PDA

View Full Version : எச்சரிக்கைப் புள்ளிகள், உறுப்பினர் தடை - புதிய ஏற்பாடுகள்



இளசு
22-09-2008, 09:04 PM
அன்பு நண்பர்களே,

நம் மன்றத்தின் மென்பொருளில் அவ்வபோது நல்மாற்றங்களை
நம் நிர்வாகிகள் செய்துவருகின்றனர்.

பதிவேற்ற, பயனாளும் வசதிகள், மன்ற மேலாண்மை - இவற்றைச்
செம்மைப்படுத்த நாளும் ஆலோசித்து, தக்க மாற்றங்கள்/ ஏற்றங்களை
செயல்படுத்தும் இப்பணியில் ----

தற்போது ஏற்படுத்தப்பட்டிருக்கும் சில புதியன --

http://www.tamilmantram.com/vb/announcement.php?f=39
நம் தமிழ்மன்ற விதிகளை மீறிப் பதிவுகள் வரும்போது,
சக உறுப்பினர்கள், நிர்வாகக் குழுவினரால் நட்புடன் எடுத்துக்கூறுவதே
இங்கே நாம் காணும் முதல் செயல்.

அதை மீறியும் தவறுகள்/தப்புகள் நிகழும்போது, நிர்வாகக்குழுவினர்
அப்பதிவருக்கு எச்சரிக்கைப் புள்ளிகள் வழங்குவர்.

இந்த எச்சரிக்கைப் புள்ளிகள் கொடுக்கும் முறையில் புதிய மாறுதல்கள் செய்யப்பட்டு, உடன் நடைமுறைக்கு வந்துள்ளது.

முன்பு எச்சரிக்கைப் புள்ளிகள் அளவு ஒவ்வொன்றாக கூடியது. இப்பொழுது ஒரு எச்சரிக்கைக்கு 5 புள்ளிகள் என்று திருத்தப்பட்டுள்ளது.

ஒரு முறை அந்த புள்ளிகள் பெற்றால், தண்டனை கிடையாது. இரண்டாம் முறை எச்சரிக்கைப் புள்ளிகள் பெறும்போதும் தண்டனை கிடையாது. (மொத்தம் 10 புள்ளிகள்).

மூன்றாவது முறை (அதாவது 15 புள்ளிகள்) பெறும்போது ஒருவர் 5 நாட்களுக்கு "மென் தடை" (Soft Ban) செய்யப்படுவார்.

20 புள்ளிகள் பெற்றால் 10 நாட்கள் மென் தடை.
25 புள்ளிகள் பெற்றால் 2 வாரங்கள் மென் தடை.
50 புள்ளிகள் பெற்றால் 1 மாதம் மென் தடை.

இந்த "மென் தடை" என்னும் பதம், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஒரு திட்டம்.

சில சமயங்களில் சிலரை நமது மன்றத்தை பார்க்க முடியாமல் நிரந்தரமாக தடை செய்வதனால், தவறான செய்திகள் பரப்பப் படுகின்றன..
நம் மன்றத்தைத தவறாக புரிந்துகொள்ள வாய்ப்பு ஏற்படுகிறது..

தொடர்புகள் இல்லையானால், புரிந்துணர்வும் இல்லாது போகும்.

. அதனால், அவர்களை சில காலம் பங்கேற்க மட்டும் அனுமதிக்காமல் படிக்க மட்டுமே அனுமதிக்கப்படும் ஒரு திட்டம். இவர்களுக்கு வாக்களிக்கும் உரிமையும், ''ரேட்டிங்'' உரிமையும் உண்டு. பண்பட்டவர் அனுமதி கிடையாது



''தண்டனையும்'' மென்மையாக இருக்க, தவறு செய்தவர்கள் திருத்திக்கொண்டு, மீண்டும் கலந்துலவச் செய்யும் நோக்கமுள்ள திட்டம்.

செவிலி தலைவியை மல்லிகைப்பந்து சுற்றிய கம்பால் அடிக்கும் பாவனை சொல்லும் சங்கப்பாடலின் சாயல் உள்ள திட்டம்.

யாரையும் விலக்கவேண்டும் என்பதல்ல மன்றத்தின் எண்ணவோட்டம்.

எல்லாரையும் அரவணைத்து, ஆக்கபூர்வ சிந்தனைகள், படைப்புகள் நம் உடைமைகளாக
நாம் அனைவரும் இணைந்து இணையக் கடலில் தமிழ்ப்படகில் பயணிக்கவேண்டும் என்பதே
இம்மன்றத்தின் தலையாய நோக்கம்.

அனைவரின் புரிதல், ஒத்துழைப்பை வேண்டுகிறோம். நன்றி!

-- தமிழ்மன்றம்

அறிஞர்
22-09-2008, 09:11 PM
யாருக்கும் எச்சரிக்கை புள்ளி கொடுக்கவேண்டும் என்பது எம் விருப்பமல்ல. ஆனால் மன்றத்தில் அனைவரும் நல்ல உறவுடன் உலாவர.. இது அவசியம் ஆகிறது.

தீபன்
23-09-2008, 01:29 AM
நல்ல முயற்சி. தவறு செய்தவர்கள் என்ற பதத்தை பிரயோகிக்காமல் மன்ற விதிமுறைகளை மீறி நடந்தவர்கள் என பிரயோகிப்பது நலமென எண்ணுகிறேன்.

தீபா
23-09-2008, 04:09 AM
சரியான முடிவு..

ஒத்துழைப்புடன் இயங்குகிறேன்.

அன்புடன்
தென்றல்

aren
23-09-2008, 07:29 AM
இது நல்ல ஐடியாதான். இதனால் தப்பு செய்தவர்களுக்கும் திருந்த ஒரு சந்தர்பம் கிடைக்கிறது.

நான் இனிமேல் ஒழுங்காக நடந்துகொள்கிறேன்.

நதி
23-09-2008, 12:56 PM
விதிகளை மீறித் தவறிழைக்கும் நண்பர்களை பட்டினி போடாமல் விரதமிருக்கும் விதத்தில் அமைந்த புதிய நடைமுறையை மகிழ்வுடன் வரவேற்கிறேன்.

mukilan
23-09-2008, 01:04 PM
குழந்தைகளை பழந்தமிழர்கள் சாம, பேத, தான, தண்ட என்ற வரிசையில் தண்டிப்பார்களாம். அது போல எடுத்துரைத்தல், அறிவுரைத்தல், கண்டித்தல், தண்டித்தல் என மன்றத்தில். நல்ல ஆரோக்கியமான அணுகுமுறை. இதை ஒட்டி வைக்கிறேன்.

ஓவியன்
23-09-2008, 01:06 PM
விதிகள் எப்போதும், எதனையும் விறு விறுப்பாக்கித் தரத்தினையும் பேணும்...

அந்த வகையில் இந்த நடைமுறையும் நம் மன்றத்தின் மேன்மைக்கு வழி சமைக்கட்டும்....

வெற்றி
23-09-2008, 01:35 PM
மிக நல்ல வரவேற்க்கதக்க முடிவு தான்...

அக்னி
23-09-2008, 04:48 PM
மன்றத்தை ஒரு ஒழுங்குமுறையிற் கொண்டு செல்ல,
அவசியமான, மென்மையான கட்டுப்பாடு.


நல்ல முயற்சி. தவறு செய்தவர்கள் என்ற பதத்தை பிரயோகிக்காமல் மன்ற விதிமுறைகளை மீறி நடந்தவர்கள் என பிரயோகிப்பது நலமென எண்ணுகிறேன்.
மன்ற விதியை மீறுவதே, தவறுதானே தீபன்...

தீபன்
23-09-2008, 06:58 PM
மன்றத்தை ஒரு ஒழுங்குமுறையிற் கொண்டு செல்ல,
அவசியமான, மென்மையான கட்டுப்பாடு.


மன்ற விதியை மீறுவதே, தவறுதானே தீபன்...

