PDA

View Full Version : எனக்குப்பின்னால் இன்னொரு துப்பாக்கி...

shibly591
21-09-2008, 06:27 AM
எனக்கு முன்னால் துப்பாக்கி
ஒன்று நீட்டப்பட்டுக்கொண'டிருக்கிறது...

எப்போது வெடிக்கும் என்பது பற்றி
எனக்குத்தெரியவில்லை..
அந்தத்துப்பாக்கி ஏந்தப்பட்ட
கரங்களுக்கும் அது தெரிந்திருக்காது...

பேசினால்
தூக்கப்பட்டிருக்கும் என் கைகளை
நான் கீழிறக்கினால்
அழுதால்
ஏன் சிரித்தாலும் கூட அது வெடிக்கச்செய்யப்படலாம்..

அது நிஜ துப்பாக்கிதானா..
உள்ளே குண்டுகள் நிரப்பப்பட்டிருக்குமா
என்பது பற்றி யாரிடம் நான் விசாரிப்பது..?

இந்தத்துப்பாக்கி
எத்தனை உயிர்களை தின்று தீர்த்ததோ யான் அறியேன்..

அசைவற்ற சிலையாக
எவ்வளவு நேரம் நான் நிற்பது?
சடுதியாக பின்னால் ஓடத்திரும்புகிறேன்..

எனக்குப்பின்னால்
எனது பின்மண்டையை குறிபார்த்தபடி
இன்னொரு துப்பாக்கி...

தீபன்
21-09-2008, 02:13 PM
இந்த இக்கட்டிலும் கூட உங்களால் எழுதி பதிக்க முடிகிறது.... அப்படியானால் அவை டம்மிதான்...!

shibly591
21-09-2008, 03:27 PM
இந்த இக்கட்டிலும் கூட உங்களால் எழுதி பதிக்க முடிகிறது.... அப்படியானால் அவை டம்மிதான்...!

ஹி ஹி என்று சிரிக்கும்படியாகிவிட்டதா இந்தக்கவிதை..?

Keelai Naadaan
21-09-2008, 04:19 PM
எதையோ மனதில் வைத்து எழுதியிருக்கிறீர்கள்.
மன்னிக்கவும் - என்ன என்பது புரியவில்லை.

ஓவியன்
22-09-2008, 04:16 AM
நீங்கள் அதிஸ்டசாலிதான் ஷிப்லி..!!

ஏனென்றால் உங்களுக்கு முன்னாலும் பின்னாலும் நீண்டப்பட்ட துப்பாக்கிகள், நீட்டப்பட்ட உடனேயே வெடித்துத் தீர்க்காமல் உங்களைக் கவிதை எழுத சந்தர்ப்பம் அளித்திருக்கின்றனவே......!! :)

shibly591
22-09-2008, 06:39 AM
நன்றி கீழை நாடன்..

இலங்கையில் தற்போது அதிகரித்து வரும் துப்பாக்கி கொலைகளை மையப்படுத்தியே இக்கவிதையை எழுதியுள்ளேன்..

இலங்கைப்பிரஜைகள் எல்லோரும் உயிரை கையில் பிடித்துக்கொண்டுதான் வாழ்பிறோம்..ஒவ்iவாருவரும் தம்மைச்சூழ துப்பாக்கிகள் சூழ்ந்திருப்பதாகவே உணர்கிறார்கள்..ஒரு துப்பாக்கியிலிருந்து தப்பினால் இன்னொரு துப்பாக்கி பதம் பார்க்க வாய்ப்பிருக்கும் சூழலில் தோன்றிய கவிதையே இது..

எங்கள் தேசத்தில் மனித உயிர்களின் இருப்பினை கேள்விக்குறியாக்கிக்கொண்டிருக்கின்றன் துப்பாக்கி..

இன்னும் மேலதிகமாய்ச்சொல்ல அழுதுவிடுவேன் என்று தயங்குகிறேன்..

shibly591
22-09-2008, 06:41 AM
நீங்கள் அதிஸ்டசாலிதான் ஷிப்லி..!!

ஏனென்றால் உங்களுக்கு முன்னாலும் பின்னாலும் நீண்டப்பட்ட துப்பாக்கிகள், நீட்டப்பட்ட உடனேயே வெடித்துத் தீர்க்காமல் உங்களைக் கவிதை எழுத சந்தர்ப்பம் அளித்திருக்கின்றனவே......!! :)

ஓவியன் அவர்களே...

