PDA

View Full Version : மொபைலுக்கு ஓர் புதிய பகுதி?

சுட்டிபையன்
06-09-2008, 05:35 AM
இப்போது மொபைல் பாவிப்போரின் தொகை அதிகரித்துக் கொண்டே வருகிறது, மொபைல் பற்றிய தகவல்கள் மற்றும், மொபைல்களுகு தேவையான Applications, themes,games,flash & screen servers போன்றவற்றை பகிர்வதற்க்கு உதவியாக இருக்கும்.

praveen
06-09-2008, 05:46 AM
ஆமாம், அதைப்போலவே தமிழ் திரைப்பட வீடியோ& ஆடியோ, மென்பொருள், வால்பேப்பர் இப்படி தனித்தனி பகுதி ஒதுக்கலாம்.

நகைச்சுவைக்காக பதிந்தது, டென்ஸனாயிறாதீங்க சுட்டி.
அப்படியே தமிழ்மன்றம் என்ற பெயரையும் மாற்றி டமில் மன்ரம் என்று வைத்து விடலாம்.

ஏன் சுட்டி அதுதான் இனையம் முழுக்க இவையெல்லாம் பரவி கிடக்கிறதே, அதை இங்கே சுட்டி (சுட்டி) காட்டுவதில் என்ன தனித்தன்மை நமது மன்றத்திற்கு இருக்கிறது. நீங்கள் தனியாக இனையத்தில் எங்கும் இல்லாத ஒரு மொபைலுக்கான தீமோ, ரிங்டோனோ, வால்பேப்பரோ, மென்பொருளோ தமிழ்மன்றத்திற்காக செய்து தர முடியுமா?.

பசு பால் தான் தரும் பீர் தராது. அதற்கு வேறு இடம் தான் நாம் செல்ல வேண்டும் :).

சுட்டிபையன்
06-09-2008, 07:19 AM

http://img28.picoodle.com/data/img28/3/9/6/f_tm1m_bb49e25.gif

n73, n93, n95, n95 8gb n96 , n81 & n 82 ஆகியவற்றுக்கு தரவிறக்க அமத்தவும் (http://tamilbitz.110mb.com/OS1220683963687.ext.sis):icon_b::wuerg019:

அமரன்
06-09-2008, 07:48 AM
நிர்வாகக் குழுவினரின் கூட்டாலோசனைக்கு எடுத்துச் செல்கிறேன். இது தொடர்பாக விரைவில் இறுதி செய்யப்பட்டும்.

தீபன்
06-09-2008, 08:12 AM
பிரவீனின் சவாலுக்கு சுட்டியின் கெட்டித்தனத்துக்கு பாராட்டுக்கள். சுட்டிப்பையன் சொல்வது நல்ல ஆலோசனைதான். அலைபேசிக்கென தனியான பகுதி இருப்பது மன்ற மக்களுக்கு உபயோகமாக இருக்கும். (பசு பால்தான் தரும், பீர் தராது. ஆனால், மன்றம் சாதாரண பசுவல்ல, எல்லாம் தரும் காமதேனு பசுவாச்சே...!)

praveen
06-09-2008, 02:08 PM
http://img28.picoodle.com/data/img28/3/9/6/f_tm1m_bb49e25.gif

n73, n93, n95, n95 8gb n96 , n81 & n 82 ஆகியவற்றுக்கு தரவிறக்க அமத்தவும் (http://tamilbitz.110mb.com/OS1220683963687.ext.sis):icon_b::wuerg019:
சுட்டி நல்ல முயற்சி இத்தோடு நிற்காமல் இன்னும் தாருங்கள். உங்கள் முயற்சிக்கு 100 இபணம் வழங்குகிறேன்.

இளசு
06-09-2008, 02:27 PM
மணிப்பயல், சுட்டிப்பயல் எனச் சொற்றொடர்கள் உண்டு.

சுட்டியின் சுறுசுறு- அவர் பெயரை நிலைநாட்டுகிறது.

அண்ணனின் பாராட்டுகள்!

(தனிப்பகுதி பற்றி நிர்வாகக்குழு ஆலோசித்து முடிவெடுக்கட்டும்..)

