PDA

View Full Version : அவளும், கவிதையும்



kulirthazhal
14-09-2008, 07:38 AM
அவளும், கவிதையும்

தீபமொன்று
வானவில்லை
ஆடைகொண்ட
ஒளிச்சிதறல்,
கருவிழிக்குள்
ரத்தஓட்டம்.,

மின்னலின் ஆற்றலெல்லாம்
மேகத்திற்குள்
மறைந்துகிடப்பதாய்.,
புன்னகையை கிரகிக்கும்
செவ்விதழின் துனிவு..,

என்றோ தீண்டிய
தென்றலின் பரவசங்கள்
நெஞ்சில் மிதப்பதாய்
அதிர்வலைகள்..,

தொடங்கும் சொற்களிலே
பொருள் பழகிப்போவதால்
வாக்கியங்கள்
ஆரோக்கியமான
குரை பிரசவங்கள்.,

நொடிகளின் இடைவெளியில்
முடிவிலா மனத்திரையில்
காட்சிகளை எல்லாம்
அவளின்
கண்களால் காணும்போது
தியானம்
எளிமையானதுதான்.,

காதல் பிணிக்கு
மருந்தில்லை என்பேன்,
மருந்துகள் என்றேனும்
மரணத்தை தருவதால்
பிணியே இன்பமென்பேன்..,

மருந்தினை தேடாமலே
அவள்
சம்மதத்தை தீண்டாமலே
காதல் நோயில்
கருகிப்போகும்
ஒரு
கவிஞனாய் மறிப்பதற்கு
மூச்சை அடைத்துப்பார்க்கிறேன்,
ஏனோ
உலகின் மீது
விதியை எழுதும்
பேராசை
எனக்குள் பாய்ந்து
ஒரு
முத்தமாவது கேட்கிறது.,

என்
வாழ்க்கை வரிகளுக்குள்
நோய் செய்த விரகம்
முற்றுப்புள்ளியும்
வைத்துவிடுமோ,
இல்லை
விதி செய்த மரணம்
எனை
தொடர்கதையாய்
பழி செயுமோ...,

-குளிர்தழல்.

இளசு
14-09-2008, 09:32 AM
காதல் பழமையானது.. ஆனாலும்
புதுக் காதலன் -காதலி எனக் கூடுபாய்ந்து
புதுப்பித்துக்கொண்டே இருக்கிறது..

புதுக்காதலன் கவிஞனாயும் இருந்து - சொல்
புதிதாய் எடுத்துக் கோர்த்துப் பாடும்போது
காதல் புது அழகும் கூடி, ஜொலிக்கிறது!


பாராட்டுகள் குளிர்தழல்..

(குளிர்தழல் - Oxymoron - முரண்தொடர்.. ரசிக்க வைக்கும் புனைபெயர்..!)

poornima
14-09-2008, 09:54 AM
//உலகின் மீது
விதியை எழுதும்
பேராசை
எனக்குள் பாய்ந்து
ஒரு
முத்தமாவது கேட்கிறது.,//

காதல் கவிதை எழுதும்போது மட்டுமே இம்மாதிரியான அசாத்திய எண்ணங்கள்
பீறிட்டு எழுகிறது.. பாராட்டுகள்.. பாராட்டுகள்

பிச்சி
26-09-2008, 01:13 PM
ஒவ்வொரு வரிகளும் சிலாகிக்க வைக்கிறது.
பாராட்டுக்கள் குளிர் அண்ணா

அன்புடன்
பிச்சி