PDA

View Full Version : டெல்லியில் பயங்கர குண்டுவெடிப்பு: 18 பேர் பலி - பலர் காயம்



ராஜா
13-09-2008, 03:21 PM
http://www.aol.in/tamil/img/2008/09/Delhi-Blast-300_13092008.jpghttp://www.aol.in/tamil/img/2008/09/delhi-city-map-250_13092008.jpg

டெல்லி: டெல்லியில் இன்று மாலை 3 இடங்களில் அடுத்தடுத்து 7 குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன. இதில் 18 பேர் பலியானார்கள். பலர் படுகாயமடைந்தனர்.

சமீபத்தில் பெங்களூர், அகமதாபாத் ஆகிய நகரங்களில் தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்கள் நிகழ்ந்து நாட்டையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. சூரத்தில் அடுத்தடுத்து குண்டுகள் சிக்கி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் தலைநகர் டெல்லியில் இன்று மாலை தொடர் குண்டுவெடிப்புச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

குண்டுவெடிப்பு நடந்த இடங்கள் அனைத்தும் மார்க்கெட் பகுதிகள் ஆகும்.

கன்னாட் பிளேஸ், கிரேட்டர் கைலாஷ்-1, கரோல் பாக் ஆகிய மக்கள் நெரிசல் அதிகம் மிகுந்த பகுதிகளில் இந்த குண்டுகள் வெடித்துள்ளன.

கரோல் பாக் (1), கன்னாட் பிளேஸ் சென்ட்ரல் பார்க் (1), பாரகம்பா சாலை (1), கிரேட்டர் கைலாஷ்-1 (2), பாலிகா பஜார் (1) ஆகிய இடங்கள் குண்டுவெடிப்புக்கு ஆளான பகுதிகள்.

கிரேட்டர் கைலாஷில் ஸ்கூட்டரில் குண்டு வைக்கப்பட்டிருந்தது. கரோல் பாக்கில் ஆட்டோவில் குண்டு வைக்கப்பட்டிருந்தது. கன்னாட் பிளேஸில் குப்பைத் தொட்டியில் குண்டு வைக்கப்பட்டிருந்தது.

கரோல் பாக்கில் முதல் குண்டு வெடிப்பு...

முதல் குண்டு கரோல் பாக், கப்பார் மார்க்கெட்டில் மாலை 6.15 மணிக்கு வெடித்தது. இதில் 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அனைவரும் அருகில் உள்ள ஆர்.எம்.எல்.மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

அதைத் தொடர்ந்து கன்னாட் பிளேஸ் பகுதியில் குண்டு வெடித்தது. இதில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

நான்காவது குண்டுவெடிப்பு கிரேட்டர்கைலாஷ் -1ல் உள்ள எம்.பிளாக் மார்க்கெட்டில் நிகழ்ந்தது. இங்கு இன்னொரு குண்டுவெடிப்பும் நடந்தது.

கரோல்பாக்கில் ஆட்டோவில் குண்டு வெடித்துள்ளது. இதில் அந்த ஆட்டோ தூக்கி எறியப்பட்டது.

6.15க்கு ஆரம்பித்த குண்டுவெடிப்புகள் 6.30 மணிக்கு முடிவுக்கு வந்துள்ளது. குண்டுவெடிப்பில் 18 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இந்தியன் முஜாஹூதீன் காரணம்?

இந்த பயங்கர குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு சிமி அமைப்பின் கிளையான இந்தியன் முஜாஹூதீனே காரணம் என சந்தேகிக்கப்படுகிறது. அந்த அமைப்பு குண்டுவெடிப்புக்கு பொறுப்பேற்று மீடியா நிறுவனம் ஒன்றுக்கு இ மெயில் அனுப்பியுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல் தெரிவிக்கிறது.

பஞ்சாப் - ஹரியானாவில் உஷார் நிலை

டெல்லி தொடர் குண்டுவெடிப்பைத் தொடர்ந்து அருகாமையில் உள்ள பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் முழு அளவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சண்டிகர் நகர் முழுவதும் அதிகபட்ச உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

டெல்லி எல்லைகளில் தீவிர வாகனத் தணிக்கை நடத்தப்பட்டு வருகிறது. குண்டுவெடிப்புச் சம்பவத்தால் தலைநகர் டெல்லி முழுவதும் பெரும் பதட்டம் நிலவுகிறது. தகவல் தொடர்பு சேவை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, டெல்லி மெட்ரோ ரயில் போக்குவரத்தை மெட்ரோ ரயில் நிறுவனம் நிறுத்தி

Source: Oneindia

Keelai Naadaan
13-09-2008, 04:11 PM
இரண்டு கால் மிருகங்களின் வெறியாட்டம் மீண்டும் ஆரம்பமா?

ஓவியா
13-09-2008, 04:18 PM
அடப்பாவமே!!

மனித உடல்களின் விலை என்ன என்பது போல் உலகம் ஆகிவிட்டது.

வருத்தங்கள்.

அன்புரசிகன்
13-09-2008, 05:30 PM
அப்பாவி மக்களை விட்டுவைக்க யாரும் முன்வரவில்லை.... என்ன ஒரு பரிதாப நிலை நம் மக்களுக்கு...

mgandhi
13-09-2008, 06:06 PM
பலியான அனைவருக்கும் அஞ்சலி.

அறிஞர்
15-09-2008, 02:02 PM
தீவிரவாதிகளுக்கு மனசு என்பதே கிடையாதா...

எப்படியாக மூளைச்சலவை செய்யப்பட்டு... அப்பாவி உயிர்களை பறிக்கிறார்கள்.

அடுத்து சென்னைக்கு வேறு எச்சரிக்கை கொடுத்துள்ளனர்.

இறைநேசன்
15-09-2008, 02:44 PM
கை கால்கள் எல்லாம் நன்றாக இருக்கும்போதே வாழ்வதற்கு போராட வேண்டியுள்ள இந்த உலகத்தில், படு காயம் அடைந்தவர்களின் நிலயை எண்ணி கண்ணீர் துளியைத்தான் சிந்த முடிகிறது!

நேற்று வரை எல்லா உறுப்பும் நன்றாக இருந்தது இன்றோ ஐயோ! என்சொல்வேன்? அடுத்தவருக்கு வேறு சுமையாகி அன்பு உறவினர்க்கு நெஞ்சில் கனமாகி

என்று தீருமோ இந்த குண்டுவெடிப்பு கலாச்சாரம்!!!

lolluvathiyar
15-09-2008, 02:47 PM
7 இடத்தில் குன்டு வெடித்தாலும் உயிரிழப்பு குரைவாக தான் நடந்திருக்கிறது என்பது ஒரு ஆறுதலான விசயம். இந்தியர்கள் இந்த குன்டுவெடிப்புகளுக்கெல்லாம் அசர மாட்டார்கள். எத்தனை குன்டுகள் வெடித்தாலும் நம் மக்களை பிரிக்க முடியாது, கடமையையும் நிறுத்த முடியாது.
அடிகடி குன்டு வெடிப்பது தீவிரவாதிகளின் தோல்வியையே காட்டுகிறது.