இலக்கணப்படி எல்லாம் சரிதான். ஆனால், பொதுவாக தவறு செய்தவர்களென சொன்னால் அது குறித்த நபரை அவமரியாதை செய்வதுபோல் எனக்கு பட்டது. அதானால் அது எந்த்வகையான தவறென்பதையும் சேர்த்தே குறிப்பிடலாமென சொன்னேன். அதாவது மன்ற விதிமுறைகளி மீறியவரென்ற பதத்தை பிரயோகிக்கலாமென்றேன். என் கருத்தை சொன்னேன். இதுவும் தவறா... :traurig001:

அமரன்
23-09-2008, 07:12 PM
மன்ற விதிகளை மீறி மன்றத்தை அவமரியாதை செய்யும் விதிமீறல் செய்பவர்களின் தவறைத் திருத்தும் நோக்கில் அமைந்த மாற்றத்தைக் கொண்டுவந்தமைக்கு நன்றியும் பாராட்டும்.

இளசு
23-09-2008, 07:30 PM
தீபன்,

தவறு என்பதே தவறிச் செய்வதுதானே :)- பட்டுக்கோட்டையார் சொன்னபடி!

தவறைச் சுட்டி, விதிமுறைக்கேற்ப திருத்தமான பதிவுகள் அளித்து அனைவரும்
இணைந்திருக்க வேண்டும் என்பதே நம் அனைவரின் விருப்பம் அல்லவா?

இங்கே அன்பால், பண்பால், மதிப்பால் ஒருவரை ஒருவர் உயர்த்தி வாழவேண்டும்
என்பதில் மன்றம் உறுதியாய் உள்ளது.

யாரும் யாரையும் புண்படுத்த, உதாசீனப்படுத்த, அவமதிப்பு செய்ய மன்றம்
அனுமதிப்பதில்லை. அனுமதிக்காது!

கொஞ்சநாள் உலாவினால், மன்றில் இதைக் கண்கூடாய்க் காணலாம்..

இந்த மென் தடை நடைமுறையே அமரனின் சிந்தையில் உதித்த
மேலான எண்ணப்பொறி..
அமரனுக்கு சிறப்புப் பாராட்டும் நன்றியும்!

kampan
23-09-2008, 07:40 PM
அமரனின் சிந்தனையில் உதித்த இந்த அற்புதமான அறிவித்தலுக்கு எமது வாழ்த்துக்கள்.

அரங்கேறும் சிந்தனையென்றால் அது அமரனின் சிந்தனைகள்தான்.

சூரியன்
24-09-2008, 04:04 PM
இந்த நடைமுறையை நான் வரவேற்கின்றேன்.

ஓவியன்
25-09-2008, 11:23 AM
அரங்கேறும் சிந்தனையென்றால் அது அமரனின் சிந்தனைகள்தான்.

அழகான, அற்புதமான சிந்தனைகள் யாருடையதென்றாலும் அது அமரத்துவம் பெறும்..!! :)

ஓவியா
25-09-2008, 11:33 AM
காலத்திற்கேற்ற பதிவு.

அமரனுக்கும் இளசுவுக்கும் நன்றிகள்.

''விதிகளை மறவாமல் கடைப்பிடிப்பேன், தவறு செய்ய நேரிட்டால் தக்க தண்டனைய ஏற்றுக்கொள்வேன்.
இதனால் நான் சொல்வது என்னவென்றால் அதிகபட்சமாக எந்த தவறுகளையும் இங்கு புரிய மாட்டேன் என்று உறுதிமொழி எடுத்துக்கொள்கிறேன்''. - ஓவியா


********************************************************************************************************
கொசுரு:
என்னது மல்லிகைப்பந்து சுற்றிய கம்பால் அடிக்கும் திட்டமா!! அப்படினா இன்னும் வேண்டும் வேண்டும் என்று மனது கேட்குமே!! :D:D:D

ஓவியா
25-09-2008, 11:39 AM
தீபன்,


இங்கே அன்பால், பண்பால், மதிப்பால் ஒருவரை ஒருவர் உயர்த்தி வாழவேண்டும்
என்பதில் மன்றம் உறுதியாய் உள்ளது.

