PDA

View Full Version : நிழல் மறையும் நேரம்



kulirthazhal
13-09-2008, 02:28 AM
நிழல் மறையும் நேரம்

ஒவ்வொரு விடுதலையிலும்
விளங்குகள்
உடைபடுமெனில்
மரணமோ
வாழ்க்கையோ
சிறை எது
புரியவில்லை,

ஒவ்வொரு பிரிவும்
இடைவெளியை கூட்டுமெனில்
நினைவிற்கும்
மறதிக்கும்
உறவென்ன
தெரியவில்லை,

காதலுக்கும்
காலத்திற்கும் இடையே
சூத்திரங்கள்
நிலையிலா கடலலைகள்.

பூமியெனும் வட்டத்தில்
புள்ளிகளாய்
சிதறும் தூரம்
பிரபஞ்ச உறவிற்கு
பிரிவாக தோன்றிடுமோ....

மூச்சடைத்து விளையாடினேன்
சில முத்துக்கள்
கிடைக்குமென்று,
கண்ணடைத்து விளையாடினேன்
சில கவிதைகளை
கனவாய்க்கண்டு,
இது
நெஞ்சடைக்கும் விளையாட்டு
உன்
நிழல் மெல்ல மறையும் நேரம்......

-குளிர்தழல்

தீபா
13-09-2008, 10:17 AM
விளங்குகள்? - விலங்குகள்.

உடைபடுவதினின்று விளைவது எது என்று தேர்ந்தெடுப்பது உங்கள் உரிமை. ஏனெனில் தெளிவான பாதையில் செல்பவருக்குத் தெளிவே விளங்கும். விடுபட்ட காதல், தெளிவானதெனில் முடிவும் தெளிவே.

பிரிவுகளுக்கான இடைவெளி, அது கூடும் போது நினைவுகள் குறையவேண்டும். மறதி பெருகவேண்டும்.

கொஞ்சம் மூச்சை நிறுத்தி நினைவு காணுங்கள். அவள் நினைவுகளும் நிழலாய் மறைந்துவிடும்.

நல்லதொரு கவிதை தந்த குளிர்தழலுக்கு பாராட்டுக்கள்.

பிச்சி
26-09-2008, 02:10 PM
அருமையான கோணம் அண்ணா. பிரிவைப் பற்றி இப்படி இதுவரை கவிதை படித்ததில்லை.

அன்புடன்
பிச்சி