

சரியான வழியில் புரிகின்ற மொழியில்,
விரிய வேண்டிய விஞ்ஞானம்-இங்கு
முறையற்ற முறையில் எடுத்தாளும் மனிதரால்,
சரிகின்ற நிலையில் எம் ஞாலம்!

விந்தை பல செய்து வினைதீர்த்து வாழ்வில்
சிந்தை எங்கும் சிரிப்பாய், நினைவினிக்கும் தேனாய்
விஞ்ஞானம் மாற வேண்டும்-அழிகின்ற
உலகும் தான் விரிய வேண்டும்!

அறிவியல் என்றுமே வெறியியல் ஆகிடா
நெறியினில் நின்றுமே அழகியல் படைக்கணும்!
உயிரியல் பேணிடும் வழியினில் என்றுமே
வளர்ச்சிகள் கண்டு நாம் வசந்தங்கள் காணணும்!

*ரூபவாஹினி- இலங்கை தேசிய தொலைக் காட்சி சேவை.

இளசு
24-09-2008, 09:16 PM
நிலையான விடுதலை, வளமான பொருளாதாரம், திடமான அரசியல் தலைமை -
இவையே கல்வி, அறிவியல், கலை வளர ஏதுவான சூழல்..

அறிவியலும், கல்வியும் தழைக்கவேனும்
உலகில் எங்கும் போரில்லா நிலை வேண்டும்..

முதலில் அம்மலர்ச்சி ஈழத்திலிருந்து தொடங்க தமிழனாய் என் ஆசை!

கவிதைக்குப் பாராட்டுகள் தீபன்!

தீபன்
25-09-2008, 01:33 AM
அண்மையில் ஒரு கட்டுரை படித்தேன். அடக்கப்படும்போதும் ஒடுக்கப்படும் போதும் வசதிகள் மறுக்கப்படும்போதும்தான் ஒரு நாடு சுயமான கண்டுபிடிப்புக்களிலும் வளர்ச்சியிலும் முன்னுக்கு வருகிறதென. உதாரணத்திற்கு கியூபாவை பற்றி சொல்லப்பட்டிருந்தது. உண்மைதான்... எமது பிரதேசத்தில் பொருளாதார தடை இருந்த வேளை எம்மிடையே இருந்த அறிவியல் தேடலிற்கான முனைப்பு இப்போது இல்லை... (ஆனாலும் இப்போதும் வன்னிப் பிராந்தியத்தில் அது மேலும் மேலும் வளர்க்கப்பட்டு கொண்டிருக்கிறது...உ-ம்: விமானப் படை).

ஆனால், சரியான தலைமை இல்லாவிட்டால் பலனில்லை.

நன்றி இளசு அண்ணா..
உங்கள், எங்கள் விருப்பங்கள் நிச்சயம் விரைவில் நிறைவேறும்.

shibly591
26-09-2008, 04:46 AM
அற்புதம்...

அற்புதம்...

அற்புதம்...

அற்புதம்...

அற்புதம்...

அற்புதம்...

தீபன்
26-09-2008, 03:15 PM
அற்புதம்...

அற்புதம்...

அற்புதம்...

அற்புதம்...

அற்புதம்...

அற்புதம்...

என்ன இது.... கவிதைக்கு பின்னூட்டம் கவிதைபோலிருக்க வேண்டுமென இப்படியா...:lachen001:

நன்றி ஷிப்லி.