PDA

View Full Version : பார்வையில் சுழலும் பிம்பங்கள்kulirthazhal
13-09-2008, 02:37 AM
பார்வையில் சுழலும் பிம்பங்கள்

வாழ்வின்
உயிர்மீது காதல்,
எல்லா
கன்னி நிகழ்வின்மீதும்
காதல் கொள்கிறேன்.

தாரமாக
எந்த பாதையும்
வழிநடத்த விழையவில்லை.

ஒவ்வொரு நொடியும்
புதியதாய் புலர்கிறது
பழயதாய் கழிகிறது.
ஒட்டிக்கொள்வதில்லை,
விட்டுச்செல்வதில்லை.

சுழலும் உலகினில்
முற்றுப்புள்ளிகளுக்கு பின்னும்
வார்த்தைகளை தேடுகிறேன்.

சுவாசத்தின் இடைவெளியில்
சோம்பலாய் சுடர்விடும்
முற்றுப்புள்ளிகளை
இட்டுச்செல்வதில்
உடன்பாடில்லை,
வெற்றியுமில்லை.

பரவசத்திற்கும்
வெறுமைக்கும்
உண்ர்ச்சிகளின் இடைவெளியில்
அழுத்தமாய் பதியும்
புள்ளிகளுக்கு
அர்த்தம் பிறப்பதில்லை.

நிழல்கள் இசைக்கும்
நெகிழ்ச்சியில்
இம்சைகளின் சுரங்கள்
இனிமைகூட்டுகிறது,
அதன்
ரிதங்கள் இதமாக
புதியதோர் பாதைக்கு
பிம்பங்களை தருகிறது.

வழிகள் பிரசவங்களால்
வகைப்படுத்தப்படுவதால்
பிறப்புகள்
தவிற்கமுடியாமல்.,,
சூத்திரங்கள் இயலாத
கணக்குகளை
சில
சுவடுகளே
வழிநடத்துகின்றன.

அன்பும், அர்ப்பனமும்,
ஏட்டுக்கல்வியாய்
எழில்கொண்டாலும்
நான்
எனும் கருப்பொருளே
காவியங்களை கட்டுகிறது,

சாத்திரங்களை சபித்துவிட்டு
சூத்திரங்களை செய்வதற்கு
உலகின் வேகத்தை
உள்ளம் அடிமைசெய்கிறது.

உலகே என்
கண்ணசைவில் சுழல்வதாய்
கர்வம் கொள்கிறது.
புறியாத புதிர்களுக்குள்
புதுமைகொண்ட பொக்கிஷங்கள்
பூத்துக்கிடப்பதாய்
எதிர்ப்பார்ப்புகள்
உறுதிமொழிகின்றன,

நானே கடவுளென்ற
உன்மையினை
உள்ளம் உணர்த்தும்போது
விழிகளைத்தழுவும்
பிம்பங்களில்
உயிர்க்கொண்டு சிரிக்கும்
கடவுள்களின் எண்ணிக்கை
கணக்கிட இயலாமல்.....

-குளிர்தழல்

ஓவியன்
27-09-2008, 06:37 AM
வார்த்தைகளின் வறுமை..
எண்ணங்களில் வறுமை..
இரண்டுமே என்னை அழுத்த..

இந்தக் கவி புரிந்தும், புரியாமல் நான்...!!

poornima
27-09-2008, 06:59 AM
பார்வையில் சுழலும் பிம்பங்கள்

வாழ்வின்
உயிர்மீது காதல்,
எல்லா
கன்னி நிகழ்வின்மீதும்
காதல் கொள்கிறேன்.

வாழ்வின் உயிர் எது?
அல்லது
வாழ்வின் ஆதாரம் எது?
தேடல்..
தேடல் மீது வந்திருக்கும்
காதல்... புரிகிறது..
கன்னி நிகழ்வுகள்.. புரியவில்லை

தாரமாக
எந்த பாதையும்
வழிநடத்த விழையவில்லை.

