PDA

View Full Version : இன்னும் சில நம்பிக்கைகள்



shibly591
08-09-2008, 04:30 AM
கத்தரிக்கப்பட்டாயிற்று
சிறகுகளோடு
சேர்ந்து
எங்கள் கனவுகளும்....

உயிரோடு
புதைக்கப்பட்ட
எங்கள் உரிமைக்குரல்
செத்துவிடவில்லை
இன்னும்

நேற்றைய
அவலங்களுக்கும்
நாளைய

அச்சுறுத்தலுக்கும்
இடையில்
கேள்விக்குறியாய்
வளைகின்றன
இன்றைய கணப்பொழுதுகள்

பிறப்பு
ஒருமுறைதான்
எத்தனை
முறைதான்
சாவது

உலகம்
இப்போது
கிராமமாகிவிட்டது
என்கிறார்கள்
எங்கள்
கிராமமே
ஒரு உலகம்தானே....

எத்தனை மகிழ்ச்சி
எத்தனை பரவசம்
உறவுகளெல்லாம்
கூடிக்களித்த
அந்த
ஆனந்த நிமிடங்கள்
விதவையொருத்தியின்
முதலிரவு நினைவுகளாய்
நெஞ்சில் கனக்கின்றன

மூட்டை
முடிச்சுகளோடு
நாங்கள்
வந்துவிட்டோம்
பாவம்
இப்போதும்
தனித்திருக்கிறது
பூர்வீகம்
சுமந்த
எங்கள் வீடு

புரண்டு திரிந்த
ஊரின் வனப்பு
வரண்டு கிடக்கலாம்

எல்லையில் நின்ற
நெல்லி மரம்
சரிந்திருக்கலாம்

கற்ற பள்ளி
தொழுத கோயில்
நடந்த தெருக்கள்
படித்த வயல்கள்
புழுதிக் காற்று
எல்லாமே
சிதைந்து போயிருக்கலாம்

ஊரில்
மீண்டும்
வசிக்கப் போகும்
எங்கள் கனவுகளையும்
நம்பிக்கைகளையும்
யாரால்
என்ன
செய்ய முடியும்?.

இளசு
17-09-2008, 08:07 PM
வன்பிடுங்கலால் எறியப்படுதல் வலியானது..

எல்லா வலிகளுக்கும் ஏதோ நல்விளைவு பின் உள்ளது!

காத்திருக்கும் காலங்களை கவிதை நிவாரணத்துடன் கடப்போம்.


வாழ்த்துகள் ஷிப்லி!

பிச்சி
23-09-2008, 11:22 AM
நினைவுகள் மரணிப்பதில்லை.

ஆகாயமே அழிந்தாலும்
ஆகாசம் அழியாது.

நம்பிக்கையாக நாங்கள் இருக்கிறோம் அண்ணா

shibly591
23-09-2008, 11:30 AM
நன்றி இளசு அண்ணா...

நன்றி பிச்சி தங்கை (பெயருக்கு என்ன காரணம் என்று தெரியலாமா...???)

உங்கள் ஆறுதலும் உதவிக்கரமும் நன்றிக்குரியன...