PDA

View Full Version : வாழ்வின் துயர் நிறை தருணங்கள்



shibly591
08-09-2008, 04:08 AM
வாழ்வின் துயர் நிறை
விகார தருணங்கள் மீது
எனது ஆயுள்
ஒரு பறவையைப்போல அமர்ந்துகொண்டிருக்கிறது.....

சிறகொடிந்த அப்பறவைக்கு
அடுத்த திசைநோக்கிப்பறக்கும் வீரியம்
துளியேனும் கிடையாது..

விரிந்திருக்கும் வான்பரப்பில்
அதற்கான கனவுகளை மட்டும்
சிறகடிக்க விட்டு விட்டு
தனித்தலையும் ரண மழையில்
கொட்டக்கொட்ட நனைந்து கொண்டிருக்கிறது...

வலி மிகைத்த கவிதையொன்றின்
கண்ணீர் அறைகூவலை
எப்போதும் அதன் சோகம் கவிந்த
கண்களில் நீங்கள் காணக்கூடும்...

மீளமுடியாத
கனவுகளற்ற அதன் வாழ்வியல் கோலங்கள்
தவறாக வாழப்பட்ட
அல்லது
வாழ்தலில் நேர்ந்த தவறாக
ஏதோ ஒரு பிரளயத்தை
சாற்றி நிற்கிறது..

வாழ்வின் துயர் நிறை
விகார தருணங்கள் மீது
எனது ஆயுள்
ஒரு பறவையைப்போல அமர்ந்துகொண்டிருக்கிறது

பிச்சி
26-09-2008, 02:12 PM
தருணங்களில் துயர் நிறைந்திருக்கலாம், துயரே தருணங்களாய் அமையக்கூடாது. வலியை சூப்பராக எழுதியிருக்கிறீங்க.. ஹாட்ஸ் ஆஃப்

அன்புடன்
பிச்சி

அமரன்
26-09-2008, 07:32 PM
உற்றுப் பார்க்க வைத்த கவிதை. உறுத்தவும் செய்கிறது. உதவவும் செய்கிறது..

ஆயுட்பறவை..கச்சிதமாகப் பொருந்துகிறது.
எப்போது பறக்கும் என்பது எவருக்குந் தெரியாது.

சிறகொடிந்ததால் பறக்க மாட்டாது என்ற
நம்பிக்கையில் ஆடலாம்
நல்லவிதமாகவும் தப்பாட்டமாகவும்..

குற்றுயிரும் குலையுடலுமாய்
நெருங்கிய மரணத்துடன் போராடுகிறது என்று
அவநம்பிகையுடனும் ஆடலாம்
இருவிதமாகவும்..

ஆட்டம் நம்(பிக்)கையில்..

பாரதி சொல்வான்..
ஒளி மிகுந்த கண்கள் தேவை என்று..
வைரமுத்து சொல்கிறார்
என்னொளி போதாத போது
பிறரொளிகளை கடன் வாங்குகிறேன் என்று..

தேவைப்படின் வாங்குவோம்.. கொடுப்போம்..
அதற்காவுந்தானே பலர்பாலானான் மனிதன்...

குளம் ததும்பினால் மனம் சஞ்சலப்படும்..
கல்லணையை திறந்துவிட்டால்
குளமும் தெளியும்.. மனமும் தெளியும்..
வழியும் தெளிவாக தெரியும்..

கடைசியாய்...
உடைந்த சிறகை ஒட்டவைக்க
எதுவுமே எவருமே உதவாவிட்டால்
கனவுப்பறவை
அகல விரிக்கட்டும் சிறகை..
உதிரும் இறகுகளை
சேர்த்துக் கட்டிப் பறக்க முயல்வோம்....
'துயர்'தனின் முதல்மெய்யை உதைத்து 'உயர்'வோம்..

தீபா
27-09-2008, 04:13 AM
வாவ் அமரன்... வாழ்த்துக்கள் இருவருக்கும்./..