PDA

View Full Version : இந்தப்பகுதியின் நோக்கமும் வரைமுறைகளும்.



அமரன்
08-09-2008, 05:44 PM
இனியவர்களே!

உலகின் அத்தியாவசியப் பொருளாக கைபேசி ஆகிவிட்டது. தமிழில் கைப்பேசி தகவல்கள் என்பதுக்கு அமைவாக இந்தப்பகுதி உருவாக்கப்பட்டுள்ளது. மன்றத்தின் தூய்மையும் நோக்கமும் சிதைவுறாமல் இருக்க மன்றத்தின் விதிகளுடன் (http://www.tamilmantram.com/vb/announcement.php?f=39)பின்வரும் வரைமுறைகளையும் கடைப்பிடியுங்கள்..

வரைமுறைகள் :

1.எக்காரணம் கொண்டும் பதிவுகளில்/படங்களில் ஆபாசத்தை கலக்காதீர்கள்.

2.வேற்றுத் தளத்திலிருந்து அப்படியே இறக்குமதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது.

3.ஆங்கிலத்தில் இருக்கும் தகவல்களை தமிழ்ப்படுத்தித்தர அனுமதி உள்ளது.

4.அப்படித் தரும்போது மூலத்துக்கு நன்றி சொல்லுதல் கட்டாயமாக்கட்டுள்ளது.

5.கைப்பேசி தொடர்பான இணையச்சுட்டிகளை மட்டும் கொடுக்க விரும்பின் இங்கே (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=17513) சென்று கொடுங்கள்

6.விதிகளுக்கும் வரைமுறைகளுக்கும் அடங்காத மோசமான பதிவுகள் அறிவித்தல் இன்றி அகற்றப்படும்.

உங்கள் ஒத்துழைப்புக் நன்றி.

-தமிழ்மன்ற நிர்வாகம்

Narathar
08-09-2008, 06:10 PM
காலத்தின் தேவையுணர்ந்து மன்றத்தின் நிர்வாகிகள் எடுத்த முடிவை வரவேற்கின்றேன்.....

இப்பகுதி பலருக்கு பயனுள்ளதாக அமைய வாழ்த்துகின்றேன்.. அத்தோடு அனைவரையும் விதி முறைக்கு கட்டுப்பட்டு நடக்குமாறு அன்போடு வேண்டிக்கொள்கின்றேன்

தீபன்
09-09-2008, 07:31 AM
வாழ்த்துக்கள் புதிய பகுதிக்கு... தமிழ் மன்றத்தில் மொபைல் உலகமென்னும் தலைப்பை வைக்காமல் தமிழிலேயே சிறந்த பெயராக தலைப்பிட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
கவனிப்பீர்களாக...

Narathar
09-09-2008, 09:07 AM
தமிழிலேயே சிறந்த பெயராக தலைப்பிட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
கவனிப்பீர்களாக...

நம்மவர்களையே நல்ல பெயர்களாக முன்மொழியச்சொன்னால் போயிற்று....

நீங்களே ஒரு நல்ல பெயரை பிரேரிக்கலாமே??

தீபன்
09-09-2008, 03:47 PM
நன்றி நாரதரே...

மொபைல் எனப்படும் அலைபேசிக்கு மட்டுமான பகுதியாக இதை வரையறுக்காமல் தொலைபேசி என்ற அளவுக்கு விரிவாக்கினால் நல்லதென நினைக்கிறேன். ஏனெனில், இப்போதெல்லாம், அலைபேசி, நிலையான தொலைபேசி இரண்டும் சம்பந்தப்பட்ட செய்திகளும் இங்கு பதியப்பட வேண்டி வரலாம்.

அப்படி விரிவாக்கினால், தொலைபேசி உலகம், தொலைபேசி வலையம், தொலைத்தொடர்பு வளாகம் இப்படி ஏதும் பெயரிடலாம்.
இல்லை, அலைபேசி விடயங்கள் மட்டுமே முன்னெடுக்கப்படுமாயின், அலைபேசி வலையம் என பெயரிடலாம். சரியான தமிழ் பதங்கள் தெரிந்தவர்கள் உதவலாமே...!

தீபன்
18-09-2008, 05:50 AM
பெயர் மாற்றம்பற்றி ஏனையவர்கள் கருத்தை காணவில்லையே....

நாஞ்சில் த.க.ஜெய்
17-11-2010, 11:04 AM
காலத்திற்கு ஏற்றவாறு பதிவுகளில் ஏற்படும் மாற்றம் வரவேற்க்கதக்கது.இந்த த்ரி மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.
என்றும் அன்புடன்
த.க.ஜெய்