PDA

View Full Version : கலக்கல் பக்கங்கள்..!Pages : [1] 2

ராஜா
06-09-2008, 09:25 AM
ஆணா... பெண்ணா..?

ரிமோட் கண்ட்ரோல் : இது பெண்தான்..

அதிக நேரம் இதை வச்சுக்க ஆண்கள்தானே விரும்பறாங்க..?

இதைக் காணோம்ன்னா அவங்க படும் பாடு இருக்கே.. அடடா..!

புதுசா இருக்கறப்போ எந்த* பட்டனை அழுத்தணும்ன்னே தெரியாது.. ஆனாலும் கொஞ்சநாள்ல கண்டுபிடிச்சுடுவாங்க.. ஆனா அதுக்குள்ளே பாதி பேட்டரி காலியாகியிருக்கும்..!

_____________________________________________________________
உங்களுக்குத் தெரிஞ்ச பொருட்கள் பத்தியும் சொல்லுங்களேன்..!

ராஜா
06-09-2008, 09:32 AM
புலம்பல் பக்கங்கள்..!பில்லியன் என்றால் எத்தனைன்னு தெரியும்தானே..?

அந்த எண்ணிக்கை குறித்த ஒரு வெட்டிகரமான ஆராய்ச்சி..!
_______________________________________________________________

ஒரு பில்லியன் விநாடிகளுக்கு முன் ஒரு அறிவாளி பிறந்தார்.. (1959)

ஒரு பில்லியன் நிமிடங்களுக்கு முன் இயேசு கிறிஸ்து உயிரோடு இருந்தார்..!

ஒரு பில்லியன் மணி நேரத்துக்கு முன் நம் முன்னோர்கள் கற்கால மனிதர்களாக வாழ்ந்தார்கள்..!

ஒரு பில்லியன் நாட்களுக்கு முன் இந்த பூமியில் இரண்டு கால்களால் நடக்கும் உயிரினம் எதுவுமே இல்லை..!

ஒரு பில்லியன் நிமிடங்களுக்குப் பிறகு அதே நிலை வரக்கூடுமோ..?

poornima
06-09-2008, 09:42 AM
இன்னும் நிறைய புலம்புமாறு (! ? ! ) கேட்டுக் கொள்கிறேன்

ராஜா
06-09-2008, 09:52 AM
உலகை தன் காலடியில் வீழ்த்திய மாவீரன் அலெக்சாண்டர் ஒருநாள் தன் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து சிந்தித்துக்கொண்டே வெகுதூரம் நடந்தான். ஆளரவமற்ற மணற்காட்டினூடே அவன் சென்றபோது, ஒரு வறியவன் கிழிந்த ஆடைகளோடு மணலில் விழுந்து கிடந்தான்.

அருகில் சென்ற அலெக்சாண்டர், "ஏ மனிதப் பூச்சியே.. மாமன்னன் அலெக்சாண்டர் வந்திருக்கிறேன்.. எழுந்து உன் வணக்கத்தைத் தெரிவி..!" என்றான்.

அந்த ஏழையிடம் எவ்வித சலனமும் இல்லை. தலையை இலேசாகத் தூக்கிப் பார்த்துவிட்டு மறுபடியும் படுத்துக் கொண்டான்.

அவமானமுற்ற அலெக்சாண்டர், என்னென்னவோ சொல்லி அச்சுறுத்திப் பார்த்தும், அந்த வறியவனிடம் மாறுதல் எதுவுமில்லை. மிரட்டல் பலனளிக்காது என்று அறிந்த பின்னர் அலெக்சாண்டர் கேட்டான்.

ஏ.. ஏழை மனிதனே.. உனக்கு என்ன வேண்டும் கேள் தருகிறேன். பொன் வேண்டுமா..? புகழ் வேண்டுமா..? பதவி வேண்டுமா அல்லது இதுவரை நான் வென்ற இராச்சியங்கள் வேண்டுமா..?

வறியவன் பதிலிறுத்தான்..

அதெல்லாம் எதுவும் வேண்டாம். நீ சற்று விலகி நில். நான் இதமாகக் குளிர் காய இயற்கை தரும் வெயிலை உன் நிழல் தடுக்கிறது..!"

அலெக்சாண்டருக்கு ஞானம் பிறந்தது.

மண்ணாசையைக் கைவிட்டான். எவ்விதப் புகழும் பொருளும் சிலநேரங்களில் பயனற்றுப் போகும் என்று உணர்ந்தான். தான் இறந்தபிறகு சவப்பெட்டிக்கு வெளியே தன் வெற்றுக் கரங்கள் வெளிப்பட்டு மக்களுக்கு ஒரு உண்மையை உணர்த்த வேண்டும் என்னும் முடிவை எடுத்தான்.

ராஜா
06-09-2008, 09:56 AM
இன்னும் நிறைய புலம்புமாறு (! ? ! ) கேட்டுக் கொள்கிறேன்

எனது புதியத் திரிக்கு வந்திருக்கும் முதல் விருந்தினரை நன்றியோடு வரவேற்கிறேன்..!

தீபன்
06-09-2008, 10:37 AM
இரண்டாவது விருந்தினர் நாந்தான்.... புதிய கலக்கல்/ புலம்பல் தொடர்... வாழ்த்துக்கள் ராஜாண்ணா.

arun
06-09-2008, 12:23 PM
ஆகா புதிய புலம்பல் திரியா கலக்குங்க கலக்குங்க

ராஜா
06-09-2008, 03:24 PM
இந்தத் திரி ஓரளவுக்கு ஒளிரும் என்று தெரிகிறது..!

வந்த விருந்தினர்களின் பெயர்களே அதற்கு சாட்சி..!

பூர்ணிமா (முழு நிலா)

தீபன்

அருண் (கதிரவன்)

ராஜா
06-09-2008, 03:32 PM
இந்தப் படத்தில் உங்களுக்குத் தெரிஞ்ச ஆட்கள் எத்தனை பேர் இருக்காங்கன்னு (இப்போதைக்கு நம்பர்ல மட்டும்) சொல்லுங்க பார்ப்போம்..!http://i144.photobucket.com/albums/r163/arrajar/image003.jpg

அமரன்
06-09-2008, 09:29 PM
ராஜா(அண்ணன்)கையை வெச்சா அது சோடை போனதில்லை..
வெட்டிகரமான ஆராய்ச்சிகளை கன்ரோல் பண்ணாது தந்து அணையா விளக்காய் அமையும் இத்திரி.
ஆரம்பமே அசத்தல்..

ஓவியா
06-09-2008, 10:47 PM
நான் கணக்குலே பெய்ல், கண்டுபிடிப்பில் பாஸ்
அதனாலே என் சார்பில் சிலரை மட்டும் சொல்லி மற்றவர்களுக்கு வழி கொடுக்கிறேன்.

மரியாதைக்குரிய எலிசபத் அரசி.
உலக அழகி ஐஸ்வர்யா பச்சன்.
இளவரசி லேடி டயானா.

மரியாதைக்குரிய மாமனிதர் காந்தி தாத்தா
உலக காற்பந்து வீரர் பீலே.
உலக குத்துச்சண்டை வீரர் முகமது அலி.

சர்வாதிகாரி உயர்திரு.ஹிட்லெர்
மரியாதைக்குரிய ஆப்ரஹம் லிங்கன்
பாப் பாடகர் நாயகன் எல்விஸ் பிரஸ்லி

ஒரு மாடு
ஒரு ஒட்டகம்
4 செம்மறியாடுகள்

சுட்டிபையன்
07-09-2008, 04:24 AM
மீதி நான்
விஞ்ஞானி ஐன்ஸ்டீன்
நடிகர் சார்லி சப்ளின்
அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன்
விடுதலை வீரர்கள் நெல்சன் மண்டேலோ
மற்றும் யசீர் அரபாத்
சக்கரவர்த்தி செங்கிஸ்கான்
புருஸ் லீ
இளவரசர் சார்ள்ஸ்

அப்புறம் 2 குதிரை
1 பருந்து
இப்பவே கண்ணகட்டுது :D:D:D:D இப்போதைக்கு இவ்ளவு பேர்தான்

mukilan
07-09-2008, 05:17 AM
சீனாவின் மா சே துங்
பாலஸ்தீன முன்னாள் அதிபர் யாசர் அராஃபத்
கிரேக்கத் தத்துவ ஞானி சாக்ரடீஸ்
பொதுவுடமைக் கொள்கைவாதி காரல் மார்க்ஸ்
முன்னாள் ரஷ்ய சர்வாதிகாரி லெனின்
முன்னாள் ரஷ்ய சர்வாதிகாரி ஸ்டாலின்
புரட்சியாளர் ஷே-குவாரா
முன்னாள் கியூபா அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ
கவிஞர் ரவீந்திரநாத் தாகூர்
இராக்கின் முன்னாள் சர்வாதிகாரி சதாம் ஹூசேன்
கவிஞர் ஷேக்ஸ்பியர்
இங்கிலாந்து முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில்

poornima
07-09-2008, 06:21 AM
உங்கள புலம்ப சொன்னா இப்படி படம் போட்டு அதை எண்ணு இதை எண்ணு
அப்படின்னு சொல்லி எங்கள பொலம்ப சொல்றீங்களே நியாயமா ராஜா?

அன்புரசிகன்
07-09-2008, 06:58 AM
அட... அதுல நான் நிற்கிறேன். கவனிக்கவே இல்லையா???????? :D :D :D

அமரன்
07-09-2008, 08:14 AM
அட... அதுல நான் நிற்கிறேன். கவனிக்கவே இல்லையா???????? :D :D :D

கண்ணுக்கு தெரியாதளவுக்கு ஆளா நீங்க:eek::eek::traurig001::traurig001::fragend005::fragend005:

அன்புரசிகன்
07-09-2008, 08:19 AM
கண்ணுக்கு தெரியாதளவுக்கு ஆளா நீங்க:eek::eek::traurig001::traurig001::fragend005::fragend005:

என்னவோ... உங்களுக்கு தெரியலயே...

கடுகு சிறிதென்றாலும் காரம் பெரிதாக்கும்... :icon_b:

ராஜா
07-09-2008, 12:47 PM
அனைவருக்கும் நன்றி..!

தினமும் உங்கள் ஆதரவு இருக்கவேண்டி...

ராஜா.

ஓவியன்
07-09-2008, 01:00 PM
அட... அதுல நான் நிற்கிறேன். கவனிக்கவே இல்லையா???????? :D :D :D

அட, அது நீங்கள் தானா...???

நான் அது ஒரு செம்மறி ஆடென்று நினைச்சிட்டன்..!! :D:D:D

ராஜா
07-09-2008, 01:27 PM
கீதாவுக்கு அன்று பிறந்தநாள்.. மிகவும் பரபரப்பாக இருந்தாள். அவளுடன் படிக்கும் ரமேஷிடமிருந்து வாழ்த்து எஸ் எம் எஸ் அல்லது அழைப்பு வரும் என்று காத்திருந்தாள். யார் யாரோ வாழ்த்தினர். ஆனால் ரமேஷிடமிருந்து வரவில்லை. கீதா சற்று கலக்கமுற்றாள். அவளுக்கு அவனைப் பிடிக்கும்.. அவனுக்கு..? தெரியாது.

அப்போது, கீதாவின் குட்டித் தங்கை ரமா கையில் தன் பாடநோட்டுடன் வந்து கீதாவைக் கூப்பிட்டாள்.

"அக்கா..!"

கீதா குனிந்து பார்த்து, அலட்சியப்படுத்தினாள்.. இவளுக்கு இதே வேலை.. இது என்ன.. அது என்ன.. அதைச் சொல்லிக்கொடு என்று ஒரே தொல்லை. இரண்டாம் வகுப்பு படிக்கும் ரமாவுக்கு கீதா என்ன ட்யூஷன் மிஸ்ஸா..?

ரமா மீண்டும் அழைத்தாள்.. "அக்கா..!"

"ப்ஸ்ஸ்ஸ்ஸ்.. தொல்லை பண்ணாதே.. அப்புறம் வா..!"

இந்த ரமேஷுக்கு ரொம்ப கர்வம்.. ஒரு க்ரீட்டிங் அனுப்பினால் குறைந்தா போய்விடுவான்..? மனதுக்குள் சிந்தனை ஓடியதில் நேரம் போனது தெரியவில்லை.

இரவும் வந்தது. ஆனால் ரமேஷிடமிருந்து எந்தத் தகவலும் இல்லை. கீதா முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தன. 'திமிர் பிடித்த ராஸ்கல்.. அந்த ஷீலா பிறந்தநாளுக்கு உருகி உருகி கால் செய்தானே.. அவளுக்கு நான் என்ன குறைச்சலா..? மனம் குமைந்தது.

மீண்டும் ரமா.. "அக்கா.. ப்ளீஸ்.. இந்த நோட்டைப் பாரேன்..!"

கீதாவுக்கு இருந்த கடுப்பில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் நோட்டைப் பிடுங்கி தரையில் விசிறி அடித்தாள். "போ சனியனே.. மூட் தெரியாமல் உயிரை வாங்காதே..!"

குழந்தை காயப்பட்டு போயிற்று. மெல்ல நோட்டைப் பொறுக்கி எடுத்து தன் அறைக்குத் திரும்பும் ரமாவின் கண்களில் கண்ணீர் கரை கட்டியது.

அப்புறமும் கொஞ்ச நேரம் ரமேஷுக்காக காத்திருந்தாள் கீதா. பலனில்லை.

வீட்டின் உள்ளே ஏதோ வேலையாக போகும்போது கீதா கவனித்தாள்.. ரமாவின் அறையில் விளக்கு எரியவில்லை. தூங்கிவிட்டாளோ..? பாவம் .. குழந்தையை ரொம்ப புண்படுத்திவிட்டேனோ..? கீதா மனம் கசிந்தது..

அறைக்குள் வந்து மெல்ல அழைத்தாள்..

ரமா...!

அக்கா..!

தூங்கிட்டியா..?

இல்லேக்கா..

சரி நோட்டை எடுத்துட்டு வா..

குழந்தை குதூகலத்துடன் கட்டிலில் இருந்து குதித்து ஓடி நோட்டை எடுத்துவந்து நீட்டியது.

எது உனக்கு புரியலே..? காட்டு.. சொல்லித் தரேன்..

இதைப் பார் அக்கா..

நோட்டை விரித்த கீதா வியந்து போனாள்.. குழந்தை தனக்குத் தெரிந்த முறையில் ஒரு பிறந்த நாள் வாழ்த்துப்படம் வரைந்து வைத்திருந்தாள்..!

என் அன்பு அக்காவுக்கு என்று பெரிய எழுத்துகளில் வண்ண வண்ண எழுத்துகளில் எழுதி, கீழே ஒரு பூங்கொத்து.. அதற்கும் கீழே பிறந்த நாள் வாழ்த்துகள் என்று மீண்டும் வண்ண எழுத்துகள்..!

நேற்றிரவு நீண்ட நேரம் ஏதோ படிக்கிறாள் என்று நினைத்தோமே.. இதைத்தான் வரைந்தாளா..? ஆசையுடன் வாழ்த்து தெரிவிக்க வந்த குழந்தையைத்தான் விரட்டி அடித்தேனா..?

"என் செல்லமே.." வாரியணைத்து முத்தமழை பொழிந்தாள் கீதா.

நீதி : கானல் நீருக்காக காலடியில் ஊற்றெடுக்கும் நறுஞ்சுவை நீரை உதாசீனம் செய்யாதீர்.

________ ராஜா.

அன்புரசிகன்
07-09-2008, 01:32 PM
கீதாவின் கதையை புலம்பல் என கூறவே முடியாது. காரணம் அதில் அன்றாடம் நடக்கும் சம்பவங்களை பிரதிபலித்து சத்தியத்தினை விளக்கியுள்ளது...

அட, அது நீங்கள் தானா...???

நான் அது ஒரு செம்மறி ஆடென்று நினைச்சிட்டன்..!! :D:D:D

மனுசனயே அடயாளம் காண முடியல. இதுல ஆட்டை நினைச்சாராம்... :rolleyes:

ராஜா
07-09-2008, 02:13 PM
வெட்டிகரமான சிந்தனைகள்... 2.

"பற"வையின் சிறகுகளை வெட்டிவிட்டால் அது "நட"வை ஆகிவிடுமா..?

நிபுணர் : நடந்து முடிந்த அசம்பாவிதத்தின் பழியை யாராவது ஒருவர் மேல் போடுவதற்காக வரவழைக்கப்படுபவர்.

அலாரம் டைம்பீஸ் : ஒருவரை காலையில் சீக்கிரம் எழுப்பும் சாதனம்.. முக்கியமாக குழந்தைகள் இல்லாத வீடுகளில் இருப்பது.

ராஜா
07-09-2008, 02:15 PM
கீதாவின் கதையை புலம்பல் என கூறவே முடியாது. காரணம் அதில் அன்றாடம் நடக்கும் சம்பவங்களை பிரதிபலித்து சத்தியத்தினை விளக்கியுள்ளது...

நன்றி மாம்ஸ்..!

அடிக்கடி வந்துட்டுப் போங்க..!

அன்புரசிகன்
07-09-2008, 02:28 PM
வெட்டிகரமான சிந்தனைகள்... 2.

"பற"வையின் சிறகுகளை வெட்டிவிட்டால் அது "நட"வை ஆகிவிடுமா..?

நிபுணர் : நடந்து முடிந்த அசம்பாவிதத்தின் பழியை யாராவது ஒருவர் மேல் போடுவதற்காக வரவழைக்கப்படுபவர்.

அலாரம் டைம்பீஸ் : ஒருவரை காலையில் சீக்கிரம் எழுப்பும் சாதனம்.. முக்கியமாக குழந்தைகள் இல்லாத வீடுகளில் இருப்பது.

இவை அனைத்தும் தத்துவமன்றோ மாப்பு............... :D

எங்கோ படித்தது பகிர்ந்துகொள்கிறேன்...

கேள்வி - உழுந்துவடையை கண்டுபிடித்தவன் யார்?
பதில் - வடையின் நடுவில் உழுந்து கலவையை கிள்ளி மிச்சம் பிடிக்கத்தெரிந்த கஞ்சப்பயல்...:lachen001:

ஓவியன்
07-09-2008, 02:32 PM
கீதாவின் கதை...
இல்லை, இல்லை பாடம்..!!

மிக நன்றாக இருந்தது, வாழ்த்துக்கள் ராஜா அண்ணா..!! :)

ராஜா
07-09-2008, 03:25 PM
http://www.offbeatearth.com/wp-content/uploads/2008/06/suitcase-go-kart-1.jpg

இது என்ன சூட்கேஸ்..?

நாளைக்கு சொல்றேன்..!

தீபன்
07-09-2008, 04:39 PM
கீதாவின் கதை நீதிக் கதைகள் பகுதிக்கு செல்ல வேண்டிய அருமையான பதிவு. ஆனாலும் புலம்பல்களுக்குள் ராஜா அண்ணர் போட்ட காரணம் எனக்கு புரிகிறது... நீதிக் கதைகள் படிப்பவர்களுக்கெதற்கு பாடமெடுக்கணும்... புலம்பிகிட்டு புத்தி தெளிவில்லாம இருப்பவங்களுக்குதானே அத சொல்லி முன்னேத்தனும்னுதான் இங்க பதிஞ்சிருக்கார்... சரியா ராஜாண்ண... (இல்லேன்னா இதயே என் புலம்பலா எடுத்துக்குங்க...)

ஓவியன்
07-09-2008, 05:03 PM
இது என்ன சூட்கேஸ்..?

நாளைக்கு சொல்றேன்..!

இப்படிப் படத்தைப் போட்டு புலம்ப வைக்கறதுக்குனே ஸ்பெசலாகச் செய்திருப்பாங்களோ..?? :D:D:D

ராஜா
08-09-2008, 06:08 AM
இப்படிப் படத்தைப் போட்டு புலம்ப வைக்கறதுக்குனே ஸ்பெசலாகச் செய்திருப்பாங்களோ..?? :D:D:Dநீங்க ஏன் புலம்பறீங்க தம்பி..?

poornima
08-09-2008, 06:15 AM
ஒரு நல்ல சிறுகதையை புலம்பல் பகுதியிலே கொண்டுவந்துட்டீங்களே ராஜா..

இப்படித்தான் நம்மீது அன்பு வைத்திருப்பவர்களை நாம் உதாசீனப்படுத்துகிறோம்.
நாம் எதிர்பார்க்கும் இடங்களில் உதாசீனப்படுத்தப் படுகிறோம்..

மதி
08-09-2008, 07:03 AM
கீதா கதை கீதை.
அசத்தலான அடுத்த திரிக்கு வாழ்த்துகள் ராஜாண்ணா..!

கொட்டுங்கள் உங்கள் புலம்பலை.

ராஜா
08-09-2008, 07:49 AM
அது பல படுக்கைகள் கொண்ட பெரிய மருத்துவமனை. . அவற்றில் ஒரு அறையில் இரு தீவிர* நோயாளிகள். ஒருவரை இன்னொருவர் பார்த்தது இல்லை. இருவருக்குமிடையே ஒரு தடுப்புச் சுவர். ஒருவர் படுக்கை சன்னல் அருகில். இன்னொருவருக்கு சன்னல் கிடையாது. எப்போதாவது வந்து செல்லும் மருத்துவச் செவிலியைத் தவிர... தனிமை.. தனிமை.. தனிமை..!

சன்னல் படுக்கை நோயாளிக்கு புற்றுநோய். இன்னொருவர் கடும் எலும்பு முறிவு நோயாளி. நாளடைவில் நட்பாகிவிட்டனர். ஒருமுறை எலும்பு நோயாளி சன்னல் நோயாளியிடம் சொன்னார்..

"உனக்காவது பொழுது போக்க, ஒரு சன்னல் இருக்கிறது.. எனக்கு அதுகூட இல்லை..!"

கவலைப்படாதே நண்பா.. நான் சன்னலூடே என்னென்ன காண்கிறேனோ, அவ்வளவையும் உன்னிடம் விவரிக்கிறேன். இதை ஒரு ஒப்பந்தமாகவே கடைப்பிடிப்பேன்..!

அன்று முதல் சன்னல் நோயாளி, தான் கண்ட காட்சிகளை சுவைபட தன் நண்பனுக்குக் கூறலானார்..

" நண்பா.. சன்னலுக்கு வெளியே ஒரு பெரிய ஏரி.. நடுவில் சிறு தீவு.. ஏரியில் படகுகள் மிதக்கின்றன.. ஏரிக்கரையில் அழகான பூங்கா..! காதலர்கள் தன்னை மறந்து கதைகள் பேசுகின்றனர்..!"

எலும்பு நோயாளிக்கு அப்படியே காட்சிகள் மனக்கண்ணில் விரியும்..

சன்னல் நோயாளி இன்னொரு நாள் சொல்வார்..

"ஏரிக்கரை ஓரமாக ஒரு சாலை.. அதில் மணப்பெண் அழைப்பு ஊர்வலம் போய்க்கொண்டிருக்கிறது.. குழந்தைகள் மகிழ்ச்சியுடன் ஓடித் திரிகின்றன. மணப்பெண்ணிடம் தோழி ஏதோ சொல்கிறாள்.. மணப்பெண் முகத்தில் அப்படி ஒரு வெட்கம்..!"

ஊர்வல அரவங்கள் எதுவும் எலும்பு நோயாளிக்கு கேட்கவில்லையாயினும் நாதசுரமும், தவிலும் ஒலிக்க ஊர்வலம் போகும் காட்சியை நன்கு அனுபவிப்பார்..

ஒருநாள் சன்னல் நோயாளி செத்துப்போனார்..

மீண்டும் எலும்பு நோயாளிக்கு வெறுமை... ஒருநாள் செவிலி வந்தபோது, தன் படுக்கையை சன்னல் ஓரமாக மாற்றித்தரும்படி கேட்டுக்கொள்ள, அவ்வாறே செய்யப்பட்டது.

இனி எனக்கு நன்கு பொழுது போகும் என்று எண்ணியவாறே.. தன் எலும்பு முறிவு வலியையும் பொருட்படுத்தாமல் மெல்ல தன் உடலை உயர்த்தி சன்னல் வழியே நோக்க.... அங்கே பெரிய சுவர்..! வேறு எதுவுமே இல்லை..!

அப்படியானால் சன்னல் நோயாளி சொன்ன கதைகள்...?

மறுநாள் செவிலி வந்தவுடன், நடந்தவற்றை எலும்பு நோயாளி கூறினார்..

செவிலி, எலும்பு நோயாளிக்கு ஊசி மூலம் மருந்தை ஏற்றியபடியே சொன்னாள்..

"நீங்கள் பார்க்கும் சுவர் கூட அவருக்கு தெரிந்திருக்காது.. புற்றுநோயின் தாக்கத்தால் அவர் பார்வையை எப்போதோ இழந்துவிட்டிருந்தார்..!"

நீதி : தன் துன்பங்களை மறைத்துக்கொண்டு மற்றவர்களை உற்சாகப்படுத்தும் மிகச்சில மனிதர்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள்.. அவர்களைப் போற்றாவிட்டாலும் பரவாயில்லை.. குறை கூறாதீர்கள்..!

அன்புரசிகன்
08-09-2008, 08:04 AM
http://www.offbeatearth.com/wp-content/uploads/2008/06/suitcase-go-kart-1.jpg

இது என்ன சூட்கேஸ்..?

நாளைக்கு சொல்றேன்..!

இது ஒரு பிளாஸ்டிக் அல்லது உடுப்பு வைக்கும் அல்லது நடுரோட்டில் கிடக்கும் அல்லது பணம் வைக்கும் சூட்கேஸ். அப்பாடா... இதுக்காக எத்தனை புலம்பல்... :D

அன்புரசிகன்
08-09-2008, 08:08 AM
மாப்பு.... இந்த சன்னல் கரை பதிவிற்கு பல நீதிகள் இருக்கும். தன் குறையை மற்றவருக்கு தெரியாமல் வாழ்ந்த அந்த மகானுக்கு என்ன சொன்னாலும் தகும்...

aren
08-09-2008, 08:18 AM
புலம்பல் பக்கம் என்று சொலிவிட்டு பல நீதிக்கதைகளை இங்கே கொடுக்கிறீர்கள்.

உங்களை புரிந்துகொள்ளவே முடியவில்லையே என்று எங்களை புலம்ப வைத்துவிட்டீர்கள்.

அமரன்
08-09-2008, 08:21 AM
புலம்பல் பக்கங்களில் மனதை அலம்ப நீதிக் கதைகள். சிரம் தாழ்த்துகின்றேன் அண்ணலே. சன்னல் கதை தத்துவார்த்தம். நீங்கள் சொன்ன நீதியை விட என்னைக் கவர்வது..

அந்த நோயாளியாக மனிதன். சன்னல் மனம்.. காட்சிகள் உலகம்.. உலகம் அழகுதான் நமது மனம் அழகாக இருக்கும் வரை. மனதை அழகாக வைத்திருப்போம். உலகம் தானாய் அழகாகும்.

அமரன்
08-09-2008, 08:23 AM
http://www.offbeatearth.com/wp-content/uploads/2008/06/suitcase-go-kart-1.jpg

இது என்ன சூட்கேஸ்..?

நாளைக்கு சொல்றேன்..!

