PDA

View Full Version : கொஞ்சம் கொஞ்சேன்...



மலர்விழி
08-09-2008, 12:52 PM
(எழுதியவரின் பெயர் ஞாபகம் இல்லை, அழகான கவிதை...
அதன் நயம், சொல் விளையாடல்...ரசிக்க செய்யும், நம்மை நமக்குள் சிரிக்கவும் செய்யும்!)

கொஞ்சம் கொஞ்சேன்...

கொஞ்சம் பேசிவிடேன்
என்னிடம்..
கோபத்திலும் நீ அழகாக
இருக்கிறாய் என்ற பொய்யை
எத்தனைமுறைதான்
சொல்வது
செல்லக் குரங்கே..??

நான் நல்லா இருக்கிறேனா
இல்லை என் சுடிதார் நல்லா இருக்கா
எனக் கேட்கிறாய்..
இரண்டுபேருமே
சேர்ந்திருந்தாலும் அழகுதான்
சேராமலிருந்தாலும் அழகுதான்
எனச் சொன்னால் ஏண்டி
அடிக்க வருகிறாய் ...??

என்னிடம் உனக்கு
என்ன பிடிக்கும் என
நீ தானே கேட்டாய்...??
சொல்லவா இல்லைக்
காட்டவா எனச்
சொன்னதற்குப் போய்
இப்படிக் கிள்ளுகிறாயே
ராட்சசி...

ஹய்யோ உன்னைப் போய்
எந்த லூசுடா காதலிப்பா...
எனக் கேட்கிறாய்
நீ என்னவோ
பெரிய அறிவாளி
என நினைத்துக்கொண்டு...

ஒரேயொரு முத்தம்
கொடுடி என
இனியும் உன்னைக்
கெஞ்சிக்கொண்டிருக்கம ாட்டேன்..
தேவையில்லாமல் என்னைத்
திருடனாக்காதே...

உன்னைக் கெஞ்சக் கெஞ்ச
ரொம்பத்தான்
மிஞ்சுகிறாய் நீ..
என்னடா
நினைத்துக்கொண்டிருக் கிறாய்
எனக்கோபமாகக் கேட்கிறாய்
உன்னைத்தான் என்ற
உண்மை உணராமல்...

என்னை விட்டுத்தொலையேன்
என நீ கோபமாகச்
சொல்லிச்சென்றால் எப்படி..?
விட்டுத்தான் தொலைத்துவிட்டேன்
என்னை உன்னிடம்...

உன்னைக்
காதலித்ததால்தான்
நான் கவிதை
எழுதிக்கொண்டிருப்பதா ய்
என எல்லோரும்
சொல்கிறார்கள்...
நான் காதலிப்பதே
ஒரு கவிதையைதான்
என உணராத
அற்ப மானிடர்...

என்னைவிட உன்னை
இப்படி இறுக்கிப்
பிடித்திருக்கும் உன்
உடைமீது கூட
இப்பொழுதெல்லாம்
பொறாமை வருகிறது
தெரியுமா...?

நீ ஒன்றும் பெரிய
அழகியெல்லாம் இல்லை
ஏதோ நான் காதலிப்பதால்
பேரழகியாகத்தெரிகிறாய ்
என உண்மையை சொன்னால்
ஏண்டி இப்படி முறைக்கிறாய்..?

உன்னை வர்ணித்து
எல்லாம் கவிதை
எழுதமுடியாதடி....
நாம் மட்டுமே
ரசிக்கும் கவிதை நீ...

:icon_rollout:ம் ம் ம் எப்படி???

தீபா
08-09-2008, 03:06 PM
காதலுக்குரிய சீண்டல் கவிதை. பாராட்டுக்கள்

ஓவியன்
08-09-2008, 03:16 PM
எழுதியவரின் பெயர் ஞாபகம் இல்லை

நவீன் ப்ரகாஷ் (http://naveenprakash.blogspot.com/2008/07/blog-post.html)என்பவரின் இணையப் பக்கமொன்றில் இந்தக் கவிதையை நானும் கண்டேன்...

