PDA

View Full Version : எழு(து)ங்கள்!



shibly591
08-09-2008, 04:29 AM
தினந்தோறும்
எழுவதற்கும்
எத்தனையோ
கருப் பொருட்கள்
கண்ணெதிரே.....

காலிழந்த பிச்சைக்காரன்
தொலைந்து போன பத்து ரூபாய்
புன்னகைக்காத மனிதர்கள்
காலியாகிப் போன மனிதாபிமானம்
தனித்து நிற்கும் வெண்ணிலா
கூடவே சில நட்சத்திரங்கள்

இப்படி
எழுதுவதற்கு
எத்தனையோ
கருப்பொருட்கள்
கண்ணெதிரே

இயந்திர வாழ்க்கையின்
இடைவெளிக்குள்
நசுங்கிப் போன
மனிதர்கள்
இதை விடுத்து
எதைத்தான் தேடுகிறார்கள்?

பிரபஞ்சத்தையே
கொழுத்திப் போடும்
துணிச்சல் மிக்க
மனிதர்கள்
கடன் அட்டைக்குள்
சுருங்கிப் போனது எப்படி?

மைதீராப் பேனாக்களும்,
வெற்றுக் காகிதங்களும்,
நிறைந்து போயிற்று.....
போன நூற்றாண்டிலும்
பயன்படுத்தாததை சேர்த்து!

எல்லாம் முடிந்து
தொலைக்காட்சியிலும்,
தூக்கத்திலும்
தனிமையிலும்
நிம்மதி தேடுகிறார்கள்

மனதில் தேங்கிப் போன
உயிரோட்டங்களை
எழுதிப் பார்ப்பதில்தான்
நிம்மதி உறைந்திருக்கிறது
என்பது
எப்போதுதான் புதியுமோ?
இன்றைய நவநாகரிக
மனிதர்களுக்கு.....!

இளசு
17-09-2008, 08:05 PM
பலநாள் பணிப்பளு, மன உளைச்சலுக்குப் பின்
கொஞ்சம் நானே முரண்டு நேரம் ஒதுக்கி இன்று படித்தேன் இக்கவியை!

ஆம், எழுத முடியாத என் போன்றோர்
இதைப்போல் எழுதப்பட்டதை எடுத்து வாசிக்கவாவது நேரம் வாய்க்க வேண்டும்..
வாய்ப்பை வரவழைத்திட வேண்டும்..


பாராட்டுகள் ஷிப்லி!

"பொத்தனூர்"பிரபு
18-09-2008, 01:34 AM
//////
மனதில் தேங்கிப் போன
உயிரோட்டங்களை
எழுதிப் பார்ப்பதில்தான்
நிம்மதி உறைந்திருக்கிறது
என்பது
எப்போதுதான் புதியுமோ?
இன்றைய நவநாகரிக
மனிதர்களுக்கு.....! __________________


//////////////////



அழகான கவிதை

பிச்சி
23-09-2008, 10:45 AM
எவ்வளவோ கருக்கள் இருந்தும்
நேரம் அமைவதில்லை.

அருமையான கவிதை அண்ணா

சிவா.ஜி
23-09-2008, 11:03 AM
ஆதங்கம் சொல்லும் அருமையான கவிதை. உண்மைதான் ஷிப்லி. நம்மைச் சுற்றி எத்தனையோ கருக்கள், தங்களைத் தாங்கி பிரசவிக்க ஒரு மடிக்காக ஏங்கி கிடக்கின்றன. பெற்றுக் குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டுப் போவதைப்போலத்தான்....இதுவும், கண்டுகொள்ளாமல் கருவிலேயே அழித்துவிடுவது.


சிந்திக்கத்தூண்டும் கவிதைக்கு வாழ்த்துகள் ஷிப்லி.


("பிரபஞ்சத்தையே கொ'ளு'த்திப்போடும்" என்றல்லவா வரவேண்டும்?

கடைசி பத்தியில் எப்போதுதான் "புரியுமோ" வரவேண்டும்.)

shibly591
23-09-2008, 11:03 AM
எவ்வளவோ கருக்கள் இருந்தும்
நேரம் அமைவதில்லை.

அருமையான கவிதை அண்ணா

நன்றி பிச்சி...

நேரம் கிடைக்கும்போதெல்லாம் எழத முயலுங்கள்