அதான் பெயரிலேயே இருக்கே "சூட்" கேஸ் :)

Narathar
08-09-2008, 08:36 AM
நீதி : கானல் நீருக்காக காலடியில் ஊற்றெடுக்கும் நறுஞ்சுவை நீரை உதாசீனம் செய்யாதீர்...!

நீதி : தன் துன்பங்களை மறைத்துக்கொண்டு மற்றவர்களை உற்சாகப்படுத்தும் மிகச்சில மனிதர்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள்.. அவர்களைப் போற்றாவிட்டாலும் பரவாயில்லை.. குறை கூறாதீர்கள்..!

அருமையான இரண்டு நீதிக்கதைகளை புல்கம்பல் கதை என்று சொன்னதை வன்மையாக கண்டிக்கின்றேன்..............

தீபா
08-09-2008, 10:26 AM
இரு கதைகளும் மனதைக் கொள்ளை கொள்கின்றன...

நன்றி திரு.ராஜா அவர்களே

poornima
08-09-2008, 10:48 AM
அருமையான இரண்டு நீதிக்கதைகளை புல்கம்பல் கதை என்று சொன்னதை வன்மையாக கண்டிக்கின்றேன்..............

நாரதமுனி கருத்தை நானும் வழிமொழிகிறேன்..

ஜன்னல் கதை நிஜமாகவே நெகிழ வைத்தது..

பாலச்சந்தர் படத்தில் காட்டாத கதாபாத்திரம் போல் (உ-ம்) எதிர்நீச்சல் இருமல் தாத்தா போல் அந்த ஜன்னல் பாத்திரம்...

நீங்கள் சொன்ன நீதி..

வாழ்வில் இவற்றை எல்லாம் வைத்துப் பார்க்க..

இன்னும் கற்றுக் கொள்ள எவ்வளவோ இருக்கிறது..

புலம்பல் பக்கங்களில் இவற்றை சேர்க்காமல் ராஜாவின் சிறுகதைகள் என தனி இழையாய் தொடரலாமே...

ராஜா
08-09-2008, 12:40 PM
அனைவருக்கும் நன்றி..!

ராஜா
08-09-2008, 12:43 PM
http://www.offbeatearth.com/wp-content/uploads/2008/06/suitcase-go-kart-1.jpg
____________________________________________________________

http://www.offbeatearth.com/wp-content/uploads/2008/06/suitcase-go-kart-2.jpg
____________________________________________________________

http://www.offbeatearth.com/wp-content/uploads/2008/06/suitcase-go-kart-3.jpg
____________________________________________________________

http://www.offbeatearth.com/wp-content/uploads/2008/06/suitcase-go-kart-4.jpg
____________________________________________________________

http://www.offbeatearth.com/wp-content/uploads/2008/06/suitcase-go-kart-7.jpg
____________________________________________________________

அமரன்
08-09-2008, 12:46 PM
ஹஹ்ஹ்ஹா...
கார்க்கேஸா.. கார்த்திகேஜா...

ராஜா
08-09-2008, 02:33 PM
வெட்டிகரமான சிந்தனைகள் .. 3.

நடிகர் : பிரபலம் ஆவதற்காக வாழ்க்கையின் பெரும்பகுதியைச் செலவிட்டுவிட்டு, பிரபலம் ஆனபிறகு மற்றவர் அடையாளம் காணாமல் இருக்க அரும்பாடு படுபவர்..!

உயிரோட இருக்கும்போதே வாழ்க்கையை நல்லா அனுபவிங்க.. செத்துப்போன பிறகு உங்களால் எதுவுமே செய்யமுடியாது..!

உலகம் அமைதியாகவும், ஆனந்தமாகவும் இருக்க ஒரு சாவியை இன்னிக்குதான் கண்டுபிடிச்சேன். ஆனா பாருங்க.. அதுக்குள்ள யாரோ பூட்டை மாத்திட்டுப் போயிட்டாங்க..!

மதி
08-09-2008, 02:40 PM
வெட்டிகரமான சிந்தனைகள் .. 3.

உலகம் அமைதியாகவும், ஆனந்தமாகவும் இருக்க ஒரு சாவியை இன்னிக்குதான் கண்டுபிடிச்சேன். ஆனா பாருங்க.. அதுக்குள்ள யாரோ பூட்டை மாத்திட்டுப் போயிட்டாங்க..!
நல்ல புலம்பல் இது...

Narathar
08-09-2008, 02:54 PM
வெட்டிகரமான சிந்தனைகள் .. 3.
உலகம் அமைதியாகவும், ஆனந்தமாகவும் இருக்க ஒரு சாவியை இன்னிக்குதான் கண்டுபிடிச்சேன். ஆனா பாருங்க.. அதுக்குள்ள யாரோ பூட்டை மாத்திட்டுப் போயிட்டாங்க..!

அர்த்தமுள்ள புலம்பல் இது

நடிகர் : பிரபலம் ஆவதற்காக வாழ்க்கையின் பெரும்பகுதியைச் செலவிட்டுவிட்டு, பிரபலம் ஆனபிறகு மற்றவர் அடையாளம் காணாமல் இருக்க அரும்பாடு படுபவர்..!.

ஹா ஹா அருமையான புலம்பல் இது!!

ஓவியன்
08-09-2008, 02:56 PM
ஜன்னலோர நீதிக்கதை நெஞ்சை நெகிழ வைத்தது, மிக்க நன்றி ராஜா அண்ணே..!! :)

அன்புரசிகன்
08-09-2008, 03:10 PM
உலகம் அமைதியாகவும், ஆனந்தமாகவும் இருக்க ஒரு சாவியை இன்னிக்குதான் கண்டுபிடிச்சேன். ஆனா பாருங்க.. அதுக்குள்ள யாரோ பூட்டை மாத்திட்டுப் போயிட்டாங்க..!

வீட்டில் hair pin இல்லையா???? அதை வைத்து உடைச்சுப்பாருங்களேன்.... :icon_b:

ராஜா
08-09-2008, 03:15 PM
http://lh6.google.com/aroratejas2/SHKqmVu2ETI/AAAAAAAABHw/PHlQwfMGb8s/c33.gif

ராஜா
09-09-2008, 05:13 AM
நன்றி நண்பர்களே..!

ராஜா
09-09-2008, 05:15 AM
தினை விதைத்தால் தினை கிடைக்கும். வினை விதைத்தால் வினை கிடைக்கும். (புனித குரான் : 17:7)

நபிகள் நாயகம் (அவர்மேல் சாந்தமும் அமைதியும் நிலவுவதாக) அவர்களின் சீடர் ஒருவருக்கு மேலே உள்ள குரான் வரிகளின் பேரில் மிகுந்த நம்பிக்கையுண்டு. அவர் செல்லுமிடங்களில் எல்லாம் இந்த வரிகளை உரத்து உச்சரிப்பார்.

அந்தச் சீடர்மீது ஒரு யூதப் பெண்மணி அழுக்காறு கொண்டிருந்தாள். ஏதாவது சதி செய்து சீடருக்கு அவப்பெயர் வாங்கித்தர முனைந்தாள். ஒருநாள் நிறைய பலகாரங்கள் செய்து அவற்றில் நஞ்சு கலந்து சீடருக்கு அனுப்பினாள். அவளுக்குத் தெரியும்; சீடர் தான் மட்டும் உண்ணாமல் மற்றவருக்கும் பகிர்ந்து தருவாரென்று.

சீடர் அவசர பணி நிமித்தம் வெளியூருக்குச் செல்ல வேண்டியிருந்ததால், பலகாரங்களையும் தன்னுடனே எடுத்துச் சென்றார். போகும்வழியில் இரு பயணிகள் எதிர்ப்பட்டனர். பசியால் மிகவும் களைத்திருந்தனர். சீடர் அவ்வளவு பலகாரங்களையும் அவர்களிடமே கொடுத்துவிட்டுப் போய்விட்டார்.

நஞ்சு கலந்த பலகாரத்தை உண்ட இருவரும் இறந்துவிட்டனர். சீடர் கைது செய்யப்பட்டார். வழக்கு மதினாவில் வாழ்ந்துகொண்டிருந்த நபிகள் (ஸல்) அவர்கள் திருமுன்னருக்கு வந்தது. சதிகார யூதப் பெண்மணியும் விவரம் அறிந்துகொள்ள வந்திருந்தாள்.

அங்கே அவளுக்கு கடும் அதிர்ச்சி.. இறந்து கிடந்த இருவரும் அவளுடைய மகன்கள்..! வெளியூர் சென்று திரும்பும் வழியில் தன் தாயின் சதிக்கு தனயர்கள் இருவரும் பலியாகிவிட்டனர். யூதப் பெண்மணி அழுதாள், அரற்றினாள்.. தன் தவறை ஒப்புக்கொண்டாள்.

நீதி : தலைப்பில் உள்ளது..!

ராஜா
09-09-2008, 07:30 AM
http://i292.photobucket.com/albums/mm22/arroo/fancyheadset.jpg

அதுவா..? நம்மாளு மொக்கைக்கு தலை கொஞ்சம் பெருசு..!

ராஜா
09-09-2008, 07:32 AM
http://i292.photobucket.com/albums/mm22/arroo/howtogetupearly.jpg

திருவாட்டி மொக்கை வேலையா இருக்குமோ..?

அமரன்
09-09-2008, 07:37 AM
புலம்பல் பக்கம் பொன் முட்டை இடும் வாத்து.

ஆரோக்கியமாக உள்ளது இப் பக்கமும் படித்தவர் உட் பக்கமும்.

தொடர்ந்து தாருங்கள் அண்ணா.

கடைசி இரண்டு படங்களும் எனக்குத் தெரியவில்லை. மற்றவர்களுக்கு எப்படி?

ராஜா
09-09-2008, 07:49 AM
இப்போது ஃபோட்டோ பக்கெட் தொடுப்பு வழங்கியிருக்கிறேன்..

இப்போது தெரிகிறதா..?

அமரன்
09-09-2008, 07:51 AM
அச்சா..

திருவாளர் மொக்கை நித்திரைச்சாமியா.. ஊசி குத்தி எழுப்பவேண்டி இருக்கு..

இராஜேஷ்
09-09-2008, 08:18 AM
மிகவும் அருமை இராஜா அவர்களே!, இன்றைய இயந்திர வாழ்க்கையில் பெருபாலனோர் அன்பை தன்னிடமிருந்து விரட்டியடித்து விட்டு ஏங்கோ தேடி அலைந்து கொண்டிருக்கிண்றன்ர்.

அதை அர்புதமாக விளக்கியது உங்கள் கட்டுரை. நன்றி இராஜா

நன்பர்களே! வந்துவிட்டேன் மீண்டும்! மண்ணிக்கவும் இத்தனை நாள் வராமல் இருந்ததற்கு.

ராஜா
09-09-2008, 08:20 AM
வெட்டிகரமான சிந்தனைகள்... 4.

உடம்பு இளைக்க கடும் பயிற்சி மேற்கொண்டதில், பதினான்கே நாட்களில் நான் 2 வாரங்களை இழந்திருந்தேன்..!

எனக்குன்னு சில உறுதியான கொள்கைகள் வச்சிருக்கேன்.. உனக்கு பிடிக்கலேன்னா சொல்லு.. மாத்திக்கறேன்..!

உங்கள் முடிவை ஏற்குமாறு சிலரை வற்புறுத்த முடியாது. அப்போ நீங்க செய்ய வேண்டியது இதுதான்.. திருப்பி திருப்பி தொல்லை கொடுத்துகிட்டே இருங்க.. கொஞ்ச நாள்ல அவங்க வெறுத்துப்போய் உங்க வழிக்கே வந்துடுவாங்க.. வேற வழியில்லாம.. ( முக்கியமா காதல் மேட்டர்ல ஒர்க் அவுட் ஆகும்)

Narathar
09-09-2008, 09:15 AM
அருமையாக செல்கின்றது இந்தத்திரி.....

இப்படியே நகர்த்திச்செல்லுங்கள்.

நன்றிகலந்த வாழ்த்துக்கள்

poornima
09-09-2008, 09:38 AM
கலகலக்கவும் வைக்கிறது திரி பாராட்டுகள்..தொடருங்கள்

மதி
09-09-2008, 10:02 AM
வெட்டிகரமான சிந்தனைகள்... 4.உங்கள் முடிவை ஏற்குமாறு சிலரை வற்புறுத்த முடியாது. அப்போ நீங்க செய்ய வேண்டியது இதுதான்.. திருப்பி திருப்பி தொல்லை கொடுத்துகிட்டே இருங்க.. கொஞ்ச நாள்ல அவங்க வெறுத்துப்போய் உங்க வழிக்கே வந்துடுவாங்க.. வேற வழியில்லாம.. ( முக்கியமா காதல் மேட்டர்ல ஒர்க் அவுட் ஆகும்)அட இது நல்லாருக்கே.. முயற்சி செஞ்சு பார்க்க வேண்டியது தான்.!?!?! :D:D:D

ராஜா
10-09-2008, 05:03 AM
விடியத் தொடங்கியிருந்தது. கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு என் சொந்த ஊருக்கு வருகிறேன். பேருந்து வந்து நின்றது . ஏறி ஜன்னலோர இருக்கையில் அமர்ந்தேன். பேருந்து புறப்பட்டது.

" டிக்கெட்.. டிக்கெட்.."

கண்டக்டரின் குரல் எனக்கு மிகவும் பரிச்சயமாக இருந்தது திரும்பிப் பார்த்தேன், சம்பத்! என் வகுப்பு தோழன்.!

" டேய் , சம்பத் .. நல்லாயிருக்கியா..?"

"கதிரு, நீ நல்ல இருக்கியா ? எவ்வளவு வருசம் ஆச்சுடா உன்னை பார்த்து.. "

மேலும் பேச வேண்டியிருந்தது.

" இரு.. எல்லோருக்கும் டிக்கெட் குடுத்துட்டு வந்துடுறேன்.." என்று நகர்ந்தவன் பத்து நிமிடத்தில் மொத்த பேருக்கும் டிக்கெட் கொடுத்துவிட்டு வந்து என் பக்கத்தில் உட்கார்ந்தான். வண்டி கருங்கல்பட்டி கடந்தது.

"என்னடா சம்பத்... பள்ளிக்கூடத்துல படிக்கும்போதே பழைய பஸ் டிக்கெட் எல்லாம் பொறுக்கி வச்சுகிட்டுச் சுத்துவ .. இப்ப கண்டக்டாராவே ஆயிட்டியா ... ?

" நானெங்க படிச்சேன் .. கடைசியில இதான்.."

சொல்லிக்கொண்டே, "தாஜ்மஹால்.. தாஜ்மஹால்..யாரு ஏறங்குறது..?" என்று உரக்கக் குரல் கொடுத்தான்.

ஓரிருவர் இறங்கினார்கள். திரும்ப என்னருகில் வந்தமர்ந்தான்.

" டேய் ! இது சமாதி ஸ்டாப் இல்ல..? நீ என்னவோ புதுசா 'தாஜ்மஹால்'ன்னுற.. ?"என்றேன் குழப்பத்துடன்.

"நீ சொல்லுறதது சரிதான் இது சமாதி ஸ்டாப் தான் ஆனா, இது டவுன் இல்ல.. கிராமம். இங்குள்ள ஜனங்களெல்லாம் ரொம்ப செண்டிமெண்ட் பாப்பாங்க. காலைல பஸ்ல ஏர்றவன் ஒரு நல்லது கெட்டதுக்கு போவான். நாம் அங்க எறும்போதோ இறங்கும்போதோ 'சமாதி.. சமாதி..'ன்னு சொன்னா அவங்க மனசு சங்கடப்படும். அதான் நானே "தாஜ்மஹால்"ன்னு ஸ்டாப் பேர மாத்தி கூப்பிட்டு பழகிட்டேன். இப்ப இந்த வழிய போற எல்லா பஸ்லயும் " தாஜ்மஹால்"ன்னு தான் பேரு இருக்கும்..."

பேசிக்கொண்டிருக்கும்போதே என் ஊர் வந்தது சம்பத்திடம் விடை பெற்று இறங்கினேன்.

படிக்காமல் தறுதலையாய் திரிந்ததால் நல்ல உத்தியோகதிற்க்கு போகாமல் இப்படி கண்டக்டராகி விட்டான் சம்பத், எனச் சற்று முன் கேலியாக நினைத்தேனே... இவனா படிக்காதவன் ? பெரிய பல்கலைக்கழகம் ஒன்றில் மிகப்பெரிய மேலான்மைப் படிப்பு படித்து முடித்துவிட்ட கர்வத்தோடு ஊர் திரும்பும் எனக்கு அங்கே சொல்லித்தரும் ' வாடிக்கையாளாரின் திருப்தி 'யை இந்த படிக்காத நண்பன் எவ்வளவு எளிதாக சொல்லிவிட்டு போய்விட்டான் .!!!

நீதி : கல்லூரிகள் கற்பிக்காத பாடங்கள் அனேகம் இருக்கின்றன.

ராஜா
10-09-2008, 05:07 AM
http://i292.photobucket.com/albums/mm22/arroo/too_drunk_010.jpg

மாப்பிள்ளை பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் இருந்தார்ன்னு சொல்றதெல்லாம் டூப்பு.. நம்பாதீங்க..!

ராஜா
10-09-2008, 05:12 AM
வெட்டிகரமான சிந்தனைகள் .. 5.

இலக்கியம் : அறிவாளிகள் மேற்கோள் காட்டுவது.. பெரும்பாலும் முழுமையாக படிக்காமலே..!

நிபணர் : பெரும்பான்மையோர் நம்பிக்கைகளுக்கு எதிரான கருத்தைத் தெரிவிப்பவர்.

தத்துவாசிரியர் : வாழும்போது முட்டாள் என்றும் செத்தபிறகு அறிவாளி என்றும் மதிப்பிடப்படுபவர்.

மதி
10-09-2008, 05:14 AM
வெட்டிகரமான சிந்தனைகள் .. 5.

தத்துவாசிரியர் : வாழும்போது முட்டாள் என்றும் செத்தபிறகு அறிவாளி என்றும் மதிப்பிடப்படுபவர்.
நான் ஒரு தத்துவ ஆசிரியருங்கோ...:D:D:D:D
முதல் பாதி உண்மை. மீதியை மத்தவங்க தான் சொல்லணும்.

ராஜா
10-09-2008, 05:26 AM
http://i144.photobucket.com/albums/r163/arrajar/clip_image004.gif

என்னுள்ளே நீ..!

மதி
10-09-2008, 05:49 AM
http://i144.photobucket.com/albums/r163/arrajar/clip_image004.gif

என்னுள்ளே நீ..!

ஒரு நிமிடம் தடுமாற வைத்து விட்டீர்கள்..
இப்போது புரிந்தது. :)

poornima
10-09-2008, 06:36 AM
அசத்துங்க ராஜா.. பாராட்டுகள்

அமரன்
10-09-2008, 07:35 AM
பொருள்படப் புலம்பும் இந்தப் பக்கம் பல உண்மைகளை நிச்சயம் வெளிச்சம் போட்டுக்காட்டும். அதுக்கு வழிநடத்துனர் கதை சின்ன உதாரணம். தொடருங்கள் அண்ணா.

ராஜா
10-09-2008, 11:17 AM
அன்றாடம் தவறாது வந்து பாராட்டி ஊக்குவிக்கும் அனைவருக்கும் நன்றி..!

உங்கள் ஊக்குவிப்புதான் எனக்கு சக்தியளிக்கும் எரிபொருள்..!

தீபன்
11-09-2008, 03:28 AM
பெண்ணை மணக்கப் போகிறாய் - அவள் அழகை மாத்திரமன்று!

பணத்திற்காக திருமணம் செய்யாதே - பணத்தை இலகுவில் கடன் வாங்கலாம்!

காதல் என்பது வாழ்க்கைப் புயலில் ஒரு துறைமுகம் - திருமணமென்பது துறைமுகத்திலேயே வீசும் புயல்!

கணவன் மறப்பதை குறித்து மனைவி வருந்துகிறாள் - மனைவி மறக்காமலிருப்பதை குறித்து கணவன் வருந்துகிறான்!

மனைவியிடம் விவாதித்து வெற்றிபெற்ற புத்திசாலி கணவன் செய்யும் முதல் காரியம் மனைவியிடம் மன்னிப்பு கேட்பதுதான்!

புத்திசாலி மிகவும் அழகான பெண்ணை மணந்துகொள்ள மாட்டான்!

கணவனாக இருப்பது முழுநேர வேலை!

கல்யாணம் செய்து கொள்ளுங்கள். நல்ல மனைவி கிடைத்தால் மகிழ்ச்சியான வாழ்க்கை கிடைக்கும். அது உங்களுக்கு கிடைக்கும் பயன். மோசமான மனைவி கிடைத்தால் நீங்கள் தத்துவ ஞானியாகிவிடுவீர்கள். அது சமுதாயத்திற்கு கிடைக்கும் பலன்!

(இதுவெல்லாம் என் புலம்பல்களல்ல... பல அறிஞர்களின் புலம்பல்கள்...!)

ராஜா
11-09-2008, 04:02 AM
அருமையான புலம்பல்கள் தீபன் அவர்களே..!

இட்டமைக்கு நன்றி..!

ராஜா
11-09-2008, 04:22 AM
வெட்டிகரமான சிந்தனைகள் ... 6.

உண்மை கற்பனையைவிட விசித்திரமானது என்று யார் சொன்னது..? என் மகன் வைக்கும் அரியர்ஸ்களுக்கு அவன் சொல்லும் காரணங்களைக் கேட்டுப்பார்க்கச் சொல்லுங்கள்..!

பணத்தால் மகிழ்ச்சியை விலைக்கு வாங்க முடியாது.. அப்படி உங்களால் வாங்க முடிந்தால், மகிழ்ச்சியை குறைந்த வாடகைக்காவது மற்றவர்களுக்குக் கொடுங்கள்..!

வாழ்க்கையில் நான் செய்த தவறு என்ன என்று இறைவனைக் கேட்டேன். அதைச் சொல்ல எனக்கு ஆயுள் போதாது; தண்ணியைக் குடி.. தண்ணியைக் குடி என்றார் கடவுள்..!

ராஜா
11-09-2008, 04:30 AM
http://i144.photobucket.com/albums/r163/arrajar/clip_image001.gif

தோற்றப் பிழை..!

ராஜா
11-09-2008, 04:36 AM
ஏம்பா..! "அந்த" அம்மாவோட பொண்ணு ஊட்டியில படிச்சுதுன்னு சொன்னாங்களே... அதுவா இது..?

http://i144.photobucket.com/albums/r163/arrajar/Amazing119.jpg

ராஜா
11-09-2008, 04:40 AM
சீனாவில் ஒரு ஊரில் பத்து விவசாயிகள் இருந்தார்கள்.
ஓரு நாள் அவர்கள் தத்தம் நிலங்களில் உழவு வேலை செய்து கொண்டிருந்தார்கள்.
அப்பொழுது வானம் இருட்டிக் கொண்டு வந்தது. பயங்கர மின்னலுடன் இடி இடித்தது.
பயந்து போன அவர்கள் பக்கத்தில் இருந்த ஒரு பாழடைந்த மண்டபத்தில் ஓடி ஒளிந்து கொண்டனர்.

வெகுநேரமாகியும் மின்னல் வெட்டுவதும் இடி இடிப்பதும் நிற்கவில்லை. அவற்றின் உக்கிரம் வேறு அதிகரித்துக் கொண்டே போனது.

பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்த விவசாயிகளில் ஒருவன் 'நம்மிடையே ஒரு மகாபாவி இருக்கிறான். அவனைக் குறி வைத்துத்தான் கடவுள் இடியையும் மின்னலையும் ஏவியிருக்கிறார். அந்தப் பாவியை வெளியே அனுப்பிவிட்டால் மற்றவர்கள் பிழைத்துக் கொள்ளலாம்' என்று சொன்னான்.

மற்றவர்கள் இதனை ஆமோதித்தார்கள்.

இத்தனை பேரில் அந்தப் பாவியை எப்படி அடையாளம் கண்டு கொள்வது என்று விவாதம் நடந்தது. விவாதத்தின் முடிவில் தீர்ப்பைக் கடவுளிடமே விட்டு விடுவது என்று முடிவாயிற்று. அதன் படி அனைவரும் தத்தம் தொப்பிகளைக் கையில் பிடித்துக் கொண்டு தொப்பியை மழையில் நீட்டுவது என்று முடிவாயிற்று.

அனைவரும் தத்தம் தொப்பிகளை மழையில் நீட்டினர்.

பயங்கரமான இடி முழக்கத்துடன் ஒரு மின்னல் வெட்டியது. அதில் ஒரு விவசாயியின் தொப்பி மட்டும் எரிந்து சாம்பலாகியது.

மற்ற ஒன்பது விவசாயிகளும் "இவன்தான் பாவி. இவனை முதலில் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளு" என்று கத்திக் கொண்டே அவன் மேல் பாய்ந்தனர்.

அந்த விவசாயி கெஞ்சிக் கதறி தான் அப்பாவி என்று மன்றாடினான். மற்றவர் யாரும் காதில் போட்டுக் கொள்ளவில்லை. அவனை பலவந்தமாகக் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளினர்.

அவன் கதறிக் கொண்டே மழையில் ஒடினான்.

அப்போது அதி உக்கிரமாக ஒரு மின்னல் தாக்கி இடி இடித்தது. ஒடிக்கொண்டிருந்த விவசாயி அதிர்ச்சியில் உறைந்து நின்று விட்டான். சற்று நேரத்தில் நிலைக்குத் திரும்பி மண்டபத்தைத் திரும்பிப் பார்த்தான்.

மண்டபத்தில் இடி விழுந்து நொறுங்கிக் கிடந்தது. ஒரு புண்ணியவானின் புண்ணிய பலத்தில் தப்பித்திருந்த ஒன்பது விவசாயிகளும் அவனை வெளியே தள்ளிப் பாதுகாப்பை இழந்து பரிதாபமாகக் கருகிச் செத்துப் போய் விட்டனர்.

நீதி : கண்ணால் காண்பதும் பொய். காதால் கேட்பதும் பொய்.
தீர விசாரித்துத் தெளிவதே மெய்.

poornima
11-09-2008, 08:13 AM
புலம்பலில் கூட்டு சேர்ந்திருக்கும் தீபனுக்கு பாராட்டுகள்..

தோற்றப்பிழையும் மலையரசியின் மகளா என கலாய்த்திருக்கும் படமும் அருமை.

இந்தத் திரியை புலம்பல்கள் என பெயரிட்டிருப்பது மட்டுமே சில வேளைகள்
நெருடுகிறது ராஜா.. உங்களுக்கு..?

ராஜா
11-09-2008, 01:57 PM
கலக்கல் பக்கங்கள்..! (சரியா பூர்ணிமா..?)

ராஜா
12-09-2008, 10:57 AM
http://i144.photobucket.com/albums/r163/arrajar/54599242.jpg

வீட்டுக்கு(ள்) ஒரு மரம் வளர்ப்போம் என்பது இதுதானோ..?

ராஜா
12-09-2008, 11:00 AM
http://i144.photobucket.com/albums/r163/arrajar/clip_image002.jpg

நல்லதும் தீயதும்..!

ராஜா
12-09-2008, 11:14 AM
வெட்டிகரமான சிந்தனைகள்... 7.

மனிதர்கள்...

வாழைப்பழம் போன்றவர்கள் ; பிஞ்சாக இருக்கும்போது முரடாகவும் துவர்ப்பாகவும் இருப்பார்கள். பழுத்துவிட்டாலோ கொழகொழவென்று ஆகிவிடுவார்கள்..!

மனிதர்கள்...

அரசாங்க நிதிப் பத்திரங்கள் போன்றவர்கள்; எளிதில் முதிர்வு (மெச்சூர்) ஆகமாட்டார்கள்..!

மனிதர்கள்...

காலநிலையைப் போன்றவர்கள் ; என்ன செய்யப்போகிறார்கள் என்று கணிக்கவே இயலாது..!

மனிதர்கள்...

தொ.கா. விளம்பரம் போன்றவர்கள் ; வீண்பெருமை பேசுவார்கள். பலவீனங்களைப் பற்றி மூச்சு விடமாட்டார்கள்..!

ராஜா
12-09-2008, 11:27 AM
ஒரு நாட்டை ஆண்ட அரசனுக்கு வயதாகிக் கொண்டிருந்தது. தலைமுடி கொட்டி வழுக்கை அதிகமாகிக் கொண்டிருந்தது. அரசனுக்கு தன் கம்பீரம் குறைந்து விடும் என்ற கவலை அதிகமாகிப் போய் ஒரு நாள் அரசவைத் தலைமை மருத்துவனிடம் நிவாரணம் கேட்டான்.

தலைமை மருத்துவன் "மன்னா! இதற்கு மருந்தே கிடையாது" என்று உண்மையைச் சொன்னான். அரசனுக்கு அந்த பதில் பிடிக்கவில்லை. கோபமடைந்தான். ஆத்திரம் தலைக்கேறி தலைமை மருத்துவனை சிறையில் அடைக்குமாறு உத்தரவிட்டான்.

ஊரில் இருக்கும் அனைத்து சிறந்த மருத்துவர்களையும் வரவழைத்தான். ஒரே வாரத்தில் தன் பிரச்சனைக்குத் தீர்வு கண்டு பிடிக்குமாறு பணித்தான்.

மருத்துவர்கள் அனைவரும் கூடி விவாதித்தனர். அரசனிடமிருந்து எப்படித் தப்பிப்பது என்றுதான் தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒரு துடிப்பான இளைஞன் இருந்தான். பிரச்சினைக்குத் தன்னிடம் தீர்வு இருப்பதாகக் கூறினான். அனுபவம் முதிர்ந்த வயதான மருத்துவர்கள் கூட்டத்தில் இருந்தனர். அவனைப் பார்த்து சிரித்தனர். "வழுக்கைக்குத் தீர்வா? போய் வேறு வேலை இருந்தால் கவனியப்பா" என்று கூறினர்.

நாள் செல்லச் செல்ல அவர்களுக்கு அரசனிடமிருந்து தப்பிக்கும் வழி தெரியவில்லை.

அரசனை இந்த நிலையில் சந்தித்தால் கண்டிப்பாகத் தலைமை மருத்துவனுக்கு நேர்ந்த கதிதான் தமக்கும் நடக்கும் என்று எல்லோருக்கும் புரிந்தது. கதி கலங்கிக் கொண்டிருந்தார்கள். அப்போது இளைய மருத்துவன் திரும்பவும் "என்னை நம்பினால் நம் எல்லோருக்கும் விடிவு நிச்சயம்" என்று கூறினான்.

வேறு வழியில்லாமல் அனைவரும் அவன் வழியில் செல்ல ஒத்துக் கொண்டார்கள். அவனோ, மருந்தை நேரடியாக அரசனிடம்தான் தருவேன், என்று கண்டிப்பாகச் சொல்லி விட்டான்.

அடுத்த நாள் சபை கூடியது. மருத்துவர்கள் இளைய மருத்துவனைக் கூட்டிக் கொண்டு அரசவைக்கு வந்தார்கள்.

அவன் அரசனிடம் ஒரு குடுவையைக் கொடுத்தான். "மன்னா இதில் இருக்கும் மருந்தை தினமும் சிரசில் தேய்த்துக் கொண்டு வந்தால், ஒரே மாதத்தில் முடி கொட்டுவது நின்று போகும். இரண்டே மாதத்தில் முடியில்லாத இடத்திலெல்லாம் முடி வளர ஆரம்பிக்கும், ஆறே மாதத்தில் கருகருவென தலையெங்கும் தலைமுடி அழகாக வளர்ந்திருக்கும்" என்றான்.

மன்னனுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. "இப்போதே அந்தப்புரத்திற்குப் போய் தலையில் மருந்தைத் தடவிக் கொள்கிறேன்" என்று கிளம்பினான்.

அப்போது மருத்துவன் "மன்னா. இந்த மருந்து வேலை செய்ய வேண்டுமென்றால், அதைத் தலையில் தடவிக் கொள்ளும் போது மட்டும் நீங்கள் குரங்கை நினைக்கக் கூடாது!" என்றான்.

முட்டாள் மன்னன் சரியென்று சொன்னான். மந்திரியிடம் மருத்துவர்களுக்குப் பொன்னும் பொருளும் கொடுத்து சிறப்பாக மரியாதை செய்து அனுப்பி வைக்கச் சொல்லிவிட்டு அந்தப்புரத்திற்கு வேகமாகச் சென்று விட்டான். மருத்துவர்களும் தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஊரை விட்டே ஓடி விட்டார்கள்.

அந்தப்புரத்திற்குச் சென்ற அரசன், அங்கு குடுவையைக் கையில் எடுத்து அதிலிருந்த மருந்தைத் தலையில் தேய்க்கப் போனான். அப்போது அவனுக்கு மருத்துவன் சொல்லிய பக்குவம் கவனத்திற்கு வந்தது. "குரங்கை நினைக்கக் கூடாது" என்று நினைத்தவுடன் குரங்கைப் பற்றி நினைக்க ஆரம்பித்து விட்டான். என்ன முயற்சித்தும் அவன் நினைவிலிருந்து குரங்கை அகற்ற இயலவில்லை.

மன்னனுக்கு மருத்துவனின் தந்திரம் புரியவில்லை. சற்று நேரம் கழித்து முயற்சிப்போம் என்று வேறு வேலையில் ஈடுபட்டான்.

ஆனால் ஒவ்வொரு முறை அவன் மருந்தைக் கையில் எடுத்த போதும் மருத்துவனின் அறிவுரை மனதில் தோன்றி அவனுக்குக் குரங்கு பற்றிய யோசனை வந்து கொண்டே இருந்தது.

பல நாள் திரும்பத் திரும்ப முயற்சித்து விட்டு, இந்தச் சிரமத்திற்குப் பேசாமல் வழுக்கையாகவே இருந்து விடலாம் என்று தீர்மானித்து விட்டான்.

நீதி : பிடிவாதக்காரர்களையும், முட்டாள்களையும் திருத்த நேர்வழி பயன்படாது..

அன்புரசிகன்
12-09-2008, 05:45 PM
ஒன்றை செய்யாதே என்றால் தான் செய்யச்சொல்லி மனம் ஏங்கும்.. இதற்கு மன்னன் விதிவிலக்காகிவிடுவாரா..............

தொடருங்கள் மாப்பு.

ராஜா
13-09-2008, 05:37 AM
நன்றி மாம்ஸ்..!

poornima
13-09-2008, 06:54 AM
கலக்கல் பக்கங்கள் - கலக்கி கொண்டிருக்கும் பக்கங்கள்.. நன்றி ராஜா
(நான் சொன்னதையும் கேட்டு.. எ..வ்......ளோ நல்லவங்க நீங்க)

வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம் என்றுதானே சொல்லப்பட்டது.வீடுடைத்து மரம்
காக்கிறார் போலும்.

நல்லது கெட்டதும் சேர்ந்தது தான் வாழ்க்கை (Good - Evil)

மனிதர்களைப் பற்றிய பார்வையும் மன்னன் சம்பவமும் ...

நீங்க கலக்குங்க ராசா

ராஜா
13-09-2008, 07:51 AM
நன்றி அக்கா...!

ராஜா
13-09-2008, 08:15 AM
சாமி என*க்கொரு உம்மை தெரிஞ்சாகணும்..!

<|>டி.வி.டி. ப்ளேயரின் ப்ளக்கை மாற்றிச் சொருகினால் படம் ரிவர்ஸ்ல தெரியுமா..?

<|> கோலங்கள் தொடரில் திருச்செல்வம் (தொல்ஸ்) தவிர வேற யாரும் நல்லவங்க இருக்காங்களா..?

<|> கோவிலில் தர்ம தரிசனம், சிறப்பு தரிசனம்ன்னு இருக்கே.. அதுக்கு கடவுள் ஒப்புதல் தந்தாரா..?

<|> சினிமாவில் மழைக்காட்சியில் பாடற ஹீரோயின் பெரும்பாலும் வெள்ளை ட்ரெஸ் போட்டுக்கறாங்களே ஏன்..?

இன்னும் சந்தேகம் இருக்குங்க.. அப்புறமா கேட்கறேன்..
மேலே உள்ளதுக்கு பதில் தெரிஞ்சா சொல்லுங்க சாமிகளா..!

அமரன்
13-09-2008, 08:39 AM
சிந்திக்க தூண்டும் விதத்தில் சிந்தும் பக்கம். கலக்கல். பேர் சொல்லும் இழை.
நான் ஒரு விதத்தில் திருவிளையாடல் தருமி மாதிரி..கேட்கத்தான் தெரியும். நன்றி அண்ணா.

ராஜா
13-09-2008, 09:08 AM
தண்ணியைப் பார்த்து செலவழியுங்கப்பு.. இல்லேண்ணா...

http://i292.photobucket.com/albums/mm22/arroo/2001181924942851000_rs.jpg

ராஜா
13-09-2008, 09:12 AM
நன்றி அமர்..!

ராஜா
13-09-2008, 09:22 AM
தகராறு நிறைந்த வரலாறு..(1)

விருப்பப் பட்டியல்

பேரரசன் நெப்போலியன் பெருங் களிப்பில் இருந்தான். போரில் பெற்ற மாபெரும் வெற்றிதான் அதற்குக் காரணம். அந்த வெற்றிக்குப் பேருதவியாக இருந்த அவனது நான்கு தளபதிளையும் அழைத்து "உங்களுக்கு என்ன* வேண்டுமானாலும் கேளுங்கள்" என்று கூறினான்.

முதல் தளபதி ஜெர்மனியைச் சேர்ந்தவன். அவன் "மன்னா! என்க்கு பாரிஸ் நகரத்தில் ஒரு வீடு கட்டிக் கொள்ள வெகுநாளாக ஆசை" என்றான்.

"உனக்கு பாரிஸ் நகரத்தில் பெரிய மாளிகையே கட்டித் தரச் சொல்கிறேன்" என்றான் நெப்போலியன்.

அடுத்தவன் பாரிஸ் நகரத்தைச் சேர்ந்தவன். தனக்கு சொந்தமாக ஒரு தங்கும் விடுதி (Hotel) நடத்த ஆசை என்று மன்னனிடம் கூறினான்.

மாமன்னன் நெப்போலியன் சிரித்துக் கொண்டே மகிழ்ச்சியுடன் ஏற்பாடு செய்வதாகக் கூறினான்.

மூன்றாம் தளபதி போலந்துக் காரன். அவன் தனக்கு திராட்சை மது செய்யும் தோட்டமும், தொழிற்சாலையும் வேண்டும் என்று கேட்டான். அதற்கும் நெப்போலியன் அதே பதில்தான் சொன்னான்.

கடைசி தளபதி ஒரு யூதன். அவன் நெப்போலியனிடம் இரண்டு வார விடுப்பு பரிசாக வேண்டும் என்று கேட்டான். அதற்கு மன்னன் நெப்போலியன் "உன் விடுப்பு நாளை முதல் தொடங்கும்" என்றான்.

அவன் பணித்தவுடன் வெளியே வந்த தளபதிகளில் முதல் மூவரும் யூதனைப் பார்த்து "சரியான முட்டாளாக இருக்கிறாயே! ஏதாவது விலை மதிப்புள்ளதாகக் கேட்காமல் விடுப்பைப் போய் கேட்டாயே?" என்று ஏளனம் செய்தார்கள்.

அதற்கு அவன் "நண்பர்களே! நீங்கள் கேட்டதையெல்லாம் மன்னன் ஏற்பாடு செய்து தருவதாகத்தான் கூறியிருக்கிறான். இன்னும் அவை உங்கள் கையில் கிடைக்கவில்லை. மன்னன் அவன் கொடுத்த வாக்குகளை நேரடியாகச் செயல் படுத்த அவனுக்கு நேரமிருக்கப் போவதில்லை. அவனது காரியதரிசியைத்தான் பணிக்கப் போகிறான். காரியதரிசியோ ஆயிரம் வேலை செய்பவன். அவனும் அவனுக்குக் கீழ் வேலை செய்பவர்களுக்குத்தான் இந்த வேலைகளைக் கொடுப்பான். உங்களுக்கு அளிக்கப் பட்ட பரிசுகளுக்கான வாக்குறுதிகளின் முக்கியத்துவம் இப்படி கீழே ஆணைகள் செல்லச் செல்ல கரைந்து கொண்டே போய் மறக்கப் படும் வாய்ப்புகள் அதிகம்" என்றான்.

மற்ற தளபதிகள் "அப்படி நடந்தால் மன்னனிடம் போய் முறையிடலாம்தானே" என்றார்கள்.

யூதத் தளபதி சொன்னான் "நண்பர்களே. மன்னனுக்கு இன்றைக்கு இருக்கும் வெற்றிக் களிப்பு வெகுநேரம் நிலைக்காது. போரில் பெற்ற வெற்றியின் மதிப்பு நாளடைவில் மற்ற பிரச்சினைகளுக்கு இடையே ஒளியிழந்து போகும். அதோடல்லாமல் இந்தக் கணத்தின் உங்கள் துறையின் வெற்றி மட்டுமே அவன் கண் முன் நிற்கிறது. நாளை உங்கள் துறையில் ஏதாவது தவறு நடந்தால் நீங்கள் தலை நிமிர்ந்து அவன் முன் நின்று உங்கள் பரிசை உரிமையுடன் நினைவுறுத்த இயலாது. ஆனால் நான் கேட்ட பரிசோ இப்போது என் கையில்"

இதைக் கேட்ட மற்றவர்கள் பேச்சடைத்துப் போனார்கள். யூதத் தளபதி தன் விடுமுறையைத் திட்டமிடக் கிளம்பினான்.

நீதி : அரிதான இடத்தில் உடனே கிடைக்கக் கூடிய ஒரு ரூபாய் பின்னால் கிடைக்கப் போகும் நூறு ரூபாய்களை விட மேலானது.

ஓவியா
13-09-2008, 09:47 AM
ஓஓஓஓஓஓ யூதத்தளபதியின் அறிவாற்றல் அபாரம்.

ராஜா அண்ணா,
திரியை அருமையாய் நகத்தி செல்வதற்க்கு பாராட்டுக்கள்.

ராஜா
13-09-2008, 09:51 AM
நன்றி பாசமலரே..!

poornima
13-09-2008, 11:46 AM
நன்றி அக்கா...!

எப்பலேர்ந்து..? ஏ......ன்? நல்லாத்தானே போய்க்கிட்டிருக்கு..?

poornima
13-09-2008, 11:50 AM
சாமி என*க்கொரு உம்மை தெரிஞ்சாகணும்..!

<|>டி.வி.டி. ப்ளேயரின் ப்ளக்கை மாற்றிச் சொருகினால் படம் ரிவர்ஸ்ல தெரியுமா..?

<|> கோலங்கள் தொடரில் திருச்செல்வம் (தொல்ஸ்) தவிர வேற யாரும் நல்லவங்க இருக்காங்களா..?

<|> கோவிலில் தர்ம தரிசனம், சிறப்பு தரிசனம்ன்னு இருக்கே.. அதுக்கு கடவுள் ஒப்புதல் தந்தாரா..?

<|> சினிமாவில் மழைக்காட்சியில் பாடற ஹீரோயின் பெரும்பாலும் வெள்ளை ட்ரெஸ் போட்டுக்கறாங்களே ஏன்..?

இன்னும் சந்தேகம் இருக்குங்க.. அப்புறமா கேட்கறேன்..
மேலே உள்ளதுக்கு பதில் தெரிஞ்சா சொல்லுங்க சாமிகளா..!

பல நோக்கில் இருக்கின்றன கேள்விகள்.. தொடரட்டும் சந்தேகங்கள்..
கேள்விகள் அபத்தமாக தோன்றினாலும் உண்மையில் சிந்திக்க
வைப்பவயே பாராட்டுகள் ராஜா

ராஜா
13-09-2008, 12:34 PM
எப்பலேர்ந்து..? ஏ......ன்? நல்லாத்தானே போய்க்கிட்டிருக்கு..?

:icon_b::icon_b::icon_b::icon_b::icon_b::icon_b::icon_b:நோக்கியா ட்யூன் தெரியும்தானே..?
(டொடடொட்டொய்ங் டொடடொட்டொய்ங் டொய்ங்..!)

இது 19ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஸ்பெயின் இசைக்கலைஞர் ஃப்ரான்சிஸ்கோ தரேகாவின் கிதார் இசையை அடிப்படையாகக் கொண்டது.

பழைய நோக்கியா போன்களில் க்ராண்ட் வால்ஸ் என்ற பெயரில் குறிப்பிடப்பட்டிருந்த இந்த ட்யூன், மக்களின் பேராதரவு காரணமாக 1998 ல் நோக்கியா ட்யூன் ஆயிற்று..!

ராஜா
14-09-2008, 01:20 PM
http://i144.photobucket.com/albums/r163/arrajar/illusion_56.jpg

மறை புரண்ட நட்டு..!

ராஜா
14-09-2008, 01:24 PM
நாளை கலக்கல் பக்கங்களில் வர இருப்பவை...

1) கலக்கல் படம்..

2) கலக்கல் பாடம்.. (கதை)

3) கலக்கல் தகவல்..

4) கலக்கல் சிந்தனைகள்..

ராஜா
15-09-2008, 05:26 AM
பல நோக்கில் இருக்கின்றன கேள்விகள்.. தொடரட்டும் சந்தேகங்கள்..
கேள்விகள் அபத்தமாக தோன்றினாலும் உண்மையில் சிந்திக்க
வைப்பவயே பாராட்டுகள் ராஜாநன்றி பூர்ணிமா..!

(இன்று உங்கள் நாள்தானே..?)

ராஜா
15-09-2008, 05:29 AM
ஹி... ஹி...

அடுத்த பக்கம் போவோமா..?

ராஜா
15-09-2008, 05:31 AM
http://i144.photobucket.com/albums/r163/arrajar/clip_image003.jpg

கற்பித்தலும், கற்றலும்..!

தீபன்
15-09-2008, 05:37 AM
தகராறு நிறைந்த வரலாறு..(1)

விருப்பப் பட்டியல்

நீதி : அரிதான இடத்தில் உடனே கிடைக்கக் கூடிய ஒரு ரூபாய் பின்னால் கிடைக்கப் போகும் நூறு ரூபாய்களை விட மேலானது.

இப்பொழுதே கிடைக்ககூடிய சிறிய நலனிற்காக பொறுமையில்லாமல் பிந்தி வரக்கூடிய வாய்ப்புள்ள பெரிய நலனை இழப்பது உண்மையில் புத்திசாலித்தனமல்ல. முட்டாள்தனம். (வந்தால் மலை, போனால் முடி என்னும் சந்தர்ப்பத்தில் முடிக்கு ஆசைப்படுவது விவேகமில்லைத்தானே...!)
மேலும், நெப்போலியன் சர்வாதிகாரி. இன்றைய அரசியல் வாதி மாதிரியல்ல. அவன் ஆணையிட்டால் அது உடனே நிறைவேற்றப்பட்டுவிடும். எனவே இங்கு இந்த நீதி பொருத்தமல்ல.

ராஜா
15-09-2008, 05:40 AM
தகராறு நிறைந்த வரலாறு..

மூக்கறுப்பு யுத்தம்..!

கதாநாயகன் : தமிழ்நாடு, வில்லன் -கர்நாடகா.

அக்காலத்தில் நாயக்கர்களின் மதுரை நாடு - மைசூர்நாடு.

மதுரைநாட்டை ஆண்டுகொண்டிருந்தவர் திருமலை நாயக்கர். 1623 இலிருந்து 1659 வரைக்கும் மதுரையை ஆண்டவர்.

இவர் தம்முடைய ஆட்சிக் காலத்தில் தென்னாட்டு அரசியலில் பூந்து விளையாடியவர். விஜயநகரப் பேரரசின் அங்கங்களாக விளங்கியவைதாம் மதுரை, மைசூர், செஞ்சி, தஞ்சை ஆகிய நாடுகள். பேரரசுக்குக் கப்பம் கட்டி படைகளையும் அனுப்பவேண்டிய கட்டாயம். ஆனால் விஜயநகரப் பேரரசு பலவீனம் ஆனபிறகு, நாயக்கர்கள் சரியாக நடந்துகொள்ளவில்லை. திருமலை நாயக்கர் இந்தப் பக்கமும் அந்தப் பக்கமுமாகச் சேர்ந்துகொண்டும் தூண்டிவிட்டுக்கொண்டும் போர்புரிந்துகொண்டும் குழப்படிகளை ஏற்படுத்திக்கொண்டிருந்தார்.

தமிழ்நாட்டைக் கைப்பற்ற எண்ணியிருந்த கோல்கொண்டா, பீஜப்பூர் ஆகிய சுல்த்தான்களைத் தூண்டிவிடுவது; அவர்களுடன் சேர்ந்துகொண்டு மற்ற நாடுகளுடன் போரிடுதல்; அதன்மூலம் அவர்களைப் பலவீனப் படுத்துதல் போன்றவற்றைச்செய்துவந்தார். அவர் செய்த் காரியங்களால் பெயரளவில் இருந்த விஜயநகரப்பேரரசு அறவே அழிந்துபோயிற்று. கோல்கொண்டா, பீஜப்பூர் ஆகிய சுல்தானியர்களுக்கு மேன்மேலும் தமிழ்நாட்டின் பகுதிகள் அடிமையாகின. அவர்களுக்குத்தான் அதிக லாபம்.

இப்படிப்பட்ட விஷமங்களால் துன்பத்துக்கு ஆளாகியவர்களில் ஒருவர் மைசூர் நாட்டின் அரசர் கண்டீரவ நரச ராஜா. இவர் 1638 இலிருந்து 1659வரைக்கும் மைசூரை ஆண்டவர்.

திருமலை நாயக்கரைப் பழிவாங்கத் தருணம் பார்த்திருந்தார் நரச ராஜா. தக்க வாய்ப்புக் கிடைத்ததும் மதுரைநாட்டின்மீது படையெடுத்தார். மைசூர் படைகள் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சத்தியமங்கலத்தை முதலில் பிடித்துக்கொண்டன. மதுரை நாட்டில் சேலம், தர்மபுரி, கரூர், திருச்சியிலிருந்து தெற்கில் உள்ள பிரதேசங்கள் எல்லாமே இருந்தன. தஞ்சை, செஞ்சி ஆகியவை தனி நாடுகள்.

அந்தப் போரில் மைசூர்ப் படைகள் பெரும் அட்டூழியங்களைச் செய்தன. வழியில் பிடிபடுகின்றவர்களின் மூக்குகளையெல்லாம் அறுத்துவிட்டார்கள். அவ்வாறு அறுபட்ட மூக்குகளுக்குத் தக்க பரிசு கொடுக்கச் செய்திருந்தார் நரச ராஜா. மேலுதட்டுடன் மூக்கு இருக்கவேண்டும். மேலுதட்டின்மீது மீசை இருந்தால், அந்த மூக்குக்கு அதிகப் பரிசு...!

(மிகுதி.. நாளை..!)

ராஜா
15-09-2008, 06:36 AM
இப்பொழுதே கிடைக்ககூடிய சிறிய நலனிற்காக பொறுமையில்லாமல் பிந்தி வரக்கூடிய வாய்ப்புள்ள பெரிய நலனை இழப்பது உண்மையில் புத்திசாலித்தனமல்ல. முட்டாள்தனம். (வந்தால் மலை, போனால் முடி என்னும் சந்தர்ப்பத்தில் முடிக்கு ஆசைப்படுவது விவேகமில்லைத்தானே...!)

தீபரே.. நாகாக்க..!

காவாக்கால்......

நாளை கிடைக்கும் பலாக்காயைவிட இன்று கிடைக்கும் களாக்காய் சிறந்தது என்னும் தமிழ்ப் பழமொழிமுதல், கூட்டில் உருவாகப்போகும் பல பறவைகளைவிட கையிலிருக்கும் ஒரு பறவையே சிறந்தது என்னும் ஆங்கிலப் பழமொழிகள் வரை நான் சொன்னதையே வலியுறுத்துகின்றன.மேலும், நெப்போலியன் சர்வாதிகாரி. இன்றைய அரசியல் வாதி மாதிரியல்ல. அவன் ஆணையிட்டால் அது உடனே நிறைவேற்றப்பட்டுவிடும். எனவே இங்கு இந்த நீதி பொருத்தமல்ல.

மற்றவர்கள் விருப்பம் நிறைவேற்றப்படாமல் போகக்கூடிய சாத்தியக்கூறுகளைத் தெளிவாக அந்த யூதத் தளபதி கூறியிருக்கிறான் என்றே நினைக்கிறேன்.

ராஜா
15-09-2008, 06:40 AM
http://i144.photobucket.com/albums/r163/arrajar/31.jpg

இது என்னன்னு தெரியுதா..?

poornima
15-09-2008, 06:44 AM
http://i144.photobucket.com/albums/r163/arrajar/illusion_56.jpg

மறை புரண்ட நட்டு..!

மறை கழண்ட நட்டு.. :-)

poornima
15-09-2008, 06:45 AM
http://i144.photobucket.com/albums/r163/arrajar/clip_image003.jpg

கற்பித்தலும், கற்றலும்..!

வாவ்,, ஜூப்பர்ங்கண்ணா.. எப்படி இப்படி எல்லாம்..?

கண்மணி
15-09-2008, 06:46 AM
தெரியுதே.. நம்ம சாம்பவியோட கம்ப்யூட்டர். :)

நெப்போலியன் விஷயத்தில் யூதத் தளபதி செஞ்சது சரிதான் என்று நினைக்கிறேன். சர்வாதிகார எண்ணம் கொண்டவர்களின் கீழே உள்ளவர்களுக்கு நாளை என்ற நம்பிக்கை குறைச்சல்தான்.

அவங்க அத்தனைப் பேரும் அதற்குப் பின்னால் எத்தனைக் காலம் வாழ்ந்தார்கள் எனப் பார்த்தால் புரியும்.

ராஜா
15-09-2008, 06:50 AM
அட...!

டோக்கியோ நகரில், காரைவிட சைக்கிள் சீக்கிரம் பயணதூரத்தைக் கடக்கும்..!

சூதாட்ட நகரம் லாஸ் வேகாஸில், எந்த சூதாட்ட விடுதியிலும் கடிகாரம் இருக்காது..!

உலகில் நிறைய பேருக்கு இருக்கும் (முதல்) பெயர்.. முகம்மது..!

கார்ட்டூன் கதாநாயகன் ஹீரோ "பாப் ஐ" தெரியும்தானே..?

அவரின் மருமகன்களான 4 குட்டிப்பிசாசுகளின் பெயர் என்னென்ன தெரியுமா..?

* பிப் ஐ,

* பீப் ஐ,

* புப் ஐ,

* பூப் ஐ.

poornima
15-09-2008, 06:52 AM
http://i144.photobucket.com/albums/r163/arrajar/31.jpg

இது என்னன்னு தெரியுதா..?

பழைய டெலிஃபோன் எக்சேஞ்ச் ஆஃபீஸ் மாதிரி தெரியுது

ராஜா
15-09-2008, 06:53 AM
தெரியுதே.. நம்ம சாம்பவியோட கம்ப்யூட்டர். :)

நெப்போலியன் விஷயத்தில் யூதத் தளபதி செஞ்சது சரிதான் என்று நினைக்கிறேன். சர்வாதிகார எண்ணம் கொண்டவர்களின் கீழே உள்ளவர்களுக்கு நாளை என்ற நம்பிக்கை குறைச்சல்தான்.

அவங்க அத்தனைப் பேரும் அதற்குப் பின்னால் எத்தனைக் காலம் வாழ்ந்தார்கள் எனப் பார்த்தால் புரியும்.

:icon_b::icon_b::icon_b::icon_b::icon_b:

ராஜா
15-09-2008, 06:57 AM
பழைய டெலிஃபோன் எக்சேஞ்ச் ஆஃபீஸ் மாதிரி தெரியுது

ஹி..ஹி..!

நண்பர் கண்மணி சொன்னது போல, 60 ஆண்டுகளுக்கு முன்னால் உருவாக்கப்பட்ட முன்னோடிக் கணிணிகளுள் அதுவும் ஒன்று.

ராஜா
15-09-2008, 07:14 AM
சாமி.. எனக்கொரு உம்மை தெரிஞ்சாகணும்..!

(",") அகராதியில் ஒரு சொல்லுக்கு ஸ்பெல்லிங் தப்பா இருந்தா யாருக்குத் தெரியும்..?

(",") நாய்களுக்கு பிடித்த சுவைன்னு விளம்பரம் செய்யறாங்களே.. எப்படிக் கண்டுபிடிச்சாங்க..?

(",") அரளிக்கொட்டையை அரைச்சுக் குடிச்சா செத்துப்போயிடுவோம்ன்னு உலகுக்கு உணர்த்திய தியாகிக்கு அப்படி நடக்கும்ன்னு முன்னாடியே தெரியுமா..? இல்லே பசிக்கு தின்னுருப்பாரா..?

(",") சோதிடர் லாட்டரி வென்றார்.. / குதிரைப்பந்தயத்தில் வென்றார்ன்னு ஏன் தகவலே வரமாட்டுது..?

இன்னும் இருக்குங்கோ..

poornima
15-09-2008, 07:21 AM
அது உம்மை இல்லை உண்மைங்கோ அண்ணா :-)

//நாய்களுக்கு பிடித்த சுவைன்னு விளம்பரம் செய்யறாங்களே.. எப்படிக் கண்டுபிடிச்சாங்க..?
//

ஒருவேளை அது ஹட்ச் நாயா இருக்குமோ.. அந்த ஒரு நாய்தான் விளம்பரத்துல
கதை எழுதுறது தவிர எல்லாமே செய்யுது..

//சோதிடர் லாட்டரி வென்றார்.. / குதிரைப்பந்தயத்தில் வென்றார்ன்னு ஏன் தகவலே வரமாட்டுது..?//

இது கலக்கல்... தொடரட்டும் தொடரட்டும்

கண்மணி
15-09-2008, 08:21 AM
(",") அகராதியில் ஒரு சொல்லுக்கு ஸ்பெல்லிங் தப்பா இருந்தா யாருக்குத் தெரியும்..?

படிக்கிறவங்களுக்கு.

(",") நாய்களுக்கு பிடித்த சுவைன்னு விளம்பரம் செய்யறாங்களே.. எப்படிக் கண்டுபிடிச்சாங்க..?

நாய்க்கு பிஸ்கட் போட்டு பிராக்கெட் பண்ணும் திருடங்கதான் சொன்னாங்களாம்.

(",") அரளிக்கொட்டையை அரைச்சுக் குடிச்சா செத்துப்போயிடுவோம்ன்னு உலகுக்கு உணர்த்திய தியாகிக்கு அப்படி நடக்கும்ன்னு முன்னாடியே தெரியுமா..? இல்லே பசிக்கு தின்னுருப்பாரா..?

அது ஒரு மாமியாரோ மருமகளோ சொன்னதா இருக்கலாம் இல்லியா! தியாகி மட்டும் இல்லை துரோகியும் கண்டுபிடிப்புகளைச் செய்யலாம். ஹி ஹி..

(",") சோதிடர் லாட்டரி வென்றார்.. / குதிரைப்பந்தயத்தில் வென்றார்ன்னு ஏன் தகவலே வரமாட்டுது..?

அவங்களுக்குக் கிடைக்காதுங்கறது அவங்க ஜாதகத்தில இருக்கறது அவங்களுக்குத் தெரிஞ்சிருக்குமோ?? ஏன்னா இந்த லாட்டரியை வெல்வேன் அந்த பதக்கத்தை வெல்வேன் அந்த பந்தயத்தை வெல்வேன் அப்படின்னு அவங்க அறிக்கை கூட விடறதில்லையே!!! :D

கண்மணி
15-09-2008, 09:38 AM
டோக்கியோ நகரில், காரைவிட சைக்கிள் சீக்கிரம் பயணதூரத்தைக் கடக்கும்..!

பெங்களூரிலும் அப்படித்தானாம்..

சூதாட்ட நகரம் லாஸ் வேகாஸில், எந்த சூதாட்ட விடுதியிலும் கடிகாரம் இருக்காது..!

நாம கடிகாரம் கட்டிகிட்டு சூதாட்ட விடுதிக்குள்ளப் போனா விடமாட்டாங்களா? அடப் பாவமே! நான் உள்ளயே அடகு வச்சுக்கற வசதி இருக்கும்னு நெனச்சேன்.

ராஜா
15-09-2008, 11:04 AM
அடேங்கப்பா..!

மெச்சத் தகுந்த கச்சித முயற்சி..
இச்சிறு வயதில் எத்தனைப் பயிற்சி..?

(வசமா ஒரு ஆள் சிக்கியிருக்கு.. இதைவச்சு, திரியை ஒரு ஓட்டு ஓட்டிரலாம்..!)

ராஜா
16-09-2008, 05:41 AM
//நாய்களுக்கு பிடித்த சுவைன்னு விளம்பரம் செய்யறாங்களே.. எப்படிக் கண்டுபிடிச்சாங்க..?
//

ஒருவேளை அது ஹட்ச் நாயா இருக்குமோ.. அந்த ஒரு நாய்தான் விளம்பரத்துல
கதை எழுதுறது தவிர எல்லாமே செய்யுது..இருக்கும்.. இருக்கும்..!

ராஜா
16-09-2008, 05:43 AM
சூதாட்ட நகரம் லாஸ் வேகாஸில், எந்த சூதாட்ட விடுதியிலும் கடிகாரம் இருக்காது..!

நாம கடிகாரம் கட்டிகிட்டு சூதாட்ட விடுதிக்குள்ளப் போனா விடமாட்டாங்களா? அடப் பாவமே! நான் உள்ளயே அடகு வச்சுக்கற வசதி இருக்கும்னு நெனச்சேன்.

செய்திகளைப் புரிஞ்சுக்கறதுல உங்களை அடிச்சுக்க ஆளே கிடையாது நண்பரே..!

ராஜா
16-09-2008, 06:18 AM
வயர்மேன் என்பவர் இவர்தானா..?

http://i144.photobucket.com/albums/r163/arrajar/Pics_Wire_Gun_Man_20.jpg

ராஜா
16-09-2008, 06:22 AM
வெட்டிகரமான சிந்தனைகள்..8

ஒரு ஆண்டு காலத்தின் மதிப்பு தெரிய வேண்டுமா..?
தேர்வில் தோல்வியுற்ற நல்ல மாணவனிடம் கேட்டுப் பாருங்கள்.

10 மாதங்களின் மதிப்பு தெரிய வேண்டுமா..?
தாய்மைப்பேறு அடைந்த பெண்ணிடம் கேட்டுப்பாருங்கள்..

ஒரு மாதத்தின் மதிப்பு தெரிய வேண்டுமா..?
குறைப்பிரசவமுற்ற ஒரு தாயைக் கேட்டுப்பாருங்கள்..

ஒரு வாரத்தின் மதிப்பு தெரிய வேண்டுமா..?
வார இதழ் ஆசிரியர் ஒருவரிடம் கேட்டுப்பாருங்கள்.

ஒரு மணி நேரத்தின் மதிப்பு தெரிய வேண்டுமா..?
காதலிக்காக காத்திருப்பவனிடம் கேட்டுப்பாருங்கள்..

ஒரு நிமிடத்தின் மதிப்பு தெரியவேண்டுமா..?
பேருந்தையோ, தொடர்வண்டியையோ தவறவிட்டவனிடம் கேட்டுப்பாருங்கள்..

ஒரு விநாடியின் மதிப்பு தெரியவேண்டுமா..?
விபத்து ஒன்றில் மயிரிழையில் தப்பியவனிடம் கேட்டுப்பாருங்கள்..

விநாடியில் ஒருபகுதியின் மதிப்பு தெரியவேண்டுமா..?
ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்றவனிடம் கேட்டுப்பாருங்கள்..

காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை.. ஒவ்வொரு விநாடியும் மதிப்பு மிக்கது. ஏராளமான நேரத்தை வைத்திருக்கும் உங்களைவிட செல்வந்தர் யார்..?

நேரம் எனும் செல்வத்தைக் கவனமுடன் செலவிடுங்கள்..!

ராஜா
16-09-2008, 06:29 AM
சீனாவில் மக்கள் தொகை 130 கோடியாமே..?

http://i144.photobucket.com/albums/r163/arrajar/Pics_Flats_in_China_5.jpg

ராஜா
16-09-2008, 06:37 AM
அட...!

சுதந்திர தேவி (அமெரிக்கா) சிலையின் சுட்டுவிரல் எட்டு அடி நீளமுள்ளது.

அடகாமா பாலைவன (சிலி) வரலாற்றில் மழையே இதுவரை பெய்ததில்லை.

உலகில் வாழும் மனிதர்களும், கோழிகளும் சம எண்ணிக்கை கொண்டவர்கள். ( புரட்டாசியில் கோழிகள் தொகை அதிகரிக்கக்கூடும்..!)

ஒருவகை ஹம்மிங் பறவையின் எடை நம் 5 ரூபாய் நாணயத்தைவிட குறைவு.

கண்மணி
16-09-2008, 06:57 AM
சுதந்திர தேவி (அமெரிக்கா) சிலையின் சுட்டுவிரல் எட்டு அடி நீளமுள்ளது.

எட்டுன தூரம் வரை சுட்டும் விரல்னு சொல்றாங்களோ??:D:D:D

அடகாமா பாலைவன (சிலி) வரலாற்றில் மழையே இதுவரை பெய்ததில்லை.

அடராமா :lachen001::lachen001::lachen001:

உலகில் வாழும் மனிதர்களும், கோழிகளும் சம எண்ணிக்கை கொண்டவர்கள். ( புரட்டாசியில் கோழிகள் தொகை அதிகரிக்கக்கூடும்..!)

ஆளுக்கொரு கோழி வச்சு ஆண்டவன் படைச்சான்னு சொல்லுங்கோ!!!
(ஆளுக்கொரு தேதி வச்சு ஆண்டவன் அழைப்பான் - அப்போ
யாரழுதால் அவனுக்கென்ன காரியம் முடிப்பான்)

ஒருவகை ஹம்மிங் பறவையின் எடை நம் 5 ரூபாய் நாணயத்தைவிட குறைவு.

புதுசா? பழசா??:confused::confused::confused:

இல்லை 5 ரூபா மாதிரியே ஹம்மிங் பறவையும் (தேன்சிட்டு) இளைச்சுகிட்டே போகுதா? :mini023::mini023::mini023:
அப்போ சுத்தத் தேன் எடையைக் குறைக்க உதவும்னு ஒரு அழகுக் குறிப்பு போட்டுடலாமே!!:aetsch013::aetsch013::aetsch013:

ராஜா
16-09-2008, 07:00 AM
தகராறு நிறைந்த வரலாறு..

மூக்கறுப்பு யுத்தம்..!

கதாநாயகன் : தமிழ்நாடு, வில்லன் -கர்நாடகா.

அக்காலத்தில் நாயக்கர்களின் மதுரை நாடு - மைசூர்நாடு.

மதுரைநாட்டை ஆண்டுகொண்டிருந்தவர் திருமலை நாயக்கர். 1623 இலிருந்து 1659 வரைக்கும் மதுரையை ஆண்டவர்.

இவர் தம்முடைய ஆட்சிக் காலத்தில் தென்னாட்டு அரசியலில் பூந்து விளையாடியவர். விஜயநகரப் பேரரசின் அங்கங்களாக விளங்கியவைதாம் மதுரை, மைசூர், செஞ்சி, தஞ்சை ஆகிய நாடுகள். பேரரசுக்குக் கப்பம் கட்டி படைகளையும் அனுப்பவேண்டிய கட்டாயம். ஆனால் விஜயநகரப் பேரரசு பலவீனம் ஆனபிறகு, நாயக்கர்கள் சரியாக நடந்துகொள்ளவில்லை. திருமலை நாயக்கர் இந்தப் பக்கமும் அந்தப் பக்கமுமாகச் சேர்ந்துகொண்டும் தூண்டிவிட்டுக்கொண்டும் போர்புரிந்துகொண்டும் குழப்படிகளை ஏற்படுத்திக்கொண்டிருந்தார்.

தமிழ்நாட்டைக் கைப்பற்ற எண்ணியிருந்த கோல்கொண்டா, பீஜப்பூர் ஆகிய சுல்த்தான்களைத் தூண்டிவிடுவது; அவர்களுடன் சேர்ந்துகொண்டு மற்ற நாடுகளுடன் போரிடுதல்; அதன்மூலம் அவர்களைப் பலவீனப் படுத்துதல் போன்றவற்றைச்செய்துவந்தார். அவர் செய்த் காரியங்களால் பெயரளவில் இருந்த விஜயநகரப்பேரரசு அறவே அழிந்துபோயிற்று. கோல்கொண்டா, பீஜப்பூர் ஆகிய சுல்தானியர்களுக்கு மேன்மேலும் தமிழ்நாட்டின் பகுதிகள் அடிமையாகின. அவர்களுக்குத்தான் அதிக லாபம்.

இப்படிப்பட்ட விஷமங்களால் துன்பத்துக்கு ஆளாகியவர்களில் ஒருவர் மைசூர் நாட்டின் அரசர் கண்டீரவ நரச ராஜா. இவர் 1638 இலிருந்து 1659வரைக்கும் மைசூரை ஆண்டவர்.

திருமலை நாயக்கரைப் பழிவாங்கத் தருணம் பார்த்திருந்தார் நரச ராஜா. தக்க வாய்ப்புக் கிடைத்ததும் மதுரைநாட்டின்மீது படையெடுத்தார். மைசூர் படைகள் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சத்தியமங்கலத்தை முதலில் பிடித்துக்கொண்டன. மதுரை நாட்டில் சேலம், தர்மபுரி, கரூர், திருச்சியிலிருந்து தெற்கில் உள்ள பிரதேசங்கள் எல்லாமே இருந்தன. தஞ்சை, செஞ்சி ஆகியவை தனி நாடுகள்.

அந்தப் போரில் மைசூர்ப் படைகள் பெரும் அட்டூழியங்களைச் செய்தன. வழியில் பிடிபடுகின்றவர்களின் மூக்குகளையெல்லாம் அறுத்துவிட்டார்கள். அவ்வாறு அறுபட்ட மூக்குகளுக்குத் தக்க பரிசு கொடுக்கச் செய்திருந்தார் நரச ராஜா. மேலுதட்டுடன் மூக்கு இருக்கவேண்டும். மேலுதட்டின்மீது மீசை இருந்தால், அந்த மூக்குக்கு அதிகப் பரிசு...!

(மிகுதி.. நாளை..!)

மூக்கறுப்பு யுத்தம்.. தொடர்ச்சி..

சத்தியமங்கலத்திலிருந்து மைசூர்ப்படைகள் மிகவேகமாக மதுரையை நோக்கி வந்துவிட்டன.

அப்போது திருமலை நாயக்கருக்கு எழுபத்தைந்து வயது. அவர் கொஞ்சமும் போரிடவோ, படைகளைத் திரட்டவோ இயலாத நிலை.

ஆபத்து நெருங்கியபோது, தன்னுடைய மூத்த ராணியாரைக் கொண்டு ராமநாதபுரத்தின் ரகுநாத சேதுபதியிடம் உதவி கோரி கடிதம் எழுதி அனுப்பச்செய்தார்.

அந்தக் கடிதத்தைக் கண்டதும் சேதுபதி இருபத்தையாயிரம் பேர் கொண்ட நன்கு தேர்ச்சி பெற்ற படை ஒன்றை அனுப்பினார்.

ரகுநாத சேதுபதிக்கு டச்சுக்காரர்களுடன் நெருங்கிய தொடர்பு இருந்தது. டச்சுக்காரர்கள், இத்தாலியர்கள் முதலிய தளபதிகளைக் கொண்டு தமது வீரர்களுக்கு மிக நவீனமான முறைகளில் பய்ற்சியளிக்கச் செய்திருந்தார். மேலும் துப்பாக்கிகள் தாங்கிய படையும் அவரிடம் இருந்தது. பீரங்கிகளும் இருந்தன. ஆறே மணி நேரத்தில் இருபதினாயிரம் போர்வீரர்களைத் திரட்டக்கூடிய தயார் நிலையில் தம் நாட்டை வைத்திருந்தார்.

மைசூர்ப் படை மதுரையிலிருந்து சில மைல்கள் தொலைவில் இருக்கும்போது, ரகுநாத சேதுபதியின் படை, மைசூர்ப் படைகளுக்கும் மதுரைக்கோட்டையின் சுவருக்கும் இடையே இன்னொரு சுவர் போல அணிவகுத்துக் கொண்டது. இதன் நடுவில் திருமலை நாயக்கர் முப்பத்தையாயிரம் வீரர்கள் கொண்ட படையன்றையும் திரட்டச்செய்தார். இந்தப் பெரும்படையைப் பார்த்த மைசூர் படைத்தளபதி இன்னும் அதிகப் படைகளைக் கேட்டு மைசூருக்குச் செய்தியனுப்பினான். அதே நேரத்தில் மதுரை நாயக்கப் படையின் தளபதியையும் கையூட்டுக் கொடுத்துத் தன் வசமாக்கிக் கொண்டான். ஆகவே நாயக்கப்படைகள் பின்வாங்கின.

இருப்பினும் சேதுபதி, தம்முடைய படையைக் கொண்டு தடுத்து நிறுத்தப்பட்ட மைசூர்ப்படைகள் விரட்டியடித்தார். மைசூர்ப்படைகள் மிக வேகமாகப் பின்னோக்கித் திரும்பி ஓடி, திண்டுக்கல்லில் இருந்துகொண்டார்கள். மைசூரிலிருந்து வந்த இருபதினாயிரம் வீரர்கள் கொண்ட உதவிப்படை அங்கு வந்து அவர்களுடன் சேர்ந்துகொண்டது.

கடும்போர் நடந்தது. இருதரப்பிலும் மொத்தம் பன்னிரண்டாயிரம் வீரர்கள் இறந்தனர். அந்த நிலையில் தப்பினால் போதும் என்ற நிலைக்கு மைசூர்ப் படை வந்துவிட்டது. எஞ்சியிருந்த வீரர்கள் மைசூரை நோக்கி ஓடினார்கள்.

அதன்பின்னர் திருமலை நாயக்கர், தம் தம்பியின் தலைமையில் ஒரு படையைத் திரட்டி, பதினெட்டுப் பாளையங்களின் படைகளையும் துணைக்குக் கொண்டு, மைசூரின்மீது படையெடுக்கச் செய்தார். அந்தப் படையினர் திருமலை நாயக்கரின் கட்டளையின்பேரில் தங்களிடம் அகப்பட்ட மைசூர்க்காரர்களின் மூக்குகளை அறுத்தது.

அந்தப்போரில் மைசூர் மன்னன் கந்தல்களைக் கட்டிக்கொண்டு ஒரு யானையின் மீதேறித் தப்பிச்சென்றான் என்றும் அவனுடைய தாயின் மூக்கை முத்தியாலு நாயக்கரின் படையினர் அறுத்ததாகவும் சொல்வார்கள்.

ஆபத்துக்காலத்தில் உதவி செய்து, நாயக்கரின் பட்டமகிஷியின் தாலியைக் காத்தமையால் ரகுநாத சேதுபதிக்கு, 'திருமலை சேதுபதி' என்றும் 'ராணி தாலி காத்தார்' என்றும் 'ராணி சொல் காத்தார்' என்றும் பட்டங்களைத் திருமலை நாயக்கர் கொடுத்தார். அத்துடன் மதுரையில் எத்தனைச் சிறப்பாக நவராத்திரி கொண்டாடப்ப்பட்டதோ, அதே அளவு சிறப்புடன் ராமநாதபுரத்திலும் கொண்டாடும் சிறப்புரிமையையும் நாயக்கர் வழங்கினார்.

நாகரிகத்தின் இருப்பிடமாக விளங்கிய இரு புராதன நாடுகளின் குடிமக்களில் ஒரு பெரும் எண்ணிக்கையினரை மூக்கறையர்களாக ஆக்கிவிட்ட இந்தப் போர், 'மூக்கறுப்பு யுத்தம்' என்றும் 'மூக்கறுப்பு வேட்டை' என்றும் சிறப்புப் பெயர்களைப் பெற்றது.

ராஜா
16-09-2008, 07:04 AM
சுதந்திர தேவி (அமெரிக்கா) சிலையின் சுட்டுவிரல் எட்டு அடி நீளமுள்ளது.

எட்டுன தூரம் வரை சுட்டும் விரல்னு சொல்றாங்களோ??:D:D:D

அடகாமா பாலைவன (சிலி) வரலாற்றில் மழையே இதுவரை பெய்ததில்லை.

அடராமா :lachen001::lachen001::lachen001:

உலகில் வாழும் மனிதர்களும், கோழிகளும் சம எண்ணிக்கை கொண்டவர்கள். ( புரட்டாசியில் கோழிகள் தொகை அதிகரிக்கக்கூடும்..!)

ஆளுக்கொரு கோழி வச்சு ஆண்டவன் படைச்சான்னு சொல்லுங்கோ!!!
(ஆளுக்கொரு தேதி வச்சு ஆண்டவன் அழைப்பான் - அப்போ
யாரழுதால் அவனுக்கென்ன காரியம் முடிப்பான்)

ஒருவகை ஹம்மிங் பறவையின் எடை நம் 5 ரூபாய் நாணயத்தைவிட குறைவு.

புதுசா? பழசா??:confused::confused::confused:

இல்லை 5 ரூபா மாதிரியே ஹம்மிங் பறவையும் (தேன்சிட்டு) இளைச்சுகிட்டே போகுதா? :mini023::mini023::mini023:
அப்போ சுத்தத் தேன் எடையைக் குறைக்க உதவும்னு ஒரு அழகுக் குறிப்பு போட்டுடலாமே!!:aetsch013::aetsch013::aetsch013:

அட..!

poornima
16-09-2008, 07:05 AM
கலக்கும் கண்மணி ரசிக்க வைக்கும் பின்னூட்டங்களில்..

படங்களோடும் - செய்திகளோடும் படு ரகளை செய்யும் ராஜா..
நேரத்தின் மதிப்பு போன்ற நேர்சிந்தனை பதிவுகளிலும் மின்ன..

கலக்கல் பக்கங்கள் கலக்கலகவே நகர்கின்றன..பாராட்டுகள்

ராஜா
17-09-2008, 11:49 AM
http://i144.photobucket.com/albums/r163/arrajar/Pics_Goat_Tree_1.jpg

ஆடு காய்க்கும் மரம்..!

ராஜா
17-09-2008, 11:52 AM
http://i144.photobucket.com/albums/r163/arrajar/Pics_pgarage1.jpg

கார் COLUMN..!

ராஜா
17-09-2008, 11:54 AM
http://i144.photobucket.com/albums/r163/arrajar/Pics_Can_Art_2.jpg

கோக்(ட்)ரக்கோ..!

ராஜா
17-09-2008, 12:01 PM
தகராறு நிறைந்த வரலாறு..!

செருப்பு ஊர்வலம்..!

முகலாய மன்னர் ஔரங்கஸீப் தம்முடைய சகோதரர்களையெல்லாம் கொன்றுவிட்டு டில்லியின் பாதுஷா ஆகினார்.

அவர் காலத்தில் முகலாய சாம்ராஜ்யம் பெரியதாக இருந்தது.
ஆனாலும் தக்காணம் என்று சொல்லப்பட்ட தென்னாடு அவர் கைக்குள் பூரணமாக அகப்படவில்லை.

மராத்தியர்கள் எழுச்சி பெற்றிருந்தனர். சிவாஜி ஒரு பேரரசை ஸ்தாபிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். தெற்கில் இருந்த பலநாடுகள் ஔரங்கசீபின் கண்களை உறுத்தின.

ஒரு காலத்தில் அஸ்வமேத யாகம் நிகழ்த்துவார்கள். ஒரு குதிரையை நன்கு அலங்கரித்து அவிழ்த்துவிடுவார்கள். கூடவே ஒரு படையும் செல்லும். அது எங்கெல்லாம் போகிறதோ அந்த நாடுகளையெல்லாம் அந்தப் படைகள் போரிட்டுக் கைப்பற்றும் அந்த நாட்டு மன்னர் அடிபணிந்து கப்பம் கட்டுவார்.

கடைசியில் அந்தக் குதிரையை வெட்டிப் பகுதி பகுதியாக ஆக்கி யாகத்தில் போட்டுவிடுவார்கள். ஔரங்கஸீபும் அதே மாதிரி செய்தார்.

ஆனால் ஒரே ஒரு வித்தியாசம்.

ஒருயானையை அலங்கரித்து அதன் முதுகில் ஆடம்பரமாக பீடம் அமைத்து அதன் மீது ஒரு தங்கத்தாம்பாளம்.

அந்தத் தாம்பாளத்தின் மீது ஔரங்கஸீபின் செருப்பு ஒன்று இருந்தது.

யானையை அவிழ்த்துவிட்டுவிடவில்லை. படைத்தலைவரே பாதுஷாவின் ஆணைப்படி யானையையும் படையையும் நடத்திச்சென்றார்.

ஒரு குறிப்பிட்ட நாட்டின் எல்லையை வந்தடையப்போகும்போது அந்த நாட்டின் மன்னனுக்குத் தகவல் அனுப்புவார்கள். அந்த மன்னன் தன் பரிவாரங்களுடன் வந்து யானைக்குமுன் கீழே விழுந்து பணிந்து வணங்கி, அந்த யானையையும் முகலாயப் படைத்தலைவர்கள், பிரதிநிதிகள் ஆகியோரையும் ஊர்வலமாக நாட்டுத் தலைநகரத்துக்குக் கூட்டிச் செல்ல வேண்டும்.

