PDA

View Full Version : என் உயிர்மண்ணில்



kulirthazhal
12-09-2008, 05:52 PM
என் உயிர்மண்ணில்

இரைதேடி
தொலைந்த பறவை,
கூட்டினைத் தேடி
ஒர்
பயணம்,

துள்ளிக்குதிக்கும்
பேருந்தில்
நினைவுகளைத் தேடி
தவம்,

கூட்டினை ஏற்றிக்கொண்டு
என்
எண்ணங்களை
துரத்திக்கொண்டு
முயற்சியில் மூச்சிறைத்து
கருமூச்சி கக்கும்
பேருந்து.,

சிறகுகொண்ட வாகனமும்
துரத்தத்தான் முடியும்,
எண்ணச்சிறகுகளுக்கு
எத்தனை வலிமை.,

உரிமைகொண்ட உறவுகள்
அனைய வருவதாய்
நெருங்கிக்கடந்து தொலையும்
சாலையோர மரங்களே,
காலத்தின் சித்தாந்ததை
கற்றுக்கொடுத்தாயோ?

இதோ
என் மண்ணைத்தொட
நெருங்கும் நொடிகள்,
என்
நெஞ்சத்தை துண்டாக்கும்
ஜனன வலி என்னுள்.,
ஆம்
என் உயிர்மண்ணில்
புதிதாய் பிறப்பதாய்
நெஞ்சமெல்லாம்..,

என்
எண்ணங்களைத் தாண்டி
ஏதோஒரு இசை,
எட்டாவது சுரமாக
பிரபஞ்சம் கடந்த
ஓர்
புதிய கீர்த்தனம்..,

இதோ
காலங்களால்
அழிக்க இயலாத
என்
பாதச்சுவடுகள்,
கனாக்கண்ணில் தோன்றி
நினைவுகளைத் தோன்டும்
ஸ்பரிச காவியம்.,

பிறப்பின் ரகசியத்தை
மேலும் புதிராக்கும்
ஓர் பயணம்,

எதைத்தேடி தொலைகிறான்
பாசத்தை தொலைத்துவிட்டு.,

என்
மரணமேனும்
இந்த மண்ணிலே வேண்டும்,

உணர்வுகளுக்கு
சமாதானம்,
உள்ளத்திற்கு
திரை,
உயிருக்குள்
வலி,

இதோ
மீண்டும் ஓர் பயணம்,
எல்லை தாண்டி...

-குளிர்தழல்

இளசு
17-09-2008, 08:23 PM
பிறந்து வாழ்ந்து மடிந்தது எல்லாமே ஒரே ஊரில்..

இரண்டு தலைமுறை முன்னர் பலருக்கும் வாய்த்ததுதான்..

ஜீன்களில் புதைந்த பலயுகப் பாசப்பிணைப்பு..

பீறிடுவது வியப்பில்லை - பிறந்த மண்ணை நெருங்கும் இந்தத் தலைமுறைக்கு!

பாராட்டுகள் குளிர்தழல்!

பிச்சி
23-09-2008, 11:12 AM
ஆஹா. அருமை அண்ணா.

திரைகடல் ஓடி திரவியம் தேடினாலும்
சரியான தேடல் திரவியமல்ல என்று புரிய வைத்தீர்கள்.

அருமை அண்ணா

kulirthazhal
25-09-2008, 12:42 PM
நிகழ்வுகளை கவிதையாய் சொல்லி எளிமையாய் கவிதை பயின்றவருக்கு உணர்வுகளைப்பற்றி தெரிவதில்லை, புரிவதில்லை,.ரசித்ததற்கு நன்றி.
உமது கவிதையும் உணர்வுபூர்வமாக உள்ளது.
நன்றி!!!!!

shibly591
26-09-2008, 04:55 AM
அழகான கவிதை நண்பரே..

தொடரட்டும் உங்கள் கவிதை அவற்றிப்பணி..