PDA

View Full Version : சொந்தமாக சர்வர் சாத்தியமா?



rajatemp
20-09-2008, 04:04 AM
சொந்தமாக சர்வர் போட்டு நமது இணையதளத்தை நாமே தொடங்கலாமா?

அதற்கு நம்மிடம் என்னென்ன இருக்க வேண்டும்.

பொதுவாக எவ்வளவு செலவாகும்

இராசகுமாரன்
22-09-2008, 09:11 PM
சொந்தமாக என்றால்... வீட்டிலா? மிக கஷ்டம். அதற்கான பிரத்யோக வன்பொருட்கள் தேவை, நிறைய செலவாகும், போதிய தரமிருக்காது. அப்படியும் விருப்பமிருந்தால் இங்கே பார்க்க: http://www.dslwebserver.com/

ஆனால், மாத/வருட வாடகையில் சொந்தமாக இணையத்தில் சர்வர் வைத்துக் கொள்ளலாம். இதை Dedicated Server என்பார்கள். மாதத்திற்கு $250 முதல் $750 வரை ஆகும். சர்வரை நீங்கள் அமேரிக்கா, லண்டன், ஆஸ்திரேலியாவில் கூட வைத்துக் கொண்டு இந்தியாவில் இருந்து இயக்கலாம்.

சர்வர் வைத்திருப்பது பிரச்சனையில்லை, அதை தொடர்ந்து பராமரிப்பது தான் கஷ்டம். சர்வரின் வன்பொருட்கள், மென்பொருட்கள் பற்றி தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். சர்வரை எவ்வாறு நடத்துவது என்பதை நன்றாக தெரிந்து கொண்டால் தான் பராமரிப்பு எளிது. பல இடையூறுகள் வரும், நச்சு நிரல்கள் வந்து தாக்கும், நம்மால் தொடர்ந்து கண்காணிக்க முடியாவிட்டால், அதையும் மாத வாடகையில் கவனித்துக் கொள்ள ஆட்கள் கிடைக்கும்.

பொதுவாக சிறிய தளங்களுக்கு தனியாக "டெடிகேடட் சர்வர்" வாங்க அவசியமில்லை. முதலில் Shared Host-ஆக ஒரு சர்வரில் இடம் வாங்கி துவங்கலாம் (மாதம் $5 முதல் $25 வரை). அதில் சற்று கற்று தேர்ந்த பின், VPS என்னும் Virtual Private Server-க்கு மாறலாம் (மாதம் $50 முதல் $100 வரை). அதில் போதிய அனுபவம் பெற்ற பின்னர் Dedicated Server-களுக்கு செல்வது நல்லது.

சர்வர் இயங்குதளங்களில் (OS) Linux மற்றும் Windows உள்ளது. இதில் Linux மூலம் தளத்தை நடத்துவது சிறந்தது. Linux அறியாதவர்கள் Dedicated Server வைத்திருப்பது கடினம். அதைப் பற்றி கொஞ்சமாவது தெரிந்து கொள்வதும் நல்லது.

rajatemp
24-09-2008, 10:20 AM
நன்றி இராசகுமாரன் அவர்களே

நான் ஏற்கனவே VPS என்னும் Virtual Private Server- பயன்படுத்திவிட்டேன்
சரியில்லை

Dedicated Server இதுவரை பயன்படுத்தவில்லை

அதுதான் கேட்டேன்

http://www.dslwebserver.com/ இதையும் பார்த்துவிட்டேன்
இது சாத்தியமா சரியாக வருமா?
கூறவும்

சூரியன்
24-09-2008, 04:02 PM
நல்ல பயனுள்ள தகவல் தெளிவாக சொன்னதுக்கு நன்றி இராசகுமாரன் அண்ணா.

ஜெயாஸ்தா
25-09-2008, 02:56 AM
நன்றி இராசகுமாரன் அவர்களே

நான் ஏற்கனவே VPS என்னும் Virtual Private Server- பயன்படுத்திவிட்டேன்
சரியில்லை

நண்பரே.. தாங்கள் இணையதளம் ஏதும் நடத்திக்கொண்டிருக்கிறீர்களா? அப்படியென்றால் அதன் முகவரியைத் தெரிவித்தால் நாங்களும் கண்டு களிப்புறுவேமே....!

selvamurali
07-11-2008, 12:24 PM
நண்பர்களே!

இந்தியாவில் தனி சர்வர் தொடங்குவது குறித்து பல்வேறு இடங்களில் நான் சேகரித்த தகவல்கள். அதுவும் இரண்டு வருடத்திற்கு முன்பு
அமெரிக்காவில் டேட்டா சென்டர்களின் வேகம் குறைந்தது 20 எம்பிபிஎஸ் வது இருக்கும். ஆனால் நம்மூரில் 2 எம்பிபிஎஸ் கூட முழுமை பெறவில்லை.
அப்படியாயின் சர்வரானது எப்படி தகவல்களை உலகம் முழுவதும் வழங்கும். இப்படி குறைந்த வேகத்தில் பயன்படுத்தினால் பக்கமானது பெறுபவருக்கு சற்று தாமதமாக வரும்.

அதோ பேண்ட்வித் .. இதற்கான ஐஎஸ்பி கட்டணம் கட்டி மால்வதற்குள் நம் சொத்தை விற்றாலும் பத்தாது....

அதோடு விண்டோஸ் சர்வர் என்பதை நினைத்து கூட பார்க்க முடியாது.
அதில் சர்வரில் ஆரம்பித்து, டேட்டாபேஸ், மெயில் சர்வர் இப்படி ஆரம்பித்தால் குறைந்த பட்ச அமலாக்க கட்டணமே 25 லட்சத்திற்கு மேல் வருகிறது.
இதுவே லினக்ஸ் என்றால் 5 லட்சத்திற்குள் முடித்துவிடலாம்.

டெடிகேட்டட் சர்வர்/மற்றும் விபிஎஸ் சர்வர்களில் பெரும் ப்ரச்னை என்னவெனில் execution time அதாவது ஒரு ஸ்கிரிப்டானது இயங்குவற்கு தேவையான நேரம் மிக குறைவு. 30 விநாடிகளுக்கு மேல் சென்றால் ஓவர் லோட் என்று எர்ரர் செய்து தோன்றும். இப்போதுதான் முக்கி முக்கி சற்று அதிகமாக வந்திருக்கிறது....

எல்லாவற்றுக்கும் மேலாக குறைந்தது இரண்டு இணைய இணைப்பாவது தேவை . ஒன்று செயலிலழந்தால் மற்றொன்று பயன்படும்... அதோடு
சர்வரை மேய்பதற்கு சர்வர் சார்ந்தத அறிவு தேவை.

இதை மேய்ப்பதற்கு நம்மூரில் வரும் காலங்களில் வாய்ப்புண்டு.. ஆனால் இப்போது பெரிய நிறுவனங்களுக்கு மட்டுமே வாய்ப்பு இருக்கிறது.

namsec
07-11-2008, 01:57 PM
அருமையான தகவல்கள் தந்தமைக்கு நன்றி