PDA

View Full Version : அந்தி மாலை



shibly591
21-09-2008, 02:41 AM
உன் வெடகத்தைப்பார்த்த
வானம் உடனே பிரசவித்தது
அந்தி மாலையை........

இளசு
21-09-2008, 09:29 AM
நாணம் வந்ததால் மாலை வந்ததா?
மாலை வந்ததால் நாணம் வந்ததா?


வாழ்த்துகள் ஷிப்லி!

poornima
21-09-2008, 09:40 AM
அந்தி மாலையை வரழைத்தது
மறைப்பதற்கா
மாலையிடவா

- நல்ல கற்பனை பாராட்டுகள்

இளசு
21-09-2008, 09:49 AM
அந்திமாலையை வரவழைத்தது
மறைப்பதற்கா
மாலையிடவா


அந்திமாலையால் வெளிச்சம் மறைந்தால் என்ன?
அவள் குங்குமச் சிவப்பால் அழகு இன்னும் ஒளிருமே!



அந்தி - மாலையை வரவழைத்தது
மறைப்பதற்கா
மாலையிடவா


மாலையிட்ட பின்
மறைத்தது -
மங்கையின் நாணத்தை மட்டுமே!

poornima
21-09-2008, 09:53 AM
அட இப்படி ஒரு பார்வை இருக்கிறதா என்ன..?
வியந்தேன் உங்கள் நடையை
ரசித்தேன் உங்கள் குறும்பை..

shibly591
21-09-2008, 11:05 AM
நாணம் வந்ததால் மாலை வந்ததா?
மாலை வந்ததால் நாணம் வந்ததா?


வாழ்த்துகள் ஷிப்லி!

நன்றி இளசு அண்ணா...

மாலை நேர ஒளியைப்போலவே அழகான பின்னூட்டம்..

வியந்தேன்..

மீண்டும் நன்றிகள்

shibly591
21-09-2008, 11:06 AM
அட இப்படி ஒரு பார்வை இருக்கிறதா என்ன..?
வியந்தேன் உங்கள் நடையை
ரசித்தேன் உங்கள் குறும்பை..

நன்றி பூர்ணிமா....

உங்கள் பின்னூட்டத்தை வெகுவாக ரசிக்கிறேன்..

தொடருங்கள்

lolluvathiyar
22-09-2008, 10:56 AM
திருமனம் நடந்த முடிந்து சில காலம் கழித்து சென்ற உன் முகத்தில் ஏற்படும் ஏற்படும் வெட்கத்தை பார்த்து வானம் சுட்டெரிக்கும் கோடை கால மத்தியானம் போல*

அமரன்
22-09-2008, 03:06 PM
அனுபவித்து எழுதிய கவிதைகள், பதில்கள் ஊடே வாத்தியாரின் அனுபவத்தையும் வாசித்து ரசித்து வெகுவாய் அனுபவித்தேன்..:)

பாராட்டுகள் அனைவருக்கும்.

எனக்கென்னமோ ஷிப்லி
எள்ளுவதாகவே தோன்றுகிறது..

அவள் வெட்கத்தைப்
பார்த்த வானம்
கடைசியாய் அழுததாம்
மாலை(மழை)யாக.
அதன் பிறகு வரட்சியாம்
நாணிலும் வானிலும்..

என்ன வில்லத்தனம் பாருங்கள்.:)

shibly591
22-09-2008, 04:29 PM
எனக்கென்னமோ ஷிப்லி
எள்ளுவதாகவே தோன்றுகிறது..



:traurig001::traurig001::traurig001::traurig001::traurig001:
:fragend005::fragend005::fragend005::fragend005::fragend005:
:icon_p::icon_p::icon_p::icon_p::icon_p::icon_p::icon_p: