PDA

View Full Version : இதே நாள், இதே மண்டபம்



"பொத்தனூர்"பிரபு
18-09-2008, 01:28 AM
http://3.bp.blogspot.com/_1ii0oYjwrWs/SMs7w79yLKI/AAAAAAAAAHo/kz9Yb12gh-E/s320/paavana.jpg (http://3.bp.blogspot.com/_1ii0oYjwrWs/SMs7w79yLKI/AAAAAAAAAHo/kz9Yb12gh-E/s1600-h/paavana.jpg)


பல வருடம் கழித்து இப்பொதுதான் என் சொந்த ஊருக்கு வருகிறேன்.அதுவும் என் உயிர்த்தோழன் வீட்டு திருமணத்திர்க்காக. மண்டபத்தை பார்க்கும் போதே வசந்தகாலத்தைபோல மனசு இதமாய் பூத்தது


"வாடா வா,இதுதான் வர்ர நேரமா? பத்திரிக்கை கொடுக்கும்போதே சொல்லிக் கொடுத்தேன் அப்ப சரின்னு சொன்ன,நேற்று உன் வீட்டில் இருப்பவர்களை அனுப்பிவிட்டு நீ இப்பத்தான்வர்ர...." - என்று சற்று கோபித்துக் கொண்டே வர்வேற்றான் என் நன்பன் . குளிப்பதற்க்காக அறைக்குச் சென்றேன், வழியில்தான் அவளை பார்த்தேன் . முதலில் ஏதோ சிலைதானோ என்று தோன்றியது அருகில் வரவரவே அது பெண்ணென்று புரிந்தது


சிகப்புநிற பட்டுபுடவையில் தேவதை போல வந்தாள்.அப்போதுதான் குளித்திருப்பாள் என்று நினைக்கிறேன் அந்த ஈரக்கூந்தலை மின்விசிறி தாலாட்டிக் கொண்டே இருந்தது. அருகில் வந்தவள் ஒரு துண்டை என்னிடம் கொடுத்து "அந்த அறையில் சென்று குளித்துவிட்டு சீக்கிரம வாங்க" என்று கூறினாள்.பேசினாளா? பூவெடுத்து வீசினாளா?நிரம்பிய கோப்பையில் மேலும் நீரூற்ற வழிந்தோடும் நீரைப்போல வழியெங்கும் வழிந்தோடுகிறது அவள் அழகு.

அவள் மெல்ல நடக்கிறாள்.இது என்ன வகையான நடை? முதன் முதலில் நடக்க துவங்கும் குழந்தை இருபக்கமும் கைகளையும் நீட்டி பேலன்ஸ் செய்தபடி தத்திதத்தி வரும் போது தெரியுமே ஒரு அழகு அதுவும் உடல் தளர்ந்து சுருங்கிய சருமத்துடன் பாட்டியோ தத்தாவோ நடந்து வரும்போது தெரியுமே ஒரு அழகு அதையும் சேர்த்த அழகு.நடக்க நடக்க பூமி தன் கைகளையேந்தி அவள் பாதத்தை பதியம் போட்டு கொண்ட்து.நாளை அங்கே பூக்கள் முளைத்திருக்ககூடும்
குளித்து முடித்து கூடத்திற்க்கு வந்தேன்.பலவருடமாய் பாராத நன்பர்கள் ஒவ்வொருவராய் நலம் விசாரித்து பேசிக்கொண்டே இருந்தார்கள் என் கண்கள் மட்டும் அவளையே தேடியது. அதோ ! அங்கே நிற்க்கிறாள்,யாருடனோ கையைப்பிடித்து பேசிக்கொண்டிருக்கிறாள் அது அவளின் தோழியாக இருக்கவேண்டும்.சிரித்து சிரித்து பேசுகிறாள் புன்னகைப் பூ அடிக்கடி மலர்ந்தது நிமிடத்திற்க்கு நிமிடம் பூ பூக்கும் அதிசய செடிதான் அவள் முகமோ?..

மணநேரம் நெருங்க மணமக்கள் மணவறையில் அமர்ந்திருந்தனர், மணமக்களின் உறவுமுறை கூட்டம் அதிகம் இருந்ததாலோ என்னவோ அவள் மணமேடையில் சற்றே தள்ளித்தான் நின்றாள்.ஆனால் எனக்கோ "எங்கே தன் அழகில் மயங்கி மணமகன் தன் கழுத்தில் தாலி கட்டிவிடுவானோ "என்று எண்ணி தள்ளி நிற்ப்பது போல தோன்றியது
ஐயர் மந்திரம் சொல்ல மேளம் முழங்க கல்யாணம் முடிந்தது.அனைவரும் அர்ச்சதை தூவினார்கள் முதல் வரிசையில் இருந்ததால் என்மீதும்,மேடையில் இருந்ததால் அவள்மீதும் சிலபல விழுந்தன
அடுத்து என்ன கூட்டம் மெல்ல மெல்ல சாப்பாட்டு அறை பக்கம் சென்றது.நான் என் நன்பருடன் பேசிக்கொண்டிருந்தேன் அவனை யாரோ அழைக்க அவனும் எழுந்து சென்றான்.அப்பொது அவள் அருகில் வந்தாள் "வாங்க சாப்பிட போகலாம்" என்றாள் அரசன் உத்தரவுக்கு அடிபணியும் பணியாளனைப் போல எழுந்து அவளுடன் சென்றேன்
இரண்டடி தூரத்தில் அவள் நடக்க நான் பின்தொடர்ந்தேன். திடீரென நின்ற அவள் என் பக்கம் திரும்பி "அந்த மணவறையை பார்த்தா உங்களுக்கு என்ன தோனுது?" என்று கேட்டாள்,ஒருமுறை மணவறையை பார்த்தேன் பின் அவள் கண்களை உற்று பார்த்து சொன்னேன் " 40 வருசத்துக்கு முன்னாடி இதே நாள், இதே மண்டபம்,அதோ அந்த மணவறையில நான் உனக்கு தாலிகட்டினேனெ " அதுதான் ஞாபகம் வருதுன்னு நான் சொல்ல 'சீ போங்க" என்று கூறி ஓடினாள் 60 வயதை கடந்த என் ஆசை மனைவி.



குறிப்பு : இருவரும் வயதானவர்கள் என்பது தெரிந்த பிறகு மீண்டும் ஒருமுறை கதையை படியுங்கள்(ஏதுக்கு பாவணா படம் போட்டேன்னு கேட்க கூடாது)



:icon_b::icon_b::icon_b::icon_b::icon_b: