PDA

View Full Version : மைக்ரோ வேவ் அவன்மதி
08-09-2008, 09:22 AM
இந்த சம்பவம் என்னுடன் அலுவலகத்தில் பணி புரியும் நண்பர் சொன்னது. சொன்னதும் விழுந்து விழுந்து சிரித்தேன்.

சில வாரங்களுக்கு முன் எங்க டீம் மதிய உணவுக்காக கேஃபிடேரியா (உணவகம்) போயிருக்காங்க. அங்க ஒரு மைக்ரோவேவ் 'அவன்' இருக்கும். வீட்டிலிருந்து கொண்டு வரும் உணவை சூடுபடுத்தி சாப்பிடுவதற்காக. அப்போது தான் புதிதாய் சேர்ந்திருப்பார் போலும் ஒரு நபர். அந்த 'அவனை' நோக்கி வேக வேகமாக வந்திருக்கிறார். கையில் ஒரு ஹாட் பேக். (டிபன் பாக்ஸ்).

என் நண்பரோ அந்த அவன் பக்கத்தில் தான் உட்கார்ந்திருக்கிறார். அவரது அவசரத்தைப் பார்த்ததும் அவரை கவனிக்கலானார். வேக வேகமாக வந்தவர் அந்த ஹாட் பேக்கை (ஏற்கனவே ஹாட் பேக் உணவை சூடாக வைப்பதற்கே) திறந்து அதிலிருந்த டிபன் கேரியரை எடுத்துள்ளார். எல்லாம் அலுமினியத்தால் ஆனது போல. அதை 'அவனு'க்குள் வைத்துள்ளார். என் நண்பர் அவரிடம் சென்று அலுமினிய பாத்திரங்களை 'அவனு'க்குள் வைக்கக்கூடாதென்றும் பிளாஸ்டிக்கோ இல்லை 'அவன'அபிள் பொருட்களையோ தான் வைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். என் நண்பரை அந்த நபர் வித்தியாசமாய் பார்த்துள்ளார். இதற்கிடையில் நிர்வாகம் சம்பந்தப்பட்ட நபர் அந்த இடத்தைக் கடக்கையில் இதை கவனித்து என் நண்பர் கூறியதையே மறுமொழிந்திருக்கிறார்.

இதையெல்லாம் கேட்ட அந்த நபர் சற்று நேரம் யோசித்திருக்கிறார். பின்பு............
வேக வேகமாக எல்லா பாத்திரத்தையும் எடுத்து ஹாட் பேக்குள் வைத்து.....

ஹாட் பேக்கையே அவனுள் வைத்து விட்டார். ஹாட் பேக் பிளாஸ்டிக்கினால் ஆனது.

இதைக் கேட்டதும் வயிறு வலிக்க சிரித்ததால் மைக்ரோவேவ் அவனிற்கு என்ன ஆனது என்று கேட்க மறந்துவிட்டேன்.

தீபன்
08-09-2008, 09:31 AM
சிரிக்காதிங்கப்பா... நுண்ணலை அடுப்பு பத்தி இன்னும் நிறையபேருக்கு விளக்கமில்லை. படித்த பல வல்லுனர்களுக்கு அடுப்பு மூட்டவே சரியா தெரியாது... ஆனா, அத பாத்து யாராவது சிரிக்கிறோமா... பிறகேன், இதில மட்டும் சிரிப்பு வருது...!?

மதி
08-09-2008, 09:48 AM
தீபன் அண்ணே...
சிரித்தது அவரது அறியாமையை நினைத்து அல்ல. அவரது சமயோசித அறிவை நினைத்து... :)

ப்ளாஸ்டிக் பொருட்களை வைக்கலாம் என்று என் நண்பர் சொன்னதைக் கேட்டு ஹாட் பேக்கையே வைக்கலாம் என்று அவருக்கு தோன்றியதே அதை நினைத்து. இதற்குத் தான் அரைகுறையாக எதையும் யாருக்கும் சொல்லித் தரக்கூடாது என்று நண்பருக்கு சொன்னோம். :)

தீபா
08-09-2008, 10:12 AM
நானும் ரொம்ப நேரமா இடை்ில கேப் விட்ட பகுதியில ஏதாவது இமேஜ் திறக்கும்னு நெனச்சேன்...

ரசிக்க வைக்கும் ஒரு பதிவு,.. :) - -

மதி
08-09-2008, 10:35 AM
நானும் ரொம்ப நேரமா இடை்ில கேப் விட்ட பகுதியில ஏதாவது இமேஜ் திறக்கும்னு நெனச்சேன்...

ரசிக்க வைக்கும் ஒரு பதிவு,.. :) - -

அதற்குத் தானே இடைவெளியே விட்டோம்.

நதி
08-09-2008, 12:13 PM
கேப் விட்டு சிரிக்க வெச்சிருக்கீங்க. ஹாட் பாக்ஸ் சாப்பாட்டை அவனில் வைத்தானா ???? அவனுக்கு என்னங்க ஆச்சு.

மதி
08-09-2008, 01:26 PM
கேப் விட்டு சிரிக்க வெச்சிருக்கீங்க. ஹாட் பாக்ஸ் சாப்பாட்டை அவனில் வைத்தானா ???? அவனுக்கு என்னங்க ஆச்சு.

சத்தியமா தெரியாது.... :eek::eek::eek:
வைத்ததோட சரி.. அவனை தடுத்துட்டாங்கன்னு நினைக்கறேன். நானும் கேட்டுக்கல. என் நண்பரும் சொல்லல.

அறிஞர்
08-09-2008, 01:34 PM
வெளியே தெரிவதுதான் முக்கியம் என அவர் நினைத்துவிட்டாரோ என்னவோ.....

மைக்ரோவேவ் அவன்... உடனை பிரச்சனை ஏற்படுத்தியிருக்காது.. சிறிது காலம் கழித்து பிரச்சனை வரும்..

mukilan
08-09-2008, 02:23 PM
மைக்ரோ வேவ் அவனில் (நம்ம ஊர்ல சொல்வது போல ஓவன் அப்படி சொல்லி இருந்தா இந்த அவன் நகைச்சுவை வந்திருக்காதே :)) உள்புறம் உலோகத்தால் ஆனதுதான் ஆனால் அது எவர் சில்வரோ, அலுமினியமோ இல்லை அதுதான் பிரச்சினை. மைக்ரோ-வேவில் எண்ணெய் சூடு படுத்த முடியாது. ஒருமுறை தாளிக்கலாம் என நினைத்து பீங்கான் கிண்ணத்தில் எண்ணெய் ஊற்றி 30 வினாடிகள்தான் சூடு படுத்தினேன் பீங்கான் கிண்ணம் இரண்டாக உடைந்து விட்டது.

அதே போல வெறும் நீரை மைக்ரோவேவில் சூடு படுத்தினால் கவனமாக கையாள வேண்டும். நீரின் உள்புறத்தில் அடர்த்தி அதிகமாகி திடீரென வெளியே தெறிக்கலாம். அதனால் முகத்தை அந்தப் பாத்திரத்திற்கு நேராகக் காட்டக் கூடாது. நீர் திடீரென தெறித்த முகத்தின் மீது விழ வாய்ப்புகள் உள்ளன.

http://www.phys.unsw.edu.au/~jw/superheating.html

ராஜா
08-09-2008, 02:32 PM
அவனா நீ..?

மதி
08-09-2008, 02:36 PM
பரவாயில்லை இந்தத் திரி மூலம் அவன் உபயோகப்படுத்துவது பற்றி பல விஷயங்கள் தெரியவருகிறது. நன்றி முகிலன்.

ஓவியன்
08-09-2008, 02:46 PM
அவனை இவன் கையாண்ட விதம் சொன்ன மதிக்கு என் நன்றிகள்..!! :)

மதி
08-09-2008, 03:32 PM
அவனை இவன் கையாண்ட விதம் சொன்ன மதிக்கு என் நன்றிகள்..!! :)

ஹாஹ்ஹா....

பென்ஸ்
08-09-2008, 05:33 PM
மதி இதே "மாதிரி" நிறைய அறிவு ஜீவிகளை பார்த்திருக்கிறேன்....
இதே சம்பவம் என் அலுவலக உணவகத்தில் நடக்க, நானும் முந்திரி கொட்டையா அவருக்கு அறிவுரை சொல்ல...
அந்த ஜீவி என்னை ஒரு ஜந்துவாய் பார்த்து,
நக்கலாய் சிரித்தது எனக்கு இன்னும் ஒரு "மாதிரி" இருக்கு...

பட்டாதான் பலருக்கு புரியுது...

ஓவியா
08-09-2008, 11:03 PM
பகிர்வுக்கு நன்றி மதி.

படித்து முடித்ததும் நானும் கொல் என்றே சிரித்தேன்,

பின் திடீர் ஞானோதயம்.

உன் மனதில் சுல் என்று ஏதோ குத்தி வலித்தது.

பின் மௌனமானேன்.

*************************************************************************
வலிக்கான காரணம்.

மதியின் பதிவுற்க்கு சம்பந்தம் இருக்காது ஆனாலும் சொல்லுகிறேன்.

லண்டனில் நடந்தது, ஒருமுறை இரயிலில் பயணம் செய்ய நான் காத்திருந்த சமயம். ஒரு கருப்பின இளைஞன் வயது ஒரு 28-30குள் இருக்கலாம். ஆப்ரிக்கா கண்டதிலிருந்து, ஏதாவது ஒரு கிராமத்திலிருந்து வந்திருப்பான் போல். மிகவும் பழைய காலத்து உடைகளை அணிந்திருந்தான் கொஞ்சம் சுத்தமாக இருந்தது. ஒரு மஞ்சள் நிர டிசர்ட்டும், மேட்ச் இல்லாத வான் நிற ஜீன்ஸும், ஒரு பாட்டா செருப்பும் மட்டுமே உடலை அலங்கரித்தது. வெட்டப்படாத தலை முடி போப் மாலேவை பிரதினித்தது.

அவனை மெல்ல நோட்டமிட்டேன். அவன் கண்களில் ஏதோ ஒரு ஏக்கம் அவனை ஆட்கொண்டிருந்தது. அங்கு இரயில் ஏர வரும் ஒவ்வொறு ஆண்மகணையும் அவன் ஏர இறங்க பார்த்தான். ஆனால் அவன் திருடன் இல்லை என்பது மட்டும் என் புத்திக்கு எட்டியது. அவர்களில் பெரும்பாளான ஆண்கள் நல்ல உடைகளை அணிந்து ரொம்ப ஸ்மார்ட்டா இருந்தார்கள். கோர்ட் சுட், விலை மிக்க காலணி என அலுவல் முடிந்து வந்தவர்களே ஜாஸ்தி. இந்த இளைஞனோ அவர்களை மிகநுணுக்கமாக என்ன காலணி, என்ன உடை, முடி எப்படி, என்ன கலர், என்று அவர்களை அங்கம் அங்கமாக கவனித்தான். ஓவொரு முறையும் அவர்களுடன் சேர்ந்து பயணிக்க அவன் கூச்சப்பட்டான். விலகியே நின்று ஏக்கபார்வையை தொடர்ந்தான். இதனை கவனித்த இரு ஆண்கள அவனை கிண்டலத்தார்கள்.

இதை கவணித்த எனக்கு திடீர் என்று என்னை அரியாமலே என் காண்களில் நீர் அருவியாக கொட்டியது. ஏன் என்று தெரியாமலே அழுது கொண்டே வீடு வந்து சேர்ந்தேன் இரவு உணவில்லை, உறக்கமில்லை. அவனுக்காக அழுதேன். அவனது ஏக்க குரல் என் மனதில் கேட்டது. இது ஒருவகை மடத்தனமாகவே பட்டது. ஆனாலும் நெஞ்சில் ஈரம் கசிய கசிய கண்கள் அவைகளை அள்ளி அவனுக்காக நீராய் விடிய விடிய வடித்தது.

மெல்ல யாசித்தேன் ஏன் இப்படி என்னுள் நடக்கிறது என்று? இருப்பவன் அனுபவிக்கிறான் இல்லாதவன் அந்த இளைஞனைப்போல் எப்படி ஏங்குகிறான், தெரிந்தவன் செய்கிறான் தெரியாதவன் கற்க்கும் முன் கோமாளியாகிறான். அவர்களுக்கு எப்படி வலித்திருக்கும் என்று ஒரு ஞானயுதயம். சில வினாடிகள் கடவுளின் மேல் கோபம் கோபமாய்.

அன்றிலிருந்து அறியாமையில் நடக்கும் விசங்களுக்காக அனுதாபப்பட மட்டுமே ஆரம்பித்தேன்.

இன்று இந்த இளைஞன், மொத்த கேஸயுன் ஃஅவனில் வைத்தது அறிவாளித்தனம் என்று என்னால் ஏற்க்க முடியாது. அவருக்கு என் அனுதாபங்கள்.

நன்றி.

பென்ஸ்
09-09-2008, 01:00 AM
பகிர்வுக்கு நன்றி ஓவியா...

நீங்கள் சொல்லுவது போல் அறியாமல் செய்பவர்கள், நீங்கள் முன் வந்து கருத்து சொல்லும் போது அதை கேட்டு கற்றறிந்து கொள்வார்கள்...

தெரியாமல் செய்கிறார்களே என்று உதவ போயி "போடாங்... நாங்க எல்லாம்ம்...!!!" என்று ஏளனமாய் நம்மையே பார்க்கிறவர்களைதானே காமெடி ஆக்குகிறோம்....

