PDA

View Full Version : அறிஞர் அண்ணாதான் முதன்முதலில் . . .



mgandhi
14-09-2008, 08:18 AM
அண்ணாதுரை
http://www.arignaranna.info/images/Photos%20collection/photos5/web5ph080.jpg



"அறிஞர் அண்ணா" என்று அறியப்பட்ட, காஞ்சீபுரம் நடராஜன் அண்ணாதுரை (C. N. Annadurai) (15 செப்டம்பர் 1909 - 3 பெப்ரவரி 1969), தமிழ் நாட்டின் ஆறாவது முதலமைச்சராவார். அண்ணா, காஞ்சீபுரத்தில், மத்திய தரக் குடும்பமொன்றில் பிறந்தார். அவர், சென்னை பச்சையப்பன் உயர் நிலைப் பள்ளியிலும், பின்னர் பச்சையப்பன் கல்லூரியிலும் கல்வி கற்றார்.
அவர் பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, நீதிக் கட்சியில் சேர்ந்தார். பின்னர் பெரியாருடன் திராவிடக் கழகத்தில் இணைந்து, மூட நம்பிக்கைகளுக்கு எதிரான பகுத்தறிவுக் கருத்துக்களையும், சமூக சீர்திருத்தக் கருத்துக்களையும் பரப்புவதில் முன்னின்று ஈடுபட்டார். பெரியாரின் சில நடவடிக்கைகள் காரணமாக எழுந்த கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து, திராவிடக் கழகத்தின் முக்கிய உறுப்பினர் பலருடன், 1949 ல், பெரியாரை விட்டு விலகி, திராவிட முன்னேற்றக் கழகம் (தி.மு.க) என்ற புதிய இயக்கமொன்றை நிறுவினார். 1957 ஆம் ஆண்டு வரை தி.மு.க, ஒரு சமூக சீர்திருத்த இயக்கமாகவே இருந்துவந்தது. 1957 ல் நடைபெற்ற தேர்தலில் கலந்து கொள்ள முடிவு செய்த கழகம், அத்தேர்தலில் 15 இடங்களை வென்றபோது அண்ணாதுரையும் சட்ட சபை உறுப்பினரானார். தொடர்ந்து வந்த பத்தாண்டு காலத்தில், தமிழ் மக்களுக்குப் பாதகமானது என்று கருதப்பட்ட, மத்திய அரசின் மொழிக்கொள்கைக்கு எதிராகப் பல போராட்டங்களை நடத்தியதன் மூலம், தி.மு.க வை ஒரு பலம் மிக்க அரசியல் இயக்கமாக வழி நடத்திச் சென்றார். இதன் காரணமாக 1967 ல் நடைபெற்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்றுத் தமிழ் நாட்டின் முதலமைச்சரானார்.

அறிஞர் அண்ணாதான் முதன்முதலில்

1. அண்ணாதான் முதன்முதலில் அரசியலில் ஈடுபட்டும் இலக்கியப் பணியைத் தொடர்ந்தவர்.

2, அரசியலில் இருந்துகொண்டே இலக்கியத்தில் சிறுகதை, நெடுங்கதை, சரித்திர நெடுங்கதைகள், மொழிபெயர்ப்புகள், கட்டுரைகள், நாடகங்கள், கவிதைகள், உரையாடல்கள், கடிதங்கள் என எல்லா பிரிவிலும் தனி முத்திரை பதித்தவர் - முதன்முதலில்

3. தமிழக இந்தி எதிர்ப்பு வரவாற்றின் முதல் சாவாதிகாரர் அண்ணாதான் - 1938-ல் இந்தியை எதிர்த்து சிறை சென்றவர்.

4. முதன்முதலில் தான் எழுதிய சந்திரோதயம் எனும் சமூக நாடகத்தில் தானே மூன்று வேடங்களில் நடித்து இயக்கி தன் பணிமனைத் தோழர்களையே நடிக்க வைத்தவர்.

5. 1943-ல் முதன்முதலில் தமிழில் பேச்சிலும் எழுத்திலும் அடுக்குமோழியைக் கையாண்டவர்.

6. ஓர் இரவு எனும் ஓர் இரவில் நடக்கும் நகிழ்ச்சிகளை அமைத்து ஒரு நாடகத்தை எழுதியவர் - முதன்முதலில் - 1945 ல்.

7. ஓர் இரவு நாடகத்தில் 20 ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்ச்சிகளை பின்னோக்கிய காட்சிகளாக ((Flash Back) அமைத்தவர் - முதன்முதலில்

8. முதன்முதலில் வேலைக்காரி எனும் நாடகத்தில் வழக்கு மன்ற காட்சிகளை அமைத்தவர்.