நல்லதொரு கவிதைப் பகிர்வுக்கு நன்றி மலர் விழி..!! :)

பிச்சி
08-09-2008, 03:26 PM
ரசிக்கும்படி இருக்கிறது,. பகிர்ந்தமைக்கு நன்றி தோழி.

பென்ஸ்
09-09-2008, 01:04 AM
ஒப்பிட்டு பார்த்தல்....
நம்மை நிறுத்தி பார்த்தல்...

என்று பல வகையாக காதல் கவிதைகளை வாசித்து அதை ரசிக்கும் போது.. அந்த சுகம் தனிதான்...
அதையும் இந்த வகை எளிய கவிதைகள் இனிமையாக்குகிறது...

பகிர்தலுக்கு நன்றி மலர்விழி...

poornima
09-09-2008, 08:20 AM
சீண்டலும் செல்லக் கோபமும் பொங்கி வழிகிறது கவிதையில்..
நன்றி மலர்விழி இங்கு தந்தமைக்கு..

தொடர்புடைய ஒரு உரையாடல் படித்தேன் கிடைத்த ஒரு பழைய ஜூனியர் விகடனில்..

பூங்கா மறைவில் காதலன் - காதலி..

காதலன் : ம்
காதலி : ம்ஹும்
காதலன் : ம் ம்
காதலி : ம்ஹும் ம்ஹும்
காதலி : அடச்சீ..சீக்கிரம் ஒரு முத்தம் கொடு..போற வாரவன்லாம் நாமோ ஏதோ
ஊமைங்கன்னு நினைக்கப் போறான்..

பென்ஸ்
09-09-2008, 03:03 PM
தொடர்புடைய ஒரு உரையாடல் படித்தேன் கிடைத்த ஒரு பழைய ஜூனியர் விகடனில்..

பூங்கா மறைவில் காதலன் - காதலி...

"டயலாக்.." என்று வரும் இந்த மாதிரி காமெடிகளை தேடி முதலில் படிப்பேன்...
என்னதான் இருந்தாலும் அடுத்தவங்க கதை கேட்பது நம்ம எல்லோருக்கும் அல்வா சாப்பிடுவது மாதிரிதானே...

(ஆமா.. உங்க கதையை சொல்லவேயில்ல...!!!!:D:D)

தீபன்
09-09-2008, 04:45 PM
என்ன இங்க ஒரே றொமான்சா இருக்கே... ம்ம்ம்ம்... நடக்கட்டும் நடக்கட்டும்...

poornima
10-09-2008, 06:54 AM
"டயலாக்.." என்று வரும் இந்த மாதிரி காமெடிகளை தேடி முதலில் படிப்பேன்...
என்னதான் இருந்தாலும் அடுத்தவங்க கதை கேட்பது நம்ம எல்லோருக்கும் அல்வா சாப்பிடுவது மாதிரிதானே...

(ஆமா.. உங்க கதையை சொல்லவேயில்ல...!!!!:D:D)

கெடைச்ச கேப்ல நம்மையே கிண்டி கெழங்கு எடுக்குறீங்களே பென்ஸ்.. :-)

arun
13-09-2008, 11:07 AM
சூப்பர் கவிதை பகிர்வுக்கு நன்றி

sakthim
14-09-2008, 04:29 AM
வாவ் அருமையான கவிதை,

மிகவும் ரசித்து வாசித்தேன்.

நன்றி.

kulirthazhal
17-09-2008, 09:46 AM
நல்லதொரு கவிதை, "நன்றி"

காதலியை காதலிப்பதைப்போல் கவிதையை காதலிக்கும் சுகமும் இனிமைதான், கவிதையை தேடிப்படிப்பவன் நிச்சயம் காதலியை அதிகம் நேசிப்பான்.

shibly591
17-09-2008, 10:12 AM
ரசனை மிகு பதிவு...

பகிர்தலுக்கு நன்றி