யாரும் யாரையும் புண்படுத்த, உதாசீனப்படுத்த, அவமதிப்பு செய்ய மன்றம் அனுமதிப்பதில்லை. அனுமதிக்காது!



சார், ஒரு சந்தேகம்,
இந்த வரிகள் மன்றத்தில் உலா வருபவர்களுக்கு மட்டுமா அல்லது மன்றத்தில் இல்லாத வெளி மனிதர்களுக்குமா!!

SathyaThirunavukkarasu
25-09-2008, 01:44 PM
நல்ல முடிவு, பாரட்டுக்கள்
விதிமுறைகளை பின்பற்றுவேன்

kampan
25-09-2008, 01:52 PM
அழகான, அற்புதமான சிந்தனைகள் யாருடையதென்றாலும் அது அமரத்துவம் பெறும்..!! :)

சரியான கூற்றே ஆனால் மன்றத்தின் மகுடம் நீங்கள் சில சந்தர்ப்பங்களில் மறைந்து போகிறீர்களே?

ஏது வீட்டு சுமையா?

Narathar
25-09-2008, 03:14 PM
மிகவும் அருமையான முயற்ச்சி..
கட்டாயம் மன்ற விதிகளை கடைபிடிப்பேன்.....
நான் அவற்றை மீறுவதாக யாராவது கருதினால்..... என்னிடமே நேரிடையாக சுட்டிக்காட்டும் படி ( அன்பிருந்தால் PM செய்யும்படி ) தாழ்மையாக வேண்டி நிற்கின்றேன்......

==========================================================================
**************************************************************************
==========================================================================

நாராயணா!!!!!

தீபா
25-09-2008, 03:25 PM
மிகவும் அருமையான முயற்ச்சி..
கட்டாயம் மன்ற விதிகளை கடைபிடிப்பேன்.....
நான் அவற்றை மீறுவதாக யாராவது கருதினால்..... என்னிடமே நேரிடையாக சுட்டிக்காட்டும் படி ( அன்பிருந்தால் PM செய்யும்படி ) தாழ்மையாக வேண்டி நிற்கின்றேன்......


அப்படின்னா, அன்பா உங்களுக்க்க்கு நிறைய மடல் அனுப்பிகிட்டே இருக்கேன்!! :D :D :D

தீபன்
25-09-2008, 03:42 PM
நாராயணா!!!!!
இதுவே ஒருவகை மீறல்தான்....:lachen001:
(எப்படியென கேட்டால் விளக்கம் தருகிறேன்...)
விதிமுறையின் வெள்ளோட்டத்தை நாரதரிலிருந்தே ஆரம்பிக்கலாமே...:mini023:

அக்னி
25-09-2008, 08:42 PM
இதுவே ஒருவகை மீறல்தான்....:lachen001:
(எப்படியென கேட்டால் விளக்கம் தருகிறேன்...)
விதிமுறையின் வெள்ளோட்டத்தை நாரதரிலிருந்தே ஆரம்பிக்கலாமே...:mini023:
எப்படி..?
(கேட்டுவிட்டேன் விளக்கத்தைத் தாருங்களேன்...)

விகடன்
25-09-2008, 08:57 PM
மென்தடை வருகை நன்றாக உள்ளது.
மன்றத்தில் ஒருவருமே மெந்தடை பெறக்கூடாது என்பது எனது அவா.
எல்லோரும் நல்ல புரிந்துணர்வுடன் செயற்பட்டு நம் முன்னேற்றத்திற்கும் மன்றத்தின் தரத்திற்கும் பங்கம் விளைவிக்காது நடப்போம்.

தீபன்
26-09-2008, 12:45 AM
எப்படி..?
(கேட்டுவிட்டேன் விளக்கத்தைத் தாருங்களேன்...)

ஹி ஹி.... அது பொறுப்பாளர்களுக்கு சொன்னது.... :icon_ush:

Narathar
26-09-2008, 01:29 AM
இதுவே ஒருவகை மீறல்தான்....:lachen001:
(எப்படியென கேட்டால் விளக்கம் தருகிறேன்...)
விதிமுறையின் வெள்ளோட்டத்தை நாரதரிலிருந்தே ஆரம்பிக்கலாமே...:mini023:

ஆஹா!!! கெளம்பிட்டாங்கய்யா.....
கெளம்பிட்டாங்க.....