9. தமிழகத்தில் சிறந்த சொற்பொழிவாளராகத் திகழ்ந்த திரு.வி.கல்யாணசுந்தரனார், அண்ணாவை பாராட்டுகிறபோது இனி திரு.வி.க நடை என்பது மறைந்து அண்ணாத்துரை நடை என வழங்கும் எனப் பாராட்டினார் - முதன்முதலில் அந்தப் பெருமையைப் பெற்றவர் அண்ணா.

10. அண்ணாதான் முதன்முதலில் ’வேலைக்காரி’ திரைப்படத்தின் மூலம் புதுமைக் கருத்துக்களைச் சொன்னவர்.

11. சமகாலத்தில் வாழ்ந்த புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், பட்டுக்கோட்டை அழகர்சாமி போன்றவர்களுக்கு நிதி திரட்டித் தந்தவர், முதன்முதலில் அண்ணாதான் 1946-ல்

12. பாவலர்கள் மத்தியில் இருந்த தமிழை முதன்முதலில் பாமரர்களிடம் கொண்டு வந்தவர் அண்ணா.

13, முதன்முதலில் அண்ணாதான் ஓர் இரவு திரைப்படத்திற்கு ரூ. 20,000 ஊதியம் வாங்கியவர்.

14. கல்கி கிருட்டிணமூர்த்தி என்கின்ற சமகால எழுத்தாளர் முதன்முதலில் பாராட்டியது அண்ணாவைத்தான் - இதோ ஒரு பெர்னாட்சா, இதோ ஓர் இப்சன் என்று.

15. அண்ணாதான் முதன்முதலில், வானொலியில் பல தலைப்புகளில் பல நேரங்களில் சொற்பொழிவு ஆற்றியவர்.

16. அண்ணாதான் தமிழ்நாட்டில் முதன்முதலாக தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் சிறந்த சொற்பொழிவாளாராக விளங்கியவர்

17. கம்பராமாயணம், பெரிய புராணம் இவைகளை நன்கு கற்றுத்தேர்ந்து, புலவர்களும், தமிழறிஞர்களும் மறுக்க முடியாத வாதங்களை எடுத்து வைத்து வாதிட்டவர் - முதன்முதலில் ஒரு புதிய கோணத்தில் திறனாய்வு செய்தவர்.

18. அந்தத் திறனாய்வுக் கருத்துக்களை எளிய மக்களுக்கும் புரியவைக்கும் விதத்தில் நாடகமாக்கியவர் - நீதி தேவன் மயக்கம் எனும் பெயரில் - முதன்முதலில் அண்ணாதான்.

19. தான் தொடங்கிய திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தலில் ஈடுபடலாமா என்பதை முடிவெடுக்கக் கழக மாநாட்டில் வாக்குப்பெட்டி அமைத்து மக்களிடம் கருத்து கேட்டவர் முதன்முதலில்.

20. திறனாய்வு செய்கின்ற கோணத்தில், அண்ணாதான் முதன்முதலில் சில நாடகங்களை ஆக்கியவர். அவை, நீதி தேவன் மயக்கம், சிவாஜி கண்ட இந்து ராஜ்யம், கட்டை விரல், இளங்கோவின் சபதம், பிடிசாம்பல், தஞ்சை வீழ்ச்சி, ஒளியூரில் ஒமகுண்டம் ஆகிய புதினங்கள்.

21. சொற்பொழிவுகளைக் கட்டணம் செலுத்தி மக்கள் கேட்டது தமிழகத்தில் முதன்முதலில் - அண்ணாவின் சொற்பொழிவைத்தான்.

22. முதன்முதலில் தமிழில் பல புதிய சொற்களைச் சொல்லாக்கம் செய்தவர் அண்ணாதான்.

23. தன் தொண்டர்களை ’தம்பி’ என பாசமுடன் அழைத்தது அண்ணாதான். அதேபோல் தன் தலைவனை அண்ணனாகவே பாவித்து அண்ணா என்று தொண்டர் அழைத்தது - முதன்முதலில் இவரைத்தான்.

24. தன் கட்டுப்பாட்டிற்குள் கட்சி இருந்தபோதே தனக்கு அடுத்து இருந்தவரை, கட்சியின் பொதுச் செயலாளராக்கி தம்பி வா தலைமை ஏற்கவா என விளித்த முதல் அரசியல்வாதி.

25. சட்டமன்ற எதிர்கட்சித் துணைத்தலைவராக இருந்தபோது அன்றைய முதல்வரை தன் தொகுதிக்கு அழைத்து தன் தொகுதிமக்களுடன் நேருக்குநேர் சந்திக்கின்ற வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தவர் அண்ணாதான் - முதன்முதலில்

26. கட்சி மாநாடுகளில் ஓவியக் கண்காட்சி நடத்தி அறிவு விளக்கம் தந்தவர் அண்ணாதான் - முதன்முதலில்

27. அன்றாட வழக்கில், நடைமுறையில் இருந்த வடமொழிச் சொற்களை நீக்கி, தமிழ்ச் சொற்களை புகுத்தியவர் அண்ணாதான் - முதன்முதலில்.

28, இந்த நாட்டு மக்கள் விஞ்ஞானிகளுக்கும், மருத்துவர்கள், பொறியியல் வல்லுநர்களுக்கும் முக்கியத்துவம் தரவேண்டும், அரசியல்வாதிகளுக்கல்ல எனச் சொன்ன முதல் அரசியல்வாதி அண்ணாதான்.

29. அரசியல் போராட்டத்தில் கைதாகி நீதிபதி முன் தனக்காகத் தானே வாதாடிய முதல் அரசியல்வாதி அண்ணாதான்.

30. திராவிடநாடு பிரிவினைப்பற்றி இந்தியத் துணைக்கண்ட பாராளுமன்றத்தில் முதன்முதலில் பேசிய தமிழர் அண்ணாதான்.

31. இன்றைய புதுக்கவிதையை முதன்முதலில் புதுப்பா என சொல்லாடல் செய்தவர்

32. அண்ணாதான் முதன்முதலில் ஆளுங்கட்சி காங்கிரசைப் பார்த்து தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக இன்னின்ன திட்டங்களை நிறைவேற்றுங்கள், நான் சார்ந்திருக்கிற திராவிட முன்னேற்றக் கழகம் 15 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடாது என அறிவித்த அரசியல்வாதி.

33. அண்ணாதான் முதன்முதலில் தன் காலத்தில் பல துறைகளில் சிறப்புடன் வாழ்ந்தவரை அடைமொழியுடன் அழைத்தார் - அதவே பின்னாளில் நிலைபெற்றது. வெள்ளுடை வேந்தர் தியாகராயர், சித்தனைச்சிற்பி சிங்காரவேலர், உத்தமர் காந்தி, கொடுமுடி கோகிலம் (கே.பி.சுந்தராம்பாள்), நடிகமணி டி.வி.நாராயணசாமி, நடிப்பிசைப் புலவர் (கே.ஆர்.ராமசாமி)

34, அண்ணாவின் சிவாஜி கண்ட இநது ராஜ்யம் எனும் நாடகத்தில் முதன்முதலில் சிவாஜியாக நடித்த வி.சி.கனேசன் இன்றுவரை சிவாஜி என்றே அழைக்கப்படுகிறார்.

35. தன் தலைவர் பெரியாரை விட்டுப் பிரிந்து தனிக்கட்சி தொடங்கிய அண்ணா, தான் தொடங்கிய கட்சிக்கு தலைவர் பெரியாரே, தலைவர் நாற்காலி இங்கு காலியாகத்தான் இருக்கும் என அறிவித்து அவ்வழியே நடந்து காட்டியவர் முதன்முதலில் அண்ணாதான்.

36. பெரியாரைப் பிரிந்து தனிக்கட்சி தொடங்கி 20 ஆண்டுகள் தலைவரைத் தாக்காமல் கட்சி நடத்தி அரசையும் கைப்பற்றிப் பகைமை மறந்து, தலைவரைப் பார்த்து இந்த ஆட்சி தங்களுக்கு காணிக்கை என அறிவித்த ஒரே மனிதர் - இவ்வுலகில் அண்ணா ஒருவர்தான் - முதன்முதலில்

37. அண்ணாதான் முதன்முதலில் பொதுத்தேர்தலில் ஆளுங்கட்சியை எதிர்த்து, சுவரொட்டிகளில் மனதில் பதியவைக்கும் கருத்துக்களைச் சுருங்கச்சொல்லிப் பிரச்சாரத்தில் புதிய யுத்தியைக் கையாண்டவர்.

38. முதல்வரான பிறகு இவர்தான் முதன்முதலில் அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் செல்லும் விழாவுக்கெல்லாம் அவர்களை பின்தொடராமல், தங்கள் பணியை செய்யலாம் என்று சுற்றறிக்கை அனுப்பியவர்.

39. முதன்முதலில் தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு எனப் பெயர் சூட்டிய முதல் தமிழர்.

40. முதன்முதலில் சுயமரியாதைத் திருமணங்கள் செல்லுபடியாகும் எனும் சட்டத்தைச் செய்தவர் இவர்தான்.

41. ஆங்கிலம் தமிழ் போதும் - இந்தி வேண்டாம் என் இரு மொழி திட்டத்தைக் கொண்டு வந்தவர் அண்ணாதான் - முதன்முதலில்

42. எரியும் குடிசைகளை அகற்றி ஏழைகளுக்கு எரியா வீடுகளை கட்டிக் கொடுத்தவர் அண்ணாதான் - முதன்முதலில்

43. முதன்முதலில் தமிழ்நாட்டில் உலகத்தமிழ் மாநாட்டை நடத்தியவர், தமிழ்ப் போராளிகளுக்கு கடற்கரையில் சிலை நிறுவியவர்

44. முதன்முதலில் ஒரு ரூபாய்க்கு ஒரு படி அரிசி வழங்கியவர் ஏழைகளுக்கு.

45. முதன்முதலில் புன்செய் நிலங்களுக்கு வரியைத் தள்ளுபடி செய்தவர்.

46. அண்ணாதான் சீரணி என்ற அமைப்பை முதன்முதலில் தொடங்கினார். பொதுத்தொண்டில் ஆர்வமுள்ள எவரும் எந்த பலனும் எதிர்பாராமல் ஏழை எளிய மக்களுக்கு உதவக்கூடிய சிறு சிறு பணிகளில் ஈடுபட்டு தங்கள் உழைப்பை நல்கும் திட்டமிது. நகர் கிராமப்புறம் இரண்டிலும் தன் உள்ளத்தை திறந்துக் காட்டி, எதையும் மறைக்காமல், இயலாததை இயலாது என்றும், தவறாயிருந்தால் மன்னிப்பு கேட்கிறேன், திருத்திக்கொள்கிறேன் என்றும் சொன்ன முதல் அரசியல்வாதி.

47. எனக்கென்று எந்தத் தனி ஆற்றலும் இல்லை. என் தம்பிமார்களின் ஆற்றலின் கூட்டுச் சக்தியின் உரிமையாளன் நான் - எனச் சொன்ன முதல் அரசியல்வாதி.

48. அமெரிக்க பல்கலைகழகமான யேல் பல்கலைக்கழகம் சப்பெலோசிப் எனும் சிறப்பை வழங்கியது அண்ணாவுக்குத்தான். அண்ணாதான் இந்த சிறப்பைப் பெற்ற முதல் தமிழர் - முதல் ஆசிரியர்.

49. உலகத்தில் வாழ்ந்த தலைவர்களின் மறைவின்போது, எவருக்கும் சேராத பெருங்கூட்டம் அண்ணாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தது - முதன்முதலில் - வரலாற்றில்.

50. அரசு அலுவலகங்களில் இருந்த கடவுள் படங்களை நீக்க ஆணை பிறப்பித்தவர்.

( டாக்டர் அண்ணா பரிமளம் )

virumaandi
14-09-2008, 09:02 AM
அறிஞர் அண்ணாவின் நூற்றாண்டு ஆரம்பம்....
விருந்து படைத்த காந்திக்கு நன்றி.. பயனுள்ள தகவல்கள்.. என்னிடம் இணைய பணம் குறைவு. இருந்தாலும் 100 இணைய பணம் அன்பளிப்பு செய்கிறேன்..
பாராட்டுக்கள்

ராஜா
14-09-2008, 09:27 AM
"முதல்வர்" அண்ணாவைப் போற்றுவோம்..!

poornima
14-09-2008, 10:05 AM
அறிந்து வைத்திருக்க வேண்டிய தகவல்கள்.. அறிஞராகவும் அரசியல்வாதியாகவும்
மட்டுமே பார்க்கப்பட்ட அண்ணாவைப் பற்றிய தகவல்களுக்கு மிக்க நன்றி

aren
14-09-2008, 11:56 AM
முதல்வர் அண்ணா எதிலும் முதண்மையானவர் என்று நன்றாகவே தெரிகிறது இந்தப்பதிவின் மூலம்.

அவர் சொன்ன இன்னும் பல விஷயங்களை இந்திய அரசாங்கம் கேட்க மறுத்துவிட்டது. அதில் ஒன்றுதான், மாநிலங்களுக்கு சுயாட்சி. அப்படி கொடுத்திருந்தால், ஒவ்வொரு மாநிலமும் இன்னொரு மாநிலத்துடன் போட்டி போட்டு முன்னேறியிருக்கும். குறிப்பாக குஜராத், மஹாராஷ்டிரா, தமிழ்நாடு, பஞ்சாப் போன்ற மாநிலங்கள் நன்றாக முன்னேறியிருக்கும். வளர்ந்த மாநிலமாக மாறியிருக்கும். ஓட்டுப்பெட்டியை அப்பொழுதே நம்பி காங்கிரஸ் அரசாங்கம் இதற்கு சம்மதிக்க மறுத்துவிட்டது இந்தியாவிற்கு ஒரு பெரிய இழப்பே.

