PDA

View Full Version : புத்தகப் பிரியர்களுக்கு மட்டும்



mgandhi
12-09-2008, 06:31 PM
புத்தகப் பிரியர்களுக்கு மட்டும் !!!

http://sirippu.files.wordpress.com/2008/09/ebook.jpg



வெளியூருக்குச் செல்லும்போதெல்லாம் வாசிப்பதற்கென்று நான்கைந்து புத்தகங்கள் எடுத்துச் செல்ல விரும்புவோம். ஆனால் எடை பயமுறுத்தும். கடைசியில் வீட்டில் இருக்கும் புத்தகங்களில் எடை குறைவான நூல்களின் ஓரிரு நூல்களை எடுத்துக் கொண்டு திருப்தியடைந்து விடுவோம்.

சில புத்தகங்கள் வாசிக்க வேண்டுமென ஆர்வம் கொப்பளிக்கும், ஆனால் தெளிவற்ற எழுத்துக்களும், பழைய சிதைந்த எழுத்துக்களும் வாசிக்க விடாமல் தொல்லை படுத்தும்.

கொஞ்சம் வயதானவர்கள் என்றால் கேட்கவே வேண்டாம், பொடிப் பொடியாய் எழுதப்பட்டிருக்கும் எழுத்துக்களை உற்று உற்றுப் பார்த்து வாசிப்பதிலேயே மிச்சமிருக்கும் வயதும் ஓடிப் போய்விடும்.

இத்தனை பிரச்சனைகளும் ஒரே நொடியில் தீர்ந்து விட்டது என்றால் நம்புவீர்களா ?
இனிமேல் நீங்கள் பயணம் போகும் போது ஐநூறு புத்தகங்களை உங்கள் சட்டைப் பையில் சொருகிக் கொள்ளலாம் என்றோ, நூலின் எழுத்துருவை உங்களுக்குப் பிடித்த அளவுக்கு பெரிதாக்கி வாசிக்கலாம் என்றோ சொன்னால் நம்புவீர்களா ?

நீங்கள் நம்பித் தான் ஆகவேண்டும். சோனி ரீடர் என்றொரு புதிய கருவி வந்திருக்கிறது உங்களை நம்பவைக்க. ஒரு சிறு புத்தகத்தின் அளவே உள்ள இது ஒரு மின்னணுப் புத்தகம்.

இப்போது சந்தையில் பிரபலமாகி வரும் மின் நூல்களை இந்த மின்னணுப் புத்தகத்தில் சேமித்து வைத்தால் போதும். எப்போது வேண்டுமெனிலும் வாசிக்கலாம். நூற்றுக் கணக்கான நாவல்களையும், கவிதை நூல்களையும், கட்டுரை நூல்களையும் இதனுள் சேமித்து வைத்துக் கொள்ளலாம்.

பிடித்தமான அளவுக்கு எழுத்துருவைப் பெரிதாக்கிக் கொள்ளலாம். எத்தனை பக்கம் படித்தேன் என ஒவ்வொரு முறையும் குழம்பவும் தேவையில்லை. ஒவ்வொரு முறை இதைத் திறக்கும் போதும் கடந்த முறை எத்தனைப் பக்கங்கள் படித்தீர்கள் என்பதை நினைவில் வைத்திருந்து சரியாய் அதே பக்கத்தில் உங்களைக் கொண்டு செல்லும்.

கணினியில் இந்த வசதிகள் எல்லாம் உண்டு. ஆனால் என்ன, கணினியை நீங்கள் குளியலறையில் கொண்டு சென்று வாசிக்க வசதிப்படாது. செல்லுமிடமெல்லாம் தூக்கிச் செல்லவும் முடியாது. ஆனால் இந்தக் கருவி அப்படியல்ல.

புத்தகம் கிழிந்து போகும் என்ற கவலையும் இந்தக் கருவியில் இல்லை. எப்போது வேண்டுமானாலும் புது நூல்களை நுழைக்கவும் செய்யலாம், பழைய நூல்கள் படித்தபின், அல்லது வேண்டாமென தோன்றும் கணத்தில் அழித்துவிடவும் செய்யலாம்.

