PDA

View Full Version : நிறம் மாறும் நிஜங்கள்சுகந்தப்ரீதன்
17-09-2008, 10:33 AM
ஏதோவொரு தருணத்தில் என்னை
நானே ஏமாற்றிக் கொள்கிறேன்..!!
இல்லையெனில்-என்னிடம் நானே
ஏமாந்து போகிறேன்..!!

ஏய்பவனைவிட ஏமாறுபவனே
குற்றவாளி எனில் எனக்கு
கிடைக்கும் இரட்டை தண்டணை..!!

என் நீதிமன்றத்தில்
நீதிபதியும் நானே..
குற்றவாளியும் நானே..!!

வழக்கை விசாரிக்கவென சிலர்
சாட்சியாக நின்றனர் பலர்..!!

என் மன்றத்தின் ஒவ்வொரு
அங்கமும் என் பிம்பமே - இதில்
நிழல் எது..? நிஜம் எது..?
நித்தம் எழும் கேள்வியிது..!!

குழப்பத்தினூடே முடிந்தது
வழக்கின் விசாரணை..!!

தீர்ப்பு நாளில் எனக்கு
நானே எழுதிய தீர்ப்பில்
எனக்கே உடன்பாடில்லை..!!

இருந்தும் ஏற்றுக்கொண்டேன்..
நிறம் மாறும் நிஜங்களையும்
நிலை மாறும் மனிதர்களையும்
குற்றவாளிக்கே உரிய குறுகுறுப்புடன்..!!

subas
17-09-2008, 11:04 AM
உண்மை....!! உண்மை......!! ''ஏதோவொரு தருணத்தில் என்னை
நானே ஏமாற்றிக் கொள்கிறேன்..!!
இல்லையெனில்-என்னிடம் நானே
ஏமாந்து போகிறேன்..!! '' வரிகளில் என்னைசொல்வதாகவே உணர்கிறேன்!!.அனுதாபமும் வியப்பும் கலந்த விஷயம் தான்!,ஆனாலும் உண்மை!! - நட்பும் நம்பிக்கையுமாய் சுபாஷ்-

சிவா.ஜி
17-09-2008, 11:20 AM
ஏமாறுபவன்தான் குற்றவாளியென்றால் நாம் அனைவருமே அந்த இனம்தான். சில நேரம் தெரிந்து, பல நேரங்களில் தெரியாமல்.

நிஜங்கள் நிறம் மாறுவதில்லை.....மாற்றப்படுகின்றன, பொருத்தமான பொய் அலங்காரத்தோடு. அதையும் ஏற்றுக்கொண்டு குறுகுறுப்போடு வாழத்தான் வேண்டியிருக்கிறது. அப்படியே வாழ்ந்து முடிப்போம். வேறென்ன செய்வது. குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை.


நல்ல கருத்து சொல்லும் கவிதைக்கு வாழ்த்துகள் சுபி.

நம்பிகோபாலன்
17-09-2008, 11:41 AM
இந்த பொய்முகத்தோடு வாழும் வாழ்கையில் நானும் ஒருவன்..
வாழ்த்துக்கள் சுபி.

இளசு
17-09-2008, 05:04 PM
நிறம் மாறும் நிஜங்கள்..

எந்த நிறம் நிஜமாம்?

முன்பிருந்ததா?
இன்று வந்ததா?
நாளை வருவதா?


நேற்று அது நிஜம்..
இன்று இது நிஜம்..
நாளை எது நிஜம்?

எதுவும் கடந்துபோகும்!
இதுவும்.....------------------------
ஆழமான உள்மன விசாரணைக்குத் தன்னை ஆட்படுத்திய அந்த..ஒருவனின்
அனைத்து பக்கத்துக்கும் பிரதிநிதியாய் அவனின் பல பிரதிகள்..
கூடுதலாய் விலகிப் பார்த்துப் பதிவெடுக்க இன்னொரு சிறப்புப் பிரதி!

அசாத்தியத்தைச் சாத்தியமாக்கிய கவிதை!

வாழ்த்துகள் சுகந்தா!

சுகந்தப்ரீதன்
18-09-2008, 08:00 AM
வாழ்த்தி பின்னூட்டமிட்ட அனைவருக்கும் என் நன்றி..!!

shibly591
23-09-2008, 12:00 AM
ஏதோவொரு தருணத்தில் என்னை
நானே ஏமாற்றிக் கொள்கிறேன்..!!
இல்லையெனில்-என்னிடம் நானே
ஏமாந்து போகிறேன்..!!
[
COLOR]

யதாரத்தம் நிரம்பி வழியும் அழகிய கவிதை நண்பரே..

வெகுவாக ரசிக்கத்தக்க இந்தக்கவிதையின் ஆரம்ப வரிகள் அற்புதமான சிந்தனை..

வாழ்த்துக்கள் சுகந்தப்ரீதன்..

வசீகரன்
23-09-2008, 04:52 AM
ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் சுகந்தா.. நம்மை சுற்றி நிறைய
அழுக்குகள்.. முடிந்தவரை நாம் சுத்தமாகத்தான் இருக்க பார்க்கிறோம்..!
நமக்குள் இருக்கும் கடவுளையும் மிருகத்தையும்
வெளிகொணர்வது இந்த உலகமே.. என நான் சொல்வேன்...!
அற்புதமான ஒரு கவி படைத்திருக்கிறாய் சுகு.., பாராட்டுக்கள் பல...
வர வர உன் எழுத்துக்களில் நல்ல மெச்சூரிட்டி தெரிகிறது...!
சீக்கிரம் டாக்டர் பட்டம் வாங்கி விடுவாய் போல தெரிகிறதே...!!! ஹீ.... ஹீ... ஹீ....

பாபு
23-09-2008, 07:02 AM
ஒவ்வொருவனும் உண்மையும் பொய்யும் கலந்தவன் தான். ஒவ்வொருவனும் பல மனிதர்களை கொண்ட ஒரு கலப்பினம் தான்.

அருமையான கவிதை நண்பரே !!

சுகந்தப்ரீதன்
23-09-2008, 09:39 AM
யதாரத்தம் நிரம்பி வழியும் அழகிய கவிதை நண்பரே..
வெகுவாக ரசிக்கத்தக்க இந்தக்கவிதையின் ஆரம்ப வரிகள் அற்புதமான சிந்தனை..
வாழ்த்துக்கள் சுகந்தப்ரீதன்..
வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி நண்பரே..!!

ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் சுகந்தா.. நம்மை சுற்றி நிறைய
அழுக்குகள்.. முடிந்தவரை நாம் சுத்தமாகத்தான் இருக்க பார்க்கிறோம்..!
நமக்குள் இருக்கும் கடவுளையும் மிருகத்தையும்
வெளிகொணர்வது இந்த உலகமே.. என நான் சொல்வேன்...!வசீ.. இதைத்தான் நட்பென்பதோ... நான் சொல்ல வந்ததும் அதுதான்டா நண்பா..!!

ஒவ்வொருவனும் உண்மையும் பொய்யும் கலந்தவன் தான். ஒவ்வொருவனும் பல மனிதர்களை கொண்ட ஒரு கலப்பினம் தான். அருமையான கவிதை நண்பரே !! பாராட்டியமைக்கு மிக்க நன்றி பாபு..!!

பிச்சி
23-09-2008, 10:06 AM
வித்தியாசமாக இருக்கிறது உங்கள் கவிதை.

சுகந்தப்ரீதன்
23-09-2008, 10:20 AM
வித்தியாசமாக இருக்கிறது உங்கள் கவிதை.
பின்னூட்டத்திற்க்கு நன்றி..!!