செல்வா
14-09-2008, 12:39 PM
அண்ணாவைப் பற்றிப் புதியன பல தெரிந்து கொண்டேன்.... பகிர்தலுக்கு நன்றிகள் காந்தியாரே...

Keelai Naadaan
14-09-2008, 04:43 PM
அரிய தகவல்கள் பகிர்ந்தமைக்கு நன்றி.

mgandhi
14-09-2008, 05:33 PM
நன்றி

கீழை நாடான்


கிஷோர்


செல்வா

aren


பூர்ணிமா


ராஜா


விருமாண்டி.

இளசு
14-09-2008, 10:13 PM
அன்பை மட்டும் கருவியாய்ப் பயன்படுத்திய
அதிகார போதை கொஞ்சமும் தலைக்கு ஏறாத
எந்நாளும் உள்ளார்ந்த எளிமை மாறாத
சொந்தத்துக்குச் சொத்து சேர்க்காத
மக்கள் நலன் நினைந்து பொதுவாழ்வுக்குள் வந்த

பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராசர் போன்றவர்கள்
மக்கள் போற்றும் தலைவர்களாய் இப்போது அமையாதது நம் கெட்ட காலமே!

தகவல் கோவைக்கு நன்றி காந்தி அவர்களே!

-----------------------------------------------------

நலந்தானா? பாடல் தில்லானா மோகனாம்பாள் படத்தில் பார்த்த
அறிஞர் சொன்னாராம்:

''கவிஞர் கண்ணதாசன் எனக்காகத்தான் அப்பாடல் எழுதியிருக்கிறார்.
சண்முகசுந்தரம் புண்பட்டதை நேரில் பார்த்தவள் மோகனா..

''புண்பட்ட சேதியைக் கேட்டவுடன்'' - இந்த வரி எனக்காக..

என் நோய் பற்றிக் கேட்டும் வந்து பார்க்காதபடி
இப்போது காங்கிரஸ் எனும் எதிர் அணியில் கவிஞர் இருக்கிறார்.
கருப்புத்துணி வாயில் கட்டி கடும் போராட்டமும் நடத்துகிறார்.

வந்து பார்க்காமல், அரசியல் நிலை தடுத்தாலும்
வைத்த பாசம் மாறாமல் நலம் கேட்கிறார்'' என்றாராம் அண்ணா..

-----------------------
மறைவுக்கு முன் வந்த பிறந்தநாளில் தம்பிகள் வற்புறுத்த
முகச்சவரம் செய்து, புத்தாடை அணிந்து, வாசல் வந்து
நாதஸ்வரம் வாசிக்கும் சிவாஜி போல் கன்னத்தில் காற்றடைத்து
அபிநயம் செய்து, தம் நோய்த்துன்பம் மறைத்து-
கண்ணதாசன் நல விசாரிப்பைக் காத்திருந்தவர்களுடன் பகிர்ந்து மகிழ்ந்த
அன்புமய அண்ணா!!

அண்ணா போல் வேறு யார் இங்கு?

Mano.G.
15-09-2008, 03:52 AM
அறிஞரின் 100ம் ஆண்டு நினைவு நாளில்
அவரை பற்றிய தொகுப்பு,
அருமை, நன்றி
மோகன் காந்தி

உதயசூரியன்
15-09-2008, 05:36 AM
முதல்வன் அறிஞர் அண்ணா வின் நூற்றாண்டு துவக்க நாளான இச்சமயத்தில் தந்த விவரங்கள் அனைத்தும் தமிழனாக பிறந்த அனைவரும் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்..
அத்தகைய தகவல்களை தந்து பெருமை படுத்திய காந்தி அவர்களுக்கு.. நன்றி கலந்த வாழ்த்துக்கள்..

செப்டம்பர் 15 2008 - பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு விழா ஆரம்பம்.
ஏழையின் சிரிப்பினில் இறைவனை காண்போம் என்ற தமிழின தலைவர்..
அதிகாரம் கைக்கு வந்தால் தான் நம் கொள்கை அமலாகும் என்று கட்சி ஆரம்பித்தவர்..
"ஆரிய மாயை" எழுதியதற்கு மட்டும் கடுங்காவல் தண்டனை பெற்றவர்..
நமது அண்ணா
நமது அண்ணா..
நமது இன்றைய முன்னேற்றத்திற்கான மூல சுத்திரதாரிகளில் முக்கியமானவர் நமது அண்ணா

தமிழனின் முன்னேற்றத்திற்க்காக பாடுபட்ட பல தலைவர்களை பற்றிய நினைவலைகளின் மூலம்.. தற்போது நம்மை போன்ற தமிழர்களுக்கு விளக்கங்களும் தகவல்களையும் தருவோம்...

