PDA

View Full Version : தமிழ் சொல் திருத்தி பயர்பாக்ஸ் நீட்சி



mbchandar
16-09-2008, 01:23 PM
பயர்பாக்ஸ் வலையுலாவியின் நீட்சி வழியாக இந்த தமிழ் சொல் திருத்தி உருவாக்கப்பட்டுள்ளது. இதில் பயன்படுத்தப்பட்ட தமிழ் அகராதி ஒப்பன் ஆப்பிஸ் விக்கியிலிருந்து (http://wiki.services.openoffice.org/wiki/Dictionaries#Tamil_.28India.29) எடுக்கப்பட்டது. இது இப்பொழுது குறைந்த தமிழ் வார்த்தைகளைக்கொண்டுள்ளது. ஆதலால், தற்பொழுது இது பீட்டவில் உள்ளது.

விரைவில் முழுமையான தமிழ் எழுத்து பிழை நீக்கியை வெளியிடுகின்றோம். இதில் உள்ள குறைகளையும் நிறைகளையும் எங்களுக்கும் அனுப்புங்கள். நீட்சியின் கருத்தாடல் மன்றத்தில் (http://ulagam.net/forum/forum.php?id=5) பங்கேற்று உங்களது கேள்விகளையும் பதில்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்

மொத்த வார்த்தைகள்: 13940

எப்படி பொருத்துவது?

* இந்த தொடுப்பில் (http://code.google.com/p/tamilspellchecker/downloads/list) சென்று, நீட்சியை இறக்கவும்.
* அதனை இழுத்து பயர்பாக்ஸின் மேல் போடவும். பின்னர் அதன் நிறுவுதல் ஆரம்பமாகும்.
* மற்ற பயர்பாக்ஸின் நீட்சி நிருவுதலை போல இதுவும் நிறுவப்படும்

suresh2
22-09-2008, 02:20 PM
நல்ல முயற்சி வாழ்த்துக்கள்.:icon_b:

மயூ
22-09-2008, 05:05 PM
தமிழுக்குத் தேவையான் முயற்சி.. தொடர்ந்து இது வெற்றிபெற வாழ்த்துவதுடன் இயலுமான் உதவியையும் வழங்குகின்றேன்.

அன்புரசிகன்
22-09-2008, 05:27 PM
பகிர்வுக்கு நன்றி நண்பரே...

shibly591
23-09-2008, 12:53 AM
பயனுள்ள தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றிகள் நண்பரே...........

சூரியன்
28-09-2008, 12:47 PM
பயனுள்ள தகவல்.

ரங்கராஜன்
28-10-2008, 06:14 PM
நண்பர்களே
நான் நிட்சியை இறக்கி, ஃபயர்பாக்ஸில் திறந்தேன், அதன் பின் எப்படி உபயோகிப்பது என்பதை கொஞ்சம் விவரமாக சொன்னால் நன்றாக இருக்கும், நன்றி

வெங்கட்
29-10-2008, 10:55 PM
நண்பர்களே
நான் நிட்சியை இறக்கி, ஃபயர்பாக்ஸில் திறந்தேன், அதன் பின் எப்படி உபயோகிப்பது என்பதை கொஞ்சம் விவரமாக சொன்னால் நன்றாக இருக்கும், நன்றி

இதற்கு பதில் முதல் பதிவிலேயே உள்ளது. இருந்தாலும் எனக்கு தெரிந்த அளவில் சொல்கிறேன்.

1. இந்த ஃபயர்பாக்ஸ் நீட்சியை பதிவிறக்கம் செய்து டெஸ்க்டாப்பில் வைத்துக்கொள்ளுங்கள்.

2. பின்னர் ஃபயர்பாக்ஸ் உலாவியை திறந்து கொண்ட பின்னர் இதனை சிறிய விண்டோவாக
சுருக்கிக் கொள்ளுங்கள்.

3. நிறுவிக்கொள்ள வேண்டிய நீட்சியை டெஸ்க்டாப்- லிருந்து இழுத்துக் கொண்டு ஃபயர்பாக்ஸ் உலாவி
மேல் விட்டுவிடுங்கள். இந்நீட்சியினை ஃபயர்பாக்ஸ் உலாவி உடனடியாக தானாகவே நிறுவ ஆரம்பித்து விடும்.

4. நிறுவுதல் முடிந்த பின்னர் ஃபயர்பாக்ஸ் உலாவியினை மூடி மீண்டும் திறக்கவும்.

5. பின்னர் எழுத வேண்டிய இடத்தில் ரைட் கிளிக் செய்தால் வரும் மெனுவில் உள்ள Languages-ல்
சென்று Tamil-ஐ தேர்வு செய்தால், தமிழ் சொல் திருத்தி நீட்சி இயங்க ஆரம்பிக்கும்.
( நன்றி: http://ulagam.net/forum/topic.php?id=5)

மேற்கண்ட முறையில் நான் நீட்சியை நிறுவிக் கொண்டேன். இது தற்போது சோதனைப் பதிப்பாக உள்ளதால் நிறைய தமிழ் சொற்களை பிழை உள்ளதாக சிவப்பு வண்ணத்தில் அடிக் கோடிட்டு காட்டுகிறது.

ரங்கராஜன்
30-10-2008, 04:37 PM
நன்றி வெங்கட் இப்பொழுது புரிந்துக் கொண்டேன்

selva2008
18-11-2008, 01:48 PM
முழுமையான தமிழ் பிழை நீக்கிக்காக காத்திருப்போம்.