PDA

View Full Version : தூங்க விடுங்கள்!



Keelai Naadaan
20-09-2008, 05:41 PM
இந்த பாடல் 1977-ம் வருட ஆனந்த விகடன் புத்தகத்திலே பிரசுரமாயிருக்கிறது. எழுதியவர்: ஆனந்தப்பிரியன்.

ஏனோ தெரியவில்லை, எனக்கு பிடித்திருக்கிறது. உங்களுக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்

அவனை எழுப்ப்பாதீர்; அப்படியே தூங்கட்டும்
ஆழ்ந்த துயிலினிலே அமைதியினை காணட்டும்
அன்புக் குழந்தையவன் அரையாண்டு சிறுவனவன்
இந்த வயதினிலே இப்பொழுது தூங்குவதே
சுகமான தூக்கம்! அவன் சுகமாக தூங்கட்டும்!

கண்ணை விழித்திந்த காசினியை காணூங்கால்
என்னத்துயர் வருமோ, எங்கெங்கு அடி விழுமோ
காதல் வருமோ, காதலுக்கு தடை வருமோ
மோதல் வருமோ, முறை கெடுவார் துணை வருமோ
நன்றி இலா நண்பர்கள்தாம் நாற்புறமும் சூழ்வாரோ
நலமிழந்த பெண்ணொருத்தி நாயகியாய் வருவாளோ!

செய்யத்தொழில் வருமோ, திண்டாட்டந்தான் வருமோ
வெயில் அழைத்து வரும் வியர்வையிலே நீராடி
"ஐயா பசி" என்று அலைகின்ற நிலை வருமோ
என்ன வருமென்று இப்பொழுது யாரறிவார்?
அவனை எழுப்பாதீர், அப்படியே தூங்கட்டும்!

கோடிக்கதிபதியெனக் குறையாது வந்தாலும்
நாட்டுத்தலைவனென நல்வாழ்வு பெற்றாலும்
கேட்ட பொருளெல்லாம் கிடைத்தாலும் அவன் வீட்டு
மாட்டுக்கும் கூட மரியாதை கிடைத்தாலும்
பிரச்னைகள் தீர்ந்தாலும் பால் பழங்கள் உண்டாலும்
சொத்துள்ள காரணத்தால் தூக்கம் பிடிக்காது
அவனை எழுப்பாதீர், அப்படியே தூங்கட்டும்

பூப்போல தூங்குகின்றான்; பூமியிலே உள்ளதெல்லாம்
பார்க்காமல் தூங்குகின்றான்; பாவிகளை இன்று வரை
சேராமல் தூங்குகின்றான்; தெய்வத்தின் காதினிலே
ரகசியங்கள் பேசுகின்றான்; "லாலீலா" பாடுகின்றான்
வெள்ளை மலர் முகத்தை வெள்ளி நிலா பெட்டகத்தை
பிள்ளை கனியமுதை பேதையீர் எழுப்பாதீர்.
அவனை எழுப்பாதீர், அப்படியே தூங்கட்டும்.
............................................................................
நன்றி: ஆனந்த விகடன் / ஆனந்தப்பிரியன்

இளசு
20-09-2008, 06:41 PM
பகிர்ந்தமைக்கு நன்றி கீழைநாடன்..

இயல்பிலியே இன்னல்கள் எதிர்காலத்தில் அதிகம் சந்திக்கும் பெண் குழந்தைகளுக்காக-

நம் கவியரசர் ''சித்தி'' படத்தில் எழுதிய

காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே
காலமிதைத் தவறவிட்டால் தூக்கமில்லை மகளே...

என்ற அழியாக் கவிதை இப்போது என் நினைவாடலில்..

Keelai Naadaan
21-09-2008, 04:11 PM
நன்றி நண்பரே.
இங்கு பதிந்துள்ள இந்த பாடலை கூட கண்ணதாசன் பாடலாக பேச்சாளர் திருமதி பாரதி பாஸ்கர் அவர்கள் ஒரு பட்டிமன்றத்தில் சொன்னதாக நினைவு.
ஆனால் நான் பார்த்தது ஆனந்த பிரியன் என்ற பெயரில் தான்.

vinodh
04-12-2008, 09:42 AM
தமிழில் எழுத தெரியவில்லை
nandraga irundhadu