இந்த புதிய மின்னணு நூல் பிரபலமாகும் என்றும், இது புத்தகப் பிரியர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றும் தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர். இனி வரும் காலங்களில் மின் நூல்கள் அதிகம் விற்பனையாகவும், காகித பயன்பாடு குறைந்து காடுகள் காப்பாற்றப்படவும் இத்தகைய கருவிகள் மிகவும் துணை செய்யும் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனால் என்ன, வீட்டுக்கு நண்பர்கள் வரும்போது இது தான் என்னோட புத்தக அலமாரி என நீண்ட அலமாரியையும் அதில் நிரம்பி வழியும் நூல்களையும் காட்டிப் பெருமையடிக்க முடியாது. எங்கேப்பா உன் நூலகம் என யாராச்சும் கேட்டால் சட்டைப் பையிலிருந்து இதை எடுத்து நீட்ட வேண்டியது தான்.
நன்றி இணையம்

mukilan
12-09-2008, 06:52 PM
நல்ல தகவல் திரு. காந்தி! நன்றி

அக்னி
12-09-2008, 07:07 PM
நாம் வாசிக்க விரும்புவது, மின்னூலாகவோ அல்லது இந்த வாசிப்புக் கருவியில் வாசிக்க ஏதுவானதாகவோ இருக்க வேண்டுமே.

செய்திகளையோ, அல்லது எழுத்துப் படைப்புக்களையோ, இணையத்தினூடாக இலகுவாகப் பெறக்கூடியதாகவும், வாசிக்கக்கூடியதாகவும் இருப்பினும்,
இன்றுவரை, பத்திரிகைகளும், நூல்களும் தமக்கெனத் தனித்துவமான ஓரிடத்தைத் தக்கவைத்துக் கொண்டுதான் உள்ளன.

சில, எவ்வளவுதான் நவீனமயப்படுத்தப்பட்டாலும்,
உண்மையானதன் இயல்பையும் திருப்தியையும் அனுபவிக்கமுடியாது.

தகவலுக்கு நன்றி...

இளசு
12-09-2008, 07:26 PM
நல்ல தகவல். பகிர்ந்தமைக்கு நன்றி காந்தி அவர்களே!

அமரன்
12-09-2008, 07:42 PM
சரிதான் அக்னி...
தாள்களை புரட்டும் போது தாய் ஸ்பரிச உணர்வு.. இந்த கண்டுபிடிப்பு தாயின் தொலைபேசி அழைப்பு. காலத்துக்கேற்ற மாற்றம் கட்டாயம்.
எப்படியானாலும் புத்தகங்களை வாங்கித்தானே கருவியில் ஏற்ற வேண்டும்..

பகிர்வுக்கு நன்றி காந்தி அண்ணா..

இளசு
12-09-2008, 07:49 PM
சரிதான் அக்னி...
தாள்களை புரட்டும் போது தாய் ஸ்பரிச உணர்வு.. இந்த கண்டுபிடிப்பு தாயின் தொலைபேசி அழைப்பு. காலத்துக்கேற்ற மாற்றம் கட்டாயம்.
எப்படியானாலும் புத்தகங்களை வாங்கித்தானே கருவியில் ஏற்ற வேண்டும்..

பகிர்வுக்கு நன்றி காந்தி அண்ணா..

மின்புத்தகங்களை.... அமரா!

அமரன்
12-09-2008, 08:10 PM
மின்புத்தகங்களை.... அமரா!

ஆமாம் அண்ணா...
மின்னல் வேகத்தில் சிக்கியதால் கவனிக்கத் தவறி விட்டேன்.. :)

தீபன்
13-09-2008, 03:53 AM
அதுவே வாசித்து அதை ஒலி வடிவில் சொல்லுமானால் இன்னும் நலம்...

-சோம்பலுடன் தீபன்.

leomohan
13-09-2008, 10:08 AM
மிக்க நன்றி நண்பரே

poornima
13-09-2008, 12:14 PM
நிறைய மாடல்கள் வரத்தொடங்கி விட்டன.கையடக்கத் திரை முதல் வெவ்வேறு அளவுகளில் கூடுமானவரை எல்லா ஃபார்மேட் கோப்புகளையும் படிக்கும் வண்ணம்
நிறைய வசதிகளை தன்னகத்தே கொண்டிருந்தாலும்

விலை மட்டும்தான் எகிறலாய் இருக்கிறது.