அண்ணா நூற்றாண்டை.. தமிழக அரசும், அரசியல் கட்சிகளும் ஆண்டு முழுதும் மிக சிறப்பாக கொண்டாட இருக்கின்றது..
இத்தருணத்தில்.....தமிழர்களாகிய நாம்
தற்போது நம்முடன் இல்லாத பேரறிஞர் அண்ணா அவர்களை பற்றி, நாம் பிறக்கும் முன்னரே மறைந்த பேரறிஞர் அண்ணா அவர்களை பற்றி தற்காலத்தில் இருக்கும் நாமும்.. வருங்காலத்து தமிழ் சந்ததியினரும் தெரிந்து கொள்ளும் வகையில் அவரை பற்றிய சில பயனுள்ள தகவல்களை, தெரிந்தவற்றை.. பரிமாறிக்கொள்வோம்..

வாழ்க பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு
வாழ்க அண்ணா புகழ்

இதோ பேரறிஞர் அண்ணாவை பற்றிய சில தகவல்கள்.....

பேரறிஞர் அண்ணா அவர்களின் வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கம்

1909 செங்கற்பட்டு மாவட்டம், காஞ்சிபுரத்தில், நடராசன், பங்காரு அம்மாள் இணையருக்கு 15.9.1909இல் பிறந்தார்.

1914 காஞ்சிபுரம் பச்சையப்பன் தொடக்கப் பள்ளி, பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளியில் பள்ளி இறுதி வகுப்பு வரை பயின்றார்.

1927 காஞ்சிபுரம் நகராட்சியில் சில திங்கள் பணிபுரிந்தார்.

1928 சென்னை, பச்சையப்பன் கல்லூரியில் இண்டர்மீடியட் வகுப்பில் படித்தார்.

1929 பிப்ரவரி 17, 18 செங்கற்பட்டு முதல் மாநில சுயமரியாதை மாநாட்டில் பார்வையாளராகப் பங்கேற்றார்.

1930 சென்னை, பச்சையப்பன் கல்லூரி முதல்வர் உதவியால், சம்பளச் சலுகை பெற்று, பி.ஏ. (ஆனர்ஸ்) வகுப்பில் சேர்ந்து படித்தார்.
அண்ணாவுக்கும், இராணி அம்மையாருக்கும் திருமணம் நடந்தது.

1935 திருப்பூரில் நடந்த செங்குந்த வாலிபர் மாநாட்டில் தந்தை பெரியாரைச் சந்தித்தது முதல் பெரியாரைத் தனது ஒரே தலைவராக ஏற்றார்.

1938 விடுதலை, குடிஅரசு தமிழ் ஏடுகளின் துணை ஆசிரியர் ஆனார். ஜஸ்டிஸ் என்ற ஆங்கில ஏட்டிலும் துணை ஆசிரியராகப் பணிபுரிந்தார்.

1942 மார்ச் 7 - திராவிட நாடு வார ஏட்டின் ஆசிரியரானார்.

1944 ஆகஸ்டு 19 - சேலம் நீதிக்கட்சி மாநாட்டில், அண்ணா தீர்மானம் மூலம், நீதிக்கட்சி திராவிடர் கழகமாகப் பெயர் மாற்றம் பெற்றது.

1945 திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் ஆனார்.

1948 ஜூலை 17 - இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் சிறைவாசம் ஏற்றார்.

1949 ஜூலை 9 - தந்தை பெரியார் - மணியம்மை திருமணம் நடந்தது.

17.9.1949இல் திராவிட முன்னேற்றக் கழகம் என்ற புதிய அமைப்பைத் தோற்றுவித்தார். தி.மு.க.வின் முதல் பொதுச் செயலாளராக ஆனார்.

1950 செப்டம்பர் 18 ஆரியமாயை என்னும் நூல் எழுதியதற்காக ஆறு மாதம் வெறுங்காவல் தண்டனை பெற்றார்.

1953 ஜூன் 15 நம்நாடு நாளேட்டின் ஆசிரியர் பொறுப்பை ஏற்றார்.
ஜூலை 15, மும்முனைப் போராட்டத்தில் முன்னதாகக் கைது செய்யப்பட்டு மூன்று மாதம் சிறைத் தண்டனை பெற்றார்.

1957 காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஜூன் - ஹோம்லேண்ட் ஆங்கில வார ஏட்டின் ஆசிரியரானார்.

