PDA

View Full Version : மனசு (குட்டிக்கதை)



ஐரேனிபுரம் பால்ராசய்யா
13-09-2008, 01:41 PM
சூரியன் விழிக்காத விடியற்காலை, அயர்ந்து தூங்கிகொண்டிருந்த என்னை தட்டி எழுப்பி “ வாங்க காய்கறி வாங்க சந்தைக்கு போலாம்” என்றாள் என் மனைவி. எனக்கு சுளீரென்று கோபம் வந்தது.

”இங்கிருந்து சந்தைக்கு ஐந்து கிலோமீட்ட்ர் தூரம் போகணும், போக வர பத்து ரூபா பெட்ரோல் செலவு, பக்கத்து கடையுல ஐந்து ரூபா அதிகமா இருந்தாலும் பரவாயில்ல, நீ இங்கேயே வாங்கிடு ” என்று சொல்லிவிட்டு போர்வையை இழுத்து போர்த்தியபடி மறுபடியும் தூங்க ஆரம்பித்தேன்.

”என்னங்க இப்பிடி எல்லாரும் சந்தைக்கு போகாம பக்கத்து கடையுல காய்கறி கிடைக்குதுன்னு வாங்க ஆரம்பிச்சா, விவசாயம் பண்ணி சந்தைக்கு கொண்டு வந்து விக்கிறவங்க, தங்களோட பொருளுக்கு நல்ல விலை கிடைக்கலியேன்னு வருத்தத்தோட மொத்த வியாபாரிங்ககிட்ட குறைஞ்ச விலைக்கு வித்துட்டு வீட்டுக்கு போயிட்டா மறுபடியும் எப்பிடிங்க அவங்களுக்கு விவசாயம் பண்ண மனசு வரும்.”

நொடிகளில் வந்து விழுந்த என் மனைவியின் வார்த்தைகளை கேட்டதும் சுருண்டு படுத்திருந்த நான் துள்ளி எழுந்து மனைவியுடன் சந்தைக்குப் போக தயாரானேன். தூரத்தில் “எண்ணிப்பாரு கொஞ்சம் ஏர் பிடிக்கும் ஆளு, சோற்றில் நாம கைய வைக்க சேற்றில் வைப்பான் காலு” என்ற பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது.

Keelai Naadaan
13-09-2008, 04:01 PM
சிறு விவசாயிகளின் நலனில் அக்கறை கொண்ட அருமையான குட்டிக்கதை. பாராட்டுக்கள்.

இளசு
14-09-2008, 09:20 AM
காரம் குறையாத கடுகுக் கதை!

படைப்பாளிக்கும் நுகர்வோனுக்கும் நேரடி உறவு..
இடைத்தரகரால் ஏற்படும் ஏ(மா)ற்றம் தவிர்க்க..

பாராட்டுகள் ராசய்யா அவர்களே!

poornima
14-09-2008, 09:47 AM
உழவர் சந்தையை ஊக்குவிக்கும்- சிந்தையில் ஒரு தாக்கம் தர வைக்கும்
குட்டிக்கதை இது..

பாராட்டுகள் ஐ.பா.இராசைய்யா..

தொடர்ந்து எழுதுங்கள் குட்டிக்கதைகளை..

சிவா.ஜி
16-09-2008, 07:26 AM
இப்படிப்பட்ட மனசு எல்லோருக்கும் வேன்டுமென்று ஏங்க வைக்கும் கதை. விவசாயிகளின் துன்பம் உணர்ந்தால், அவர்களின் வயிறும் நிறைந்து, நம் வயிற்றையும் நிறைப்பார்கள். பாராட்டுக்கள் ராசைய்யா அவர்களே.

அமரன்
16-09-2008, 08:35 AM
மனவயல் விவசாயி ராசய்யா என்று உங்களை அழைக்கும் அளவுக்கு உள்ளது உங்கள் படைப்பு.

"உழவர்சந்தையை" ஊக்கப்படுத்தும் வகையில் நியாயமாக எல்லாரும் நிச்சயமாக நடந்துகொள்ள வேண்டும்..

ஐந்து ரூபா மிச்சம் பிடிக்க நினைத்த அவனையும் தப்பு சொல்வதுக்கில்லை.

MURALINITHISH
22-09-2008, 09:25 AM
வரிகளில் குறைவு இருந்தாலும் கருத்தில் குறைவு இல்லை இப்படிதான் எல்லா தன் சுகம் நினைத்தால் அப்புறம் கஷ்டம்தான் நஷ்டமும் நம்க்குதான்