அரசவைக்கு வந்ததும் செருப்புடன் கூடிய தாம்பாளத்தை வாங்கித் தலைமீது சுமந்துகொண்டுபோய் தன்னுடைய சிம்மாசனத்தின்மீது வைத்துவிட்டு, கீழே விழுந்து பணிந்து, கப்பம் செலுத்திவிட்டு, ஒவ்வோர் ஆண்டும் கப்பம் கட்டுவதாக சாசனம் எழுதிக்கொடுக்கவேண்டும்.

இந்தச் செருப்பு ஊர்வலம் மதுரை நாட்டின் எல்லைக்கு வந்து சேர்ந்தது. அப்போது மதுரையை முத்து வீரப்ப நாயக்கர் என்பார் திருச்சியைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தார்.

முத்து வீரப்ப நாயக்கர் புகழ்பெற்ற பெண்ணரசி, இராணி மங்கம்மாளின் மகன். ( திருமலை நாயக்கர் பேரன் = சொக்கநாத நாயக்கர். சொக்கநாதரின் மனைவி = ராணி மங்கம்மாள்)

முத்துவீரப்பர் தமக்கு உடல் சௌகரியமில்லை என்று காரணம் காட்டி செருப்பு ஊர்வலத்தை அழைக்க வராமல் இருந்துவிட்டார்.

சமயவரத்தில் காவிரிக்கரையில் ஔரங்கஸீபின் பிரதிநிதிகளைச் சந்திப்பதாகச் சொல்லியனுப்பினார்.

முகலாயர்கள் திருச்சியின் அருகே வந்தபின்னரும் கூட அவர் வந்து சந்திக்கவில்லை.

மக்கள் பயந்தனர். முகலாயப்படையும் குழம்பியது.
பிரநிதிதிகளும் தூதுவர்களும் கோபமடைந்தனர்.

ரொம்பவும் மமதையுடன் திருச்சி கோட்டைக்குள் நுழைந்தனர். அரண்மனையை அடைந்தனர். அங்கும் முத்துவீரப்பர் எதிர்கொண்டழைக்கவில்லை.

கோபமடைந்த முகலாயர், தாங்களே செருப்புத் தாம்பாளத்தைத் தூக்கிக்கொண்டு அரண்மனைக்குள் சென்று அரசவையை அடைந்தார்கள்.

அங்கு அவர்கள் கண்டது......

(நாளை..!)

மதி
17-09-2008, 12:05 PM
அடடா..இப்படி ஒரு சுவாரஸ்யமான நிகழ்ச்சியை சொல்லி பாதியிலேயே நிறுத்தி விட்டீர்களே.. நாளை வரை காத்திருக்கணுமா...???

தம்பிக்காக மனமிரங்கி இன்றே மீதியையும் பதிந்து விடுங்கள்.

ராஜா
17-09-2008, 12:11 PM
அட..!

'Set' என்னும் சொல்லுக்கு ஆங்கிலத்தில் 192 அர்த்தங்கள் உண்டாம்..!

கொசுக்களை நீல நிறம் அதிகமாகக் கவருமாம்..!

கங்காரு விலங்குகளால் பின்புறமாக நடக்க இயலாதாம்..!

அமெரிக்கர்கள், தினமும் 75 ஏக்கர் பரப்பளவுள்ள பிட்சாவை தின்று தீர்க்கிறார்களாம்..!

ராஜா
17-09-2008, 12:22 PM
வெட்டிகரமான சிந்தனைகள்..9.

பொதுவாகவே வாயை மூடிட்டு இருக்கறது நல்லது.. முக்கியமா நீங்க தண்ணீரில் மூழ்கிட்டு இருக்கும்போது..!

ஒருக்காலும் உங்களை மற்றவர்களோடு ஒப்பிடாதீர்கள்.. அவர்கள் இந்த நிலையை அடைய என்னென்ன அவமானங்களை சந்திக்கவேண்டியிருந்ததோ..?

ஒரு வேலையை மகா சொதப்பலா செய்யறதிலக்கூட ஒரு நன்மை இருக்கு.. மறுபடி உங்ககிட்ட அதே வேலையைத்தர யாருக்கும் தைரியம் வராது..!

சமரசம் : நமக்கு கிடைத்திருப்பதே மற்றவர்களுக்கு கிடைத்திருப்பதைவிட அதிகம் என்று எல்லோரையும் நம்பவைக்கும் கலை..!

கண்மணி
17-09-2008, 12:23 PM
Set..!

என்னும் சொல்லுக்கு ஆங்கிலத்தில் 192 அர்த்தங்கள் உண்டாம்..!

எத்தனை இருந்து என்ன பிரயோசனம். நமக்குதான் ஒண்ணும் Set ஆகமாட்டேங்குதே!!!:traurig001::traurig001::traurig001:

கொசுக்களை நீல நிறம் அதிகமாகக் கவருமாம்..!

அப்புறம் பகல்ல ஏன் வானத்தை நோக்கிப் பறக்கறது இல்லை?:confused::confused:

கங்காரு விலங்குகளால் பின்புறமாக நடக்க இயலாதாம்..!

அப்போ முன் வச்ச காலை பின் வைக்க மாட்டேன்னு சொல்றவங்களை கங்காருன்னு சொல்லலாம்னு சொல்லுங்க.

அமெரிக்கர்கள், தினமும் 75 ஏக்கர் பரப்பளவுள்ள பிட்சாவை தின்று தீர்க்கிறார்களாம்..!

ஒரு ஏக்கர் 100 செண்ட்,. ஒரு செண்ட் 100 சதுர மீட்டர். அதாவது 7 இலட்சத்து 50 ஆயிரம் சதுர மீட்டர். ஒரு சதுர மீட்டர் பிஸாவை 16 பேர் சாப்பிடறாங்க அப்படின்னு வச்சுகிட்டா அமெரிக்காவில் 1 கோடியே25 லட்சம் பேர் ஒரு நாளைக்கு பிஸா சாப்பிடறாங்க. அமெரிக்காவின் ஜனத்தொகை 30 கோடி. அதாவது 4 சதவிகிதம் பேர். கொஞ்சம் கொறைச்சலாதான் இருக்கு.

நம்ம நாட்டுல இவ்வளவு பேர் சாப்பிடறதே இல்லை. :eek::eek::eek:

ராஜா
17-09-2008, 12:40 PM
செட்டு விட்டு போயிட்டு..!

( இப்படி ஒரு அசத்தல் பக்கத்தைப் பாராட்டி ஒரு பின்னூட்டமாவது போட்டுருக்கியாப்பா நீ..?)

கண்மணி
17-09-2008, 12:43 PM
பொதுவாகவே வாயை மூடிட்டு இருக்கறது நல்லது.. முக்கியமா நீங்க தண்ணீரில் மூழ்கிட்டு இருக்கும்போது..!

ஆமாம் வாயைத் திறக்காம எப்படி தண்ணியில முழுகறது? :confused::confused:

ஒருக்காலும் உங்களை மற்றவர்களோடு ஒப்பிடாதீர்கள்.. அவர்கள் இந்த நிலையை அடைய என்னென்ன அவமானங்களை சந்திக்கவேண்டியிருந்ததோ..?

அதை கேட்டுச் சந்தோஷப்படவாவது ஒப்பிடணும் போல இருக்கே!!!:D:D:D

ஒரு வேலையை மகா சொதப்பலா செய்யறதிலக்கூட ஒரு நன்மை இருக்கு.. மறுபடி உங்ககிட்ட அதே வேலையைத்தர யாருக்கும் தைரியம் வராது..!

அதுக்குப் பதிலா வேலையே செய்யாம இருந்தா எந்த வேலையையுமே யாருமே குடுக்க மாட்டாங்க இல்லியா?:D:D:D:D

சமரசம் : நமக்கு கிடைத்திருப்பதே மற்றவர்களுக்கு கிடைத்திருப்பதைவிட அதிகம் என்று எல்லோரையும் நம்பவைக்கும் கலை..!

அடி உதையைக் கூடவா??:eek::eek::eek::eek:

கண்மணி
17-09-2008, 12:49 PM
செட்டு விட்டு போயிட்டு..!

( இப்படி ஒரு அசத்தல் பக்கத்தைப் பாராட்டி ஒரு பின்னூட்டமாவது போட்டுருக்கியாப்பா நீ..?)

செட் ஆகவே இல்லைன்னு பலபேர் கவலைப்படறாங்க.. விட்டு தானே போச்சு.. கவலைப்படாதீங்க..

( பாராட்டா முக்கியம்..? பங்களிப்புதானே முக்கியம்?.. பாராட்டிட்டா அத்தோட முடிஞ்சு போச்சுன்னு அர்த்தமாம்.. அந்தக் காலத்தில கவிஞர்கள் வந்து ராஜாவைப் பாராட்டினா ராஜா அள்ளி அள்ளி கொடுப்பாராம்.. இந்த ராஜாவால முடியுமா? பாராட்டலாம்தான்.. ஆனா தற்புகழ்ச்சி பிடிக்காதே!!!)

கண்மணி
17-09-2008, 01:39 PM
நாயக்கர் : காலுக்கு எத்தனைச் செருப்பு போடுவாங்க?
தூதுவன் : ரெண்டு
நாயக்கர் : ஒண்ணு இந்த இங்க இருக்கு.. இன்னொன்னு எங்க?
தூதுவன் : அந்த இன்னொன்னுதாங்க இது...

ஔரங்கசீப் படை காவிரியைக் கடக்கலை.. அவரோட பாட்சா பலிக்கலை.. இல்லீங்களாண்ணா?

சூரியன்
17-09-2008, 01:52 PM
உலகை தன் காலடியில் வீழ்த்திய மாவீரன் அலெக்சாண்டர் ஒருநாள் தன் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து சிந்தித்துக்கொண்டே வெகுதூரம் நடந்தான். ஆளரவமற்ற மணற்காட்டினூடே அவன் சென்றபோது, ஒரு வறியவன் கிழிந்த ஆடைகளோடு மணலில் விழுந்து கிடந்தான்.

அருகில் சென்ற அலெக்சாண்டர், "ஏ மனிதப் பூச்சியே.. மாமன்னன் அலெக்சாண்டர் வந்திருக்கிறேன்.. எழுந்து உன் வணக்கத்தைத் தெரிவி..!" என்றான்.

அந்த ஏழையிடம் எவ்வித சலனமும் இல்லை. தலையை இலேசாகத் தூக்கிப் பார்த்துவிட்டு மறுபடியும் படுத்துக் கொண்டான்.

அவமானமுற்ற அலெக்சாண்டர், என்னென்னவோ சொல்லி அச்சுறுத்திப் பார்த்தும், அந்த வறியவனிடம் மாறுதல் எதுவுமில்லை. மிரட்டல் பலனளிக்காது என்று அறிந்த பின்னர் அலெக்சாண்டர் கேட்டான்.

ஏ.. ஏழை மனிதனே.. உனக்கு என்ன வேண்டும் கேள் தருகிறேன். பொன் வேண்டுமா..? புகழ் வேண்டுமா..? பதவி வேண்டுமா அல்லது இதுவரை நான் வென்ற இராச்சியங்கள் வேண்டுமா..?

வறியவன் பதிலிறுத்தான்..

அதெல்லாம் எதுவும் வேண்டாம். நீ சற்று விலகி நில். நான் இதமாகக் குளிர் காய இயற்கை தரும் வெயிலை உன் நிழல் தடுக்கிறது..!"

அலெக்சாண்டருக்கு ஞானம் பிறந்தது.

மண்ணாசையைக் கைவிட்டான். எவ்விதப் புகழும் பொருளும் சிலநேரங்களில் பயனற்றுப் போகும் என்று உணர்ந்தான். தான் இறந்தபிறகு சவப்பெட்டிக்கு வெளியே தன் வெற்றுக் கரங்கள் வெளிப்பட்டு மக்களுக்கு ஒரு உண்மையை உணர்த்த வேண்டும் என்னும் முடிவை எடுத்தான்.

தகவலுக்கு நன்றி அண்ணா.

ராஜா
17-09-2008, 04:33 PM
நாயக்கர் : காலுக்கு எத்தனைச் செருப்பு போடுவாங்க?
தூதுவன் : ரெண்டு
நாயக்கர் : ஒண்ணு இந்த இங்க இருக்கு.. இன்னொன்னு எங்க?
தூதுவன் : அந்த இன்னொன்னுதாங்க இது...

ஔரங்கசீப் படை காவிரியைக் கடக்கலை.. அவரோட பாட்சா பலிக்கலை.. இல்லீங்களாண்ணா?

கோட்டைக்குள்ளேயே நுழைஞ்சுருச்சுன்னு சொல்லியிருக்கேன்.. காவிரியைத் தாண்டலையான்னு கேட்டா எப்படி..? கொஞ்சம் கவனமெடுத்து படியுங்க.. பதில் பதியுங்க.. :)

அதுசரி.. பாட்சாவா.. யாரது..?

ராஜா
17-09-2008, 04:41 PM
நன்றி சூரியரே..!

ராஜா
18-09-2008, 05:45 PM
தகராறு நிறைந்த வரலாறு..!

செருப்பு ஊர்வலம்..!

முகலாய மன்னர் ஔரங்கஸீப் தம்முடைய சகோதரர்களையெல்லாம் கொன்றுவிட்டு டில்லியின் பாதுஷா ஆகினார்.

அவர் காலத்தில் முகலாய சாம்ராஜ்யம் பெரியதாக இருந்தது.
ஆனாலும் தக்காணம் என்று சொல்லப்பட்ட தென்னாடு அவர் கைக்குள் பூரணமாக அகப்படவில்லை.

மராத்தியர்கள் எழுச்சி பெற்றிருந்தனர். சிவாஜி ஒரு பேரரசை ஸ்தாபிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். தெற்கில் இருந்த பலநாடுகள் ஔரங்கசீபின் கண்களை உறுத்தின.

ஒரு காலத்தில் அஸ்வமேத யாகம் நிகழ்த்துவார்கள். ஒரு குதிரையை நன்கு அலங்கரித்து அவிழ்த்துவிடுவார்கள். கூடவே ஒரு படையும் செல்லும். அது எங்கெல்லாம் போகிறதோ அந்த நாடுகளையெல்லாம் அந்தப் படைகள் போரிட்டுக் கைப்பற்றும் அந்த நாட்டு மன்னர் அடிபணிந்து கப்பம் கட்டுவார்.

கடைசியில் அந்தக் குதிரையை வெட்டிப் பகுதி பகுதியாக ஆக்கி யாகத்தில் போட்டுவிடுவார்கள். ஔரங்கஸீபும் அதே மாதிரி செய்தார்.

ஆனால் ஒரே ஒரு வித்தியாசம்.

ஒருயானையை அலங்கரித்து அதன் முதுகில் ஆடம்பரமாக பீடம் அமைத்து அதன் மீது ஒரு தங்கத்தாம்பாளம்.

அந்தத் தாம்பாளத்தின் மீது ஔரங்கஸீபின் செருப்பு ஒன்று இருந்தது.

யானையை அவிழ்த்துவிட்டுவிடவில்லை. படைத்தலைவரே பாதுஷாவின் ஆணைப்படி யானையையும் படையையும் நடத்திச்சென்றார்.

ஒரு குறிப்பிட்ட நாட்டின் எல்லையை வந்தடையப்போகும்போது அந்த நாட்டின் மன்னனுக்குத் தகவல் அனுப்புவார்கள். அந்த மன்னன் தன் பரிவாரங்களுடன் வந்து யானைக்குமுன் கீழே விழுந்து பணிந்து வணங்கி, அந்த யானையையும் முகலாயப் படைத்தலைவர்கள், பிரதிநிதிகள் ஆகியோரையும் ஊர்வலமாக நாட்டுத் தலைநகரத்துக்குக் கூட்டிச் செல்ல வேண்டும்.

அரசவைக்கு வந்ததும் செருப்புடன் கூடிய தாம்பாளத்தை வாங்கித் தலைமீது சுமந்துகொண்டுபோய் தன்னுடைய சிம்மாசனத்தின்மீது வைத்துவிட்டு, கீழே விழுந்து பணிந்து, கப்பம் செலுத்திவிட்டு, ஒவ்வோர் ஆண்டும் கப்பம் கட்டுவதாக சாசனம் எழுதிக்கொடுக்கவேண்டும்.

இந்தச் செருப்பு ஊர்வலம் மதுரை நாட்டின் எல்லைக்கு வந்து சேர்ந்தது. அப்போது மதுரையை முத்து வீரப்ப நாயக்கர் என்பார் திருச்சியைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தார்.

முத்து வீரப்ப நாயக்கர் புகழ்பெற்ற பெண்ணரசி, இராணி மங்கம்மாளின் மகன். ( திருமலை நாயக்கர் பேரன் = சொக்கநாத நாயக்கர். சொக்கநாதரின் மனைவி = ராணி மங்கம்மாள்)

முத்துவீரப்பர் தமக்கு உடல் சௌகரியமில்லை என்று காரணம் காட்டி செருப்பு ஊர்வலத்தை அழைக்க வராமல் இருந்துவிட்டார்.

சமயவரத்தில் காவிரிக்கரையில் ஔரங்கஸீபின் பிரதிநிதிகளைச் சந்திப்பதாகச் சொல்லியனுப்பினார்.

முகலாயர்கள் திருச்சியின் அருகே வந்தபின்னரும் கூட அவர் வந்து சந்திக்கவில்லை.

மக்கள் பயந்தனர். முகலாயப்படையும் குழம்பியது.
பிரநிதிதிகளும் தூதுவர்களும் கோபமடைந்தனர்.

ரொம்பவும் மமதையுடன் திருச்சி கோட்டைக்குள் நுழைந்தனர். அரண்மனையை அடைந்தனர். அங்கும் முத்துவீரப்பர் எதிர்கொண்டழைக்கவில்லை.

கோபமடைந்த முகலாயர், தாங்களே செருப்புத் தாம்பாளத்தைத் தூக்கிக்கொண்டு அரண்மனைக்குள் சென்று அரசவையை அடைந்தார்கள்.

அங்கு அவர்கள் கண்டது......

(நாளை..!)

வழக்கமான சிம்மாசனத்தைவிட பன்மடங்கு உயர்ந்த சிம்மாசனத்தின்மீது முத்துவீரப்பர் அமர்ந்திருந்தார்.

முகலாயருக்கு எந்தவித முகமனும் கூறவில்லை.

கடுங்கோபமுற்ற முகலாயர் சிம்மாசனத்தை நோக்கி வேகமாக ஓடிச்சென்று தாம்பாளத்தை முத்துவீரப்பரை நோக்கி நீட்டினர்.

இதனால் மிகவும் அவமானம் அடைந்த முத்துவீரப்பர், தம்முடைய காலடியில் செருப்புத்தாம்பாளத்தை வைக்குமாறு உத்தரவிட்டார்.

முகலாயர்களின் கழுத்தில் ஊர்ந்துகொண்டிருந்த ஈட்டிமுனைகள் அவர்களை உந்திவிட்டன. ஆகவே மெதுவாகத் தாம்பாளத்தை முத்துவீரப்பரின் காலடியில் வைத்தனர்.

முத்துவீரப்பர் தன்னுடைய ஒரு பாதத்தை அந்தச் செருப்பிற்குள் நுழைத்துக்கொண்டு, அந்தத் தங்கத் தாம்பாளத்தை ஓங்கி எற்றிவிட்டார். பலத்த ஓசையெழுப்பிக் கொண்டு அது எங்கோ போய் விழுந்தது.

"ஏமண்டி முகலாய தொங்கா! உங்கள் டில்லி பாச்சாவுக்கு கொஞ்சமாவது மூளை இருக்கிறதா? ஒரு காலுக்கு மட்டும் செருப்பை அனுப்பி இருக்கிறானே? இன்னொரு கால் செருப்பு எங்கே? எனக்கு வேண்டியவை இரண்டு செருப்புகள் அல்லவா?"

முகலாயப் பிரதிநிதிகளுக்கு ரத்தம் கொதித்தது.என்றாலும் எதுவும் செய்ய முடியாத நிலை.ஔரங்கசீப்பின் பிரதிநிதிகள் என்ற துணிவில் தனிக்குழுவாக படையை விட்டு வந்து முத்து வீரப்பர் அரண்மனையில் மாட்டிக்கொண்டு விட்டனரே..!

அவர்களைக் கோட்டையைவிட்டு விரட்டி விடும்படி முத்துவீரப்பர் சொன்னார். அவர்கள் கோட்டையை விட்டுச்சென்று படையுடன் சேர்ந்து கொண்டு தாக்குதலுக்கு ஆயத்தம் செய்யலாயினர்.

ஆனால் அதற்கு முன்னதாக முத்துவீரப்பர் தம்முடைய தேர்ந்த வீரர்கள் அடங்கிய படையுடன் வேகுவேகமாக வந்து அவர்களின் மீது பாய்ந்து தாக்கி அவர்களை அழித்தார்.

தப்பியவர்கள் ஔரங்கஸீபைச் சென்றடைந்து விபரத்தைச் சொன்னார்கள். ஔரங்கஸீபுக்கு இது ரொம்பவும் அவமானமாக இருந்தது.

எனினும் இப்படியும் நடக்கக்கூடும் என்று அன்று உணர்ந்துகொண்டார்.

அன்று ரங்க கிருஷ்ண முத்துவீரப்ப நாயக்கரிடம் கற்றுக்கொண்ட பாடத்துக்குப் பின் பாத்ஷா ஔரங்கஸீப் செருப்பை ஊர்வலமாக அனுப்பும் வழக்கத்தைக் கைவிட்டார்.

அக்னி
18-09-2008, 07:53 PM
கல கலக்கும் கலக்கல் பக்கங்கள்...

கலக்கல் பெயர்ப்பொருத்தம் அமோகம்.
கலகலக்கவும் கற்கவும் வைக்கும் திரி.

தொடர்ந்தும் பிரகாசிக்க வாழ்த்துகள்...

தீபன்
19-09-2008, 01:02 AM
ஒருக்கா பட்டது போதாதா சீப்புக்கு.... எதுக்கு திரும்பவும் அதேபோல ஊர்வலம் போய் அவமானப்படுகிறான்...!:confused:

ராஜா
19-09-2008, 12:06 PM
நன்றி நண்பர்களே..!

ராஜா
19-09-2008, 12:22 PM
http://i144.photobucket.com/albums/r163/arrajar/Pics_Paper_Animals_5.jpg

"பேப்பரோசாரஸ்"

ராஜா
19-09-2008, 12:28 PM
http://i144.photobucket.com/albums/r163/arrajar/Pics_Egg_Art_3.jpg

மூட்டைக்கூட்டில் கைவண்ணம்.

ராஜா
19-09-2008, 12:29 PM
http://i144.photobucket.com/albums/r163/arrajar/7a7n7ers2lw.jpg

ஒரு அதிர்ச்சியளிக்கும் தகவல்..!

ராஜா
19-09-2008, 12:34 PM
நாளை...

ஒரு ஆணித்தரமான காதல் கதை..

மற்றும்..

உலகின் முதல் பெண் தற்கொலைப் போராளி..!

தவற விடாதீர்கள்..!

தீபன்
19-09-2008, 06:05 PM
தகராறு நிறைந்த வரலாறு..!

செருப்பு ஊர்வலம்..!
தகராறு நிறைந்த வரலாறு..!

செருப்பு ஊர்வலம்..!
ஒருக்கா பட்டது போதாதா சீப்புக்கு.... எதுக்கு திரும்பவும் அதேபோல ஊர்வலம் போய் அவமானப்படுகிறான்...!:confused:

வணக்கம் முகிலன், மேலுள்ள என் பதிவில் திருத்தம் செய்து காரணமாக தேவையற்ற மேற்கோள்கள் என கூறியுள்ளீர்கள். ராஜா அண்ணா ஒரே பதிவை மீண்டும் இட்டிருப்பதை சுட்டிக்காட்டவே அவற்றை மேற்கோளிட்டிருந்தேன். அவை மிக பெரிதாயிருப்பதாய் கருதியிருந்தால் இப்போது நான் மேற்கோளிட்டிருப்பதைபோல சுருக்கமாகவேனும் திருத்தியிருக்கலாம். மேலும், நான் ஏன் அதை சொன்னேனென புரிந்துகொள்ளாமல் இரு பதிவுகளும் இப்போதுவரை இருக்கின்றன.
அதில் மீள பதிக்கப்பட்ட பதிவு நீக்கப்பட்டபின் என் கூற்று அர்த்தமிழந்து போய்விடகூடாதென்பதற்குதான் நான் மேற்கோளிட்டு சொல்லியிருந்தேன். நன்றி.

ராஜா
20-09-2008, 04:49 AM

ஒரு தனிமடலில் சுட்டிக்காட்டி முடித்திருக்கக்கூடிய சிறு விஷயத்திற்கு தலையைச் சுற்றி மூக்கைத் தொட்டிருக்கிறீர்கள்..!

வேறு யாராவது என்றால்கூட வியப்பு இருந்திருக்காது. ஒரு இதழ் தொகுப்பாளருக்கு இவ்விடயம் உதிக்கவில்லையே என்று எண்ணும்போது மிகுந்த ஆச்சரியமாக இருக்கிறது.

தவறுதலாக மேற்கோளுக்குப் பதிலாக திருத்தம் செய்யப்பட்ட அப்பதிவை நீக்கிவிட்டேன்.

சுட்டியமைக்கு நன்றி தீபன்..!

தீபன்
20-09-2008, 05:08 AM
ஒரு தனிமடலில் சுட்டிக்காட்டி முடித்திருக்கக்கூடிய சிறு விஷயத்திற்கு தலையைச் சுற்றி மூக்கைத் தொட்டிருக்கிறீர்கள்..!

வேறு யாராவது என்றால்கூட வியப்பு இருந்திருக்காது. ஒரு இதழ் தொகுப்பாளருக்கு இவ்விடயம் உதிக்கவில்லையே என்று எண்ணும்போது மிகுந்த ஆச்சரியமாக இருக்கிறது.

பதிவின் கருவோடு சம்பத்தப்படுத்தி நகைச்சுவையாக சொல்ல முயற்சித்தேன்... நான் சொன்னபின் நீங்கள் திருத்துவீர்களென தெரியும். அப்புறம், நான் சொன்னதன் காரணம் பின்னர் படிப்பவர்க்கு புரியாதென்பதால் மேற்கோளையுமிட்டு சொல்ல எண்ணினேன். தவறுதான். மன்னிக்க.
இதழ்தொகுப்பாளரென்றாலும் வயசில சின்னவங்கதானே... :icon_rollout:கண்டுக்காதிங்க...!:sprachlos020:

ராஜா
20-09-2008, 05:22 AM

ஓஓஓஒ... நகைச்சுவையா அது..?

ஓகே.. ஓகே.. அப்ப சரி..!

ராஜா
20-09-2008, 05:23 AM
அட...!

* முன்னாள் அமெரிக்க அதிபர் பில் க்ளிண்டன், தன் 8 ஆண்டு ஆட்சிக்காலத்தில் 2 மின்னஞ்சல்கள் மட்டுமே அனுப்பினாராம்.. ( யாருக்கோ..?)