1962 நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் ஆனார்.
ஜூலை 19 - விலைவாசி உயர்வு எதிர்ப்பு மறியல் போராட்டத்தில் கைதாகி வேலூர் சிறையில் பத்து வாரம் கடுங்காவல் தண்டனை பெற்றார்.

1963 காஞ்சி என்னும் வார ஏட்டினைத் தொடங்கினார்.

1965 ஜனவரி 26 முதல் இந்தியை இந்திய யூனியன் ஆட்சி மொழியாக்க நாடாளுமன்ற ஆட்சி மன்றக்குழு பரிந்துரைத்ததை எதிர்த்து ஜனவரி 26 துக்க நாள் என தி.மு.க அறிவித்தது தொடர்பாக அண்ணா சிறைவாசம் ஏற்றார். ஜூலை - சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, ஹாங்காங், கம்போடியா, ஜப்பான் ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

1967 பிப்ரவரி - பொதுத் தேர்தலில் தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பொதுத் தேர்தலில் தி.மு.க. பெரும்பான்மை இடங்களில் வெற்றி. கழக முன்னணியினரோடு பெரியாரை சந்திக்கச் சென்றார்.

6.3.1967 தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.

ஏப்ரல் 26 - தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப்பினரானார்.

ஜூலை 18 - சென்னை மாநிலத்தைத் தமிழ்நாடு என்று அழைக்க அரசியல் சட்டத்தில் உரிய திருத்தம் செய்திடும் பெயர் மாற்றத் தீர்மானத்தைச் சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றச் செய்தார்.

ஆகஸ்ட் 16 - சீரணி என்னும் அமைப்பைக் கண்டார்.
சுயமரியாதை திருமணச் சட்டம் நிறைவேற்றினார்.

1968 ஜனவரி 1 உலகத் தமிழ் மாநாட்டினையொட்டி பேரறிஞர் அண்ணாவின் உருவச்சிலை சென்னை அண்ணா சாலையில் திறந்து வைக்கப்பட்டது.

ஜனவரி 23 - தாய்மொழி தமிழ், உலக மொழி ஆங்கிலம் ஆகிய இருமொழித் தீர்மானத்தைச் சட்டமன்றத்தில் நிறைவேற்றச் செய்தார்.

1969 ஜனவரி 14 அன்று பொங்கல் நாளில் சென்னை தியாகராய நகரில் கலைவாணர் சிலைத் திறப்பு விழாவில் கலந்துகொண்டு பேசினார்.

அதுவே அண்ணாவின் கடைசி பொது நிகழ்ச்சியாக அமைந்தது.

ஜனவரி 25 - அண்ணாவுக்கு அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது.

பிப்ரவரி 3 - (பிப்ரவரி 2 நள்ளிரவு 12.20 மணி) சென்னையில் அண்ண மறைவு. அண்ணாவின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக இராஜாஜி மண்டபத்தில் வைக்கப்பட்டது.

பிப்ரவரி 4 - அண்ணாவின் உடல் அரசு மரியாதையுடன் எடுத்துச் செல்லப்பட்டு, மெரினா கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்டது


நன்றி. தி.மு.க இளைஞரணி இணைய தளம்

வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ்

அமரன்
15-09-2008, 06:31 AM
அரிய தகவல்களை அறியந்ததந்த அனைவருக்கும் நன்றி.
இன்று ஐரோப்பிய நேரம் மாலை ஐந்து மணிக்கு கலைஞர் தொலைக்காட்சியில் அண்ணா கவியரங்கம் நடக்கிறது. கலைஞர் தலைமை தாங்குகிறார், கவிக்கோ,வாலி, மேத்தா,தமிழச்சி, இன்னும் இருகவிஞர்கள் பங்கேற்கிறார்கள். இந்தியா நேரம் தெரியவில்லை.

உதயசூரியன்
15-09-2008, 08:30 AM
அரிய தகவல்களை அறியந்ததந்த அனைவருக்கும் நன்றி.
இன்று ஐரோப்பிய நேரம் மாலை ஐந்து மணிக்கு கலைஞர் தொலைக்காட்சியில் அண்ணா கவியரங்கம் நடக்கிறது. கலைஞர் தலைமை தாங்குகிறார், கவிக்கோ,வாலி, மேத்தா,தமிழச்சி, இன்னும் இருகவிஞர்கள் பங்கேற்கிறார்கள். இந்தியா நேரம் தெரியவில்லை.
ஆமாம் அமரன் அவர்களே..

நானும் தற்போது தான் கலைஞர் தொலைகாட்சியில் அறிஞர் அண்ணாவின் குறும்படம் பார்த்தேன்.(தமிழ் நாடு திரைப்பட துறை தயாரித்த குறும்படம்)
மனதை ஈரமாக்கிய கடைசி காட்சிகள். மிக மிக காண கிடைக்காத சில காட்சிகள்.. பாராட்டுக்கள். கலைஞர் தொலைகாட்சிக்கு..

