PDA

View Full Version : கிடுகிடுத்துப் போன வர்த்தக உலகம்mukilan
16-09-2008, 01:57 AM
கடந்த பத்து நாட்களாகவே வர்த்தக உலகம் தள்ளாடிக் கொண்டுதான் இருந்தது. இன்று காலையில் அமெரிக்காவின் புகழ்பெற்ற வால் ஸ்ட்ரீட்-ல் (Wall Street) நடந்து சென்றவர்களுக்கு அந்தச் செய்தி ஒர் பேரதிர்ச்சியாகத்தான் இருந்திருக்க முடியும்.

உலகின் தலைச்சிறந்த முதலீட்டு வங்கிகளில் ஒன்றும், 150 ஆண்டு கால பாரம்பர்யம் கொண்டதுமான லேமன் பிரதர்ஸ் (Lehman Brothers) நிதி நிறுவனம் திவாலாகி விட்ட அந்த செய்தி. அது மட்டுமா மற்றுமொரு புகழ் பெற்ற முதலீட்டு வங்கிகளில் ஒன்றான மெரில் லிஞ்ச் (Meryl Lynch) அமெரிக்க வங்கி ஒன்றினால் (Bank of America) $50 பில்லியன்களுக்கு ஒட்டு மொத்தமாக வாங்கப்படுகிறது. AIG- என்ற காப்பீட்டு மற்றும் முதலீட்டு வங்கியும் ஏறக்குறைய திவால் நிலைதான்.

இது பங்குச்சந்தையில் மட்டுமல்ல பல வகையிலும் பாதிப்பை ஏற்படுத்த ஆரம்பித்திருக்கிறது. அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் FMC எனப்படும் பன்னாட்டு வேளாண்-வேதிப் பொருள் உற்பத்தியகம் அரிசி, கோதுமை, பருப்பு போன்ற உணவுப் பொருட்களின் விலை குறைவை நோக்கி செல்லும் என ஆருடம் சொல்லி இருக்கிறது. வேளாண் பொருட்கள் விலை குறைந்தால், விவசாயிகளுக்கும் லாபமில்லை. பொதுமக்களுக்கும் லாபமில்லை. இடைத்தரகர்கள்தான் லாபமடைவார்கள். ஒருவித சூதாட்ட மனநிலைக்கு வேளாண்விளைபொருட்களின் ஊக வியாபாரம் நடக்கும்.ஊதிப் பெரிதாக்கப்பட்ட குமிழ் காற்றில் வெடித்துச் சிதறினால் கிடைப்பது சூன்யம்தான்.

கச்சா எண்ணையின் இன்றைய விலை பேரலுக்கு $90.00 எனக் குறைந்திருக்கிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் இன்றைய மதிப்பு ரூ 46.00. சர்வதேச மயமாக்கப்பட்ட இன்றைய வர்த்தக உலகத்தில் அமெரிக்க சப்-பிரைம்( Sub-Prime Mortgage) எனப்படும் வீட்டுக்கடன் கோளாறினால் அமிஞ்சிக்கரையின் ஆறுமுகத்தின் வாழ்வின் இவ்வளவு பாதிப்பு. நல்லதும் கெட்டதும் கலந்த உலகமயமாக்கல், பங்குச்சந்தை சரிவு, கச்சா எண்ணை விலைகுறைவு/ஏற்றம் பற்றிய உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்களேன்.

பென்ஸ்
16-09-2008, 03:17 AM
......:confused:
......:eek:
......:icon_ush:

aren
16-09-2008, 04:00 AM
இது வெறும் ஆரம்பம்தான். இன்னும் இருக்கிறது.

கடன் அட்டை பிரச்சனை இன்னும் ஆரம்பிக்கவில்லை. அது ஆரம்பித்தவுடன் இன்னும் பல வங்கிகள் இருந்த இடம் தெரியாமல் போகும்.

மயூ
16-09-2008, 06:25 AM
அமெரிக்க கம்பனிகள் எல்லாம் கஷ்டப்படுகின்றன. நம்மூர் கம்பனிகள் அவர்களை நம்பியிருப்பதால் அவர்களும் தடம் புரள்கின்றனர். உலக பொருளாதார நெருக்கடி.

எனது கம்பனியில் ஒரு நாளில் 100 பேரை வேலையில் இருந்து தூக்கினார்கள். எல்லாம் எங்க போய் முடியுமோ???

poornima
16-09-2008, 07:52 AM
பெரும் அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது..எங்கு போய் முடியும் என்றுதான்
தெரியவில்லை.

சிவா.ஜி
16-09-2008, 10:06 AM
வர்த்தகம் நர்த்தனம் ஆடுகிறது.

எது எப்படியானாலும் இடைத்தரகர்களின் காட்டில் அடைமழை நிற்பதேயில்லை.

என்ன செய்வது? எந்த அதிர்ச்சியையும் தாங்குமினமாகத்தான் இந்த பொதுஜனம் இருக்கிறது.

பாபு
16-09-2008, 10:29 AM
நிச்சயமாய் இந்த நிகழ்வு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமே இல்லை !!

tamil alagan
16-09-2008, 10:43 AM
வர்த்தகத்தை பார்க்கையில் என்ன எப்படி போகும் என்று கணிக்க இயலவில்லை .

ஓவியா
16-09-2008, 12:11 PM
இந்த வர்த்தக உலகத்தின் தள்ளாட்டம், சில வர்த்கர்களையும் கம்பெனிகளையும் மட்டும் திவாலாக்காது விட்டால் ஒரு நாட்டையே குட்டிச்சுவராக்கும்.

இந்த விசயத்தில் 1999 ஆண்டு மலேசியா கொண்ட ஆட்டம் எத்தனை ஆயிரம் மக்களின் கம்பெனியை இழுத்து மூடவைத்தது என்று தெரிந்தால் அதிர்ச்சிதான் வரும்.

தகவலுக்கு நன்றி முகில்ஸ்.

தீபன்
19-09-2008, 06:17 AM
சிங்கப்பூரில் மேற்படி வங்கியின் கிளைகளில் வேலைபார்த்து வந்த சுமார் 700பேர் ஒரே நாளில் வேலையிளந்திருப்பதாக தகவல். இத்தகைய நிறுவனங்களுக்கு கணினிச் சேவையை வளங்கிவந்த கணினி தொழில் துறையும் பெரும் வீழ்ச்சி கண்டிருக்கிறது.