PDA

View Full Version : ஆற்காட்டார் அட்வைஸ் கவிதை- ஜீனியர்விகடன்



mukilan
06-09-2008, 08:05 PM
இருட்டுல நீ வாழப் பழகு
வெளிச்சமெல்லாம் எதுக்குடா...
கருவறையில் இருந்தப்போ
கரன்ட் இல்லையே உனக்குடா!

பெட்ரோமாக்ஸ் லைட் கொளுத்து
ஃபங்ஷன் மூடு கெடைக்குண்டா...
மெழுகுவத்திய ஏத்தி வையி
பர்த்டே போல இருக்குண்டா!

காலேஜுக்கு கட் அடிச்சுட்டு
சந்தோஷமா சிரிக்கிற...
கரன்ட் மட்டும் கட் அடிச்சா
கண்டபடி குதிக்கிற!

ஃபேக்டரிய இழுத்து மூடு
டெய்லி உனக்கு லீவுடா...
போரடிச்சா தெறந்திருக்கு
டாஸ்மாக்கு ஓடுடா!

ஃபேனை தூக்கிப் போட்டுட்டு
பேரீச்சம் பழம் வாங்குடா...
வொய்ஃப்பு, சீரியல் பாக்காட்டி
டைமுக்கு கிடைக்கும் சோறுடா!

இயற்கையோட இணைந்து வாழ்ந்தா
மின்சாரம் மிச்சம்டா...
கரன்ட் பில்லு கட்ட வேணாம்&உனக்கு
உடம்பு பூரா மச்சம்டா!

ஆதிவாசி மனுஷனோட
வாழ்க்கை இப்ப புரியுதா?
கல்லறைக்குப் போன பிறகும்
கரன்ட் இல்ல தெரியுதா?!
-ந.அண்ணாமலை

நன்றி: ஜூனியர் விகடன் 10-09-2008

தீபன்
07-09-2008, 05:16 PM
அருமையான கவிதை. கிண்டலாக சொன்னாலும் பெரும்பகுதி உண்மையாகவும்தான் இருக்கு... மின்சாரம் இல்லாமல் வாழ்ந்த காலங்களில் இருந்த திருப்தி அது இருக்கும்போது கிடைப்பதில்லை என்பது நிஜம்தான்.

ஓவியன்
07-09-2008, 05:22 PM
அண்மையில் பச்சை வீடுகளை அமைப்பது, அவற்றில் வாழ்வது பற்றிக் கொஞ்சம், எங்கோ படித்தேன்...

அப்போதுதான், ஒன்று புரிந்தது...
வழி இல்லாமல் இல்லை-மாறாக
நாம்தான் இயற்கையின் வழியில் போகாமல்
குறுக்கு வழியில் போய்க் கொண்டிருக்கிறோமென...

poornima
08-09-2008, 06:04 AM
ஆற்காட்டார் என்ன செய்வார் பாவம் :-)

கவிதை படிக்கும்போது நினைத்திருப்பார்.. நம்ம நினைக்கிறதை அப்படியே
உரிச்சி வச்சிருக்கான்பா...

சந்தோஷப்பட்டதற்கு பரிசு கொடுப்பாரோ என்னவோ கோபப்பட்டிருந்தால்
இந்நேரம் ஆட்டோ போயிருக்கும் :-)

எடுத்து இங்கே தந்தமைக்கு நன்றி