PDA

View Full Version : அங்கேயே இருந்துகொள்..kulirthazhal
15-09-2008, 01:45 AM
.அங்கேயே இருந்துகொள்..

இந்த
வாழ்க்கை இலக்கணத்தையும்
நீ பார்த்துக்கொள்.,
"புரிதல்"
உடன்படுதலுக்கு மட்டுமல்ல,
விலகிச்செல்லவும் அல்ல.,

இங்கே

சொந்தங்கள் தேவையில்லை,
அன்பே தேவை.
குடும்பம் தேவையில்லை,
பரிதவிப்பே தேவை.
காதலி தேவையில்லை,
காதலே தேவை.
அனுதாபம் தேவையில்லை,
ஆறுதலே தேவை.

என்றாலும்
நீ
எப்போதும் போல்
அங்கேயே இருந்துகொள்..,

என் கூர்மை
உன்னை மிரட்டிவிடும்
இல்லை
என் அன்பு
உன்னிடம் அடிமைப்படும்,
ஏனெனில்
நீ மட்டும்
நான் பேசப்போவதையும்
கேட்கிறாய்..,

என்னை
ஊக்கப்படுத்து
நான் அமானுஷியமானாலும்..,

நொடிகளை
மெளனங்களால் தாமதி,
அந்த
மென்மைஉலகில் மிதங்கு,
அங்கே
பயணங்கள் எதற்கென்று
மயங்காதே,
பாதைகளை
உனக்கென்று தேடிக்கொள்.

கடந்தும் நீ
என்னுள்
வலைப்பட ப்ரியமானால்
என்
உலகத்தை புரிந்துகொள்.,

அற்பணிப்பின் வகைகளை
நீ வாதிடாதே,
ஏனெனில்
அவைகளில்
விளைவுகள்
அடக்கிவைக்கப்பட்டுள்ளது.

அடிமைநிலை சுகங்கள்
விருப்பத்தின் வேர்களால்
வலுப்பெற்றவை,
சமாதானத்தில் அது
விவாதிக்கப்படுமெனில்
எதிர்வாதமில்லாமல்
எல்லாமே தோற்றுப்போகும்.,
ஏனெனில்
காரணங்களும்,
விளக்கப்பதிவுகளும்,
காலம்காலமாய் சேமிக்கப்பட்டுள்ளது..,

தூரத்து சூரியனை
ரசிப்பதற்கு
காரணங்கள் ஆராயப்படுவதில்லை.

விவாதங்கள்
நியாயப்படுத்தலையே
குறிக்கோளாய் கொள்கிறது.
அங்கு
நியாயத்தை
தேடி அலையாதே.,

உன்
அன்பை நீட்டி
எனை
ஆட்கொள்ளாதே,
நான்
சுதந்திரவாசி..,
புரிதல் மட்டும் கொள்.

நீ
எப்போதும் போல்
அங்கேயே இருந்துகொள்..,

-குளிர்தழல்.


( இந்த களம் யாருக்கானது? கவிதைகள் எப்போதும் எதையாவது தேடிக்கொண்டு இருக்கும், இது யார் தேடும் கவிதை? )

பிச்சி
26-09-2008, 01:05 PM
ரொம்ப வித்தியாசமா இருக்கு. ஒத்து வருகிறமாதிரி எண்ணங்கள் இருவருக்கும் வராது.

அன்புடன்
பிச்சி

ஓவியன்
27-09-2008, 07:27 AM
புரிதல் என்பது
ஒட்டவுதற்குமல்ல
வெட்டுவதற்குமல்ல
புரிந்து கொள்ளத்தான்...

நல்ல புரிதலிருப்பின்
நியாப் படுத்தும்
விவாதங்கள் தான் ஏதற்கு...??

நல்ல கேள்வி, நல்ல கவிதை..!!
பாராட்டுக்கள் குளிர்தழல்..!!

சுகந்தப்ரீதன்
27-09-2008, 11:39 AM
.விவாதங்கள்
நியாயப்படுத்தலையே
குறிக்கோளாய் கொள்கிறது.
அங்கு
நியாயத்தை
தேடி அலையாதே., தேடி அலையாதே என்றுரைத்துவிட்டு யார்தேடும் கவிதையென்றால் எப்படி குளிர்தழல்..??

முற்றும் துறந்த புத்தனையும் பட்டினத்தாரையும்கூட ஒருகணம் பரிதவிக்க வைத்த வல்லமை அன்புக்குண்டு.. அத்தகைய அன்பை என்மீது செலுத்தி என்னை கைது செய்யாதே.. என்னை நானாக இருக்கவிட்டு நீ நீயாக அங்கேயே இருந்துக்கொள் என்றுதானே கூறுகிறீர்கள்..??

கவிதையில் மேற்கண்ட யதார்த்த வரிகள்.. என்னை மிகவும் கவர்ந்தது..!! வாழ்த்துக்கள் தொடருங்கள்..!!

kulirthazhal
27-09-2008, 01:35 PM
தேடி அலையாதே என்றுரைத்துவிட்டு யார்தேடும் கவிதையென்றால் எப்படி குளிர்தழல்..??

முற்றும் துறந்த புத்தனையும் பட்டினத்தாரையும்கூட ஒருகணம் பரிதவிக்க வைத்த வல்லமை அன்புக்குண்டு.. அத்தகைய அன்பை என்மீது செலுத்தி என்னை கைது செய்யாதே.. என்னை நானாக இருக்கவிட்டு நீ நீயாக அங்கேயே இருந்துக்கொள் என்றுதானே கூறுகிறீர்கள்..??

கவிதையில் மேற்கண்ட யதார்த்த வரிகள்.. என்னை மிகவும் கவர்ந்தது..!! வாழ்த்துக்கள் தொடருங்கள்..!!


என் களத்தினை நெருங்கிவந்து என்னை ஊக்கப்படுத்தியதற்கு நன்றி!!!

இந்த களம் - மனதினை கட்டி துறவுகொள்ள வேண்டிய ஒரு அரைமனிதனிடம் காதல் நெருங்கி வந்தால் வார்த்தைகள் இப்படியும் விழலாம்.., என் பார்வையில்...