PDA

View Full Version : எனது அன்புக்குரிய கணினியே...



mbchandar
11-09-2008, 06:16 PM
உன்னால் உலக நிகழ்வுகளை அறிந்து கொள்கிறேன்,
உன்னால் ஒவ்வொரு மாதமும் ஊதியம் பெருகிறேன்,
உன்னுடன் எப்பொழுதும் ஒட்டி உறவாடி வருகிறேன்,
உன்னுல் ஒலியும் ஒளியும் பார்த்து மகிழ்கிறேன்,
மனிதர்களிடம் உறவாடி பொழுதினை கழித்தநாட்கள் சென்று
உன்னுடன் பொழுதை கழிக்கின்றேன்,
நான் சொல்வதையெல்லாம் கேட்கிறாயே..
நீ என்ன, எனது அடிமையா?
உன் தயவு இல்லாமல் என்னால் எதுவும் செய்முடியவில்லையே,
அப்படியென்றால், நான் உனக்கு அடிமையாகிவிட்டேனா...?
உன்னை நான் திட்டினாலும் சரி, அடித்தாலும் சரி, கொஞ்சினாலும் சரி
எனக்காக உழைக்கின்றாயே...?
உனக்காக, மேலிருக்கும் வரிகளை சமர்பிக்கிறேன்!
எனது அன்புக்குரிய கணினியே...

ஓவியா
11-09-2008, 07:35 PM
நண்பரே தாங்கள் 130 அய்கேஸ் வைத்துள்ளீர்கள்,
அதை பயன்படுத்தி அப்படியே ஒரு பொன்னாடையையும் வாங்கி போர்த்தி விட்டீர்கள் என்றால் கணிணி இன்னும் ஆனந்தப்படும். :D:D

கணிணியுடன் நீண்ட நட்பு என்றும் தொடர வாழ்த்துக்கள்.

தீபன்
12-09-2008, 01:45 AM
முயற்சிக்கு பாராட்டுக்கள் நண்பரே.
நல்ல கரு இருக்கிறது... நடையை நளினமாக்கினால் சரி... தொடர்ந்து எழுதுங்கள்.

பிச்சி
26-09-2008, 02:16 PM
இப்பொழுதெல்லாம் கணிணி எனக்கு சமயங்களில் காதலன். சமயங்களில் விரோதி, கெஞ்சலும் கொஞ்சலும் எரிச்சலுமாய் போகிறது. சூப்பார்ப் அண்ணா