PDA

View Full Version : ஊமைக்காதல் அகராதி



kulirthazhal
13-09-2008, 02:31 AM
ஊமைக்காதல் அகராதி

எழுத்துக்குள்
அடங்கா கவிதை,
வார்த்தைக்குள்
அடங்கா பொருள்,
செவியுணர இயலா
ஞானம்,
விழிகள் மட்டும்
பேசும் மொழி,
உள்ளத்தின் உணர்வறியா
முரன்பாடு,
தன்னைத்தானே
வதைக்கும் தீ,
காலத்தை
அழிக்கும் வெள்ளம்,
கற்றவைகளை
கரைக்கும் அமிலம்,
உயிரினை
வெல்லும் சக்தி,
உள்ளத்தின்
மொழிகானும் மாயம்,
விதைகளை
வளர்க்கும் கண்ணீர்,
தனிமையைத் தேடும்
நட்பு,
அழுகையின்
அன்பு மொழி,
அகந்தையே இயலா
இதயம்,
மூச்சுப்பாதையில்
தூக்குக்கயிறு,
நிசப்தமே விலகா
கீதம்,
விடியலே
பிறக்கும் நாட்கள்,
தினம்தினம் மரணம்
இரவு,
சுட்டுவிடும் தீயாய்
நிலவு,
உயிர் பறக்கும் புயலாய்
தென்றல்,
இமைகள்மட்டும் உறங்கும்
தூக்கம்,
இதயம்விடும் கண்ணீர்
குருதி,
உயிரைத்தொலைத்த சிதையாய்
வானம்,
பேசமுடியா
ஊமைக்காதல்......

-குளிர்தழல்

shibly591
13-09-2008, 08:44 AM
நீங்கள் மிகவும் திறமையானவர் என்பது இதைப்படிக்கும்போதே புரிகிறது..

வாழ்த்துக்கள்