PDA

View Full Version : வாழ்வின் மறுபக்கம்



shibly591
08-09-2008, 04:31 AM
பிடிமானமற்ற
கால்களின்
பாலைவனப் பயணமாய்
நீண்ட ஒரு தேடலுடன்
நகர்கின்றன நாட்கள்

மனிதனின் நாடகங்களுக்கும்
விதியின் ஜாதகங்களுக்கும்
இடையில்
எதற்கென்று தெரியாமல்
வாழப்பட்டுக் கொண்டிருக்கிறது
வாழ்க்கை

ஒரு நீண்ட
கனவின் திடீர்
திடுக்கிடுதலாய்
அவ்வப்போது
சில மாற்றங்கள்
வெறும்
சூன்யமாகிப்போன
வாழ்க்கையின்
எல்லா முகங்களிலும்
ஒன்றுக்கு மேற்பட்ட
வேசங்கள்

புலம்பெயர்ந்த
கனவுகளின்
உயிர்ப்புகளுக்கான
காத்திருப்புக்கள்
முடிவிலியாய்
தொடர்கின்றன
எல்லாம் தாண்டி
பிடிமானமற்ற
கால்களின்
பாலைவனப் பயணமாய்
நீண்ட ஒரு தேடலுடன்
நகர்கின்றன நாட்கள்

இளசு
17-09-2008, 08:16 PM
அநிச்சயம் என்பது அச்சமும் சோர்வும் சலிப்பும் ஒருங்கே அளிக்கும்!

என்று விடியல் என அறியாத நிலையில்
என்றும் கைவிடா நம்பிக்கையே துருவமீன்!

பாராட்டுகள் ஷிப்லி!
விடியல் விரைவில் வரட்டும்!


பாலைமண் மாறி புல்தரையில் பாதங்கள் இனி ஸ்பரிசம் காணட்டும்!

பிச்சி
23-09-2008, 11:20 AM
முதல் பத்தியே சொக்கவைக்கிறது.
"கனவின்" இரண்டு தடவை வருகிறது அண்ணா.

இளசு அண்ணா விளக்கிய விதமும் மிக அருமை.

shibly591
23-09-2008, 11:37 AM
பாராட்டுகள் ஷிப்லி!
விடியல் விரைவில் வரட்டும்!


பாலைமண் மாறி புல்தரையில் பாதங்கள் இனி ஸ்பரிசம் காணட்டும்!

நன்றி இளசு அண்ணா...

அந்த நம்பிக்கை எனக்கும் இருக்கிறது.....

shibly591
23-09-2008, 11:38 AM
முதல் பத்தியே சொக்கவைக்கிறது.
"கனவின்" இரண்டு தடவை வருகிறது அண்ணா.

இளசு அண்ணா விளக்கிய விதமும் மிக அருமை.

உங்கள் பின்னூட்டத்துக்கு நன்றிகள்..

திருத்தம் செய்துவிட்டேன் சகோதரி..மீண்டும் மீண்டும் நன்றிகள்..

வசீகரன்
23-09-2008, 12:09 PM
மனிதனின் நாடகங்களுக்கும்
விதியின் ஜாதகங்களுக்கும்
இடையில்
எதற்கென்று தெரியாமல்
வாழப்பட்டுக் கொண்டிருக்கிறது
வாழ்க்கை


அற்புதமான வரிகள் ஷீபிலி அவர்களே..!

தேடல் இன்று நேற்றல்ல... பிறந்ததிலிருந்தேதான்..!

தேவைகள் இருக்கும் வரை தேடல்கள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன..!

நல்லதொரு கவிதை...!

shibly591
23-09-2008, 12:11 PM
நன்றிகள் வசீகரன்...