PDA

View Full Version : ஒயிலரங்கம்பிச்சி
09-09-2008, 11:05 AM
நீர்க்குமிழ்கள் வெடித்து தெறித்த
துளிகளாக கண்களை சிமிட்டுகிறது
இரவைச் சிலுப்பிய பகல்.
ஒயிலரங்க மேடைக்கு
ஒளிவித்து.

மழை உசுப்பிய மணத்திற்கும்
முதிர் மறைத்த விழிகளுக்குமிடையே
கங்கணம் கட்டுகிறது மின்னல்
கூரை அலங்காரி.

நுரை சலத்த நீரும்
அகில் மண்டிய வானும்
ஒயிலரங்க மேடைகள்

அந்தி பொழிந்த வர்ணச்சுடரால்
நாடக நொடிகள் பிறழ்ந்து போவதில்லை
கொடியறுந்திடா இளம்பிஞ்சின்
மொழியே போல.

ஆங்காங்கே தொடர்மழையாய்
நாடகம் நடந்துகொண்டிருக்க,

ஒருவருமில்லாமல்
காட்சிகள் நகர்த்திக்
கொண்டிருக்கிறது
ஒயிலரங்கம்.

தீபன்
12-09-2008, 01:51 AM
பிச்சி நீண்ட நாளின்பின் பிச்சுப் போட்ட கவிப்பூ...
எனக்குத்தான் புரிய மாட்டேங்குது... தலையை பிச்சிக்க வைக்குது...
யாராவது புண்ணியவான் பொருள் சொன்னாங்கன்ன என்னமாதிரி கத்துகுட்டியளுக்கு உபகாரமா போகும்...

kulirthazhal
13-09-2008, 02:15 AM
சிறப்பு நண்பரே,

தனிமையும் கவிதைதான், அழகுதான், புரியவில்லை என்று வரும் பதில்களுக்காக பயந்து போகாதே, பதுங்கிக்கொள்ளாதே. நீ நினைப்பதை பேசு, நீயும் சுதேசிதான். உள்ளத்திற்கும் உலகிற்கும் இனைப்பினைத் தராமல்போனால் கவிதைகள் ஏன் உலகிற்கு,
எழுத்துக்களே போதுமே...

இளசு
14-09-2008, 10:35 PM
தலைப்புக்குத் தனியே முதல் பாராட்டு!

நேரடி பொருளில், மழைவானின் காட்சியைப் பார்க்க மட்டுமே இயலுகிறது என்னால்..

விளங்கியவரை - சொல் புதிது, அது தரும் சுகக்காட்சி அனுபவம் புதிதாய்..

பாராட்டுகள் பிச்சி!

shibly591
23-09-2008, 12:03 AM
நுரை சலத்த நீரும்
அகில் மண்டிய வானும்
ஒயிலரங்க மேடைகள்

ஆங்காங்கே தொடர்மழையாய்
நாடகம் நடந்துகொண்டிருக்க,

ஒருவருமில்லாமல்
காட்சிகள் நகர்த்திக்
கொண்டிருக்கிறது
ஒயிலரங்கம்.

பிச்சு உதறிட்டீங்க...

வாழ்த்துக்கள்..

பிச்சி
23-09-2008, 10:02 AM
அனைவருக்கும்... மன்னிக்கவேண்டும்

பிச்சி
23-09-2008, 10:02 AM
இந்த மாபெரும் உலகத்தின் இயற்கை எழிலை ஒருவரும் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள் என்ற அர்த்தத்தில் எழுதினேன்.

shibly591
23-09-2008, 10:12 AM
அனைவருக்கும்... மன்னிக்கவேண்டும்

எதற்கு மன்னிப்பு ..

புரியவில்லையே??????????????

