PDA

View Full Version : முற்பகல் செய்யின்!!!??..



poo
04-04-2003, 05:22 PM
எப்படி அழித்தும்
மறைய மறுக்கிறது மனதில் பதிந்த
மாசு நிறைந்த கோலம்..

அரைகுறை ஆடையுடுத்தி
அங்கங்களை வனப்பாக்கி
அதரங்கள் குலுங்க
எவர்கண் படினும் கவிழ்ந்திட
கவர்ச்சி உடையில்
கல்லூரி போர்வையில்
காளையர்களின் கனவுக்கன்னியாய்
வலம் வரத் துடித்தது..

கன்னிதான் நான்..
கற்பழித்துப் போ கண்களால் மட்டுமென
கட்டுக்கடங்காமல்
நாகரீக மோகத்தால்
நகர்வலம் வந்த நாட்கள்...

அன்று நான் போட்ட கோலங்கள்
மாசு படிந்தவைகளென மனம் உணர்த்தவில்லை..

அனைத்து கொட்டங்களையும்
கொட்டிலில் அடைத்து
கட்டிலில் மணவாளனிடம் சரணடைந்தேன்...

பலனாக பதினெட்டான பருவப்பெண்..

காலைவேளையில்
கட்டுடல் காட்டி
இறுக்கமான கால்சட்டையில்
அந்தரங்ககளை அப்பட்டமாய் ஆட்டி ஓடும்
என் செல்லப் பெண்ணைப் பார்க்கையில்
மனதில் குற்ற உணர்ச்சிகள்
குத்தூசிகளாய்..

எப்படி முயன்றும் அழிக்கமுடியவில்லை..
அன்று நான் போட்ட மா(சு)க்கோலத்தை!!!

madhuraikumaran
04-04-2003, 05:33 PM
அருமையான கேள்வி !!...
ஒரு துணைக் கேள்னி... ஒரு ஆண் எப்போதாவது தன் மகன் தன்னைப் போல் இளமையில் ஆடுவதைக் கண்டு மனம் வருந்துவதுண்டா?

இளசு
04-04-2003, 05:50 PM
உயிரியல் உடலியல் உளவியல் ரீதியாக
சிட்டுவின் கவிதைத்தாய் கேட்ட முதல் கேள்விக்கும் மதுரைக்குமரன் கேட்ட துணைக் கேள்விக்கும் விடை இருக்கலாம்....

ஆண்- பெண் (எல்லாவற்றிலும்) சமமா.. என்ற அடிப்படைக்கேள்விக்கே
நம்மை அழைத்துச்செல்லும் கேள்விகள்...........................................................!

kavitha
28-02-2004, 04:35 AM
கன்னிதான் நான்..
கற்பழித்துப் போ கண்களால் மட்டுமென

பூ வின் கவிதை அருமை. கல்லூரி கன்னிகளுக்கு கன்னத்தில் நல்ல அறை!

ம.கு அவர்களே,
எப்படி ஐயா, உமக்கு மட்டும் இப்படி தோன்றுகிறது?
பூச்சி மாதிரி இருக்கிற அப்பாவிற்கு, அப்படி ஒரு மகன் வாய்த்தால் அப்பா கேட்கமாட்டார். ஆனால் ஊர் கேட்கும்.