PDA

View Full Version : குவியல் துக்கங்கள்



kulirthazhal
13-09-2008, 02:41 AM
குவியல் துக்கங்கள்

ஒரு
குவியல் துக்கங்கள்
எப்போதும்
சந்தோஷமாய் நடிக்கிறது,

அது எப்போதும்
அடுத்து அழுபவனின்
சோகத்திற்கு மதிப்பளிக்கிறது,
ரசிப்பதற்கு அல்ல
அரவணைப்பதற்கு.

ஏன்றும்
துக்கங்கள்
சந்தோஷங்களை
தரப்போவதில்லை,
ஆறுதல் அப்படியல்ல..

அவனின் துக்கங்கள்
அடுத்தவனுக்கு
ஆறுதலாவதில்
அலாதி இன்பத்தை
ஞானம் தருகிறது,
இல்லை
போதை தருகிறது...

எல்லா தளங்களும்
அன்பினை மட்டும்
கொன்டிருப்பது
அபத்தம்.,
அன்பிற்கு செய்யும்
துரோகம்,
ஆம்
அன்பு
அடையாளம் காணப்படுவது
துன்பத்திலிருந்து....

அவன்
எப்போதும் போலவே
சுவாசிக்கிறான்
அதில்
துக்கத்தின் எடையும்
கணமும்
நட்புக்கும் சிலநேரம்
புரிவதில்லை....

இரண்டு
துக்கங்களுக்கு நடுவே
இறக்கி வைக்கப்படும்
துன்பங்கள்
தொடும் புள்ளியில்
முடிவுகளை
தாங்குகிறது
அல்லது
தற்காலிக மறதியினை
தறுகிறது.

-குளிர்தழல்

தீபா
13-09-2008, 10:47 AM
ஒரு குவியல் துக்கங்கள் பிற்பாடு "நடிக்கின்றன" என்ற செயலைச் சொல்லவேண்டும். பன்மையில் நடிக்கிறது வராது..

சில சமய்ங்களில் துக்கங்கள் தேவைப்படுகின்றன. இல்லையெனில் அன்பை மறந்திருப்போம்.. அருமையான வரிகள்.

எல்லா தளங்களும் அன்பை கொண்டிருப்பது அவசியம். அது அளவு மீறக்கூடாது..

வாழ்த்துக்கள்.