PDA

View Full Version : கிளிநொச்சியை அடைந்த படையினர்!!!!

மறத்தமிழன்
04-09-2008, 06:37 AM
நேற்று சிங்கள கூலிப்படையின் ஒரு தொகுதியினர் கிளிநொச்சியை அடைந்தனர். ஆனால் தூரதிர்ஷ்டவசமாக அனைவரும் அங்கே அடையும் போது உயிருடன் இல்லை. ஆம் வெட்டுறம் விழுத்திறம் எண்டு வெளிக்கிட்டு மாண்டு போய் இப்ப உடலமாக கிளிநொச்சியில் மக்கள் பார்வைக்கு கிடக்கிறார்கள். சாவை விரும்பவில்லை. அதை கேலி செய்யவும் இல்லை. கொஞ்சம் சிந்திக்க வேணும் எண்டுதான் சொல்லுறம். பொறுங்கோ! பொறுங்கோ!! இது தொடக்கம். போக போக தெரியும்.

நன்றி : புதினம் (http://www.puthinam.com), தமிழ்வின் (http://www.tamilwin.com),நிதர்சனம் (http://www.nitharsanam.com)

அமரன்
04-09-2008, 08:27 AM
மறத்தமிழன் அவர்களே..
பொறுப்பாளனாக அல்லாது சக தோழனாக ஒரு கருத்து..

ஏசி அறைகளில் இருந்து சவா(ட)ல் விடும் அரசியல்வாதிகளை கிண்டல் செய்வதாக நினைத்து, உயிர் நீத்த வீரர்களை கொச்சைப்படுத்தும் விதமாக உள்ளது செய்தியை நீங்கள் பகிர்ந்த விதம். பல பத்திரிகைகளில் வரும் டீக்கடை பென்சு, போகிறபோக்கில், அதிரடிஅய்யாத்துரை போன்றவற்றில் கூட இந்தவகை நையாண்டி இடம்பெற்றதாக நினைவில்லை.

வேதனையுடன்,

தீபன்
04-09-2008, 09:58 AM
மறத்தமிழனின் கூற்று சற்று விவகாரமாகத்தான் படுகிறது. ஆனாலும், இந்தளவுக்கு சொல்லுமளவுக்கு அவர் கொண்டிருக்ககூடிய பாதிப்புக்களையும் உணர முடிகிறது. சிலரின் ஆதங்கங்கள் வெளிப்படுகையில் உணர்ச்சிகளின் பிடியில் வார்த்தைகள் கட்டுப்பாடையிளந்து விடுகின்றன போலும்.

மறத்தமிழன்
10-09-2008, 06:08 PM
நன்றி அமரன் உங்கள் தோழமையான கருத்துக்கு. இதே மண்றத்தில் இராணுவம் பல்கலைக்கழக வளாகத்துள் இருந்த நினைவுத்தூபியை அழித்த படம் போட்டு கண்டித்தேன். எம்போராளிகள் எவ்வாறு போர் வீரர்களின் உடலத்திற்கு மதிப்பு தருகிறார்கள் என்றும் பதித்திருந்தேன். நாம் வெற்று அரசியல் வசனமாக இதை சொல்லவில்லை. ஒரு பாதிப்பைக்கண்ட தமிழனாக, இராணுவத்தால் பாதிக்கப்பட்ட தமிழனாக இதைப்பார்த்தேன். இந்திய இராணுவம் இலங்கையில் இருந்தபோது எனது கண் முன்னால் வீதியில் ஒரு மாவீரனது வித்துடலை வாகனத்தில் கட்டி வீதி வீதியாக கொண்டு சென்றனர். கொண்டு சென்ற ஒரு இராணுவ வீரன் அடுத்த கிழமை சுட்டுக்கொல்லப்பட்டால் எப்படி இருக்கும் உணர்வு. இப்படித்தான் மீண்டும் ஒரு தடவை இலங்கை இராணுவம் ஒரு போராளியை சுட்டுக்கொன்றுவிட்டு அவனது வித்துடலை வீதிவீதியாக உழவு இயந்திரத்தில் இழுத்து சென்றது. அந்தப்போராளி இறந்த இடத்தில் 4 நாட்களுக்கு பின்னர் ஒரு இராணுவ சிப்பாயின் தலையை வெட்டிக்கொண்டு வந்து வைத்தனர் போராளிகள். நிச்சயமாக சொல்கிறேன். எனக்கு எந்த மதிப்பும் கொடுக்க வேணும் போல இருக்கவில்லை. அதற்காக வன்மம் கொண்டவன் அல்லன் நான். அவர்கள் தந்த பாதிப்புத்தான் அது. இந்த தகவல் கூட நிதர்சனம் இணையத்தில் இருந்து அப்படியே எடுத்துப்போட்டேன் சிறு மாற்றங்களுடன். சிங்கள இராணுவ சிப்பாய் ஒருவன் ஏன் இராணுவத்தில் சேர்கிறான். அவனது குடும்பப்பின்னனி என்ன? அவர்கள் மடிந்த உடன் உறவினர்களின் உள்ளக்குமுறல் அருகிலிருந்து பார்த்தவன். அப்பாவிகள். அரச கதிரைகளில் இருந்து அராஜகத்தை புரிபவர்களுக்கு இவர்கள் தெரியாமல் துணை போகிறார்கள். மற்றப்படி இதில் வன்மமோ அல்லது இன்னொருவன் சாவில் சாந்தம் அடைகிற ஈனர்கள் அல்லர் நாம். பொதுவான இடத்தில் இது தவறு என்று பண்பட்டவர் நீங்கள் கருதுகிறபடியால் மன்னிப்புக்கேட்கிறேன். ஆனால் உள்ளக்குமுறலை எவராலும் அடக்க முடியாது. (ஈழத்)தமிழன் செய்த பாவம் தமிழனாக பிறந்த்து. நன்றி அமரன்.

தேவன்1
10-09-2008, 08:53 PM

உண்மைதான் நண்பரே உங்கள் உணர்வே என்னுடையதுமாக இருக்கின்றது.

தீபன்
11-09-2008, 01:27 AM
புரிகிறது மறத்தமிழா உங்கள் ஆதங்கம். உங்களுக்கேற்பட்ட அனுபவங்கள் எனக்கும் இருக்கிறது... உணர்ச்சிகள் மேலெழும் சந்தர்ப்பங்களில் பொதுவான உலக நியதிகள் வலுவிழந்துவிடத்தான் செய்யும். ஆனாலும், இவ்விடையங்கள் சாராது இங்கிருக்கும் பலருக்கும் உங்கள் பதிவு உன்களைப்பற்றியும் நீங்களும் நாமும் சொல்லும் உணர்வுகள் பற்றியும் ஒரு தவறான விம்பத்தை ஏற்படுத்திவிடலாமென்ற அச்சமே அமரன் அதை உங்களுக்கு சுட்டியமைக்கு காரணமென எண்ணுகிறேன். புரிதலோடு ஆறுதலடைக நண்பரே...