நடத்துங்க நடத்துங்க..
எதுவரைக்குமுன்னு பார்த்திடலாம்..

நாராயணா!!!!

shibly591
26-09-2008, 10:04 AM
நல்ல முடிவு..

வரவேற்கிறேன்..ஏற்றுக்கொள்கிறேன்.

மன்மதன்
26-09-2008, 02:24 PM
காலத்திற்கேற்ற நல்ல அறிவிப்பு..

வரவேற்கிறேன்..

பிச்சி
26-09-2008, 02:40 PM
நான் திறம்பட நடந்துகொள்வேன் என்று உறுதி கொள்கிறேன்.

அன்புடன்
பிச்சி

பாண்டியன்
23-10-2008, 09:11 AM
வரவேற்கிறேன்

Maruthu
23-10-2008, 12:21 PM
விதிமுறையை மீறும் குற்றத்துக்கு, குற்றம் செய்பவருடைய மனதை புண்படுத்தாத, உதாசீனப்படுத்தாத, அவமதிப்பு செய்யாத நல்ல விதிமுறை.

மென் தடை முறையை வரவேற்கிறேன்.

மன்ற நிர்வாகத்தினை பாராட்டுகிறேன். விதிமுறையை மீறாமல் பார்த்துக்கொள்கிறேன்.


அன்புடன்...
மருது.

தூயவன்
13-12-2008, 02:11 AM
நல்ல விதிமுறை.

நாட்டாமை
13-12-2008, 05:05 AM
super
பட்மன் ஆங்கில பதிவுகளை தவிர்க்கலாமே... :D:D:D

ஆதவா
13-12-2008, 08:43 AM
Originally Posted by batman*

super


பேட்மேன் ஸ்டார் அவர்களே:D

ஆங்கிலப்பதிவுகளை மன்றம் ஏற்பதில்லை... சிரமம் பட்டாலும் தமிழிலேயே எழுதுங்கள்...

பென்ஸ்: பேட்மேன், ஸ்டார் அப்படீன்னு நீயே தமிங்கிலத்திலதானடா எழுதற?

ஆதவா : ஹி ஹி... உங்க பேரே ஆங்கிலப் பேருதாங்க... (Benz)

பென்ஸ் : ஆவ்வ்வ்வ்வ்.....


பட்மன் ஆங்கில பதிவுகளை தவிர்க்கலாமே... :D:D:D

பட்மனுங்களா? விட்டா புட்மேன் என்று க்கூட சொல்லுவீங்களா நாட்டாமை சார்..:sauer028:

anna
13-12-2008, 09:09 AM
அருமையான வரவேற்க தக்க முடிவுகள் தான்.

நாட்டாமை
13-12-2008, 10:50 AM
பட்மனுங்களா? விட்டா புட்மேன் என்று க்கூட சொல்லுவீங்களா நாட்டாமை சார்..:sauer028:
கண்ணுல விளக்கெண்ணெய் வச்சிட்டு சுத்துவீங்களா... ஆ:sauer028:த:sauer028:....வா.....:sauer028:

நிரன்
13-12-2008, 11:01 AM
மிகவும் நல்ல முடிவு. இதனை நான் முழு மனதுடன் வரவேற்கிறேன்
என்னை போல் அடிக்கடி தவறு செய்பவர்களுக்கு
மிக்க மகிழ்ற்சியாக இருக்கும் :)

சிவா.ஜி
13-12-2008, 02:07 PM
பேட்மேன்...உங்கள் ஆங்கிலப்பதிவை தமிழில் மாற்றியுள்ளேன். இனி வரும் பதிவுகள் தமிழில் மட்டுமே இருக்குமாறு தயவுசெய்து பார்த்துக்கொள்ளுங்கள். நன்றி.

தூயவன்
13-12-2008, 02:39 PM
நன்றி சிவா.ஜி :D