PDA

View Full Version : பெருமை (குட்டிக்கதை)



ஐரேனிபுரம் பால்ராசய்யா
10-09-2008, 01:00 PM
துணி வியாபாரம் செய்யும் எனது நண்பனின் கடைக்குச் சென்றிருந்தேன். சூரத்திலிருந்து வந்திருந்த விற்பனை பிரதிநிதி ஒருவர் என் நண்பரிடம் பேசிக்கொண்டிருந்தார். இந்தி தெரிந்த அவர் தமிழை அரையும் குறையுமாக பேசியது என்க்கு சலிப்பை ஏற்படுத்தியது.

என் நண்பனுக்கு இந்தியில் சரளமாக பேச வரும், இருந்தாலும் அவருடன் தமிழிலேயே பேசினான். ஒரு வழியாக தனது வியாபாரத்தை முடித்துக்கொண்டு அவர் வெளியேறியதும் என் நண்பனிடம் மெல்ல கேட்டேன்.

“ உனக்குததான் இந்தி நல்லா பேச வருமே பிறகு ஏன் இந்தியுல பேசல!”

மெல்லிய புன்னகை ஒன்றை நழுவ விட்டு சொன்னான்.

“ வட நாட்டுலயிருந்து இங்க வந்து தமிழ் மொழிய கத்துகிட்டு நம்ம கிட்ட பேசுறப்போ நான் இந்தியுல பேசியிருந்தா தமிழ் மொழிய இன்னும் கத்துக்கணுங்கற ஆர்வத்த விட்டுடுவார், தொடர்ந்து இப்பிடி பேசினா இன்னும் கொஞ்ச நாள்ல தெளிவா பேச ஆரம்பிப்பார்., நம்ம தாய் மொழிய வட நாட்டுக்காரங்க பேசுறது நமக்கு பெருமை தானே!” என்ற்போது என் நண்பனைப் பார்க்க எனக்கு பெருமையாக இருந்தது

மதி
10-09-2008, 01:08 PM
அட இது நல்லாருக்கே.. இதை நான் உணர்ந்தும் இருக்கிறேன். கன்னடம் கத்துக்கலாம்னு தட்டுத் தடுமாறி ஏதாச்சும் கேட்டா அழகா தமிழிலேயே பதில் சொல்லுவாங்க ஏன்டா இவன் கன்னடத்தை கொலை பண்ணனும்னு.

தீபா
10-09-2008, 01:17 PM
ஹாஹா!!! அருமையான அறிவுரைக் கதை... சிறப்பாக இருக்கிறது.

அறிஞர்
10-09-2008, 02:01 PM
வியாபாரத்துக்காக தமிழ் கற்று பேசும் அவர்களை மெச்ச வேண்டும்...

mukilan
10-09-2008, 02:31 PM
குட்டிக்கதை பால்ராசய்யா என்று அழைக்கலாமா?

சின்ன சின்ன விசயங்களில் பெரிய பாடங்கள் கற்றுத்தரும் முத்துக் கதைகள். இவை அனைத்தையும் நீங்கள் சொல்வது போலவே எழுதி இருப்பதால், இது புனைவல்ல என்று நினைக்கிறேன். உலகத்தை கூர்ந்து கவனித்து வருகிறீர்கள். சின்ன விசயங்கள் சொல்லும் பாடம் ஆச்சர்யமாக இருக்கிறது. அருமையான குட்டிக்கதைக்கு நன்றி.

பென்ஸ்
11-09-2008, 12:25 AM
அருமையாக கருத்து பால் ராசையா...

உண்மை சம்பவம் போல இருக்கிறதே...

இதை நீதிகதைகள் பகுதிக்கு மாற்றுகிறேன்.

வாழ்த்துகள்...

ஓவியா
11-09-2008, 12:45 AM
“ வட நாட்டுலயிருந்து இங்க வந்து தமிழ் மொழிய கத்துகிட்டு நம்ம கிட்ட பேசுறப்போ நான் இந்தியுல பேசியிருந்தா தமிழ் மொழிய இன்னும் கத்துக்கணுங்கற ஆர்வத்த விட்டுடுவார், தொடர்ந்து இப்பிடி பேசினா இன்னும் கொஞ்ச நாள்ல தெளிவா பேச ஆரம்பிப்பார்., நம்ம தாய் மொழிய வட நாட்டுக்காரங்க பேசுறது நமக்கு பெருமை தானே!” என்ற்போது என் நண்பனைப் பார்க்க எனக்கு பெருமையாக இருந்தது

அருமையான பதிவு, நன்றிகள்.

பல அரிய குட்டிகதைகள் படைத்து மேலும் சிறப்புற என் வாழ்த்துக்கள்.


**********************************************************
ஓ ஒரு இந்தியாவே இப்படிதானா!!!! :D:D

இப்படிதான் வடக்கு மக்களும் தெற்க்கு மக்கள் இந்தி மொழியிலே நம்மிடம் பேசட்டும் என்று எண்ணியிருப்பார்கள் போலும். :eek::eek:

எனக்கு இந்தி தெரியாமல் போக, வடக்கு மக்களுக்கு ஆங்கிலம் மற்றும் தமிழ் இரண்டுமே தெரியாமல் போக, டெல்லியிலும் வாரனாசியிலும் நான் பட்டபாடு இருக்கே!!!! கோவிந்தா கோவிந்தா..

மயூ
11-09-2008, 06:48 AM
சிங்கள பஸ் வண்டி நடத்துனர் போன்றோர் தமது மொழியை விட்டுக்கொடுக்காமல் பேசுவதைக்கேட்டிருக்கின்றேன்.

அதன் காரணமாகத்தான் அவர்கள் மொழியை நாம் கற்றுக்கொண்டுள்ளோம்.

poornima
11-09-2008, 08:07 AM
கால் நிமிட கதைகள் என தனித் திரி தொடங்கி தாருங்கள் ஐ.பா.ராசைய்யா

இவ்வகை கதைகள் உங்களுக்கு சரளமாக வருகிறது பாராட்டுகள்

அமரன்
11-09-2008, 08:12 AM
அட.. ஆமா..
சரியாகத்தான் சொல்லி இருக்கீங்க..

தங்கவேல்
12-09-2008, 04:32 AM
வியாபாரம் சம்பந்தமாக நான் நான்கு முறை டெல்லி சென்று வந்திருக்கிறேன். அங்கு தமிழ் தெரிந்தும் ஹிந்தியிலேயே பேசுவார்கள். எரிச்சலாக இருக்கும். ஆனால் இந்தப் பதிவைப் படித்ததும் இப்படி ஒரு உள் நோக்கம் இருக்குமென்பது தெரியவந்துள்ளது. நன்றி சகோதரா...

ஐரேனிபுரம் பால்ராசய்யா
05-11-2008, 03:48 AM
இனிய தமிழ் இதயங்களுக்கு

மன்றத்தில் பதிந்திருந்த இந்த கதை இந்த வார குங்குமம் 14.11.08 வார இதழில் வெளிவந்துள்ளது என்பதை மிகவும் தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த கதையை பாராட்டிய அனைத்து நல்ல இதயங்களுக்கும் என் நன்றி.

SivaS
25-12-2008, 02:47 AM
தேன் மதுர தமிழோசை தேசமெங்கும் பரவும் வகை செய்வதில் இதுவும் ஒருவகை தானோ:icon_b:

சிந்தனையை தூண்டும் ஒரு விடயம்:)

ஓவியன்
28-12-2008, 12:57 PM
நாமெல்லாம் நம் தேவைகளுக்காகத்தானே ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளைக் கற்று வருகிறோம், மற்றைய மொழிகளைப் பேசுபவர்கள் நம் மொழி தேவைப்படின் நிச்சயமாகக் கற்றுக் கொள்வார்கள்...

சில வரிகள்தான், ஆனால் எத்தனை பெரிய உண்மைகளை உள்ளடக்கிய பதிவிது..!!

மனதாரப் பாராட்டுகிறேன், பால்ராசையா அவர்களே..!!

நிரன்
28-12-2008, 07:55 PM
ஒரு சிறு கதையில் பெரும் விடயத்தையே அடக்கி வைத்திருக்கிறீங்க
மிகவும் அருமையான சிறிதிலும் சிறிய கதை...:)

வாழ்த்துக்கள் :icon_b: