PDA

View Full Version : வீட்டுகொரு மனிதன்



shibly591
08-09-2008, 04:34 AM
பதவிக்காய்......
பணத்துக்காய்......!
பகட்டுக்காய்......!
சிதறிக் கிடக்கிறோம்
நாங்கள்

விட்டுக் கொடுப்பு
என்பது
எப்போதோ
தொலைந்து விட்டது

அதிகார வெறியின்
காமப் பசிக்கு
இரையாகிப் போயிற்று
ஒற்றுமை

யுத்தத்தின்
காலடியில்
நசுங்கிப் போயிற்று
மனிதாபிமானம்

ஆசைச் சிலுவையில்
அறையப்பட்ட ஏசுவாய்
நாம் ஒவ்வொருவர்
மனமும்
பிளவுத் தீயில்
கருகிப் போனது
சந்தேகமில்லை
சமாதானம்தான்

போனது போகட்டும்
வெட்டப்பட்ட
நகங்கள் விடுத்து
விரல்களைப் பாதுகாப்போம்!

பிறகு வளர்க்கலாம்
வீட்டுக்கொரு மனிதன்

poornima
08-09-2008, 06:19 AM
//வெட்டப்பட்ட
நகங்கள் விடுத்து
விரல்களைப் பாதுகாப்போம்!

பிறகு வளர்க்கலாம்
வீட்டுக்கொரு மனிதன்
//

மனிதம் என்பதே எழுத்துக்களில் மட்டும் உபயோகப்படுத்தும் வார்த்தையாகி விட்டது. மனிதன்..?

//யுத்தத்தின்
காலடியில்
நசுங்கிப் போயிற்று
மனிதாபிமானம்
//

யுத்தத்தின் காலடியில் மட்டுமா ஷீப்லி..?

//ஆசைச் சிலுவையில்
அறையப்பட்ட ஏசுவாய்
//

மிக ரசித்தேன் இந்த வரிகளை.. சிலுவையில் அறையப்படுவது என்பதுதான் தண்டனை.. விரும்பி ஏற்றுக் கொண்ட சிலுவை ...?

இங்குதான் யோசிக்க வைத்தீர்கள்..இந்த கவிதையின் பரிமாணங்களை..

பாராட்டுகள்.

வசீகரன்
08-09-2008, 01:23 PM
ஷிப்லி அவர்களின் மற்றுமொரு வீரியமான கவி, ,,,போனது போகட்டும் வெட்டப்பட்ட நகங்கள் விடுத்து விரல்களைப் பாதுகாப்போம்! பிறகு வளர்க்கலாம் வீட்டுக்கொரு மனிதன்,,,, உடைமை வேண்டாம் உயிர் காத்தாலே போதும் என்ற நிலை..,நல்ல படைப்பு.,,,

ஓவியன்
08-09-2008, 03:07 PM
நிறைய இடங்களில் இரசிக்க வைத்த கவிதை....

நடந்தது, நடந்தவையாகவே இருக்கட்டும்....
இனி நடப்பது நல்லவையாக இருக்கட்டும்....

வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் ஷிப்லி..!!

Keelai Naadaan
08-09-2008, 06:13 PM
அதிகார வெறியின்
காமப் பசிக்கு
இரையாகிப் போயிற்று
ஒற்றுமை

யுத்தத்தின்
காலடியில்
நசுங்கிப் போயிற்று
மனிதாபிமானம்
ஆம். மனிதர்களின் அதிகார வெறிக்கு அழிந்து கொண்டிருக்கிறது மனிதாபிமானம்.

இளசு
17-09-2008, 07:49 PM
வரிக்கு வரி யோசிக்க வைத்த வீரியக் கவிதை!

நம்மால் மாற்ற முடிந்தது நம்மை!
மாற்ற இயலா பெரிய சேதங்களை செப்பனிடத் தொடங்குமுன்
நம்மை இன்னும் நல்லபடி மாற்ற முயலுவோம்..

பின்னர் ...... தொடருவோம்!

பாராட்டுகள் ஷிப்லி!

shibly591
20-09-2008, 01:46 AM
நன்றி இளசு அண்ணா........

பிச்சி
23-09-2008, 10:17 AM
யோசிக்கவைக்கிறது இக்கவிதை.
வாழ்த்துக்கள் சொல்லும் அளவுக்கும்
நான் வளரவில்லை. அருமை அண்ணா

shibly591
23-09-2008, 10:22 AM
யோசிக்கவைக்கிறது இக்கவிதை.
வாழ்த்துக்கள் சொல்லும் அளவுக்கும்
நான் வளரவில்லை. அருமை அண்ணா

தன்னடக்கம் அதிகம் உங்களுக்கு....

நன்றிகள் சோதரி

சுகந்தப்ரீதன்
25-09-2008, 12:16 PM
சுயநல சிந்தனை உதித்தபோதே உடைய தொடங்கிவிட்டது மனிதமும் மனிதாபிமானமும்..!! உடைந்தவற்றை ஒன்று சேர்க்க முயல்வதைவிட உடையாமலிருப்பதை ஒற்றுமையுடன் பாதுகாக்க முயல்வோம் ஷிப்லி..!!

உள்ளகுமுறலை வெளிப்படுத்திய விதம் அருமை.. வாழ்த்துக்கள் நண்பரே..!!

அமரன்
25-09-2008, 01:34 PM
மனம்தான் மீட்பர் என்று நீங்களே சொன்ன பிறகு என்னத்தை சொல்ல.

shibly591
26-09-2008, 04:49 AM
சுயநல சிந்தனை உதித்தபோதே உடைய தொடங்கிவிட்டது மனிதமும் மனிதாபிமானமும்..!! உடைந்தவற்றை ஒன்று சேர்க்க முயல்வதைவிட உடையாமலிருப்பதை ஒற்றுமையுடன் பாதுகாக்க முயல்வோம் ஷிப்லி..!!

உள்ளகுமுறலை வெளிப்படுத்திய விதம் அருமை.. வாழ்த்துக்கள் நண்பரே..!!

தெளிவான உங்கள் புரிதலுக்கு நன்றி நண்பரே....

shibly591
26-09-2008, 04:53 AM
மனம்தான் மீட்பர் என்று நீங்களே சொன்ன பிறகு என்னத்தை சொல்ல.

பின்னூட்டத்துக்கு நன்றிகள் அமரன்..