PDA

View Full Version : நூற்றாண்டைக் கடந்த 36,000 ஜப்பானியர்கள்



mgandhi
13-09-2008, 06:13 PM
நூற்றாண்டைக் கடந்த 36,000 ஜப்பானியர்கள்


ஜப்பானில் நூறு ஆண்டுகளைத் தாண்டி வாழும் முதியோர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.

அண்மையில் நடத்தப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி நூற்றாண்டைக் கடந்த ஜப்பானியர்களின் எண்ணிக்கை 36 ஆயிரத்து 276-ஐ எட்டியிருப்பதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

அவர்கள் அனைவருக்கும் ஜப்பான் அரசு சார்பில் வாழ்த்து மடல் அனுப்பப்பட்டுள்ளது. உலகின் மிக வயதான ஆண் என கருதப்படும் டமோஜி டானபிக்கு அந்நாட்டு அரசு சிறப்பு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளது.

மியாஜாகி பகுதியில் வசிக்கும் அவருக்கு 8 பிள்ளைகளும், 25 பேரப்பிள்ளைகளும், 52 கொள்ளுபேரப்பிள்ளைகளும், அவர்களது வாரிசுகளான 6 குழந்தைகளும் உள்ளனர்.

சத்தான உணவு வகைகள், தினசரி உணவில் அதிக காய்கனிகளை சேர்த்துக் கொள்வது உள்ளிட்ட காரணங்களால் ஜப்பானியர்களின் ஆயுள்காலம் அதிகரித்திருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

அதேசமயம் ஜப்பானில் குழந்தை பிறப்பு விகிதம் கணிசமாக சரிந்துள்ளது. இளம் தலைமுறையினர் குழந்தை பெற்றுக் கொள்வதை விரும்பாததால் இந்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதனை மாற்ற விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொள்ள முடிவு செய்திருப்பதாகவும் ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது.

நன்றி தினமணி

ஓவியா
13-09-2008, 06:46 PM
நல்ல செய்தி, பகிர்வுக்கு நன்றி.

காந்தி அண்ணா!!!! கோபம் வேண்டாம்.

உங்களிடம் பலமுறை சொல்லியாகிவிட்டது இருப்பினும் ஓவ்வொரு முறையும் எங்கிருந்தோ வெட்டி ஒட்டும் பதிவையும் உங்கள் சொந்த படைப்பு போலவே எழுதியவரின் அறிகுரிறியே இல்லாமல் எடுத்த பக்கதின் பெயரைகூட சேர்க்காமல் சுய படைப்புபோல தொடர்கின்றீர்களே!! இது பண்பான செயலா? சரியா?

ஒரு வார்த்தை நன்றி தினமணி என்று போடலாமே!!!

mgandhi
14-09-2008, 08:12 AM
நன்றி ஓவியா