PDA

View Full Version : காதல்..காதல்..



poo
04-04-2003, 05:26 PM
நானும் நீயும் இணையாய்
இணைந்தெடுத்த நிழற்படங்கள்
எல்லாம் நிஜமானவைகளாய்..
உயிரில்லா அந்த உருவப்படங்கள்
உயிரோட்டத்தை உணர்த்தும்
உன்னத உணர்வை இன்றுவரை
இரவு உணவருந்துகையில்
அசைபோடும் அழகு.. அடடா அருமை!!

கடுஞ்சொல் என்ற கசப்பை
நம் அகராதியிலிருந்து
நீக்கிய நாள்- நீண்ட பயணம்
தொடங்கிய அந்த நிம்மதி பெருநாள்..
மகிழ்ந்த மணநாள்.. இன்று நினைத்தாலும்
இனிக்கிறது..

கணவன் - மனைவியென்ற
ஒரு பட்டம்தான் கொடுக்கப்பட்டது..
தோழன் - தோழி..
காதலன் - காதலி.. என பல பட்டங்களை
பலரால் சொல்லவைத்த பெருமை
யாரைச்சேரும்?!!

இத்தனை நாளும் இணைபிரியாதிருந்தோம்
இறப்பிலும் இணையத்தான் போகிறோம்..
உடலைவிட்டு உயிர் போனபின்
இருந்தென்ன பயன்?!!..

ஆமாம் நம்மில்
உடல் யார்...
உயிர் யார்??!!

இளசு
04-04-2003, 05:47 PM
நம்மில் உடல் யார் உயிர் யார்
உண்மை அன்பு கலந்தபின்னே மழை யார் நிலம் யார்
ஜீவன்களின் இழை பின்னி சிட்டு தந்த பட்டுத்துணி...
அழகு அருமை ..

rambal
05-04-2003, 10:42 AM
செம்புல கலந்த நீர் போல் இருக்கையில்
எப்படி பிரித்துக் காண்பது?
உடல் வேறு உயிர் வேறு என்பது எல்லாம் கடினம்..
பாராட்டுக்கள் காதல் கவியே..

Nanban
05-04-2003, 10:50 AM
கணவன் - மனைவியென்ற
ஒரு பட்டம்தான் கொடுக்கப்பட்டது..
தோழன் - தோழி..
காதலன் - காதலி.. என பல பட்டங்களை
பலரால் சொல்லவைத்த பெருமை
யாரைச்சேரும்?!!
கணவன், மனைவி என்ற
பந்தத்தினுள்
எல்லாமே அடக்கம்.....

காதலன், காதலி
தோழன், தோழி
என்ற ஆண், பெண்
இணை உறவுகளெல்லாம்
அதனுள்ளே தான் அடக்கம்.

தோழன், தோழி - முதல் நிலை
காதலன், காதலி - இடை நிலை
கணவன், மனைவி - முதுநிலை

anushajasmin
05-04-2003, 11:17 AM
அருமையான கவிதை... உடல் யார் உயிர் யார் என முடித்திருக்கும் விதம்
கவிதைக்கு அழகூட்டுகிறது

kavitha
10-01-2004, 04:51 AM
கொடுத்துவைத்தவளின் கொடுத்துவைத்தவர்!