PDA

View Full Version : இரத்த சாசனம்



shibly591
04-09-2008, 05:21 AM
இரத்தம்
இரத்தம்
இரத்தம்

எங்கும் இரத்தம்
எதிலும் இரத்தம்
அங்கும் இரத்தம்
அதிலும் இரத்தம்

எந்த வகை இரத்தமென்று
எவருக்கும் தெரியவில்லை
வழிந்தோடும் குருதியாற்றில்
மதபேதம் எதுவுமில்லை

இரத்தம்
இரத்தம்
இரத்தம்

குண்டுவெடித்த இரத்தம்
கொள்ளையடித்த இரத்தம்
கொலை செய்த இரத்தம்
கற்பரித்த இரத்தம்

எங்கும் இரத்தம்
எதிலும் இரத்தம்
அங்கும் இரத்தம்
அதிலும் இரத்தம்

முடிவிலியாய் தொடர்கிறது
தினமும் இங்கே இரத்தவேட்டை
கோடி உயிர் பறிகொடுத்தோம்
மீட்பதெங்கே இந்த நாட்டை

இரத்த ஆறு
இரத்த வீழ்ச்சி
இரத்த வெள்ளம்
இரத்த பூமி
கடைசியில் பெய்யப்போகிறது
இரத்த மழை..

போரின் கோரப்பசி
எவ்வளவு இரத்தம் குடித்தும்
இன்னுமா நிற்கவில்லை...?

திரண்டோடும் இரத்த ஆற்றில்
நாளை கலக்கப்போகிறது
உனது இரத்தம்
எனது இரத்தம்
அவன் இரத்தம்
அவள் இரத்தம்

சத்தமிட்டுக்கதறியழ
எவர்க்குமிங்கு உரிமையில்லை
யுத்தத்தால் யார்க்குமிங்கு
தத்தம் இரத்தம் சொந்தமில்லை

இரத்தம்
இரத்தம்
இரத்தம்

எங்கும் இரத்தம்
எதிலும் இரத்தம்
அங்கும் இரத்தம்
அதிலும் இரத்தம்

எந்த வகை இரத்தமென்று
எவருக்கும் தெரியவில்லை
வழிந்தோடும் குருதியாற்றில்
மதபேதம் எதுவுமில்லை

கண்களில் வழியும்
இரத்தக்கண்ணீர்வழியே
எங்கள் வரலாறு
இரத்த சாசனமாய் எழுதப்பட்டுக்கொண்டிருக்கிறது

பென்ஸ்
06-09-2008, 02:32 AM
ஷிப்லி...

தன் பிள்ளைகளின் பாவத்தில் இருந்து விடுவிக்க்
ரத்த பலி - இயேசு பெருமான்

இன்றும் நம் பிள்ளைகளை வஞ்சகர்களிடன் இருந்து விடுக்க
ரத்த பலி....
இந்த இரத்த பூமியில் விளையும்
வித்து, சுத்தமான சுதந்திரம்.

பிச்சி
06-09-2008, 04:23 AM
படிக்கும்போதே இரத்தம் வழிகிறது. நீங்கள் எழுத்துருவையும் சிவப்பு கலரில் போட்டுவிடுங்கள். நன்றாக இருக்கும் :)

அன்புடன்
பிச்சி

தீபன்
06-09-2008, 08:23 AM
கற்பரித்த இரத்தம்

எழுத்து பிழைய கவனியுங்கள் ஷிப்லி. (சாத்தான் வேதம் ஓதுகிறதின்னு நினையாதிங்க... )

கோடி உயிர் பறிகொடுத்தோம்

கவிதையில் உயர்வு நவிற்சி இருக்கலாம்... ஆனால் அது கற்பனை கவிதைகளுக்குதான் அழகு. நிஜத்தை சித்தரிக்கும் உங்கள் கவிதையில் இங்கும் நிஜத்தையே சொல்லியிருக்கலாம்... ஈழநாட்டின் மொத்த மக்கள் தொகையில் மூவிலொரு பங்கிற்குமேலாக பறிகொடுத்ததாக சொல்வது கொஞ்சம் அதிகம்தானே... லட்சமென்று பயன்படுத்தியிருக்கலாம்..!

இரத்த ஆறு
இரத்த வீழ்ச்சி
இரத்த வெள்ளம்
இரத்த பூமி
கடைசியில் பெய்யப்போகிறது
இரத்த மழை..

இரத்த மழை பெய்தபின்தானே நீங்கள் முதல் சொன்னவையெல்லாம் ஏற்படும்... இரத்த ஆறு, இரத்த வீழ்ச்சி, இரத்த பூமி, இரத்த வெள்ளம் எல்லாத்தின் பின்தான் இரத்த மழை பெய்யப்போகிறதென்பது முரணாக உள்ளதே...!

நல்ல கவிதை. பாராட்டுக்கள் ஷிப்லி.

ஓவியன்
07-09-2008, 05:32 PM
கவிதையை முன்னரே படித்தேன்..
பதிலிடவில்லை...

பதிலிடாமைக்குக் காரணம்
கவியின் கருவுடன் ஒத்துப் போகாமை...

ஆனால், இன்று பின்னூட்டுகிறேன்...

இப்போது, பின்னூட்டியதின் காரணம்
பென்ஸ் அண்ணா..!!

நான் கூற விளைந்ததை,
என் எண்ணத்தில் நினைத்ததை
அழகாக அவர் பின்னூட்டம் கூறி முடித்தமையே...

ஷிப்லி..!!

எந்த ஒரு பிரச்சினையையும் தீர்க்க அதன் விளைவுகளைக் கூறிக் கொண்டிருந்தால் மட்டும் போதாது,
ஏனென்றால் அதனால் அந்த பிரச்சினை ஒரு போதும் தீர்வடைந்து விடாது....

மாறாக, பிரச்சினைக்கான அடிப்படைக் காரணம் பற்றி,
அந்தப் பிரச்சினைக் காரணியைக் களைய வேண்டும்....

அதனை விடுத்து, விளைவுகளைக் கூறி கதறிக் கொண்டிருப்பதில் எனக்குத் துளியும் உடன்பாடில்லை....

shibly591
08-09-2008, 04:37 AM
நிறைய லாஜிக் மீறல்களை சுட்டிக்காட்டிய பென்ஸ் ஓவியன் தீபன் மற்றும் பிச்சி ஆகியோர்களுக்கு நன்றிகள்.

மீண்டும் கவிதையை திருத்தி எழுதுகிறேன்..

ஓவியன்
08-09-2008, 03:03 PM
புரிதலுக்கு நன்றி ஷிப்லி..!!

இந்த புரிந்துணர்வும், ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவமும் உங்களை நிச்சயமாகச் சிகரத்திலேற்றும்...!! :icon_b:

மனதார்ந்த வாழ்த்துக்கள் ஷிப்லி..!! :)