PDA

View Full Version : ஏமாற்றம் (குட்டிக்கதை)



ஐரேனிபுரம் பால்ராசய்யா
19-09-2008, 01:22 PM
ஊரிலிருக்கும் அப்பாவுக்கு மணியார்டர் அனுப்பி வைத்தால் தாமதமாகப் போய்ச் சேருமென்று கருதி, வங்கியில் அப்பா பெயரில் கணக்கு ஒன்று தொடங்கி டெபிட் கார்டும் வாங்கித்தந்தேன்.

சம்பளம் வாங்கியதும் முதல் வேலையாக அப்பா கணக்கில் பணம் போட்டுவிட்டு தகவல் தெரிவித்தேன். ஏ.டி.எம் சென்டரிலிருந்து பணம் எடுத்துக்கொண்டதாக அப்பாவும் தகவல் தெரிவித்தார்.

அடுத்து நான்கு மாதங்கள் தொடர்ந்து வங்கியில் பணம் போட்டும் அவர் எடுக்கவில்லை.

தொலைபேசியில் அப்பாவை தொடர்பு கொண்டு “வங்கியிலிருந்து ஏன் பணம் எடுக்கவில்லை” என்று கேட்டேன்.

``முன்னயெல்லாம் மணியார்டர் வரும். நீ பணத்த அனுப்பியிருக்கிற விசயத்த தபால்காரர் வந்து சொல்றப்போ கேக்குற என்க்கு ஒரு சந்தோஷம், அந்த பணத்துலயிருந்து அஞ்சோ பத்தோ இனாமா தபால்காரருக்கு தர்றப்போ அவர் முகத்துல தெரியுற மகிழ்ச்சி இதெல்லாம் டெபிட் கார்டுல பணம் எடுக்கறப்போ கிடைக்கலப்பா என்ற போது அவரது ஏமாற்றம் புரிந்தது.

நதி
19-09-2008, 03:00 PM
உணர்வுகளுடன் வாழப்பழகிய மனிதர்களின் நிழலாக கதை.

எங்க ஊருல டெபிட் கார்ட்டில் காசெடுக்கும் போது குறிப்பிட்ட தொகை சேவை வரியாக வெட்டப்படும். மணியார்டரில் வந்த காசை தந்த தபால்க் காரனுக்கு கொடுக்கும் காசை விட அது குறைவானதுதான். ஆனால் முன்ன*யதைக் காட்டிலும் பின்னயதில் நிறைவு அதிகம். குமைவு குறைவு.

Keelai Naadaan
19-09-2008, 03:58 PM
அர்த்தமுள்ள குட்டிக கதை. பாராட்டுக்கள்.
கைபேசி, ஏ.டி.எம், கேபிள் டி.வி இப்படி பல வசதிகள் கிடைத்து ஒரு புறம் மகிழ்ந்தாலும் இன்னொருபுறம் சில இனிய உணர்வுகளை இழந்து தான் போய் விட்டோம்.
எஸ். ராமகிருஷ்னன் அவர்கள் ஒரு கட்டுரையில் சொல்லியது போல் "வேகத்திலும் பரபரப்பிலும், இயல்பான அன்பை, அக்கறையை நாம் கை தவற விட்டுக்கொண்டிருக்கிறோம்.

ஜெயாஸ்தா
22-09-2008, 07:11 AM
மனித மனங்களின் நுட்பமான உணர்வை வெளிகாட்டிய பால்ராசய்யாவுக்கு பாராட்டுக்கள்.

poornima
22-09-2008, 07:15 AM
வாழ்த்துகள் ஐ.பா.இராசையா.. இந்த வார குமுதத்தில் உங்கள் ஒருபக்க சிறுகதை
படித்தேன்.நன்றாக இருந்தது..பாராட்டுகள்..

இளசு
22-09-2008, 07:17 AM
கோக் -பெப்ஸிகளால் மறைந்த பதநீர் போல்
நெஞ்சுக்குழி வரை நனைத்த சுவைக்கதை!

பாராட்டுகள் பால்ரசய்யா அவர்களே!

கீழைநாடனின் மேற்கோள் சிறப்பு..

ஜெயாஸ்தாவின் கையெழுத்தே - அசத்தலான குறுங்கதை!

MURALINITHISH
22-09-2008, 08:13 AM
இனாம் என்ற வார்த்தையில் வரும் லஞ்சத்தை ஆதரிக்கும் கதை இருந்தாலும் நாலே வரியில் சொல்ல வந்ததை சொல்லிய எழுத்தாளருக்கு பாராட்டுக்கள்

சிவா.ஜி
22-09-2008, 08:55 AM
குறுகிய வரிகளில் உணர்வைத்தொட்டுச்செல்லும் படைப்பைத் தருவதில் ராசய்யா அவர்கள் என்றுமே சிறந்தவர். இந்தக் கதையும் அப்படிப்பட்ட ஒன்று வாழ்த்துகள்.