இந்த அதிஸ்டம் நீடிக்குமா...? என்பதுதான் எனது கேள்விக்குறி

kulirthazhal
25-09-2008, 12:34 PM
அந்த துப்பாக்கியைக் கண்டு அஞ்சியது, அஞ்சாதது, ரசித்தது, தப்பிக்கநினைத்தது, எல்லாமே உயிர்தான். என்றபோதும் கவிதையில் ரசித்துக்கொள்ளலாம் (மற்ற)ஒரு உயிரின் துன்பத்தையும், அல்லது தமக்கு வந்த துயர் போல துடிக்கலாம். உங்கள் கவிதை எழுத்துக்களைத்தாண்டி களத்திற்கு நேரடியாக கொண்டுசெல்கிறது...
நன்றி!!!

அமரன்
25-09-2008, 01:19 PM
காகிதாயுதம் தாங்கிய கவிதைப் போராளியின் களநிலவர விபரிப்பு. துப்பாக்கி கொள்ளப்படும் பொருளை ஒத்து மாறும் பொருள் கொடுக்கும் முகில்கவிதை.

ஓவியன் சொன்னது போல நீங்கள் அதிஸ்டசாலிதான். துப்பாக்கி வெடிப்பதும் வெடிக்காததும் உங்கள் கையில். ஒரு சிலருக்கு அது யாரோ கையில்.. திரும்புவதுக்கு அனுமதித்துள்ளது உங்கள் நெற்றி தொட்ட துப்பாக்கி. எத்தனையோ பேருக்கு சிறிதளவு அசைந்தாலே வெடிக்கும் நிலையில் பிடரியை வருடியபடி உள்ளது துப்பாக்கி.

நீங்கள் சொல்ல வந்ததும் இதைத்தான் என்று நினைக்கிறேன். துப்பாக்கியைப் பார்த்ததில் தடுமாறி வீட்டீர்கள். துப்பாக்கி பின்பக்கமிருந்து நீண்டிருந்தால் சரியாய் சொல்லி இருப்பீர்கள்.

எய்தவன் இயற்கை எய்திய பின்னும் இயற்கை எய்திக் கொண்டே இருக்கிறோம் அம்புகளால்..

kampan
25-09-2008, 01:48 PM
எம்மை சுற்றும் துப்பாக்கிகளையே எம் நெம்புகோளாக்கிக் கொள்ளலாம்
ஆனால் எம்மைச் சுற்றும் துஸ்ரர்களிடமிருந்து தூர விலகமுடியுமா?

shibly591
26-09-2008, 04:37 AM
எம்மை சுற்றும் துப்பாக்கிகளையே எம் நெம்புகோளாக்கிக் கொள்ளலாம்
ஆனால் எம்மைச் சுற்றும் துஸ்ரர்களிடமிருந்து தூர விலகமுடியுமா?

நன்றி நண்பரே...

shibly591
26-09-2008, 04:38 AM
அந்த துப்பாக்கியைக் கண்டு அஞ்சியது, அஞ்சாதது, ரசித்தது, தப்பிக்கநினைத்தது, எல்லாமே உயிர்தான். என்றபோதும் கவிதையில் ரசித்துக்கொள்ளலாம் (மற்ற)ஒரு உயிரின் துன்பத்தையும், அல்லது தமக்கு வந்த துயர் போல துடிக்கலாம். உங்கள் கவிதை எழுத்துக்களைத்தாண்டி களத்திற்கு நேரடியாக கொண்டுசெல்கிறது...
நன்றி!!!

நன்றி குளிர்தழல்...

விமர்சனம் சிறப்பாய் இருந்தது

shibly591
26-09-2008, 04:43 AM
எய்தவன் இயற்கை எய்திய பின்னும் இயற்கை எய்திக் கொண்டே இருக்கிறோம் அம்புகளால்..

உண்மைதான் அமரன்..

ஒரு பாடல் நினைவுக்கு வருகிறது..

"ஏசுகள் என்றோ மாண்ட பின்னாலும் சிலுவைகள் இன்னும் குறையவில்லை"
(வைரமுத்து)

ஆயுதங்கள் எண்ணிக்கை அதிகரிக்க மனித உயிர்கள் குறைகின்றன..வேடிக்கை உலகம்..'

நன்றி அமரன்..