ஒவ்வொரு நொடியும்
புதியதாய் புலர்கிறது
பழயதாய் கழிகிறது.
ஒட்டிக்கொள்வதில்லை,
விட்டுச்செல்வதில்லை.

கடந்து போன நொடி என்ன சொல்லிவிட்டு போனது
புதிதாய் புலரும் நொடி என்ன செய்தியைக் கொண்டுவந்தது
புரியவில்லை

சுழலும் உலகினில்
முற்றுப்புள்ளிகளுக்கு பின்னும்
வார்த்தைகளை தேடுகிறேன்.
முற்றுப்புள்ளிகள் கமாவாக இருக்கும் வரை மட்டுமே
சுவாரஸ்யமாக இருக்கிறது வாழ்க்கை..

சுவாசத்தின் இடைவெளியில்
சோம்பலாய் சுடர்விடும்
முற்றுப்புள்ளிகளை
இட்டுச்செல்வதில்
உடன்பாடில்லை,
வெற்றியுமில்லை.
முன்னர் சொன்ன வரிகளுடன் முரண்படுகிறீர்கள்.ஆனால்
கவிதை இங்கிருந்துதான் உயிர்த்தெழத் தொடங்குகிறது.

பரவசத்திற்கும்
வெறுமைக்கும்
உண்ர்ச்சிகளின் இடைவெளியில்
அழுத்தமாய் பதியும்
புள்ளிகளுக்கு
அர்த்தம் பிறப்பதில்லை.

நிழல்கள் இசைக்கும்
நெகிழ்ச்சியில்
இம்சைகளின் சுரங்கள்
இனிமைகூட்டுகிறது,
அதன்
ரிதங்கள் இதமாக
புதியதோர் பாதைக்கு
பிம்பங்களை தருகிறது.

வழிகள் பிரசவங்களால்
வகைப்படுத்தப்படுவதால்
பிறப்புகள்
தவிற்கமுடியாமல்.,,
சூத்திரங்கள் இயலாத
கணக்குகளை
சில
சுவடுகளே
வழிநடத்துகின்றன.

மேற்கண்ட பத்திகள் மூன்றிலும் உள்ள வீர்யம் உணரமுடிகிறது.
ஆனால் புரிந்துகொள்ளலில் சகலமும் நொறுங்கிவிடுகிறது..


நானே கடவுளென்ற
உன்மையினை
உள்ளம் உணர்த்தும்போது
விழிகளைத்தழுவும்
பிம்பங்களில்
உயிர்க்கொண்டு சிரிக்கும்
கடவுள்களின் எண்ணிக்கை
கணக்கிட இயலாமல்.....

அருமையாய் முடித்திருக்கிறீர்கள்.. எல்லாத் தேடலுக்குப் பிறகு ஒரு ஆயாசம் பிறக்குமே அது ஆங்காங்கே பரவிக் கிடப்பதுதான் இந்த கவிதையின் மிகப்பெரிய முரண்பாடாக கருதுகிறேன்.. முரண்பாடுகள் என்பது கவிதையில் மட்டுமல்ல உங்கள் பெயரிலும் என்னும்போது கவிதையை மற்றுமொருமுறை மீள்பார்வை செய்து அசை போட தொடங்குகிறது மனம்


இன்னும் எளிமையாய் தர முயலுங்கள் என்றொரு அன்பான கோரிக்கையுடன் முடிகிறது உங்களுக்கான இந்த பின்னூட்டம்

தீபா
30-09-2008, 08:33 AM
முன்பே படித்திருந்தேன்.. அதிகம் எதுவும் எழுத முடியாவிடினும்.....
அருமையாக தொடங்கி முடித்திருக்கிறீர்கள்..

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
30-09-2008, 09:57 AM
வார்த்தைகளை நன்றாக வளைத்திருக்கிறீர்கள். உங்கள் கவிதையின்முழுமையான கருத்தை கொஞ்சம் நீங்களே தெரிவித்துவிட்டால் இன்னுமொரு முறை படிக்க ஏதுவாக இருக்கும். வாழ்த்துக்கள் குளிர்.