அதுதானே நானும் மதியும் சொல்லுவது....

ஆனாலும் நீங்க அநியாயத்துக்கு காமெடி பகுதியை கண்ணீர் பகுதி ஆக்குவதா... நாராயணா..!!!!

மதி
09-09-2008, 01:59 AM
அதே அதே....
அறியாமை வேறு.. அறிவாளித்தனம் வேறு..

உங்களின் அனுபவம் மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கிறது. இவையெல்லாம்..ஏனென்று தெரியாத கணங்கள். :)

ஓவியா
09-09-2008, 10:01 AM

எங்கடா மற்றவர்களின் மனதை புண்படுத்திவிடுவோமோ என்று எண்ணியது. ஆனாலும் போடுவோம் என்றே போட்டேன்.

என்னுள் ஏற்ப்பட்ட ஞானோதயத்தை இந்த சந்தர்ப்பதில் பகிர்ந்து கொண்டேன் அவ்வலோதான்.

வேண்டுமென்றால் ஒரு தனிதிரியா கட் பண்ணி போட்டு சேர்க்காத பல விசயங்களையும் சேர்த்து அழ வைக்கிறேன்.

பென்ஸ் நான் ரொம்பவும் எதிர்ப்பார்க்கும் பின்னூட்டத்தில் ஒன்று உங்களது. மிக்க நன்றி.

மக்கா, யக்கா என்ன சொல்ல வந்தேனா!

நீங்க காமடி அடிங்கப்பா நானும் அடிப்பேன், உங்க காமடிய ரசிப்பேன்.

நன்றி.

அதே அதே....
அறியாமை வேறு.. அறிவாளித்தனம் வேறு..

உங்களின் அனுபவம் மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கிறது. இவையெல்லாம்..ஏனென்று தெரியாத கணங்கள். :)

ஒரு வார்த்தை என்றாலும் திரு வார்த்தை சபாபதே:icon_b:

அக்னி
09-09-2008, 10:14 AM
இப்பதிவைப் பார்த்ததும் எனது அனுபவம் ஒன்று நினைவில்...
ஒருநாள்...
சமைத்து வைத்திருந்த உணவை அவனில் வைத்துச் சூடேற்ற முனைந்தேன்.
அன்றைய உணவில் அவித்த முட்டையும் இருந்தது.
சூடேற்ற ஆரம்பித்த சிறிது நேரத்தில்,
ஏதோ வெடித்த சத்தம்...
அங்குமிங்குமாக நோக்கியபடி, வெளியேயிருந்து வந்த சத்தமோ என யோசித்தபடி,
அவனின் அலாரச் சத்தம் கேட்டுத் திறந்தால்,
உள்ளே..,
உணவுக்குள் வெடித்திருந்தது அந்த முட்டைக் கண்ணிவெடி...
அவன் முழுவதும் சிந்திச் சிதறியிருந்தது எனது உணவு.
:traurig001::traurig001::traurig001:

SathyaThirunavukkarasu
09-09-2008, 11:02 AM
யாரையும் புண்படுத்தும் நோக்கமல்ல, ஆனால் நம் மன்றத்தில் முடிந்தவரை தமிழில் இருக்கவேண்டும் என்பதே விதி ஆனாலும் அதிகமான ஆங்கில வார்த்தைகள் உள்ளது இனிமேலாவது கவனிக்கவும்

மதி
09-09-2008, 12:00 PM
யாரையும் புண்படுத்தும் நோக்கமல்ல, ஆனால் நம் மன்றத்தில் முடிந்தவரை தமிழில் இருக்கவேண்டும் என்பதே விதி ஆனாலும் அதிகமான ஆங்கில வார்த்தைகள் உள்ளது இனிமேலாவது கவனிக்கவும்

தங்கள் அறிவுரைக்கு நன்றி சத்யா. சில வார்த்தைகளுக்கு சட்டென தமிழ்ப் பதங்கள் தெரியாததால் இம்மாதிரி நிகழ்ந்து விடுகிறது.

தீபா
09-09-2008, 01:10 PM
இப்பதிவைப் பார்த்ததும் எனது அனுபவம் ஒன்று நினைவில்...
ஒருநாள்...
சமைத்து வைத்திருந்த உணவை அவனில் வைத்துச் சூடேற்ற முனைந்தேன்.
அன்றைய உணவில் அவித்த முட்டையும் இருந்தது.
சூடேற்ற ஆரம்பித்த சிறிது நேரத்தில்,
ஏதோ வெடித்த சத்தம்...
அங்குமிங்குமாக நோக்கியபடி, வெளியேயிருந்து வந்த சத்தமோ என யோசித்தபடி,
அவனின் அலாரச் சத்தம் கேட்டுத் திறந்தால்,
உள்ளே..,
உணவுக்குள் வெடித்திருந்தது அந்த முட்டைக் கண்ணிவெடி...
அவன் முழுவதும் சிந்திச் சிதறியிருந்தது எனது உணவு.
:traurig001::traurig001::traurig001:

அய்யய்யோ!! அப்பறம் ??? என்ன சாப்பிட்டீர்கள்?