Keelai Naadaan
13-09-2008, 04:33 PM
நல்ல தகவல்.
புத்தகங்கள் மடங்கும். கிழியும்.
இதுமாதிரி மிண்ணனு புத்தகம் நல்லது தான்.
ஆனாலும் அமரன் சுட்டிக்காட்டியுள்ளபடி தாள்களை புரட்டி படிக்கும் சுகமே தனி.

எதிர்காலத்தில் பள்ளிக்கூட சிறுவர்களுக்கு மிகவும் உதவிகரமாய் இருக்கும்.
சிறுபிள்ளைகள் புத்தக மூட்டையை தூக்கி செல்வதை பார்க்கும் போது மனம் சங்கட படுகிறது.

SathyaThirunavukkarasu
14-09-2008, 12:10 PM
எங்கு கிடைக்கும் என்று தெரிவித்தால் இன்னும் பயனுல்லதாக இருக்கும் தெரிந்தால் தெரிவிக்கவும்

saguni
14-09-2008, 08:49 PM
மிகச் சிறந்த தகவல் தந்த உங்களுக்கு மிக்க நன்றி நண்பரே! இதைத்தான் ரொம்ப நாள் எதிர்பார்த்திருந்தேன்

வசீகரன்
15-09-2008, 10:43 AM
செய்திகளையோ, அல்லது எழுத்துப் படைப்புக்களையோ, இணையத்தினூடாக இலகுவாகப் பெறக்கூடியதாகவும், வாசிக்கக்கூடியதாகவும் இருப்பினும்,
இன்றுவரை, பத்திரிகைகளும், நூல்களும் தமக்கெனத் தனித்துவமான ஓரிடத்தைத் தக்கவைத்துக் கொண்டுதான் உள்ளன.

சில, எவ்வளவுதான் நவீனமயப்படுத்தப்பட்டாலும்,
உண்மையானதன் இயல்பையும் திருப்தியையும் அனுபவிக்கமுடியாது.


உண்மைதான்... மென்பொருள் பிரச்சினை எல்லாம் வரும்..!

Narathar
15-09-2008, 11:02 AM
அருமையான தகவல்........
நம்மவர்களைவிட வாசிக்கும் பழக்கம்
அதிகம் உள்ளவர்கள் வெள்ளையைர்கள் ! நாராயணா!!!!!!!!

அதுபோல் புதிய தொழில் நுட்பங்களையும் வரிந்து வரவேற்பவர்கள்....
அவர்களுக்கு இக்கருவி சக்கரைப்பொங்கல்தான்

ஆனால்....
புத்தகங்களை வெளியிட்டு வருமானம் பார்ப்பவர்களுக்கு????

=======================================================


அதுவே வாசித்து அதை ஒலி வடிவில் சொல்லுமானால் இன்னும் நலம்...

-சோம்பலுடன் தீபன்.

வாழைப்பழத்தின் தோலை உரித்து..
வாயில் வேறு ஊட்டிவிட வேண்டுமாம் இவருக்கு......

நல்லா வருது வாயிலே...... ( வைகைப்புயல் ஸ்டைலில் படிக்கவும் ) நாராயணா!!!!

மயூ
16-09-2008, 06:18 AM
இதே போல அமேசன்.காம் காரர்களும் புது கருவியை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

தீபன்
16-09-2008, 10:39 AM
வாழைப்பழத்தின் தோலை உரித்து..
வாயில் வேறு ஊட்டிவிட வேண்டுமாம் இவருக்கு......

நல்லா வருது வாயிலே...... ( வைகைப்புயல் ஸ்டைலில் படிக்கவும் ) நாராயணா!!!!
ஹிஹிஹி... கொஞ்சக்காலத்தில அப்பிடி கருவியள் புழங்க தொடங்கேக்க, அறிவியல் வரவுகளை வரவேற்கணும்னு முன்னுக்கு நின்டு குரல்குடுக்க போறதும் நீங்கதான்...! நாராயணா...!

ரங்கராஜன்
22-10-2008, 03:20 PM
athu sare vellai sela aaeeram rupai aakum

Tamilanban67
12-12-2008, 09:01 AM
இது விற்பனைக்கு வந்துவிட்டதா ?