* உலகின் மிகப்பெரும் மாண்டிசோரி பள்ளி, இந்தியாவில்தான் உள்ளது. 2002ல் இதன் மாணவர் எண்ணிக்கை 26312. (மேலதிக தகவல்கள் இல்லை).

* ஆக்டோபஸ் உயிரினத்துக்கு 3 இதயங்கள் உண்டாம்..!

* 200 கோடி மனிதருள் ஒருவர் மட்டுமே 116 வயதுவரை வாழ்வதாக சொல்லப்படுகிறது.

ராஜா
20-09-2008, 05:33 AM
கிறுக்கனுங்க இருக்காய்ங்க..!

சமீபத்தில் ரோட் தீவுப் பகுதியில் டேவிட் போஸ்மேன் (33) என்னும் திருடன் கைது செய்யப்பட்டான்.

அவன் செய்த குற்றம் ; வங்கிக்கு பணம் கொண்டுசென்ற வாகனத்தின் ஓட்டுநரைத் தாக்கி, 4 மூட்டைகளைக் கவர்ந்து சென்றதுதான்..

துரதிர்ஷ்டவசமாக, அந்த 4 மூட்டைகளிலும், 120 பவுண்டு எடையுள்ள பென்னி நாணயங்கள் இருந்ததால், விரைவில் தப்பமுடியாமல் அகப்பட்டுக்கொண்டான்..!

தீபன்
20-09-2008, 05:58 AM
* முன்னாள் அமெரிக்க அதிபர் பில் க்ளிண்டன், தன் 8 ஆண்டு ஆட்சிக்காலத்தில் 2 மின்னஞ்சல்கள் மட்டுமே அனுப்பினாராம்.. ( யாருக்கோ..?)
இரண்டுதடவைதான் மோனிக்கா லீவெடுத்தாங்களா...!:lachen001:

* உலகின் மிகப்பெரும் மாண்டிசோரி பள்ளி, இந்தியாவில்தான் உள்ளது. 2002ல் இதன் மாணவர் எண்ணிக்கை 26312. (மேலதிக தகவல்கள் இல்லை).
1998இல் இந்தியாவில் மின்வெட்டு அதிகமோ...:cool:

* ஆக்டோபஸ் உயிரினத்துக்கு 3 இதயங்கள் உண்டாம்..!
சின்னவீடு சின்னசின்னவீடுன்னு வச்சிருக்கிற நம்மாக்களுக்கும்கூட 3, 4 இதயமெல்லாமிருக்கே...:wuerg019:

* 200 கோடி மனிதருள் ஒருவர் மட்டுமே 116 வயதுவரை வாழ்வதாக சொல்லப்படுகிறது.
மொத்தம் 800கோடின்னா ஆக நாலுபேர்தானா.... ஓ, இவங்கதானா அந்த நாலுபேர்...:icon_ush:

ராஜா
20-09-2008, 06:06 AM
சூப்பராக அட.. கமெண்ட்ஸ் சொன்ன தீபருக்கு ஒரு o0000

ராஜா
20-09-2008, 06:06 AM
ஆணித்தரமான ஒரு காதல்கதை..!

http://i144.photobucket.com/albums/r163/arrajar/Pics_Nail_Life.jpg
நம்ம ஹீரோ பேரு ஆனிமுத்து. சைட் அடிக்க ஆள் இல்லாததால வாழ்க்கை அவனுக்கு வெறுமையா இருந்துச்சு..
_________________________________________________________________

http://i144.photobucket.com/albums/r163/arrajar/Pics_Nail_Life_3.jpg
ஒருநாள் தெருவில போயிட்டு இருக்கும்போது ஒருவீட்டு மாடியில் ஒரு அழகான பொண்ணு நின்னுட்டு இருந்துச்சு.. அதுபேரு ஆனந்த நிர்மலா. சுருக்கமா ஆநி. ஆனியும் நோக்க*, ஆநியும் நோக்க, நோக்கியா மூலம் காதல் வளர்ந்தது..
_________________________________________________________________

http://i144.photobucket.com/albums/r163/arrajar/Pics_Nail_Life_2.jpg

சினிமா..
__________________________________________________________________

http://i144.photobucket.com/albums/r163/arrajar/Pics_Nail_Life_4.jpg

பார்க்..
__________________________________________________________________

http://i144.photobucket.com/albums/r163/arrajar/Pics_Nail_Life_9.jpg

என்று காதல் நெருக்கமாச்சு..
__________________________________________________________________

எல்லாம் சந்தோஷமா போயிட்டு இருக்கும்போது, யாரோ ஒரு பாவிப்பய ஆநி அப்பாட்ட போட்டுக்கொடுத்துட்டான்..

(அடுத்த பதிவில் முடியும்..)

ராஜா
20-09-2008, 06:10 AM
* முன்னாள் அமெரிக்க அதிபர் பில் க்ளிண்டன், தன் 8 ஆண்டு ஆட்சிக்காலத்தில் 2 மின்னஞ்சல்கள் மட்டுமே அனுப்பினாராம்.. ( யாருக்கோ..?)
இரண்டுதடவைதான் மோனிக்கா லீவெடுத்தாங்களா...!:lachen001:

* உலகின் மிகப்பெரும் மாண்டிசோரி பள்ளி, இந்தியாவில்தான் உள்ளது. 2002ல் இதன் மாணவர் எண்ணிக்கை 26312. (மேலதிக தகவல்கள் இல்லை).
1998இல் இந்தியாவில் மின்வெட்டு அதிகமோ...:cool:

* ஆக்டோபஸ் உயிரினத்துக்கு 3 இதயங்கள் உண்டாம்..!
சின்னவீடு சின்னசின்னவீடுன்னு வச்சிருக்கிற நம்மாக்களுக்கும்கூட 3, 4 இதயமெல்லாமிருக்கே...:wuerg019:

* 200 கோடி மனிதருள் ஒருவர் மட்டுமே 116 வயதுவரை வாழ்வதாக சொல்லப்படுகிறது.
மொத்தம் 800கோடின்னா ஆக நாலுபேர்தானா.... ஓ, இவங்கதானா அந்த நாலுபேர்...:icon_ush:

கமெண்ட்ஸ் சூப்பர் தீ[ப்]பர்..!

அதற்கு தேர்ந்தெடுத்திருக்கும் ஸ்மைலிகள் (தமிழ்ல என்னப்பா..?) படு சூப்பர்..!

ராஜா
20-09-2008, 06:27 AM
பிரச்னையாயிடுச்சு..

http://i144.photobucket.com/albums/r163/arrajar/Pics_Nail_Life_5.jpg

என்ன செய்யலாம்ன்னு ஆனியும் ஆநியும் சிந்திச்சாங்க..
__________________________________________________________________

http://i144.photobucket.com/albums/r163/arrajar/Pics_Nail_Life_1.jpg

ரெண்டுபேரும் செத்துரலாம்ன்னு ஏகமனதா முடிவுசெய்து விஷம் குடிச்சிட்டாங்க..!
__________________________________________________________________

http://i144.photobucket.com/albums/r163/arrajar/Pics_Nail_Life_6.jpgகடைசி நேரத்துல ஆநியோட அப்பா அவங்க ரெண்டுபேரையும் காப்பாத்தி, ரெண்டு பேருக்கும் மணம் முடிக்க..

சுபம்..!

அன்புரசிகன்
20-09-2008, 06:34 AM
நெஞ்சில குத்திடுச்சு.... :D

ராஜா
20-09-2008, 07:17 AM
உள்ளத்தில் பதியணும்ன்னுதானே இட்டேன்..!

தீபன்
20-09-2008, 07:34 AM
விசம் குடிச்ச மாதிரி தெரியலையே.... விசயம் முடிச்சமாதிரியில்ல இருக்கு... அப்பிடின்னாலும் சேர்த்துதானே வைக்கனணும்...!

ராஜா
21-09-2008, 01:31 PM
கண்ணை நம்பாதே ; உன்னை ஏமாற்றும்..!

http://i144.photobucket.com/albums/r163/arrajar/275184302_fd96c43f58_o.jpg

ராஜா
21-09-2008, 02:02 PM
http://i144.photobucket.com/albums/r163/arrajar/7U7n5ers2lw.jpg

ராஜா
21-09-2008, 02:03 PM
கூ(ட்)டு சுரைக்காய்..!

http://i144.photobucket.com/albums/r163/arrajar/Pics_Fruit_Art.jpg

ராஜா
21-09-2008, 02:06 PM
பேருந்தில் 'கண்ணைக்' கவரும் விளம்பரம்..!

http://i144.photobucket.com/albums/r163/arrajar/Pics_Fruit_Art-1.jpg

ராஜா
21-09-2008, 02:19 PM
உலக வரலாற்றில் முதல் தமிழ் பெண் தற்கொலைப் போராளி குயிலி..!

1776ம் ஆண்டு

வேலுநாச்சியார், வெள்ளையர் எதிர்ப்பில் தம் கணவர், சிவகங்கைச் சீமையின் மன்னர் முத்து வடுகநாதரைப் பறிகொடுத்து, எட்டாண்டுகள் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்த காலம். அப்போது வேலுநாச்சியார் விருப்பாட்சி என்ற ஊரில் தங்கியிருந்தார்.

குயிலி. அதுதான் அவள் பெயர். பெயருக்கேற்ற குரலுக்கு சொந்தக்காரி. வயது பதினெட்டு. பிறந்த மண்ணையும், வீரத்தாய் வேலு நாச்சியாரையும் உயிரென மதிப்பவள்.

வேலுநாச்சியாரின் சிலம்பு வாத்தியார் வெற்றிவேல் குயிலியிடம் வந்தார், ஒருநாள்.

""குயிலி! எனக்கொரு உதவி செய்வாயா?''

""சொல்லுங்கள் ஐயா!''

""நீ உன் ஊரான பாசாங்கரைக்கு செல்லும்போது இந்தக் கடிதத்தை, சிவகங்கை அரண்மனைக்கருகில் இருக்கும் வீட்டில் மல்லாரிராயன் என்பவனிடம் சேர்ப்பிக்க வேண்டும். சேர்த்து விடுவாயா...?''

""சரி.'' என்றபடி கடிதத்தை வாங்க கை நீட்டினாள் குயிலி.

""உனக்கு படிக்கத் தெரியுமா?''

""அய்யா! இதுவரை நான் எழுதப்படிக்கக் கற்றதில்லை''

இப்போது புன்முறுவலுடன் கடிதத்தைக் கொடுத்தார் வெற்றிவேல். குயிலி வாங்கிக் கொண்டாள்.

அன்றிரவு.....

வெற்றிவேல் வாத்தியாரின் அறையில் அலறல் சத்தம். வேலு நாச்சியார் உட்பட அனைவரும் ஓடிவந்து பார்க்க, குயிலி வெற்றிவேல் வாத்தியாரை கத்தியால் குத்திக் கொண்டிருந்தாள். வேலுநாச்சியாரைக் கண்டதும், குயிலி ஓடிவந்து அவர் காலில் விழுந்து கதறியழுதாள். கடிதத்தை நீட்டினாள். கடிதத்தை வாங்கிப் படித்த வேலுநாச்சியாரின் முகம் உணர்ச்சியில் துடித்தது. கடிதத்தில், வெற்றிவேல் வாத்தியார் மல்லாரிராயன் என்பவனுக்கு வேலு நாச்சியார் குறித்த சில விஷயங்களை எழுதியிருந்தார். வேலு நாச்சியார் குயிலியைப் பார்த்துக் கேட்டார்.

""ஏனம்மா! இவன் ஒற்றன் என்று எப்படிக் கண்டுகொண்டாய்?''

""அவர் எழுதியிருந்த கடிதத்தைப் படித்தேன்!''

""உனக்குப் படிக்கத் தெரியுமா...?''

""நன்றாகத் தெரியும்''

""ஒருவர் நம்பி உன்னிடம் ஒப்படைத்த கடிதத்தை படிப்பது தவறல்லவா?''

குயிலி மிகவும் மென்மையான அதேசமயம் திடமான குரலில் சொன்னாள்.

""இந்த மண்ணையும் உங்களையும் அந்நியரிடமிருந்து காப்பாற்றச் செய்யும் எந்தச் செய்கையும் தவறில்லை.''

ராணி வேலுநாச்சியார், குயிலியை நன்றிப் பெருக்குடன் அள்ளி அணைத்துக் கொண்டார். அன்றிலிருந்து குயிலி வேலு நாச்சியாரின் வலது கரமானாள்.

குயிலி தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவள். கொல்லப்பட்ட வெற்றிவேல் உயர் வகுப்பைச் சேர்ந்தவர். இதைக் காரணம் காட்டி ஒரு கும்பல், மக்களிடம் குயிலியின் மேல் துவேஷத்தை வளர்க்க முனைந்தது. வேலு நாச்சியாரோ குயிலிக்கு தம் ஆதரவுக் கரத்தை இரும்பு அரணாக வைத்து காத்து வந்தார்.

ஒருநாள். நள்ளிரவு....

வேலு நாச்சியார் தன் மகள் வெள்ளைச்சி நாச்சியாருடன் மஞ்சத்தில் படுத்து அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தார். குயிலி தூக்கம் வராமல் அங்குமிங்கும் நடைபயின்று கொண்டிருந்தாள். வெளியே காலடிச் சத்தம் கேட்டு உஷாரானாள். மறைந்து நின்று கொண்டாள். ஒரு உருவம் சாளரத்தின் வழியே குதித்து இறங்கியது. அங்குமிங்கும் பார்த்தபடி வேலுநாச்சியாரின் மஞ்சத்தினருகே மெதுவாகப் போனது. கையை ஓங்கி, கத்தியால் வேலு நாச்சியாரை குத்த முனைய மறைந்திருந்த குயிலி ஓடி வந்து தன் கைகளால் அந்தக் கத்தியை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டாள். அந்த உருவம் திமிற, கத்தியில் வெட்டுப்பட்ட குயிலியின் கரங்களில் ரத்தம் ஆறாக ஓடியது. சத்தம் கேட்டு வேலு நாச்சியார் எழுந்து கொண்டார். அந்தக் கயவன் சடாரெனத் துள்ளி, சாளரத்தின் வழியே குதித்து ஓடிப் போனான். மயங்கிச்சரிய இருந்த குயிலியை தாங்கிப் பிடித்துக் கொண்டார் வேலுநாச்சியார்.

1780ம் ஆண்டு...

வேலு நாச்சியார், மருது சகோதரர்கள், ஹைதர் அலி ஆகியோரின் உதவியுடன் திருப்புவனம், மானாமதுரை, காளையார் கோவில், கொல்லங்குடி, திருப்பத்தூர் என்று எல்லா ஊர்களிலும் வெள்ளையர்களையும் அவர்களது கூலிப்படைகளையும் விரட்டி அடித்தார். இன்னும் மீதமிருப்பது சிவகங்கை மட்டும்தான். அதை மீட்டுவிட்டால் இழந்த தேசம் மொத்தத்தையும் மீட்ட பெருமை வந்து சேரும். ஆனால் காவல் பலமாயிருந்தது. கோட்டைக்குள் இருந்த ராஜராஜேஸ்வரி அம்மன் கோவிலை தரிசிக்கக்கூட பொது ஜனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. விஜயதசமி தினத்தன்று பெண்கள் மட்டும் அம்மனை தரிசிக்க அனுமதிப்பதாகத் தகவல். அடுத்த நாள் விஜயதசமி. வேலுநாச்சியார் ஒரு சிறிய பெண்கள் படையுடன் மாறுவேடத்தில் உள்ளே நுழைய திட்டம் போட்டார். ஆனாலும் வெள்ளையர்களின் ஆயுத பலத்தை நினைத்து சற்றே கலங்கினார்.

அன்று விஜயதசமி. சிவகங்கை கோட்டைக் கதவுகள், ராஜராஜேஸ்வரி அம்மனை தரிசிப்பதற்காகப் பெண்களுக்கு மட்டும் திறக்கப்பட்டது. மக்கள் வெள்ளத்தில் வேலு நாச்சியாரும் அவர் படையும் மாறுவேடத்தில் கலந்து முன்னேறினர்.

ராஜராஜேஸ்வரி அம்மனை கண்மூடி தியானித்த வேலுநாச்சியார் சைகை காட்ட, அவரது பெண்கள் படை வெள்ளையரின் படையோடு மோதின. பயங்கர யுத்தம் நடந்தது.

அப்போது "வீல்' என்று யாரோ அலறும் சத்தம். வேலுநாச்சியார் நிமிர்ந்து பார்க்க, கோட்டை மதில் சுவர்மேல் உடம்பெங்கும் நெய்யூற்றி தீயை வைத்துக் கொளுத்திக் கொண்ட ஒரு பெண் திடுதிடுவென ஓடி வெள்ளையரின் ஆயுதக் கிடங்கில் விழுந்தாள். வெள்ளையரின் ஆயுதக் கிடங்கு எரிந்து, பொசுங்கி சாம்பலானது. "அது யாராயிருக்கும்....' என்ற யோசனையுடன்.... வேலு நாச்சியார் வெள்ளையரோடு சண்டை போட்டார்.

தக்க தருணத்தில் கோட்டைக்கு வெளியே இருந்த சின்ன மருது மற்றும் பெரிய மருதுவின் படைகள் உதவிக்கு வர, எளிதாய் வெற்றி பெற்றார் வேலுநாச்சியார். வெள்ளைத் தளபதி பாஞ்சோர் தோல்வியை ஒப்புக்கொண்டு ஓடிப் போனான். வேலுநாச்சியார் உத்தரவிட, வீரர்கள் எரிந்துபோன ஆயுதச் சாலையைக் கிளறிப் பார்த்தார்கள். அங்கே கரிக்கட்டையாய்க் கிடந்தாள் குயிலி...!

Keelai Naadaan
21-09-2008, 03:43 PM
சிலிர்க்க வைத்தது குயிலியின் செயல்.
விறுவிறுப்பான சிறுகதை போல் ... அருமையான எழுத்து நடை.
பகிர்ந்தமைக்கு நன்றிகள்

ராஜா
22-09-2008, 05:13 AM
அட...!

மனிதர்களைப்போல கைரேகைகள் கோலாக் கரடிகளுக்கும் உண்டாம்..!

உலகில் ஒரு மனிதனுக்கு 20 கோடி என்ற விகிதத்தில் பூச்சியினங்கள் இருக்கின்றனவாம்..!

புலி சுறாமீன்கள் தங்கள் தாயின் கருப்பைக்குள் இருக்கும்போதே ஒன்றோடொன்று போரிட்டுக்கொள்ளுமாம்.. உயிர்தப்பியவை மட்டுமே பிரசவிக்கப்படும்..!

நம் உடலில் உள்ள வியர்வைச் சுரப்பிகளின் எண்ணிக்கை சுமார் இரண்டிலிருந்து மூன்று மிலியன்க*ள்..!

ராஜா
22-09-2008, 05:22 AM
இன்று எனக்கு வந்த குறு{ம்பு) தகவல்..!

கலீலியோ சிறிய எண்ணெய் விளக்கை வைத்து படித்தார்.

கிரஹாம்பெல், மெழுகுவத்தி வெளிச்சத்தில் கற்றார்.

ஷேக்ஸ்பியர் தெருவிளக்கில் பயின்றார்..

எனக்கு ஒண்ணுமட்டும் புரியலீங்க.. பகல்நேரத்தில அவங்க எல்லாம் அப்படி என்னதான் பண்ணினாங்க..?

poornima
22-09-2008, 06:49 AM
ஆ'நி யின் காதல் கதை ஆ! நி என ரசிக்க வைத்தது..

குயிலியின் சம்பவம் - நெஞ்சைத் தொட்ட நிகழ்வு

குறும் தகவல்களில் குறும்புகள் கொள்ளை கொள்கின்றன.

புள்ளி விவரங்களும் துள்ளல் பதிவுகளும் சமயத்தில் நெஞ்சை அள்ளும்
பதிவுகளும் இந்தத் திரியை வெற்றிகரமான திரியாக மாற்றியுள்ளது என்றால்
அது மிகையில்லை..

ராஜா.. உங்க ஆட்சி அசத்தலாப் போய்கிட்டிருக்கிருக்கு இந்த திரியில்
பாராட்டுகள் வாழ்த்துகள்

கண்மணி
22-09-2008, 07:06 AM
மனிதர்களைப்போல கைரேகைகள் கோலாக் கரடிகளுக்கும் உண்டாம்..!

அப்ப சரி, கைரேகை ஜோசியத்திற்கு இன்னுமொரு வாய்ப்பு.:icon_b:

உலகில் ஒரு மனிதனுக்கு 20 கோடி என்ற விகிதத்தில் பூச்சியினங்கள் இருக்கின்றனவாம்..!

ம்ம் ஓவியனின் உவ்வே ஆனாலும் சத்தே மாதிரி இருந்தா இந்த நிலை சீக்கிரமா மாறிப்போகுமில்ல.:lachen001::lachen001:.

புலி சுறாமீன்கள் தங்கள் தாயின் கருப்பைக்குள் இருக்கும்போதே ஒன்றோடொன்று போரிட்டுக்கொள்ளுமாம்.. உயிர்தப்பியவை மட்டுமே பிரசவிக்கப்படும்..!

அவை மணற்புலிச் சுறாக்களாம். http://new-brunswick.net/new-brunswick/sharks/species/sandtiger.html

சாதாரணப் புலிச்சுறாக்கள் அப்படி இல்லையாம். http://new-brunswick.net/new-brunswick/sharks/species/tiger.html :aetsch013:

நம் உடலில் உள்ள வியர்வைச் சுரப்பிகளின் எண்ணிக்கை சுமார் இரண்டிலிருந்து மூன்று மிலியன்க*ள்..!

நல்ல வேளை ஒரு மூக்கு இரண்டு கைகள் இருக்கு.. :D:D:D

shibly591
22-09-2008, 07:11 AM
இன்று எனக்கு வந்த குறு{ம்பு) தகவல்..!

கலீலியோ சிறிய எண்ணெய் விளக்கை வைத்து படித்தார்.

கிரஹாம்பெல், மெழுகுவத்தி வெளிச்சத்தில் கற்றார்.

ஷேக்ஸ்பியர் தெருவிளக்கில் பயின்றார்..

எனக்கு ஒண்ணுமட்டும் புரியலீங்க.. பகல்நேரத்தில அவங்க எல்லாம் அப்படி என்னதான் பண்ணினாங்க..?

அட ஆமால்ல....

இது நமக்கு தோணவே இல்லியே........

கண்மணி
22-09-2008, 07:11 AM
எனக்கு ஒண்ணுமட்டும் புரியலீங்க.. பகல்நேரத்தில அவங்க எல்லாம் அப்படி என்னதான் பண்ணினாங்க..?

பல அறிஞர்கள் பகலில் வெளிய தலை காட்ட முடியாத அளவிற்கு "பாப்புலரா" தானே இருந்தாங்க.. :D:D:D:D:D

shibly591
22-09-2008, 07:15 AM
விசம் குடிச்ச மாதிரி தெரியலையே.... விசயம் முடிச்சமாதிரியில்ல இருக்கு... அப்பிடின்னாலும் சேர்த்துதானே வைக்கனணும்...!

தீபன்..

ஆநியை அநியாயத்துக்கு சந்தேகப்படவேண்டாம்..

தீபன்
22-09-2008, 09:46 AM
இது கண்மணி கொமன்ஸ் அல்ல... தீபன் கொமன்ஸ்...

மனிதர்களைப்போல கைரேகைகள் கோலாக் கரடிகளுக்கும் உண்டாம்..!
துப்பறிவாளரின் தேடல் முடிவில் இவையும் மாட்டுமோ...:rolleyes:

உலகில் ஒரு மனிதனுக்கு 20 கோடி என்ற விகிதத்தில் பூச்சியினங்கள் இருக்கின்றனவாம்..!
சராசரி வாள்நாள் 25000 என்றால் தினசரி 8000 பூச்சிகளை ஓவியன் உண்ண வேண்டுமா...:eek:

புலி சுறாமீன்கள் தங்கள் தாயின் கருப்பைக்குள் இருக்கும்போதே ஒன்றோடொன்று போரிட்டுக்கொள்ளுமாம்.. உயிர்தப்பியவை மட்டுமே பிரசவிக்கப்படும்..!
அதான் தெரியுமே... பிரசவத்துகு பின்னும் சும்மாவா இருக்கு...:lachen001:

நம் உடலில் உள்ள வியர்வைச் சுரப்பிகளின் எண்ணிக்கை சுமார் இரண்டிலிருந்து மூன்று மிலியன்க*ள்..!
ஆனால் பலருக்கும் அதில் வேலை செய்யும் சுரப்பிகள் ஒன்றோ இரண்டுதான்...!:icon_p:

அக்னி
22-09-2008, 10:07 AM
புலி சுறாமீன்கள் தங்கள் தாயின் கருப்பைக்குள் இருக்கும்போதே ஒன்றோடொன்று போரிட்டுக்கொள்ளுமாம்.. உயிர்தப்பியவை மட்டுமே பிரசவிக்கப்படும்..!
அப்போ, உயிர்விட்டவை என்னாகும்?
அல்லது, யாருடைய வயிற்றுக்குள்ளே சமாதியாகும்...

எனக்கு ஒண்ணுமட்டும் புரியலீங்க.. பகல்நேரத்தில அவங்க எல்லாம் அப்படி என்னதான் பண்ணினாங்க..?
பகல் நேரத்தில செயற்கை விளக்கைக் கொளுத்தி வச்சுப் படிச்சிருந்தா,
மேதைகள் என்று ஏற்றுக் கொண்டிருக்க மாட்டீகளே...

ராஜா
22-09-2008, 12:46 PM
மனிதர்களைப்போல கைரேகைகள் கோலாக் கரடிகளுக்கும் உண்டாம்..!

நல்ல வேளை இரண்டு கைகள் இருக்கு.. :D:D:D
இது கண்மணி கொமன்ஸ் அல்ல... தீபன் கொமன்ஸ்...

ஆனால் பலருக்கும் அதில் வேலை செய்யும் சுரப்பிகள் ஒன்றோ இரண்டுதான்...!:icon_p:

கலக்கல் கமெண்டுகள் நண்பர்களே..!

ராஜா
22-09-2008, 12:49 PM
பகல் நேரத்தில விளக்கைக் கொளுத்தி வச்சுப் படிச்சிருந்தா,
மேதைகள் என்று ஏற்றுக் கொண்டிருக்க மாட்டீகளே...அதுவுஞ்சரிதான் அக்கினியாரே..!

mukilan
22-09-2008, 01:26 PM
வணக்கம் முகிலன், மேலுள்ள என் பதிவில் திருத்தம் செய்து காரணமாக தேவையற்ற மேற்கோள்கள் என கூறியுள்ளீர்கள். ராஜா அண்ணா ஒரே பதிவை மீண்டும் இட்டிருப்பதை சுட்டிக்காட்டவே அவற்றை மேற்கோளிட்டிருந்தேன். அவை மிக பெரிதாயிருப்பதாய் கருதியிருந்தால் இப்போது நான் மேற்கோளிட்டிருப்பதைபோல சுருக்கமாகவேனும் திருத்தியிருக்கலாம். மேலும், நான் ஏன் அதை சொன்னேனென புரிந்துகொள்ளாமல் இரு பதிவுகளும் இப்போதுவரை இருக்கின்றன.
அதில் மீள பதிக்கப்பட்ட பதிவு நீக்கப்பட்டபின் என் கூற்று அர்த்தமிழந்து போய்விடகூடாதென்பதற்குதான் நான் மேற்கோளிட்டு சொல்லியிருந்தேன். நன்றி.

அன்பு தீபன், முழுப் பதிப்பையும் மேற்கோள் காட்டுவது தேவையற்றது என்பது உங்களுக்குத் தெரியும். அதே பதிப்பை இருமுறை மேற் கோள் காட்டியிருப்பது, இது போன்ற நெடிய திரிகளில் மன்றத்தின் வேகத்தை குறைக்கும். இது மட்டுமே நான் அந்த மேற்கோள்களை எடுக்க காரணம். மற்றபடி உங்கள் மனம் புண்படும் படி செய்ய நான் நினைக்கவில்லை. அதற்கு நீங்கள் சொல்ல வந்த நகைச்சுவை புரியாமல் இருந்து விட்டதும் ஒரு காரணம். மன்னிக்க.

ஓவியன்
22-09-2008, 01:47 PM
உலகில் ஒரு மனிதனுக்கு 20 கோடி என்ற விகிதத்தில் பூச்சியினங்கள் இருக்கின்றனவாம்..!
சராசரி வாள்நாள் 25000 என்றால் தினசரி 8000 பூச்சிகளை ஓவியன் உண்ண வேண்டுமா...:eek:

சிவனே என்று, உலகின் ஏதோ ஒரு மூலையில் என்பாட்டில் இருக்கும் என்னை எனப்பா இப்படி வம்புக்கு இழுக்கிறீர்...........??

:traurig001: :traurig001: :traurig001: :traurig001: :traurig001:

தீபன்
22-09-2008, 05:49 PM
சிவனே என்று, உலகின் ஏதோ ஒரு மூலையில் என்பாட்டில் இருக்கும் என்னை எனப்பா இப்படி வம்புக்கு இழுக்கிறீர்...........??

:traurig001: :traurig001: :traurig001: :traurig001: :traurig001:

மூலைகளில் தானே பூச்சிகளும் வசமாக அம்பிடும்... (ஆமா, இப்பவும் பூச்சிதான பிடிச்சிட்டிருக்கிங்க...)

[முகிலன், நண்பர்களால் நான் என்றும் புண்படுவதில்லை. நான் சொன்னது என் செயலிற்கான காரணம் மட்டுமே. இதற்கு மன்னிப்பெல்லாம் சொல்வது அதிகம்.
அமரன்: கலக்கல் பக்கத்தில் என்ன அரட்டை
சரி, சரி... சட்டம்பியார் வந்திட்டார்.. இதோட விடுவம்...]

பென்ஸ்
22-09-2008, 05:52 PM
மூலைகளில் தானே பூச்சிகளும் வசமாக அம்பிடும்... (ஆமா, இப்பவும் பூச்சிதான பிடிச்சிட்டிருக்கிங்க...)

ஏன் தீபன் அவரரை தொந்தரவு செய்கிறீர்கள்....
சாப்பிடுறப்ப பேச கூடாதுன்னு சொல்லிதரலையா..???

தீபன்
22-09-2008, 05:55 PM
அது அவர்தானே பேசக்கூடாது... இப்பகூட நாந்தேன் பேசிட்டிருக்கன்... அவர பாரும்... வாய் நிறைய அடஞ்சுகிட்டு... உவ்வே...

ராஜா
23-09-2008, 04:45 AM
கிறுக்கச்சிங்க இருக்காங்க..!

ஆமி பாஷர். இந்த 45 வயது அம்மணி. டெக்சாஸ், சான் அண்டோனியோவில் கைது செய்யப்பட்டார்.

குற்றம்..?

18 பொட்டலங்கள் போதைப்பொருளை, கார் பானட்டுக்குள் மறைத்துவைத்திருந்தாராம். தன் காருக்கு ஆயில் மாற்ற கம்மியரிடம் போனபோது, அவர் காவலருக்குப் போட்டுக்கொடுத்துவிட்டார்.

ஆயில் மாற்ற இஞ்சின் பானட்டைத் திறப்பாங்கன்னு எனக்குத் தெரியாதுன்னு ஆமி கண்ணீரும் கம்பலையுமா புலம்பியதுதான் இதில் விசேடமான தகவல்..!

கண்மணி
23-09-2008, 04:53 AM
[B]ஆயில் மாற்ற இஞ்சின் பானட்டைத் திறப்பாங்கன்னு எனக்குத் தெரியாதுன்னு ஆமி கண்ணீரும் கம்பலையுமா புலம்பியதுதான் இதில் விசேடமான தகவல்..!

பொழைக்கத் தெரியாத பொண்ணா இருக்கே..

இப்படி மாட்டினா, ஆளுக்குப் பாதின்னு முதல்ல டீல் பேசி இருக்கணும்.

அதுக்கு ஒத்து வரலைன்னா, உடனே தானும் போலீஸூக்குப் ஃபோன் போட்டு போட்டுக் கொடுத்தவர்தான் அதை யார்கிட்டயோ கொடுக்கச் சொல்லிக் கொடுத்தார் என திருப்பிப் போட்டுக் கொடுக்கணும்.

கோர்ட்டுக்குப் போனா,
எனக்கு பானட்டைத் திறக்கவே தெரியாது. தெரிஞ்சா நான் ஆயில் மாற்றிக்க மாட்டேனா? இவர் தான் பொட்டலங்களை உள்ளே வைத்தார் என வாக்கு மூலம் குடுக்கணும்...

ஆமாம் கிறுக்கிதான் அந்தப் பொண்ணு...:D:D:D

தீபன்
23-09-2008, 05:12 AM
கண்மணி கிரிமினல் லோயர் கணக்கா யோசிக்குதே....
அல்லது கிரிமினலேதானோ....!?

ராஜா
23-09-2008, 05:28 AM
உப்புத் தேநீர்..!

அன்றுதான் கல்லூரி வாழ்க்கையின் இறுதிநாள் .. கலவையான மனநிலையில் மாணவ மணிகள்.. பிரிவுபசார விருந்தில் அனைவரது கண்களும் ஆநியின் மீது.. அவள்தான் அவ்வருட கல்லூரி அழகு ராணி..! அவளுடன் தேநீர் அருந்த நான் நீ என்று போட்டி வேறு..

ஆணழகர்களே ஏங்கித் தவிக்கும் அழகு ராணி மீது நம் ஹீரோ ஆனிமுத்துவுக்கும் ஒருதலைக் காதல். ஆனி கொஞ்சம் நெருப்பைக் குளிப்பாட்டியதுபோல இருப்பான். அவன் பல்லழகைப் பார்த்து சரவண பவனில் தேங்காய் துருவும் வேலைக்குக் கூப்பிட்டிருக்கிறார்கள். படிப்பிலும் மிகச் சுமார்தான். இன்று விட்டால் இனி வாய்ப்பே இல்லை என்று முடிவுசெய்த ஆனி, ஆநியை முகத்துக்கு நேராக நோக்கி கேட்டான்..

"என்னுடன் தேநீர் அருந்தச் சம்மதமா..?

அழகி ஆநி எழிலாக புருவம் உயர்த்த, ஏனையோர் இகழ்ச்சியுடன் நோக்க, ஏளனக்கண்கள் ஆனியின் முதுகைத் துளைப்பது நன்கு புரிந்தது. எனினும் அதிசயம் நிகழ்ந்தது..

"ஏன் கூடாது..? நான் தயார்..!" ஆநி இசைத்(ந்)தாள்.

கருப்பனுக்கு வந்த வாழ்வைப் பாருடா என்று மற்றையோர் கிசுகிசுக்க,ஆநியும், ஆனியும் ஒதுக்குப்புறமான மேசையில் இடம் பிடித்தார்கள். தேநீர் தயாரிப்பு குறித்த விருப்பத்தேர்வுகளை வேண்டிநின்ற வழங்குநரிடம் ஆனி சொன்னான்..

"இரண்டு கரண்டி உப்பு..!"

அதிசயித்த ஆநி விளக்கம் கேட்க, ஆனியின் முகம் அபூர்வமாகச் சிவந்தது..

"ஆம் ஆநி.. நான் கடற்புரத்தைச் சேர்ந்தவன். என் பெற்றோருக்கு உப்புக்காய்ச்சும் தொழில். மிக ஏழ்மையிலும் என்னைப் படிக்க வைக்கிறார்கள். அவர்களின் துன்பமும், கனவுகளும் என்னை எப்போதும் நேர்வழிப்படுத்திக்கொண்டிருப்பதற்காக நான் தேநீரில் உப்பு போட்டுக்கொள்வது வழக்கம்..."

இதைச் சொல்லும்போது ஆனியின் கண்களில் ஈரம்.

ஆநி அதிசயித்தாள்.. அப்போதே முடிவுக்கு வந்தாள்.. "இவரே என் கணவர்..!" தன் பெற்றோர் மீதும், தன் பிறப்பிடம் மீதும், அன்பு வத்திருக்கும் இவர்... தன் பழைய வாழ்க்கையை எப்போதும் எண்ணிப்பார்க்கும் இவர்.. எனக்கும் நல்ல கணவனாக இருப்பார்..

இருவரும் இன்புற்று வாழ்ந்தனர்.. ஆநி தேநீரில் ஆனிக்காக 2 கரண்டி உப்பைப் போடும்போதெல்லாம் அவளுக்கு விருந்துநாள் சம்பவம் நினைவுக்கு வரும்.. உப்பை மட்டுமல்லாது, தன் அன்பையும் கலக்கித் தருவாள்.

எல்லா நல்ல விடயங்களும் ஒரு முடிவுக்கு வந்துதானே தீரவேண்டும்..? 40 ஆண்டு இனிய இல்லறத்தின் முடிவாக, ஆனி செத்துப்போனான்... ஆசை மனையாளுக்கு ஒரு கடிதத்தை விட்டுவிட்டு.. அதில்..

"என் உயிரினும் மேலான அன்பு மனைவிக்கு..

நான் உன்னிடம் ஒரு பொய்யைச் சொல்லிவிட்டேன்.. அதை பொய்யென்று சொல்லாமலே 40 ஆண்டுகாலம் உன்னுடன் வாழ்ந்துவிட்டேன்.. என்னை மன்னிப்பாயா..?

உனக்கு அந்த பிரிவு விருந்து நினைவிருக்கும்.. அன்று ஒரே மேசையில் நீயும் நானும் மட்டும்.. ஒரு பேரழகியின் அருகாமையால் நான் மிகுந்தப் பதற்றத்தில் இருந்தேன்.. அந்தப் பதற்றத்தில்தான் சீனி என்பதற்குப் பதிலாக உப்பு என்று சொல்லிவிட்டேன்..!

நம் உறவு நீடிக்கப்போகிறது என்றறியாமல் அதற்கு ஒரு விளக்கமும் எனக்குத் தோன்றியவாறு சொல்லிவிட்டேன். பின்னர் எத்தனையோ முறை உன்னிடம் உண்மையைச் சொல்ல முயன்றேன். ஆனால் நீ என்ன நினைப்பாயோ என்று சொல்லவில்லை. ஆநி.. நம் 40 ஆண்டு இல்லறத்தில் அதுவே முதலும் முற்றுமான பொய். அதைத் தவிர, என் தேவதைக்கு நான் உண்மையானவனாகவே இருந்தேன். நீ என் வாழ்க்கையின் வரம். இன்னுமொரு வாழ்க்கை இருந்தால், அதிலும் நீயே எனக்கு மனைவியாகக் கிடைத்தால், நான் இன்னும் 40 வருடங்களுக்கு உப்புத் தேநீர் அருந்தத் தயார்.

ஆநியின் கண்ணீர் அக்கடிதத்தை நனைத்தது.

அவளிடம் யாராவது," உப்புத் தேநீர் எப்படி இருக்கும்..?" என்று கேட்டால் அவள் சொல்லுவாள்..

"மிக இனிமையாக...!"

ராஜா
23-09-2008, 05:34 AM
கண்ணை நம்பாதே ; உன்னை ஏமாற்றும்..!

http://i144.photobucket.com/albums/r163/arrajar/275183671_6b294f5764_o.jpg

தீபன்
23-09-2008, 05:43 AM
ஆனி-ஆநி காதலுக்கு முன்னால் ஷாஜகான்-மும்தாஜ் காதலெல்லாம் ஜுஜூபி...
கலக்கல் காவியம்.

ராஜா
23-09-2008, 05:45 AM
அட..!

எல்லோருமே... எப்போதுமே கனவு காண்கிறோம்.. பல கனவுகள் நம்மை பாதிப்பதில்லையாதலால், நாம் கனவு கண்டதை சில நேரங்களில் அறியாமலே இருக்கிறோம்..!

சராசரியாக, நம் வாழ்நாளில் ஆறு வருடங்கள் கனவு காண்பதில் கழிக்கிறோம். வேறுமாதிரி சொன்னால்.. சுமார் 2100 நாட்கள் நாம் விந்தையான உலகில் சஞ்சரிக்கிறோம்..!

ஒரு இரவில், 4 முதல் 7 கனவுகள் நமக்கு வரக்கூடும்..!

ஒவ்வொரு கனவு முடிந்து அடுத்த 5 நிமிடங்களில் பாதிச் சம்பவங்கள் மறந்துவிடும்.. 10 நிமிடங்கள் கழிந்துவிட்டாலோ, 99 விழுக்காடு கனவுச்சம்பவங்கள் நினைவிலிருக்காது.

இப்போ புரியுதா.. கனவு காணும்போதே அலறி அடிச்சுகிட்டு, எழுந்துக்கறவங்க ஏன் அவ்வளவு சுலபத்துல பயங்கரக் கனவை மறக்க முடியலேன்னு..?!!!

ராஜா
23-09-2008, 05:47 AM
ஆனி-ஆநி காதலுக்கு முன்னால் ஷாஜகான்-மும்தாஜ் காதலெல்லாம் ஜுஜூபி...
கலக்கல் காவியம்.

நன்றி தீபன்..!

அந்தக் கதையும் ஒரு நகைச்சுவைத் துணுக்கின் நீட்சிதான்.. என் முயற்சி நன்றாக இருக்கிறதா..?

ராஜா
23-09-2008, 05:52 AM
http://i144.photobucket.com/albums/r163/arrajar/Pics_Paper_Animals_3.jpg

காகிதச் சிங்கங்கள்..!

தீபன்
23-09-2008, 05:55 AM
எல்லோருமே... எப்போதுமே கனவு காண்கிறோம்.. பல கனவுகள் நம்மை பாதிப்பதில்லையாதலால், நாம் கனவு கண்டதை சில நேரங்களில் அறியாமலே இருக்கிறோம்..!
எப்படி அறியிறது...? எழுந்தாதானே...? நாமதான் கும்பகர்ணன் வம்சமாச்சே..!:mini023:

சராசரியாக, நம் வாழ்நாளில் ஆறு வருடங்கள் கனவு காண்பதில் கழிக்கிறோம். வேறுமாதிரி சொன்னால்.. சுமார் 2100 நாட்கள் நாம் விந்தையான உலகில் சஞ்சரிக்கிறோம்..!
மீதி நாட்களை பகல் கனவில் களிக்கிறோம்....:eek:

ஒரு இரவில், 4 முதல் 7 கனவுகள் நமக்கு வரக்கூடும்..!
இது போதாது.... ஆழுக்கொரு கனவுன்னு பாத்தாலும் நமீதா, நயன், த்ரிஷா, ஸ்ரேயா, அசின், பாவனா, தமனா, இலியானா என்று பட்டியல் பெரிசாருக்கே...:p

ஒவ்வொரு கனவு முடிந்து அடுத்த 5 நிமிடங்களில் பாதிச் சம்பவங்கள் மறந்துவிடும்.. 10 நிமிடங்கள் கழிந்துவிட்டாலோ, 99 விழுக்காடு கனவுச்சம்பவங்கள் நினைவிலிருக்காது.
நிஜத்திலயே உடன மறந்திடுது... இதுக்க கனவிலயாவது 5 நிமிசம் நிண்டு பிடிக்கிறது பெரிய விசயம்..:D

ராஜா
23-09-2008, 05:56 AM
http://i144.photobucket.com/albums/r163/arrajar/Pics_Bus_Paintings_4.jpg

பேருந்து விளம்பரம்..!

தீபன்
23-09-2008, 05:59 AM
நன்றி தீபன்..!

அந்தக் கதையும் ஒரு நகைச்சுவைத் துணுக்கின் நீட்சிதான்.. என் முயற்சி நன்றாக இருக்கிறதா..?

அட... ராஜாண்ணர் கதாசிரியராயிட்டார்... நகைச்சுவை துணுக்கு நான் ஏற்கனவே அறிந்ததுதான். ஆனால், அது நீங்கள் சொன்னபிந்தான் நினைவுக்கு வருகிறது. அந்தளவுக்கு நகைச்சுவையின் சாயலை மறைத்து றொமான்ஸ் சாயம் பூசி காவியக் காதல் கதையாக எழுதியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள் அண்ணா.
(ஆமா, சொந்த அனுபவமில்லைத்தானே...)

ராஜா
23-09-2008, 06:00 AM
ஒரு இரவில், 4 முதல் 7 கனவுகள் நமக்கு வரக்கூடும்..!
இது போதாது.... ஆழுக்கொரு கனவுன்னு பாத்தாலும் நமீதா, நயன், த்ரிஷா, ஸ்ரேயா, அசின், பாவனா, தமனா, இலியானா என்று பட்டியல் பெரிசாருக்கே...:p:icon_b::icon_b::icon_b::icon_b:

கனவுக் "கண்ணி"கள்..!

ராஜா
23-09-2008, 06:04 AM
(ஆமா, சொந்த அனுபவமில்லைத்தானே...)

ஆககா..!

பயனர் படமா நம்ம முகரையை (இப்போ இல்ல.. இதுக்கு முந்தி..!) போட்டது தப்பாப் போயிடுச்சே..!

அக்னி
23-09-2008, 12:13 PM
துணுக்காகக் கேட்டவற்றை உணர்வான கதைகளாய்க் கேட்பது,
மனதை லயிக்க வைக்கின்றது.

தொடருங்கள் ராஜா அண்ணா...

வரலாற்றுக் குறிப்புக்கள் பதிவுகளாகையில், அவற்றின் முழுமையை அறிந்து கொள்ளத், தொடுப்புக்களைத் தந்தால் (தர முடியுமானால்) நன்றாக இருக்கும் எனக் கருதுகின்றேன்.
கவனத்திற் கொள்ள வேண்டுகின்றேன்.

ராஜா
24-09-2008, 11:34 AM
http://i144.photobucket.com/albums/r163/arrajar/275183459_fbd7b6eaf4_o.jpg

கண்ணை நம்பாதே : உன்னை ஏமாற்றும்..!

ராஜா
24-09-2008, 11:38 AM
http://i144.photobucket.com/albums/r163/arrajar/Pics_Paper_Animals.jpg

காகித மிருகம்..!

ராஜா
24-09-2008, 11:39 AM
http://i144.photobucket.com/albums/r163/arrajar/Pics_Bus_Paintings_2.jpg

பேருந்து விளம்பரம்..!

ராஜா
24-09-2008, 11:49 AM
அட..!

ரூபாய் நோட்டுகள் காகிதத்தில் தயாரிக்கப்படுவதில்லை.. பஞ்சில் இருந்து தயாரிக்கப்படுகின்றன..

நம் வயிற்றில் செரிக்கும் பகுதிச் சுவர் 2 வாரங்களுக்கு ஒருமுறை புதிதாக ஒரு பாதுகாப்பு லேயரை உருவாக்கிக்கொள்கிறது. இல்லாவிட்டால் அந்தப்பகுதியே ஜீரணிக்கப்பட்டுவிடும்..!

ஆங்கில எழுத்துக்களில் ஒன்றான "i"- ல் இருக்கும் தலைப்புள்ளிக்கும் பெயர் உண்டு. "டைட்டில்..!"

வாத்து போடும் சத்தம் மட்டும் எதிரொலிப்பதில்லை.. ஏனென்று இதுவரை கண்டுபிடிக்கப்படவும் இல்லை..!

ராஜா
24-09-2008, 12:05 PM
தகராறு நிறைந்த வரலாறு..!

நடுவிரலை ஆட்டிக்காட்டினால் கேலியோ நையாண்டியோ செய்வதாக மேலைநாடுகளில் பொருள்.. இந்தப் பழக்கம் எப்படி வந்தது தெரியுமா..?

பிரபல அஜின்கோர்ட் யுத்தம் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா..? கி.பி. 1415ம் ஆண்டில் ஆங்கிலேயருக்கும் பிரெஞ்சுக்காரர்களுக்கும் நடந்த அந்த அஜின்கோர்ட் போரில் பிரெஞ்சு கை ஓங்கிவந்த நேரம்..

பிரெஞ்சு தளபதிகள் ஒரு விபரீத திட்டம் தீட்டினார்கள்.. தங்களிடம் போர்க்கைதியாக பிடிபடும் வெள்ளை வீரர்களின் நடுவிரலை மட்டும் வெட்டிவிடுவது என்பதே அது..! அந்தக்காலங்களில் வில்லில் நாண் ஏற்றி அம்பு எய்வதற்கு நடுவிரல் மிக அவசியமானதாக இருந்தது. அந்த விரலை அகற்றிவிட்டால், எதிரிகள் பயனற்றுப் போய்விடுவார்கள் என்பது பிரெஞ்சுக்காரர்கள் கணக்கு.

ஆனால் வரலாற்றின் கணக்கு வேறாக இருந்தது. அஜின்கோர்ட் யுத்தத்தின் முடிவில், பிரெஞ்சுக்காரர்கள் எதிர்பாராத அதிர்ச்சித் தோல்வியைச் சந்திக்க நேரிட்டது. வெற்றிபெற்ற ஆங்கிலேயப் போர்வீரர்கள் ஒவ்வொருவரும் தங்கள் நடுவிரலை பிரெஞ்சுக்காரர்கள் முன் ஆட்டிக்காட்டி வெறுப்பேற்றினார்கள்.. பார்த்தாயா.. எங்கள் விரல் எங்களிடமே இருக்கிறதென்று..!

இதுவே நாளடைவில் நையாண்டியின் அறிகுறிச்சைகையாக மாறிப்போயிற்று..!

ராஜா
24-09-2008, 12:08 PM
http://i144.photobucket.com/albums/r163/arrajar/48315b3f81757longbike_09.jpg

இது என்னன்னு உங்களால் சொல்லமுடியுமா..?

ஊகிக்க முடியாதோர் நாளைவரை காத்திருங்கள்..!

ராஜா
25-09-2008, 04:03 AM
எல்லாம் தெரியும் என்ற
குழப்பத்தில் இருக்காதே...

எதுவும் தெரியாது என்ற
தெளிவோடு இரு...

-சுவாமி விவேகானந்தர்

ராஜா
25-09-2008, 04:14 AM
வெட்டிகரமான சிந்தனைகள்.. (எத்தனைன்னு தெரியல..)

* பூமிக்குக் குறுக்கா ஒரு பள்ளம் தோண்டி, அதுக்குள்ள நீங்க குதிச்சீங்கன்னா புவி ஈர்ப்பு உங்களை எங்கு கொண்டுபோய் விடும்..?

* சாத்தானோட அப்பா அம்மா பேர் என்ன..?

* சினிமா கொட்டாய்ல சேர்ல இருக்கற கை வைக்கும் இடத்தில் எது நமக்கு ஒதுக்கப்பட்டிருக்கு..?

* பல் டாக்டருக்கே பல் சொத்தையா பூடுச்சுன்னா அவரே பிடுங்கிப்பாரா.. இல்லே வேற பல்டாக்டர்ட்ட போவாரா..?

poornima
25-09-2008, 06:59 AM
வெட்டிகரமான சிந்தனைகள்.. (எத்தனைன்னு தெரியல..)

* பூமிக்குக் குறுக்கா ஒரு பள்ளம் தோண்டி, அதுக்குள்ள நீங்க குதிச்சீங்கன்னா புவி ஈர்ப்பு உங்களை எங்கு கொண்டுபோய் விடும்..?

குறுக்கேன்னா கிழக்கு மேற்காவா.. வடக்கு தெற்காவா விவரமா
சொல்லுங்க :-)
* சாத்தானோட அப்பா அம்மா பேர் என்ன..?
கொஞ்சம் யோசிக்கணும்... :-)

* சினிமா கொட்டாய்ல சேர்ல இருக்கற கை வைக்கும் இடத்தில் எது நமக்கு ஒதுக்கப்பட்டிருக்கு..?

நல்ல கேள்வி உட்கார்ந்து யோசிச்சீங்களோ

* பல் டாக்டருக்கே பல் சொத்தையா பூடுச்சுன்னா அவரே பிடுங்கிப்பாரா.. இல்லே வேற பல்டாக்டர்ட்ட போவாரா..?

தனக்கே சேவகம் செய்து கொள்ள முடியாத பட்டியலில் இவரும் ஒருவர்

ராஜா
25-09-2008, 08:09 AM
யூ டூ பூர்ணிமா..?

எல்லாரும் ஒரு மார்க்கமாத்தான் கிளம்பியிருக்கீங்க...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..

கண்மணி
25-09-2008, 09:35 AM
* பூமிக்குக் குறுக்கா ஒரு பள்ளம் தோண்டி, அதுக்குள்ள நீங்க குதிச்சீங்கன்னா புவி ஈர்ப்பு உங்களை எங்கு கொண்டுபோய் விடும்..?

அதானே, காத்தில நீங்க கையை ஆட்டிகிட்டு யோசிக்கும் போதே நினைச்சேன்.. இவரு யாருக்கோ குழிபறிக்கிறாருன்னு.,. கடைசியில பூமிக்கேவா?

(பூமிக்கு குறுக்கே பள்ளம் தோண்டனும் பூமியிலதான் தோண்டணுமா? பூமி போற பாதையிலும் தோண்டலாம்.. அப்பவும் குறுக்கே தோண்டினதாத்தான் அர்த்தம்..(என்ன இது, இந்தப் பூனை குறுக்கே போகுதேன்னு யோசிக்காதீங்க... :lachen001::lachen001::lachen001:) அப்ப நாம் அந்தப் பள்ளத்தில விழுந்தாலும் பூமி மேலதான் இருப்போம்.. ஏன்னா பள்ளத்தை பூமி கிராஸ் பண்ணறப்ப ரன்னிங்கிலயே ஏறிக்கலாம்.. ஹி ஹி... :D:D:D)

* சாத்தானோட அப்பா அம்மா பேர் என்ன..?

பைபிளின் படி சாத்தான் அதிகாலையின் மகன். குரானின் படி அக்னியின் மகன்.. ஆகமொத்தம் இனிசியல் "அ" தான். அ.சாத்தான் அசத்துரானில்ல..:D:D

* சினிமா கொட்டாய்ல சேர்ல இருக்கற கை வைக்கும் இடத்தில் எது நமக்கு ஒதுக்கப்பட்டிருக்கு..?

அது பக்கத்துச் சீட்டில உட்கார்ந்திருக்கிறவங்களைப் பொருத்தது.. (அவங்க எடை, மணம், பார்வையின் வெப்பநிலை, அழகு இப்படிப் பலவிஷயங்களைப் பொருத்து ஹி ஹி..) ஒண்ணு அவங்களா ஒதுக்குவாங்க.. இல்லைன்னா நாமளா ஒதுக்கிருவோம்.. அப்புறம் சிலசமயம்.. :D:D:D:D

* பல் டாக்டருக்கே பல் சொத்தையா பூடுச்சுன்னா அவரே பிடுங்கிப்பாரா.. இல்லே வேற பல்டாக்டர்ட்ட போவாரா..?

பல் டாக்டர் கிட்டப் போயிட்டு வந்து அந்தப் பல்டாக்டர் என் சொத்தைப் பிடுங்கிட்டாருன்னு வாய் கூசாம சொல்லுவார்.

ஓவியன்
25-09-2008, 10:38 AM
* பூமிக்குக் குறுக்கா ஒரு பள்ளம் தோண்டி, அதுக்குள்ள நீங்க குதிச்சீங்கன்னா புவி ஈர்ப்பு உங்களை எங்கு கொண்டுபோய் விடும்..?

முதலில் நீங்க அப்படி ஒரு பள்ளம் தோண்டிட்டு என்னை அழையுங்க ராஜா அண்ணே, நான் குதித்துப் பார்த்து விட்டு வந்து, எங்கே கொண்டு போய் விடுகிறதென தெளிவாகக் கூறுகிறேன்....!! :D

* சாத்தானோட அப்பா அம்மா பேர் என்ன..?

இதை சாத்தான் கிட்டே இல்லே கேட்கணும்.......!!! :aetsch013:

* சினிமா கொட்டாய்ல சேர்ல இருக்கற கை வைக்கும் இடத்தில் எது நமக்கு ஒதுக்கப்பட்டிருக்கு..?

நோ கமெண்ட்ஸ்........!! :D

* பல் டாக்டருக்கே பல் சொத்தையா பூடுச்சுன்னா அவரே பிடுங்கிப்பாரா.. இல்லே வேற பல்டாக்டர்ட்ட போவாரா..?

தானும் புடுங்க மாட்டார், வேறு டாக்டரிடமும் போக மாட்டார், தன் மனைவியிடம் ஒரு அறை வாங்கி ஃப்ரீயாகப் பிடுங்கிப்பார்...!! :icon_rollout:

கண்மணி
25-09-2008, 10:40 AM

ஓவியன் அண்ணா! தங்கப் பல் கட்டியாச்சா?:lachen001::lachen001::lachen001:

ஓவியன்
25-09-2008, 10:40 AM
வாத்து போடும் சத்தம் மட்டும் எதிரொலிப்பதில்லை.. ஏனென்று இதுவரை கண்டுபிடிக்கப்படவும் இல்லை..!

வாத்து போடும் முட்டையைத் தெரியும், வாத்துப் போடும் சத்தத்தைப் பற்றித் தெரியலையே....!! :)

கண்மணி
25-09-2008, 10:42 AM
வாத்து போடும் முட்டையைத் தெரியும், வாத்துப் போடும் சத்தத்தைப் பற்றித் தெரியலையே....!! :)

வாத்து(ப்) போடும் முட்டையா? இல்லை முட்டை போடும் வாத்தா?

எது சரி? எது தவறு? ஏன்?

ஓவியன்
25-09-2008, 10:43 AM
ஓவியன் அண்ணா! தங்கப் பல் கட்டியாச்சா?:lachen001::lachen001::lachen001:

இல்லை, காற்றோட்டமாக இருக்கட்டுமே என்று அப்படியே இருக்கிறேன்..!! :D:D:D

ஓவியன்
25-09-2008, 10:45 AM
வாத்து(ப்) போடும் முட்டையா? இல்லை முட்டை போடும் வாத்தா?

எது சரி? எது தவறு? ஏன்?

வாத்தெல்லாம் முட்டை போடாது...
ஆனா, முட்டை போடும் வாத்து
நிச்சயமாக முட்டை போடும்...!!

இப்போ, உங்களுக்கே புரிந்திருக்குமே எது சரி என்று...!! :icon_rollout:

அக்னி
25-09-2008, 11:36 AM
வெட்டிகரமான சிந்தனைகள்.. (எத்தனைன்னு தெரியல..)

எண்ணிப் பார்த்து வெற்றிகரமாச் சொல்லிடுவேன்...
அப்புறம் வெட்டிகரமான வேலைன்னு சொல்லிடுவாங்களே...

* பூமிக்குக் குறுக்கா ஒரு பள்ளம் தோண்டி, அதுக்குள்ள நீங்க குதிச்சீங்கன்னா புவி ஈர்ப்பு உங்களை எங்கு கொண்டுபோய் விடும்..?

முதல்ல இதுக்குப் பதில் சொல்லுங்க.
பூமிக்குக் குறுக்கா பள்ளம் தோண்டி, மறுபக்கம் வெளிப்படேக்க,
கால் முதல்ல வருமா? தலை முதல்ல வருமா?

* சாத்தானோட அப்பா அம்மா பேர் என்ன..?

இதோட இன்னும் இரண்டு கேள்விகள்...
சாத்தானோட மனைவி அல்லது கணவன் பேரு என்ன?
புள்ளைங்க பேரு என்ன?

* சினிமா கொட்டாய்ல சேர்ல இருக்கற கை வைக்கும் இடத்தில் எது நமக்கு ஒதுக்கப்பட்டிருக்கு..?

அது ஆட்டோமாட்டிக்கா எல்லாருக்கும் கிடைக்கிறதுக்காகத்தானே மூட்டைப்பூச்சி வளர்க்கிறாங்க...
கைகள மாத்தி மாத்தி சொறியாமத்தான் இருந்துடலாமா...

* பல் டாக்டருக்கே பல் சொத்தையா பூடுச்சுன்னா அவரே பிடுங்கிப்பாரா.. இல்லே வேற பல்டாக்டர்ட்ட போவாரா..?
தானே புடுங்கிப்பாருன்னு வச்சுக்குவோம்.
யாருகிட்ட பீஸு வாங்குவாரு.

பைபிளின் படி சாத்தான் அதிகாலையின் மகன். குரானின் படி அக்னியின் மகன்.. ஆகமொத்தம் இனிசியல் "அ" தான். அ.சாத்தான் அசத்துரானில்ல..:D:D

விட்டா நாந்தான்னு சொல்லிடுவீங்க போலிருக்கே...

ராஜா
25-09-2008, 03:59 PM
ஊரு ஒண்ணு கூடிட்டாய்ங்கப்பாஆஆஆஆஆஆஆஆஆ..!

ராஜா
25-09-2008, 04:03 PM
*

* பல் டாக்டருக்கே பல் சொத்தையா பூடுச்சுன்னா அவரே பிடுங்கிப்பாரா.. இல்லே வேற பல்டாக்டர்ட்ட போவாரா..?

தானும் புடுங்க மாட்டார், வேறு டாக்டரிடமும் போக மாட்டார், தன் மனைவியிடம் ஒரு அறை வாங்கி ஃப்ரீயாகப் பிடுங்கிப்பார்...!! :icon_rollout:

இது சூப்பர்..!

( என்னா ஒரு வில்லத்தனம்..!)

ராஜா
25-09-2008, 04:08 PM
*
[COLOR="red"]* சாத்தானோட அப்பா அம்மா பேர் என்ன..?

பைபிளின் படி சாத்தான் அதிகாலையின் மகன். குரானின் படி அக்னியின் மகன்.. ஆகமொத்தம் இனிசியல் "அ" தான். அ.சாத்தான் அசத்துரானில்ல..:D:Dசர்த்தான் கண்மணி..!

('ர்'ன்னு புள்ளி வச்சிருக்கேன்.. பார்த்துக்கங்க..!)

ராஜா
25-09-2008, 04:13 PM
அது ஆட்டோமாட்டிக்கா எல்லாருக்கும் கிடைக்கிறதுக்காகத்தானே மூட்டைப்பூச்சி வளர்க்கிறாங்க...
கைகள மாத்தி மாத்தி சொறியாமத்தான் இருந்துடலாமா...மூட்டைபூச்சி சர்வதேசப் பிரச்னையா இருக்கும் போலிருக்கே..

அங்கேயும் இதே கதைதானா..?

ராஜா
25-09-2008, 04:17 PM
கலக்கல் கமெண்ட் கொடுக்கற இன்னொரு ஆளை இந்தப்பக்கமே காணோமே..!

(தீபன்.. வாங்க..!)

ராஜா
25-09-2008, 04:22 PM
http://i493.photobucket.com/albums/rr298/vendhar/47d1eb71bbae5podbavar_08.jpg

இதற்கு ஒரு வரியில் கமெண்ட் அல்லது பஞ்ச் டயலாக் சொல்லுங்க கண்ணுகளா..!

ஓவியன்
25-09-2008, 04:41 PM
http://i493.photobucket.com/albums/rr298/vendhar/47d1eb71bbae5podbavar_08.jpg

இதற்கு ஒரு வரியில் கமெண்ட் அல்லது பஞ்ச் டயலாக் சொல்லுங்க கண்ணுகளா..!காரும் ஒரு நாள் கல் மேலே போகும்,
கல்லும் ஒரு நாள் கார் மேலே போகும்..!! :)

அக்னி
25-09-2008, 06:25 PM
பாவம் அல்பா ரோமியோ... யாருப்பா கல்லுக்கு ஜூலியட்டுன்னு பேரு வச்சது..?

காரும் ஒரு நாள் கல் மேலே போகும்,
கல்லும் ஒரு நாள் கார் மேலே போகும்..!! :)
மாட்டேன்... ஒத்துக்க மாட்டேன்...
இது உல்டா...
அத்தோட இரண்டு வரிகளில் இருப்பதனால், விதிமுறைமீறல்...

இளசு
25-09-2008, 06:57 PM
அன்பு ராஜா அவர்களே

பணிப்பளுவால் மெல்ல படிக்கலாம் என கொஞ்சம் விட்டால்
கலக்கலான இத்திரி இப்போது ஆல் போல் படந்து வளர்ந்து..

வாழ்த்துகள்..
இனி அவ்வப்போது வந்து இந்நிழலில் இளைப்பாறுவேன்..

திரியில் உலாவும்போது சட்டென மனதைக்கவர்ந்த வாசகம்..

எல்லாம் தெரியும் என்ற
குழப்பத்தில் இருக்காதே...

எதுவும் தெரியாது என்ற
தெளிவோடு இரு...

-சுவாமி விவேகானந்தர்

நன்றி ராஜா அவர்களே! தொடர்ந்து கலக்குங்கள்!

அந்தக்காலத்தில் கல்கண்டு இதழை எப்போதும் எந்த அளவீட்டிலும் ருசிக்கலாம்..

இத்திரி - மன்றக் கற்கண்டு கலக்கல்!

பென்ஸ்
25-09-2008, 10:49 PM
http://i493.photobucket.com/albums/rr298/vendhar/47d1eb71bbae5podbavar_08.jpg

இதற்கு ஒரு வரியில் கமெண்ட் அல்லது பஞ்ச் டயலாக் சொல்லுங்க கண்ணுகளா..!

அப்படா... இனிமே வண்டியை காற்று அடிச்சுகிட்டு போகாது...

தீபன்
26-09-2008, 02:05 AM
அப்படா... இனிமே வண்டியை காற்று அடிச்சுகிட்டு போகாது...
அந்த பென்ஸு மேல கல்லுக்கு
எங்க பென்ஸு அடிச்ச ’பஞ்’சு:icon_b:

(அந்த காரை பென்ஸ் காராக நினைச்சுக்கங்கப்பா...)

தீபன்
26-09-2008, 02:37 AM
கொஞ்சம் லேட்டாயிடுச்சு... அதுக்குள்ள கூட்டம் சேர்ந்து கும்மியடிச்சிட்டாங்களே... அதில பாருங்க, வழமையா கொமென்ஸ் குடுக்குற அட பகுதிய யாரும் கண்டுக்கல.... ஏற்கனவே வெட்டிகரமா வெற்றிகரமா போற சிந்தனைக்கு வெட்டிகரமா எல்லாரும் கொமென்ஸ் குடுத்திருக்காங்க... பூர்ணிமா, ஓவியன், அக்னி, கண்மணின்னு ஆளுக்கொரு விதமா அலப்பற பண்ணினப்புறம் நானென்ன சொல்ல... இருந்தாலும் முயற்சிக்கிறேன்... நானும் வெட்டிகரமானா ஆளாச்சே...:lachen001:

அட..!

ரூபாய் நோட்டுகள் காகிதத்தில் தயாரிக்கப்படுவதில்லை.. பஞ்சில் இருந்து தயாரிக்கப்படுகின்றன..
அதான் பஞ்சா பறந்திடுதா...:sprachlos020:

நம் வயிற்றில் செரிக்கும் பகுதிச் சுவர் 2 வாரங்களுக்கு ஒருமுறை புதிதாக ஒரு பாதுகாப்பு லேயரை உருவாக்கிக்கொள்கிறது. இல்லாவிட்டால் அந்தப்பகுதியே ஜீரணிக்கப்பட்டுவிடும்..!
வயிற்றுப் போராட்டமென்பது இதைத்தானோ...:lachen001:

ஆங்கில எழுத்துக்களில் ஒன்றான "i"- ல் இருக்கும் தலைப்புள்ளிக்கும் பெயர் உண்டு. "டைட்டில்..!"
அப்ப டைட்டிலிலிள்ள ஐ இல் இருக்கும் தலைப்புள்ளிக்கு என்ன பெயர்...:smilie_abcfra:

வாத்து போடும் சத்தம் மட்டும் எதிரொலிப்பதில்லை.. ஏனென்று இதுவரை கண்டுபிடிக்கப்படவும் இல்லை..!
அப்ப அந்த வாத்தின்ர காதல் உண்மையில்ல போல...:rolleyes:

வெட்டிகரமான சிந்தனைகள்.. .

* பூமிக்குக் குறுக்கா ஒரு பள்ளம் தோண்டி, அதுக்குள்ள நீங்க குதிச்சீங்கன்னா புவி ஈர்ப்பு உங்களை எங்கு கொண்டுபோய் விடும்..?
உங்களைன்பது உடலையா? ஆன்மாவையா..? ஏனெனில், ஒன்றாயிருந்தவை இரண்டாயிடுமே..?:confused:

* சாத்தானோட அப்பா அம்மா பேர் என்ன..?
அப்பாவோட பேரு அப்பாச்சாத்தான்... அம்மாவோட பேரு அம்மாச்சாத்தான்..!:D

* சினிமா கொட்டாய்ல சேர்ல இருக்கற கை வைக்கும் இடத்தில் எது நமக்கு ஒதுக்கப்பட்டிருக்கு..?
ஓடுற படத்தபொறுத்து ஒதுக்கப்பட்டிருக்கும்..:icon_ush:

* பல் டாக்டருக்கே பல் சொத்தையா பூடுச்சுன்னா அவரே பிடுங்கிப்பாரா.. இல்லே வேற பல்டாக்டர்ட்ட போவாரா..?
பிரசவ டொக்டருக்கு பிரசவம்னா அவர்தானே பெத்துக்கனும்... அப்ப, பல் டொக்டருக்கு பல்வலின்னா அவர்தான் புடிங்கிக்கனும்..:icon_b:

ஓவியன்
26-09-2008, 03:39 AM
அப்படா... இனிமே வண்டியை காற்று அடிச்சுகிட்டு போகாது...

ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..........!!! :traurig001: :traurig001: :traurig001:

shibly591
26-09-2008, 05:14 AM
"என்ன கொடுமை சார் இது"

அமரன்
26-09-2008, 07:15 AM
http://i493.photobucket.com/albums/rr298/vendhar/47d1eb71bbae5podbavar_08.jpg

இதற்கு ஒரு வரியில் கமெண்ட் அல்லது பஞ்ச் டயலாக் சொல்லுங்க கண்ணுகளா..!
"குருவி" தலையில் பாறாங்கல்.

அன்புரசிகன்
26-09-2008, 07:42 AM
"குருவி" தலையில் பாறாங்கல்.

சரியா பருங்கையா.. அது குருவி இல்ல. 4 சக்கரமுள்ள ஒரு மோட்டார் வண்டி.... :sport-smiley-018::icon_36::icon_35:

அமரன்
26-09-2008, 08:18 AM
சரியா பருங்கையா.. அது குருவி இல்ல. 4 சக்கரமுள்ள ஒரு மோட்டார் வண்டி.... :sport-smiley-018::icon_35:

பறக்கிறதை எப்படி மோட்டார் வண்டின்னு சொல்லலாம்..:icon_36:

தீபன்
26-09-2008, 09:03 AM
குருவியில ஓடின கார்மாதிரித்தான் கிடக்கு...

ராஜா
26-09-2008, 11:11 AM
அப்படா... இனிமே வண்டியை காற்று அடிச்சுகிட்டு போகாது...

இது சூப்பர்..!

நல்ல நகைச்சுவையான சிந்தனை.. என்னை மிகவும் கவர்ந்தது..!!

நன்றி பென்ஸ்..!!!

ராஜா
26-09-2008, 11:17 AM
ரூபாய் நோட்டுகள் காகிதத்தில் தயாரிக்கப்படுவதில்லை.. பஞ்சில் இருந்து தயாரிக்கப்படுகின்றன..
அதான் பஞ்சா பறந்திடுதா...:sprachlos020:

அது..!

நம் வயிற்றில் செரிக்கும் பகுதிச் சுவர் 2 வாரங்களுக்கு ஒருமுறை புதிதாக ஒரு பாதுகாப்பு லேயரை உருவாக்கிக்கொள்கிறது. இல்லாவிட்டால் அந்தப்பகுதியே ஜீரணிக்கப்பட்டுவிடும்..!

வயிற்றுப் போராட்டமென்பது இதைத்தானோ...:lachen001:

டச்சிங்..!

வாத்து போடும் சத்தம் மட்டும் எதிரொலிப்பதில்லை.. ஏனென்று இதுவரை கண்டுபிடிக்கப்படவும் இல்லை..!
அப்ப அந்த வாத்தின்ர காதல் உண்மையில்ல போல...:rolleyes:

தீபனா.. வாத்தா... இல்லே இல்லே..

தீபனா.. கொக்கா..?!!!

வெட்டிகரமான சிந்தனைகள்.. .

* சினிமா கொட்டாய்ல சேர்ல இருக்கற கை வைக்கும் இடத்தில் எது நமக்கு ஒதுக்கப்பட்டிருக்கு..?

ஓடுற படத்தபொறுத்து ஒதுக்கப்பட்டிருக்கும்..:icon_ush:

ஹி.. ஹி.. அதுவுஞ்சர்த்தான்..!

* பல் டாக்டருக்கே பல் சொத்தையா பூடுச்சுன்னா அவரே பிடுங்கிப்பாரா.. இல்லே வேற பல்டாக்டர்ட்ட போவாரா..?

பிரசவ டொக்டருக்கு பிரசவம்னா அவர்தானே பெத்துக்கனும்... அப்ப, பல் டொக்டருக்கு பல்வலின்னா அவர்தான் புடிங்கிக்கனும்..:icon_b:

அப்போ போஸ்ட் மோர்ட்டம் பண்ற டொக்டர் கதி..?

ராஜா
26-09-2008, 11:18 AM
எல்லாருமே நல்ல நகைச்சுவையுடனும் சமயோசிதத்துடனும் கலக்கியிருக்கீங்க மக்கா..!

நன்றி..!

ராஜா
26-09-2008, 11:22 AM
அன்பு ராஜா அவர்களே

வாழ்த்துகள்..

இனி அவ்வப்போது வந்து இந்நிழலில் இளைப்பாறுவேன்..
அன்பு நண்பர் இளசுவுக்கு பணிவான நல்வரவு..!

ராஜா
26-09-2008, 11:32 AM
http://i493.photobucket.com/albums/rr298/vendhar/483069cd8988etrains003.jpg

இது எந்த இடம்ன்னு சொல்லுங்க பார்ப்போம்..!

(ஏற்கனவே ஒரு படத்தைப் போட்டு என்னான்னு கேட்டீயே.. அது என்னய்யா ஆச்சு..? நாங்க கண்டுபிடிக்காட்டாலும் நீயா சொல்லக்கூடாதா..?ன்னு நீங்க கேக்கறது காதில விழுது.. அடுத்த பதிவு அதுதான்..!)

அக்னி
26-09-2008, 11:46 AM
அட... இங்கே..,
“பேருந்தில் நீ எனக்கு யன்னலோரம்...”
என்று பாட முடியாது போலிருக்கே...

ராஜா
26-09-2008, 11:50 AM
http://i144.photobucket.com/albums/r163/arrajar/48315b3f81757longbike_09.jpg

http://i386.photobucket.com/albums/oo308/arasar/48315b3f9e078longbike_10.jpg

http://i386.photobucket.com/albums/oo308/arasar/48315b3f44aa1longbike_07.jpghttp://i386.photobucket.com/albums/oo308/arasar/48315b3eda91flongbike_04.jpg

http://i386.photobucket.com/albums/oo308/arasar/48315b3ea1711longbike_01.jpg

ஓவியன்
26-09-2008, 11:55 AM
கிட்டத்தட்ட ராஜா அண்ணாவோட 'புல்லட்' மாதிரியே இருக்கே..!! :D

ராஜா
26-09-2008, 12:10 PM
வெட்டிகரமான சிந்தனைகள்.. ( எத்தனையாவதுன்னு அக்னியைக் கேட்டுக்கங்க..!)

* நம்மைவிட வேகமா கார் ஓட்டிகிட்டுப் போறவங்களை காட்டுப்பசங்கன்னும், மெதுவா ஓட்டறவங்களை 'எல்' போர்டுன்னும் சொல்றோமே... ஏன்..?

* நோ எண்ட்ரியில், ரிவர்ஸ்ல கார் ஓட்டிட்டுப் போகலாமா..?

* கடவுள் மறுப்பாளர்கள், நீதிமன்றத்தில் எதன்மீது சத்தியப்பிரமாணம் செய்வார்கள்..?

* பணம் மரத்தில் காய்க்காது என்பது உண்மையானால், வங்கிகள் ஏன் கிளை பரப்புகின்றன..?

ராஜா
26-09-2008, 12:22 PM
அட..!

* வெப்ஸ்டர் அகரமுதலி 1996 வெளியீட்டில் 315 பிழைகள் உள்ளனவாம்..!

* உலகில், தினமும் பிறக்கும் குழந்தைகளில் சராசரியாக 12 சிசுக்கள் தவறுதலாக வேறு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டு விடுகின்றனவாம்..!

* பென் ஹர் எனும் மாபெரும் வரலாற்றுத்திரைப்படத்தில், ரதங்கள் அணிவகுக்கும் காட்சியில் தூரத்தில் ஒரு சிறு சிவப்புநிறக்கார் நிற்பதைக் காணமுடியுமாம்..!

* சாக்கலேட் பானம் நாய்களின் நரம்பு மண்டலத்தைப் பாதிக்குமாம்.. சில அவுன்சு சாக்கலெட் ஒரு சிறு நாயைக் கொன்றுவிடுமாம்..!

ராஜா
26-09-2008, 12:46 PM
ஒரு கல்லூரியில் வாழ்க்கைத் தத்துவ வகுப்பு.

பேராசிரியர் ஒரு பெரிய கண்ணாடி ஜாடியை எடுத்து மேசையில் வைத்தார். அதனுள்ளே வெல்லக்கட்டிகளை இட்டு நிரப்பினார்.. பின் மாணவர்களைக் கேட்டார்..

இந்த ஜாடி இப்போது நிறைந்துவிட்டதுதானே..?

ஆம் அய்யா..!

பின்னர் பேராசிரியர் ஜாடிக்குள் சிறு சிறு கற்கண்டுகளைப் போட்டார்.. வெல்லக்கட்டிகளின் இடைவெளியில் கற்கண்டுகள் புகுந்து இடத்தை அடைத்துக்கொண்டன.. பின்னும் வினவினார்..

இந்த ஜாடி இப்போது நிறைந்துவிட்டதுதானே..?

ஆம் அய்யா..!

அதன் பின்னர், சீனியை ஜாடிக்குள் விட்டார்.. மென் துகள்கள் வெல்லக்கட்டிகளுக்கும், கற்கண்டுகளுக்கும் இடையில் இருந்த வெளியை நிரப்பின.. மீண்டும் கேள்வி எழுப்பினார்..

இந்த ஜாடி இப்போது நிறைந்துவிட்டதுதானே..?

இம்முறை, மாணவர்கள் அனைவரும் ஒருமித்த குரலில் கூறினர்.. "ஆம் அய்யா..!"

புன்னகைத்த பேராசிரியர், இம்முறை ஜாடிக்குள் இரண்டு கோப்பை பாலை ஊற்றி, "இந்த ஜாடி இப்போது நிறைந்துவிட்டதுதானே..?" என்று வினா எழுப்பினார்..

மாணவர்கள் குழப்பத்துடன் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.. எவராலும் சரியாக பதில் சொல்ல இயலவில்லை.. ஏற்கனவே சிலமுறை கூறி, தவறாகிப் போய்விட்டதல்லவா..?

பேராசிரியர் இப்போது சொன்னார்..

மாணவச் செல்வங்களே.. இதுதான் வாழ்க்கை.. வெல்லக்கட்டிகள் உங்கள் வாழ்வின் மகத்தான விடயங்களை குறிப்பவை.. கடவுள், பெற்றோர், கல்வி, உறவுமுறை, நற்பழக்கங்கள் போன்றவை..

கற்கண்டுகள், உங்கள் வேலை, இல்லம், கார் போன்ற முக்கியமான அம்சங்களைக் குறிப்பவை.

சீனி, மற்ற சிறு சிறு விடயங்களின் மாதிரி வடிவம்.. திரைப்படம், கேளிக்கை, உல்லாசப்பயணங்கள் போன்றவை.

உங்கள் வாழ்வில் சீனிக்கே முன்னுரிமை கொடுத்தால், வெல்லக்கட்டிகளுக்கு இடமில்லாமல் போய்விடும்.. கற்கண்டுகளால் உங்கள் வாழ்வை இட்டு நிரப்ப வகையில்லாமல் போய்விடும்..

எனவே எதை முதலில் முக்கியத்துவம் கொடுத்து உங்கள் வாழ்வை நிரப்பிக்கொள்ளவேண்டும் என்று சரியாகத் திட்டமிடுங்கள்..!

ராஜா
26-09-2008, 12:53 PM
நம்மாளுகளும் நக்கல் புடிச்சவய்ங்கதான்..!

http://i386.photobucket.com/albums/oo308/arasar/483e498452431duracell3.jpg

பென்ஸ்
26-09-2008, 12:54 PM
பேராசிரியர் ஒரு பெரிய கண்ணாடி ஜாடியை எடுத்து மேசையில் வைத்தார். அதனுள்ளே வெல்லக்கட்டிகளை இட்டு நிரப்பினார்.. பின் மாணவர்களைக் கேட்டார்..

கற்களாய் நான் கடித்தவற்றை,
கற்கண்டாய் தமிழில் வாசிக்கும் போது
மிகவும் இனிக்கிறது ...

நன்றி ராஜா அவர்களே...