PDA

View Full Version : அமீரகத்தில் பூகம்பம்



அன்புரசிகன்
10-09-2008, 01:16 PM
இன்று ஐக்கிய அரபு இராச்சிய நேரப்படி மாலை முன்று மணியளவில் 6.2 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. பேர் துபாய் மற்றும் துபாயின் அதிவேக வீதியாக கருதப்படும் ஷேக் ஷயட் வீதியிலும் இது உணரப்பட்டதாக கூறுகிறார்கள். வானளாவிய கட்டடங்களில் இருந்தவர்கள் உடனடியாக வெளியே அழைக்கப்பட்டிருந்தனர். மேலதிக செய்திக்கு இங்கே (http://www.arabianbusiness.com/530622-thousands-evacuated-as-earthquake-hits-dubai?ln=en) செல்லுங்கள்...

துபாயில் அதிகமான கட்டடங்கள் வானை நோக்கிவளர்ந்துகொண்டிருக்கிறது. பேர்ஜ் துபாய் கட்டடம் இன்னும் முடியவில்லை. அதனுள் அதிர்ச்சியை வழங்கியிருக்கிறாள் இயற்கை பூமித்தாய்....

தீபா
10-09-2008, 01:23 PM
யாருக்கும் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படவில்லையே!!! அதுவரையிலும் சந்தோசமே!!

அறிஞர்
10-09-2008, 01:59 PM
நம் மக்கள் பலர் அங்கு இருக்கிறார்களே.. எல்லாரும் சவுகரியம்தானே...

அன்புரசிகன்
10-09-2008, 02:04 PM
சேதவிபரங்கள் தெரியவில்லை. தவிர ஷேக் ஷஜட் வீதியோரத்தில் இருப்பவை அனைத்தும் வானுயர்ந்த கட்டடங்கள். கிட்டத்தட்ட மதில்கள் வைத்தவை போன்றது...

சற்று பொறுத்திருந்து பார்ப்போம்.. அப்போது தான் சேதவிபரங்கள் தெரியவரும்.

ஓவியன்
10-09-2008, 02:11 PM
ரம்ழான் மாதமென்பதனால் வானுயர்ந்த கட்டட அலுவலகங்களில் மக்கள் குறைவாகவே இருந்திருப்பர்...

அதனால் பெரிதாக சேதங்கள் ஏதும் ஏற்பட்டிராது என்பது என் கணிப்பு....

எதற்கும் பொறுத்திருந்து பார்ப்போம்......

ஓவியா
10-09-2008, 02:12 PM
வருத்தங்கள். இயற்கையை மிஞ்ச யாரால் முடியும்.

தகவலுக்கு நன்றி அன்பு.

அன்புரசிகன்
10-09-2008, 02:16 PM
GULF NEWS இணையத்தில் வெளியாகிய செய்தி இங்கே.. (http://www.gulfnews.com/nation/Environment/10243956.html).

இதன் படி ஐக்கியஅரபு இராச்சியத்தின் அநேக பகுதியில் உணரப்பட்டிருக்கிறது.

அபுதாபி ஷார்ஜா மற்றும் துபாயின் ஒரு பிரபல நகரம் டெய்ரா மற்றும் பேர்துபாய்......

ஓவியன்
10-09-2008, 02:47 PM
அமீரக நண்பரொருவருடன் பேசினேன்....

அங்கு வீதிகளில் இப்போது இயல்பு நிலை நிலவுவதாகக் கூறினார்....

எல்லோரும் பெரிய கட்டடங்களில் இருந்து இறங்கி பாதுகாப்பு இடங்களை நாடியததைத் தவிர பெரிய அசம்பாவிதங்கள் ஏதும் நடக்கவில்லையென்பது அவரது கூற்று...

எது எப்படியோ, நாம் கொஞ்சம் ஆறுதலாக இருக்கலாம்...

மதி
10-09-2008, 03:17 PM
மன்ற உறவுகளின் நலம் தெரிந்தால் நல்லது.