அறிஞர்
06-09-2008, 04:27 PM
தங்கள் கருத்தை.... கவனத்தில் கொள்கிறோம்.. இன்னும் இரு நாளில் பதிலை தெரிவிக்கிறோம்.

சூரியன்
07-09-2008, 05:41 AM
மிகவும் சிறந்த ஆலோசனை.

தாங்கள் அளித்த தீம் மிகவும் அருமை.

ஓவியன்
07-09-2008, 02:53 PM
தனிப் பகுதியாக அமைக்குமளவுக்கு அங்கே பதிவுகள் இடப்படுமா..??

ஏற்கனவே கணினிப் பகுதி இருக்கிறது, வேண்டுமானால் அங்கே ஒரு சப் ஃபோரம் அமைக்கலாமே...

ஆனால், அப்படி அமைத்தால் சப் ஃபோரம்களின் எண்ணிக்கை அதிகரித்து விடாதா...??

அதாவது பார்வைக்கு அழகாக இருக்குமா...??

வசீகரன்
08-09-2008, 01:50 PM
மன்றத்தில் முன்னொரு தரம் கூட மணமாலை போன்ற திருமண தகவல்களுக்கென ஒரு தனிபகுதி ஆரம்பிக்க படவேண்டும் என்ற கோரிக்கை எழப்பட்டது..! ஓவியன் அவர்கள் சொல்வதுபோல் இவை போன்று சில முக்கிய தகவல்களுக்கு தனி பகுதி அமைப்பதற்க்கு சாத்தியக்கூறுகள் இருக்கிறதா.. அப்படி அமைத்தால் தகுந்த வரவேற்புகள் கிடைக்குமா..?

அமரன்
08-09-2008, 05:50 PM
புதிய பகுதி அமைக்கப்பட்டது.
http://www.tamilmantram.com/vb/forumdisplay.php?f=73 (http://www.tamilmantram.com/vb/forumdisplay.php?f=73)

அறிஞர்
08-09-2008, 08:20 PM
புதிய துணைபகுதி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

விதிமுறைகளை கருத்தில் கொண்டு... பதிவுகளை அங்கு கொடுங்கள்.

மயூ
11-09-2008, 06:49 AM
காலத்தின் தேவை... நிச்சயமாக தேவை.

தீபன்
20-09-2008, 01:32 AM
இனி இந்த திரியையும் அங்கு நகர்த்துவதுடன் தலைப்பை தமிழாக்கம் செய்வது குறித்த என் ஜோசனையையும் கொஞ்சம் கவனிக்கலாமே!

அமரன்
20-09-2008, 07:36 AM
தீபன்..
அந்த மன்றப்பகுதிக்கும் தமிழில் பெயர் சூட்டுவது தொடர்பாக கலந்துரையாடுகின்றோம். நடுவில் மக்களிடத்திலிருந்து பெயர்கள் வருமென்று பார்த்திருக்கிறோம்.. விரைவில் பெயர்சூட்டு வைபவம் நடைபெறும்.

தீபன்
24-09-2008, 01:23 AM
தீபன்..
அந்த மன்றப்பகுதிக்கும் தமிழில் பெயர் சூட்டுவது தொடர்பாக கலந்துரையாடுகின்றோம். நடுவில் மக்களிடத்திலிருந்து பெயர்கள் வருமென்று பார்த்திருக்கிறோம்.. விரைவில் பெயர்சூட்டு வைபவம் நடைபெறும்.

நன்றி அமரன். ஆமா.... பெயர்சூட்டு வைபவம் றொம்ப சிறப்பா நடக்கபோகுதுபோலயிருக்கு... றொம்ப நாளா ஏற்பாடுகள் நடக்குதுபோல...:D

தீபன்
02-10-2008, 11:34 AM
அட... சந்தடியில்லாம பெயர்சூட்டி விட்டீர்கள். கைபேசி உலகம்... அழகான பெயர். ஆனால் அந்த உலகில் இப்போதைக்கு மக்கள்தொகை குறைவாத்தானிருக்கு... போக போக சூடுபிடிக்குமென நம்பலாம்.

நன்றி, என் கோரிக்கைக்கு செவிசாய்த்து மொழிமாற்றம் செய்தமைக்கு.