எதையும் தாங்கும் இதையமே..உன் திறமையை உன் பிள்ளைகள் இன்று படிக்கின்றோம்..உன் நூற்றாண்டில்.. உன் நினைவுடன்..

வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ்

அறிஞர்
15-09-2008, 01:20 PM
முதன்மையான "அறிஞர் அண்ணா" பற்றிய தகவல்கள் அனைத்தும் அருமை. ஒரு நல்ல தலைவரை தமிழகம் பெற்றது.. பெரிய பாக்கியமே...

mgandhi
15-09-2008, 05:53 PM
அரிய தகவல்களை அறியந்ததந்த உதயசூரியனுக்கு நன்றி

nambi
29-04-2010, 08:07 AM
அண்ணா பற்றி அனைவரும் கூறிவிட்ட பொழுது, நானும் ஏதாவது கூறவேண்டுமல்லவா?

''உன்னுடைய எழுத்தும், பேச்சும் ஒருவரை ஒன்றுமே பண்ணவில்லை என்றால், எந்த உணர்ச்சியையும் தூண்டவில்லை என்றால், அந்த எழுத்தும் பேச்சும் ஒருவனுக்கு இருந்தும் வீண்...... அவை இறந்ததிற்குச் சமானம். இதை ஒரு மேல்நாட்டு அறிஞர் கூறியது, அதை நான் உங்களுக்கு குறிப்பிடுகிறேன் என்று,'' அதை அண்ணா மேடை பேச்சில் குறிப்பிட்டது.

''நான் (அண்ணா) ஒரு முறை மேல்நாட்டுப் பயணம் மேற்கொள்ளும்பொழுது, உங்களது கட்சியை யாரை? நம்பி விட்டு விட்டு வந்தீர்கள்? உங்கள் உடன் பிறப்புகள் மீது அவ்வளவு நம்பிக்கையா? என்று ஒருவர் என்னை நோக்கி கேட்டார். நான் என்ன! இத்தாலி அதிபர் முசோலினியா! பயப்படுவதற்கு!

''ஏன் என்றால் முசோலினி வெளிநாடு செல்கையில், அவரோடு எப்போதும் அவருடைய மருமகனை கூடவே கூட்டிக்கொண்டு செல்வார். அப்போது அவரிடம் (முசோலினியிடம்) மேலை நாட்டு நண்பர்களும், பத்தரிகையாளரும் வினவியது இதுதான்.....

'' நீங்கள் நாட்டை விட்டு விட்டு, உங்கள் மருமகனையும் கூடவே கூட்டிக்கொண்டு வந்திருக்கிறீர்களே! அங்கே யார்? நாட்டின் பிரச்சினைகளை கவனிப்பார்கள்! என்று வினவியிருக்கிறார்கள்!.......

அதற்கு முசோலினி அளித்த பதில் இதுதான்!........

''இவரை (மருமகனை) அங்கேயே விட்டு விட்டு வந்தால் தான் பிரச்சினை! இப்போது அங்கே ஒரு பிரச்சினையும் நடக்காது. நடக்க வேண்டியது தன்னாலேயே சரிவர நடக்கும், நானும் நிம்மதியுடன் இருக்கலாம்''

(குறிப்பு; பின்னாளில் பெனிட்டோ முசோலினி தன் மருமகனையே, தன் மகள் எவ்வளவு கெஞ்சியும், இசைந்து கொடுக்காமல், நாட்டில் கலகம் புரிந்த குற்றத்திற்காக மரணதண்டனை விதித்து தூக்கிலிட்டார் என்பது வரலாறு)

இது மாதிரியெல்லாம் எமது கழகத்துக்கு பிரச்சினை இல்லை என்பதை அந்த அயல் நாட்டு நண்பர்களிடம் குறிப்பிட்டேன். சிரித்து விட்டனர்.
இது அண்ணா தனது மேடைப்பேச்சின் இடையே குறிப்பிட்டது.

......ஆதாரம் அண்ணா நூற்றாண்டு விழா இணையத்தளம்.

....இறந்தும் சாதனை புரிந்த தன்னிகரில்லாத் தலைவன்.....உலகிலேயே அதிகம் பேர் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தியது கின்னஸ் சாதனை.. (சில பல ஆண்டுகளுக்குமுன் இச்சாதனை இன்னொருவரின் மறைவால் முறியடிக்கப்பட்டது. ஜப்பான் மன்னர் இறுதியஞ்சலியில், இருப்பினும் அந்த காலகட்டத்தில் இது பெரிய சாதனை தான்)

நன்றி!