ஓவியா
09-09-2008, 06:20 PM
யாரையும் புண்படுத்தும் நோக்கமல்ல, ஆனால் நம் மன்றத்தில் முடிந்தவரை தமிழில் இருக்கவேண்டும் என்பதே விதி ஆனாலும் அதிகமான ஆங்கில வார்த்தைகள் உள்ளது இனிமேலாவது கவனிக்கவும்

தங்கள் அறிவுரைக்கு நன்றி சத்யா. சில வார்த்தைகளுக்கு சட்டென தமிழ்ப் பதங்கள் தெரியாததால் இம்மாதிரி நிகழ்ந்து விடுகிறது.

அது மட்டுமள்ள மதி என்னைப்போல் தமிழ் வாசமோ, தமிழறிவோ இல்லாமல் அன்னிய நாட்டில் பிறந்து, வேற்று மொழியில் படித்து வளர்ந்து, பின்னொருநாள் தமிழிடம் காதல் கொண்டு எப்படியாவது தமிழை வளர்க்க வேண்டும் என்று ஆதங்கப்படுபர்களின் ஆசைகளிலும் இம்மதிரி தவறுகள் நிகழ்ந்து விடுகிறது.

சத்யாவின் கருத்துபடி பார்த்தால்,
நாங்களெல்லாம் படிப்பதோடு சரிடா சாமி என்று இருந்துவிட வேண்டும் இல்லையென்றால் எழுத முயற்சிக்கும் முன் தமிழை நன்கு கற்க வேண்டுமே!! :eek::eek: ன்ஹூம் கற்க நேரமில்லை அதனால் சரிடா சாமிதான் நமக்கு இனி சரிப்பட்டு வரும்.

மதி
10-09-2008, 01:42 AM

அடடா..அக்கா..
சித்திரமும் கைப்பழக்கம். எழுத எழுத தான் தமிழை நன்கு கற்றறிய முடியும். சில நேரங்களில் அறிவியல் பெயர்களுக்கு புதுப் புது சொற்கள் கூட கண்டுபிடிக்க வேண்டி வரும்.
இதைத் தான் அவர் கூறியிருக்கக் கூடும். கூடுமானவரை ஆங்கில கலப்பில்லாமல் எழுதலாமே என்று.

உங்களின் மேலான படைப்புக்களை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம்.

SathyaThirunavukkarasu
10-09-2008, 05:35 AM
மன்னிக்கவும் நான் யாரையும் எழுதகூடதுன்னு சொல்லவில்லை. நமக்கு தெரிந்த தமிழ் வார்த்தைகளை பயன்படுத்தலாம். நம் மன்றத்திலேயே அநேகமாக புதிய தமிழ் சொற்களை பயன்படுத்துகின்றார்கள் அதை நாமும் மனதில் வைத்து பயன்படுத்தலாம் அப்படி திரும்ப திரும்ப பயன்படுத்தும் போது நமக்கும் நல்ல தமிழ் சொற்கள் பதிந்துவிடும் சிரமம் இருக்காது என்ற நோக்கத்தில் தான் கூறினேன்.

மதி
10-09-2008, 05:47 AM
உங்கள் நல்ல நோக்கம் புரிந்தது சத்யா...
மேற்கொண்டு இதைப் பற்றியே பேச வேண்டாமே...
தங்கள் புரிதலுக்கு நன்றி.

lolluvathiyar
12-09-2008, 03:02 PM
அவனை பற்றி நன்றாக தெரிந்து கொண்டேன். அவனிடம் அலுமினிய தர கூடாது என்று இப்ப தான் தெரிந்தது. நகைசுவையோடு தந்த தகவலுக்கு நன்றி

தீபன்
13-09-2008, 03:58 AM
அப்ப மதி சொன்ன ஆள் நீங்கதானா வாத்தியாரே...?

மன்மதன்
01-10-2008, 09:11 AM
தெரியலேன்னா கேட்டு தெரிஞ்சிக்கிறதுலே தப்பே இல்லை..
ஆனாலும் பாருங்க ..இப்படித்தான் காமெடி பண்றாங்க..