பிச்சி
23-09-2008, 10:14 AM
தவறாக எழுதிவிட்டேனோ என்று வருந்துகிறேன். அதனால்தான்

நன்றி அண்ணாக்களே! :)

தீபன்
23-09-2008, 10:39 AM
புரிந்துகொள்ள முடியவில்லை என்பதற்காய் தவறாய் எழுதிவிட்டேனோ என எண்ணதீர்கள். புரிந்து கொள்ள முடியாததிற்கு நீங்கள் மட்டும் காரணமாயமைய வேண்டியதில்லை. இப்படியான கவிதைகள் விடையத்தில் எனது தகமை அவ்வளவுதான். அதனால்தான் அதை புரிந்துகொள்ள விளக்கம் கேட்டேன்...
நீங்க என்னடான்னா உங்களுக்கும் புரியாத மாதிரி மன்னிப்பு கேட்கிறீங்க....!

சிவா.ஜி
23-09-2008, 10:50 AM
மனதை சொக்க வைத்த கவிதை. கூடவே மெல்லிய சோகத்தைக் காட்டிச்சென்ற இறுதிவரிகள்.

இயற்கை அழகின் பரந்துபட்ட காட்சி சித்திரங்களை கண்டுகொள்ளாமல் நகரும் எந்திரன்களாய் மக்கள். சற்றே நின்று துளியேத்துளி விழி விரித்து நோக்கினால்.....உலகம் எத்தனை அழகு.

பிச்சியின் சொக்க வைக்கும் கவிதைக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்+பாராட்டுக்கள். தங்காய்....அருமையான கவிதை தந்தாய்.

பிச்சி
23-09-2008, 10:55 AM
மிக்க நன்றி சிவாஜி அண்ணா.

தீபன் அண்ணா, இனிமேல் இந்த தவறு நிகழாமல் இருக்கும். :)

shibly591
23-09-2008, 11:01 AM
தவறாக எழுதிவிட்டேனோ என்று வருந்துகிறேன். அதனால்தான்

நன்றி அண்ணாக்களே! :)

ஒரு முழுமையான படைப்பாளிக்கேயுரிய பக்குவம் உங்களிடம் இருப்பதை உணர முடிகிறது பிச்சி..

அதற்காக தீபன் சொல்வதைப்போல விளங்கவில்லை என்பதன் பொருள் உங்கள் படைப்பு தவறு என்பதல்ல..எங்கள் அறிவு அவ்வளவே என்பதே..

நீங்கள் உங்கள் வழியில் படைப்புக்களை தாருங்கள்..விமர்சனங்களுக்காக எழதுவதை விடுத்து உங்களுக்காக எழுதுங்கள்...

விமர்சனங்கள் என்பது உங்னளை பட்டை தீட்டும் ஒரு ஆயுதமே அன்றி உங்களை அடையாளமிழக்கச்செய்யும் ஆயுதஙகள் அல்ல..

இதற்காக மன்னிப்பெல்லாம் தேவையில்லை..இதுபோன்ற புதுமையான படைப்பக்களை உங்களிடம் இருந்து நிறைய எதிர்பார்க்கிறோம்..

தொடர வாழ்த்துக்கள்..

தீபன்
23-09-2008, 11:02 AM
தீபன் அண்ணா, இனிமேல் இந்த தவறு நிகழாமல் இருக்கும். :)

எந்த தவறு...? இங்கு எதுவுமே தவறில்லையே..... சரி சரி... இப்ப எனக்கும் கொஞ்சம் கொஞ்சமா புரியுது. புரிந்துகொண்டு இளசு அண்ணா, சிவாண்ணா போன்றோர் பதியும் பின்னூட்டங்களின் உதவியுடன் நானும் புரிந்துகொண்டேன்...
தொடர்ந்து உங்கள் தரத்தை குறைக்காமல் கவி படைக்க வாழ்த்துக்கள்.

பிச்சி
23-09-2008, 11:06 AM
மிக்க நன்றி தீபன் அண்ணா, ஷிப்ளி அண்ணா.
எனது நடையிலேயே நான் தொடர்வேன்.
தெளிவுரைக்கு மிக்க நன்றி...