PDA

View Full Version : Twitter in Tamil - எளிய தமிழில் ட்விட்டர்



suresh2
21-09-2008, 01:47 PM
http://twitter.com/

ட்விட்டர் அனைவரும் இன்று பயன்படுத்தும் ஒரு அருமையான இணையதளம். ட்விட்டரைப் பற்றி எளிமையாக அறிந்து கொள்ள ட்விட்டரின் இணையதளத்திலேயே ஒளிப்படம் கொடுக்கப்பட்டுள்ளது.

http://dotsub.com/ இணையதளம் மூலமாக அவர்கள் ட்விட்டர் பற்றிய ஒளிப்படத்தை தரவேற்றம் செய்துள்ளார்கள். இங்கு ஒளிப்படத்திற்கு தமிழில் (subtitle) மொழி மாற்றம் செய்யலாம். நான் ட்விட்டர் ஒளிப்படத்தை மொழி மாற்றம் செய்துள்ளேன். ட்விட்டர் ஒளிப்படத்தைத் தமிழில் காண கீழே உள்ள சுட்டியை சொடுக்கி, தமிழ் மொழித்தேர்வு செய்யவும்.

http://dotsub.com/media/665bd0d5-a9f4-4a07-9d9e-b31ba926ca78/e/s

தீபன்
21-09-2008, 02:26 PM
நண்பரே, சொன்னதுதான் சொன்னீர்கள்... அது எத்தகைய பயன்பாட்டிற்குரியதென்பது பற்றியும் சிறு குறிப்பு கொடுத்திருக்கலாமல்லவா... தேவையானவர்களை பார்க்க தூண்டியிருக்கும்...
அதையும் விளக்கிவிடுங்கள். என் போன்றவர்களுக்கு உதவியாக இருக்கும்.

suresh2
22-09-2008, 01:21 AM
சுட்டியில் உள்ள ஒளிப்படத்தில் எளிமையாக விளக்கப்பட்டு உள்ளது. ட்விட்டர் மூலமாக நீங்கள் தற்பொழுது என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள் என்பதை இணையத்தில் உங்கள் அலைபேசி மூலமாக, இணைய அரட்டை மூலமாக, ட்விட்டர் பக்கம் மூலமாக, பதியலாம். இதன்மூலம் உங்கள் நண்பர்கள், உறவினர்கள் உங்களுடைய அன்றாட நடவடிக்கைகளை தெரிந்து கொள்ள இயலும். உதாரணமாக, உங்களுடைய நண்பர்கள் அனைவருக்கும் ஒரு திரைப்படத்தைப் பற்றி விமர்சனம் அனுப்ப நினைத்தால், உங்கள் ட்விட்டரில் பதிந்தால் போதும். உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் மின்னஞ்சல் மூலமாக, இணைய அரட்டை மூலமாக அல்லது இலவச குறுஞ்செய்தி மூலமாக தகவல் சென்றுவிடும். அவர்களும் உங்களுடைய விமர்சனதுதுக்கு பதில் அளிக்க இயலும். மேலும் http://www.rememberthemilk.com/services/twitter/ (http://www.rememberthemilk.com/services/twitter/) , http://www.iwantsandy.com/ இலவச சேவைகள் முலமாக, ட்விட்டரில் உங்களுடைய வருங்கால வேலைகளை பதிந்து கொள்வதுடன், சரியான நேரத்திற்கு நினைவூட்டலும் மின்னஞ்சல் மூலமாக, இணைய அரட்டை மூலமாக அல்லது இலவச குறுஞ்செய்தி மூலமாக உங்களை வந்து சேரும். ட்விட்டரில் உள்ளே சென்று விளையாடித்தான் பாருங்களேன். :icon_b:https://twitter.com/signup

தீபன்
22-09-2008, 02:47 AM
நன்றி நண்பரே... இதைத்தான் எதிர்பார்த்தேன். இப்படி சுருக்கமான அறிமுகத்துடன் விவரங்களை தந்தால் படிக்க ஆரம்பிக்கையிலேயே புரிந்துகொள்ள இலகுவாக இருக்கும். தொடர்ந்து இத்தகைய விவரங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

poornima
22-09-2008, 07:08 AM
நன்றி சுரேஷ்..நல்ல புதிய பயனுள்ள தகவல்கள்