PDA

View Full Version : ஒரு கூடை சூரியன்

சுஜா
13-09-2008, 09:37 AM
ஒரு கூடை சூரியன்

முடுக்கப்பட்ட சூரியன்
முத்தமிட்டு -சத்தமிட்டு
பிரசவமானது.

மனிதனும்,விலங்கும்,
தக்காளியும், திராட்சையும்
ஒரே தனிமமாய் ஆனது.

உருளைகிழங்கு வயல்களில் ,
மண்ணுக்குள் அவிந்தன கிழங்குகள்.

சோளம், பொரியாகி
கரியானது.

கடல்குளித்தனர் மனிதர் ;
கடலைவிட்டு பிரிந்தன நண்டுகள் .

அடைகுஞ்சுகள் ,
முட்டைக்குள்ளே அடக்கம் செய்யபட்டன .

உண்மையில் ,
கத்தியின்றி ரத்தமின்றி
சுத்தமாக்கிவிட்டு போனார்கள்
எங்கள் சொர்க்கத்தை .

(ஹிரோசீமாவிர்க்கு சமர்ப்பணம் )

ஓவியா
13-09-2008, 09:54 AM
அட, சமூக சிந்தனை கவிதை.

நகாஷாக்கியிலும் ஹிரோஷிமாவிலும் இரண்டாம் உலக போரில் நடந்த உயிர்பலியை இவ்வளவு அழகாக கவிதையாக்கி படைத்து பாராட்டை பெருகின்றீர்கள். சபாஷ்.

இப்பொழுது சென்று காணுங்கள் ஜப்பானை, வியத்து போவீர்கள். 60 வருட்டத்திற்க்கு முன் நடந்த போருக்கான அடயாலம் ஒரு துமியளவுமில்லாமல் இருக்கும் அழகிய சுத்தமான ஜப்பான்.

சுஜா
13-09-2008, 09:57 AM

நன்றி அக்கா .

என்னதான் மாறியிர்ந்தாலும்
அவர்களின் கண்ணீர் உவடுகளை
இன்றுவரை பார்க்கமுடிகிறது .

ஓவியா
13-09-2008, 10:20 AM
நன்றி அக்கா .

என்னதான் மாறியிர்ந்தாலும்
அவர்களின் கண்ணீர் உவடுகளை
இன்றுவரை பார்க்கமுடிகிறது .

ஆமாம், ஆனால் ஒரு விசயம் அவர்கள் கிழக்காசியாவில் ஆட்சியை பிடிக்க எடுத்த போரில் செய்த அட்டூழியம், அஜாரகம் கொஞ்சம் நஞ்சமில்லை, மலேசியா, தாய்லாந்து, பிலிபைன்ஸ், வேட்னாம், கம்போடிய, லாவோஸ், மியன்மர் என எத்தனை நாட்டு மக்களின் கண்ணிர் துளிகளும் உயிர்களும் இம்மண்ணில் வீந்துள்ளன என்று யாருக்குமே தெரியாது. அவைகளுக்கான பரிசுகள் இவை.

(அதனால் நகாஷாக்கியிலும் ஹிரோஷிமாவிலும் நடந்தது சரியென்று நான் சொல்லவில்லை, அவர்களுக்கும் என் வருத்தங்கள்.)

ஜப்பானியர்கள் மலேசியாவில் வாழ்ந்த எத்தனை லட்சம் நம் முன்னோர்களை ஈவுயிரக்கமின்றி அழித்தார்கள் தெரியுமா??? சீனர்களை விட அதிகமான எண்ணிக்கை தமிழ் மக்கள் மலேசியாவில் இருந்துள்ளனர். இன்று அவர்கள் எங்கே????

ஆமாம், சிங்கப்பூரில் ஆரம்பித்து மலேசியா, தாய்லாந்து பின் வேட்னாம் சென்று அங்கிருந்து சீனாவழி மீண்டும் இந்தாவிற்க்கு செல்ல இரயில் தண்டவாளம் கட்ட தாய்லாந்துக்குள் அழைத்து சென்ற அத்தனை லட்சம் மக்களும் நம் தமிழர்கள். (சில சிங்கள, மலயாளி, தெலுங்கு மக்களும் உண்டு).

எனக்கு ஒரு சின்னப்பாட்டி இருந்தார், திருமணம் செய்து ஒரு வருடம் இருக்கும். அப்பொழுது அவருக்கு வயது 17 மட்டுமே. இந்த இரயில் பாலம் கட்ட தாத்தாவை சூப்பர்வைசராக ஜப்பனியர்கள் அழைத்து சென்று விட்டார்கள்.

பல வருடங்கள் தாத்தாவை எதிர்பார்த்து என் பாட்டி அழுதபடியே காத்திருந்தாராம். ஒரு தகவலும் கிடைக்கப்பெறவில்லை. பாட்டி இறக்கும் பொழுதும் அவருக்கு 77 வயது. தன் ஒரே மகனிடம் அப்பா வந்தால் என் சமாதிக்கு வர சொல்லுங்கள் என்று சொல்லி இறந்தார். 60 வருடம் தனிமையில் வாடி தன் மனையானுக்கு காத்திருந்தார் என் சின்னப்பாட்டி. சமாதிக்கட்டி நாங்கள் இன்னும் தாத்தா வருவார் என்று காத்திருக்கிறோம். பாட்டி இறந்து 20 வருடங்கள் ஆகிவிட்டன. :traurig001:

யோசிக்க சிரிப்பு வரும் ஆனால் இது போல் எத்தனையோ கண்ணீர்கதைகளை வித்தைத்தவர்கள் ஜப்பானியர்கள்.

சுஜா
13-09-2008, 11:37 AM

உங்கள் காத்திருப்பு பலிக்கட்டும் .
சுயநலம் பிடித்த குடங்க்களால்
எளியவர்கள் அழிக்கபடுகிறார்கள்.
நம்நாட்டில் சிந்தப்பட்டாலும்
ஜப்பானில் சிந்தபட்டாலும் கண்ணீர் கண்ணீர்தான் .

poornima
13-09-2008, 11:42 AM
அடி வாங்கியதும் வீழ்ந்துவிடவில்லை. அடி வாங்கிவிட்டோமே என்று சோர்ந்திருக்கவும் இல்லை.

எரிந்தபின்னும் சாம்பலிலிருந்து உயிர் பெறும் ஃபீனிக்ஸ் போல பெரும் அழிவுக்குப் பிறகும் எழுந்து இன்று உலகையே திரும்பிப் பார்க்கும் வண்ணம் செய்துகொண்டிருக்கிறார்கள்..

கண்ணீருடனான காலடிச் சுவடை கவனித்து கவிதை படைத்திருக்கிறீர்கள் சுஜா
பாராட்டுகள்.. பேரழிவையும் - பெரும் சோகத்தையும் சொல்ல கவிதையை விடச்
சிறந்ததுதான் எது?

சுஜா
13-09-2008, 11:55 AM

நன்றி பூர்ணிமா அக்கா .
ஓவியா அக்கா சொனதை கவனித்தீர்களா.
ஒவ்வொரு வினைக்கும் அதற்க்கு சமமான எதிர்வினை உண்டு .
தொடக்க வினை "East,wind,rain"

தீபா
13-09-2008, 12:20 PM
கண்ணீருடனான காலடிச் சுவடை கவனித்து கவிதை படைத்திருக்கிறீர்கள் சுஜா
பாராட்டுகள்.. பேரழிவையும் - பெரும் சோகத்தையும் சொல்ல கவிதையை விடச்
சிறந்ததுதான் எது?

மெளனத்திற்கும் கண்ணீருக்கும் அந்த சக்தி உண்டு..

நல்லதொரு கவி படைத்த சுஜாவுக்கு வாழ்த்துக்கள்.

சுஜா
13-09-2008, 12:24 PM
மெளனத்திற்கும் கண்ணீருக்கும் அந்த சக்தி உண்டு..

நல்லதொரு கவி படைத்த சுஜாவுக்கு வாழ்த்துக்கள்.

நன்றி தென்றல் அக்கா.

Keelai Naadaan
13-09-2008, 04:30 PM
அருமையான கவிதை. பாராட்டுக்கள்.

சுஜா
15-09-2008, 11:29 AM
அருமையான கவிதை. பாராட்டுக்கள்.

நன்றி அண்ணா

Narathar
15-09-2008, 11:56 AM
சுஜாவின் அருமையான கவிதை மலர்கள் அருமை....

அதைத்தொடர்ந்த ஓவியாவின் நினைவு முட்கள்..... வலிக்கவைத்தன.....

ஜப்பானியர்க்கு அஞ்சலி செழுத்தும் அதே நேரம், அவர்களால் காயப்படுத்தப்பட்ட நம்மவர்களையும் கொஞம் நினைத்துக்கொள்வோம்......

எப்போதும்
எந்தப்பிரச்சனைக்கு
இரண்டுபக்கங்கள் உண்டு என்பதை
இந்தத்திரி உணர்த்தி நிற்கிறது

அறிஞர்
15-09-2008, 01:29 PM
ஆக்கத்திற்கு பயன்படுத்தவேண்டிய சக்தி..
அழிவிற்கு பயன்படுத்தப்பட்டு..
ஏற்படுத்திய விளைவுகள் வெகு அதிகம்...

உம் வரிகள் சிறப்பு...

சிவா.ஜி
16-09-2008, 10:34 AM
தசாவதாரம் திரைப்படத்தில் அமெரிக்க கமல் கேட்கும் அந்த " ஹீரோஷிமாவை நினைவிருக்கிறதா" என்ற கேள்விக்கு,ஜப்பானியக் கமல் சொல்லும் "பேர்ல் ஹார்பரை நினைவிருக்கிறதா" என்ற பதிலிலேயே தெரியும் ஜப்பானியர்களும் சளைத்தவர்களல்ல என்பது.

மேலும் ஓவியா சொன்ன அந்த அக்கிரமங்களும் வெளிப்படுத்துகின்றன ஜப்பானியர்களின் கொடுமைகளை. ஆனாலும் இதற்கெல்லாம் கிடைத்த தண்டனைதான் அந்த அணுசக்தி அழிவு என சொல்ல முடியவில்லை. ஏனெனில் பாதிக்கப்பட்டவர்கள் சாமானிய மக்கள். இராணுவத்தினர் செய்த கொடுமைகளுக்கு சாதாரண* மக்கள் என்ன செய்வார்கள் பாவம்.

யாரோ செய்த தவறுக்கு தங்கள் உயிரை இழந்ததுமில்லாமல், தங்கள் சந்ததியினரையும் அந்த துன்பத்துக்கு பலி கொடுத்த அந்த மக்களுக்காக கவி படைத்த சுஜாவுக்கு பாராட்டுக்கள்.

அக்னி
16-09-2008, 10:55 AM
அன்று...

http://i207.photobucket.com/albums/bb11/agnii_album/Images/ATT3322000.jpg

http://i207.photobucket.com/albums/bb11/agnii_album/Images/ATT3322001.jpg

http://i207.photobucket.com/albums/bb11/agnii_album/Images/ATT3322002.jpg

இன்று...

http://i207.photobucket.com/albums/bb11/agnii_album/Images/ATT3322003.jpg

http://i207.photobucket.com/albums/bb11/agnii_album/Images/ATT3322004.jpg

http://i207.photobucket.com/albums/bb11/agnii_album/Images/ATT3322005.jpg

http://i207.photobucket.com/albums/bb11/agnii_album/Images/ATT3322006.jpg

http://i207.photobucket.com/albums/bb11/agnii_album/Images/ATT3322007.jpg

http://i207.photobucket.com/albums/bb11/agnii_album/Images/ATT3322008.jpg

http://i207.photobucket.com/albums/bb11/agnii_album/Images/ATT3322009.jpg

http://i207.photobucket.com/albums/bb11/agnii_album/Images/ATT3322010.jpg

http://i207.photobucket.com/albums/bb11/agnii_album/Images/ATT3322011.jpg

http://i207.photobucket.com/albums/bb11/agnii_album/Images/ATT3322012.jpg

http://i207.photobucket.com/albums/bb11/agnii_album/Images/ATT3322013.jpg

http://i207.photobucket.com/albums/bb11/agnii_album/Images/ATT3322014.jpg

http://i207.photobucket.com/albums/bb11/agnii_album/Images/ATT3322015.jpg

http://i207.photobucket.com/albums/bb11/agnii_album/Images/ATT3322016.jpg

மின்னஞ்சலில் பகிர்ந்து கொண்ட நண்பருக்கு நன்றி.

வசீகரன்
16-09-2008, 11:24 AM
அந்த மக்களின் நாட்டுப் பற்றும்... ஒற்றுமையும்... உழைப்பும்.... நினைக்கும் போது
அவர்களுக்கு உடனே ஒரு சல்யுட் போடவேண்டும் போல இருக்கிறது....

அற்புதம் அக்னி அண்ணா... வியக்க வைக்கின்றன படங்கள்..!!!

ஓவியா
16-09-2008, 11:55 AM
உண்மையில் இன்றய ஜப்பானியர்கள் கொஞ்சம் நல்லவர்களாக இருக்கின்றனர்.

நாந்தான் சொன்னேனே ஜப்பான் அழகான சுத்தமான நகரம் என்று.

மனதை உலுக்கும் படமும் கண்ணை கவரும் படமும் அழகு. நன்றி அக்னி.

***************************************************************

ஜப்பனியர்கள் தங்களின் முன்னோர்கள் செய்த தவறை உணர்ந்து அருகில் அமைந்திருக்கும், பாதிக்கப்பட்ட கிழக்காசிய நாடுகளுக்கு பல நல்ல விசயங்கள் செய்து வருகின்றனர்.

அவற்றில் ஒன்று கிழக்காசியாவும் ஜப்பனும் இணைந்து நடத்தும் இளையோருக்கான சமூக ஒற்றுமை நிகழ்ச்சி. ஆசியாவிலே மிக பெரிய இளைஞர்களுக்கான நிகழ்சியும் இதுவே. 'நட்டின் இளைய தூதர்கள் (வருடம்) என்று அழைக்கப்படும் இந்த நிகச்சி சுமார் 65 நாட்கள் நடக்கும். இன் நிகழ்ச்சிக்காக ஒவ்வொறு நாடும் 6 மாதம் எடுத்துக்கொண்டு அவஸ்தைப்படும். மொத்தம் 11 நாடுகள் பங்குக்கொள்ளும்.

யாரேனும் தெரிந்துக்கொள்ள ஆசைப்பட்டால் சொல்லுங்கள், மேல் விபரங்களை பின் சொல்கிற்றேன். நன்றி.

தீபன்
16-09-2008, 04:56 PM
உருக்கமான உணர்வுகளை கொதிப்பான வார்த்தைகளால் அருமையாக சொல்லியுள்ளீர்கள் சுஜா. பாராட்டுக்கள்.

உண்மையில் இன்றய ஜப்பானியர்கள் கொஞ்சம் நல்லவர்களாக இருக்கின்றனர்.

ஜப்பனியர்கள் தங்களின் முன்னோர்கள் செய்த தவறை உணர்ந்து அருகில் அமைந்திருக்கும், பாதிக்கப்பட்ட கிழக்காசிய நாடுகளுக்கு பல நல்ல விசயங்கள் செய்து வருகின்றனர்.

நல்லா உணர்ந்தாங்க...
சமாதானம் என்ற திரைமறைவில் அபிவிருத்தியென்ற பெயரில் நிதிகளை திரட்டி போர்மூலம் ஈழத்தமிழ் மக்களை கொன்றொழிக்கும் இலங்கை அரசுக்கு பிரதான நிதி வழங்குனரும் இந்த ஜப்பான்தான்.

அவர்களுக்கு தேவை வியாபாரம். அவ்வளவுதான். அதன்பிறகுதான் மனிதாபிமானம், நன்மை தீமை எல்லாம்.